மனத்தின் சுறுசுறுப்பு ஓய்வு பெற, உடலைச் சுறுசுறுப்பாக்குங்கள்
இந்த ஸ்லோகத்தில், ஒன்பது வாயில்களுடன் இருக்கிற உடலைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறார். வெளி உலகுடன் தொடர்புகொள்ள உதவும் அந்த ஒன்பது வாயில்களாவன: கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, மூக்குத் துவாரங்கள் இரண்டு, வாய் ஒன்று மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்புகள் இரண்டு.
நாம் எதுவும் செய்யாமல் இருப்பதும், எதுவும் செய்யப்படுவதற்கு காரணமாக இல்லாமல் இருப்பதும்கூட வித்தியாசமாகவும் அபத்தமாகவும் தெரியும். ஆனால் இங்கே கிருஷ்ணர் 'எதையும் செய்யாமல் இருப்பது' என்று சொல்லும்பொழுது, சோம்பேறித்தனத்தையும் மனம் போனபோக்கில் இருப்பதைப் பற்றியும் குறிப்பிடவில்லை.
உண்மையிலேயே, நாம் மந்த நிலையின் உச்சத்தைத் தொட முடிந்தால்கூட, நம்மால் தியானத்தில் இருக்க முடியும்; விடுதலைபெற முடியும். பொதுவாக நாம் எல்லாம் அனுபவிக்கும் மந்தத் தன்மையில் உடல் மந்தமாக இருக்கும். ஆனால் மனம் ஒரு எண்ணத்திலிருந்து மற்றொரு தொடர்பில்லாத எண்ணத்திற்கு ஒரு குரங்கைப்போல் தாவிக்கொண்டே இருக்கும். ஆனால் தியானம் அப்படிப்பட்டது அல்ல.
இங்கே 'மந்தத் தன்மை' என்பது ஆழமான மனத்தில் ஏற்படும், 'மனத்தை உறைய வைக்கிற மந்தத் தன்மையையே' குறிக்கிறது. மனம் எல்லா வகையான செயல்களை நிறுத்திவிட்ட போதிலும் உடல் இறைவனின் அருளாணைப்படி செயல்படுகிறது. ஏராளமான செயல்பாடுகளுக்கு மத்தியில் நாம் இருந்தபோதிலும் நாம் எதையும் செய்யவில்லை. ஏனென்றால் மனம் அடையாளத்தை விட்டுவிட்டது.
மனம் செயலிலிருந்து அதைச் செய்பவரைத் தனிமைப்படுத்திவிடுகிறது. செய்பவர் யார், செயல் என்ன என்பதையெல்லாம் விளக்கிச் சொல்வதுதான் மனம்.
பொதுவாக நாம் 'மந்தத் தன்மை' என்று சொல்லும்பொழுது, உடல் அளவிலான மந்தத் தன்மையையே குறிப்பிடுகிறோம். உடல் முற்றிலும் மந்தமாக இருக்கிறது. ஆனால் மனம் முற்றிலும் மிகுந்த சுறுசுறுப்புடன் இருக்கிறது.
மனம், செயலிலிருந்து அதைச் செய்பவரைத் தனிமைப்படுத்திவிடுகிறது. அது அதனுடைய வேலையான உருவாக்குதல், தொடர்பில்லாத எண்ணங்களை இணைத்தல் இவற்றை செய்துகொண்டே இருக்கிறது.
உடலுக்குப் பதிலாக மனம் மந்தமாக மாறும்பொழுது, நாம் மனத்தையும் விட்டுவிடுகிறோம். அதனால் அப்பொழுது நம்மிடமிருந்து நம் செயல்களைத் தனியே பிரித்து அடையாளம் காண்பதும் நின்றுவிடுகிறது.