தெய்வத்தின் பொம்மை விளையாட்டு
ஒரு குழந்தை ஏதோவொரு சின்ன பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்தக் குழந்தைக்காக பெரிய பொம்மை ஒன்றைப் புதிதாக வாங்கி வருகிறீர்கள்.
குழந்தையின் கைகளிலிருந்து அந்தச் சின்ன பொம்மையை நீங்கள் பிடுங்கி விட்டீர்களானால், அந்தக் குழந்தை என்ன செய்யும் ? பெருங் கூச்சலிட்டுக் கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கிவிடும்.
குழந்தையிடம் நீங்கள் இதைவிட நல்ல பொம்மை, பெரிய பொம்மை வைத்திருக்கிறோம் என்று விவரித்துக்கொண்டிருந்தால், அந்தக் குழந்தை அதைக் கேட்குமா? இல்லை. நீங்கள் ஒன்றுமே சொல்லாமல், அந்தப் பழைய பொம்மையை கையிலிருந்து பிடுங்காமல், நீங்கள் வாங்கி வந்த புதிய பொம்மையைக் கொஞ்சம் கையில் கொடுங்கள், உடனே அந்தப்
பழைய பொம்மையை மறந்து விட்டு, புதிய பொம்மையுடன் விளையாடி மகிழத் தொடங்கிவிடும்.
அதே போன்றுதான் பிரபஞ்ச இருப்புத் தன்மை நமக்கு ஒரு பெரிய பொம்மையைக் கொடுக்கவே முயற்சி செய்கிறது. பிரபஞ்ச இருப்புக் கன்மையானது மிகவும் பரந்து கிடப்பது, ஆச்சரியமானது, கற்பனைக்கு எட்டாதது.
பிரபஞ்ச இருப்புத் தன்மை நமக்கு அளித்துள்ள அந்தப் பொம்மையைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! அதை முழுமையாக அப்படியே அனுபவியுங்கள்;
விளைவுகளைப் பற்றி நினைக்காமல் நாம் செயல்படும்பொழுது, நம்முடைய சக்தி அனைத்தும் குறிக்கோளை அடைவதை நோக்கியோ பயன்படுத்தப்படுகின்றன. அதைக் கொண்டாடுங்கள். உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள் !
ஆனால் உங்களுடைய மனம், ''உன்னுடைய அஹங்காரம் பொம்மைதான், இந்தச் சின்ன கனவுகள்தான் உன்னுடைய வாழ்க்கைக்கு ஆதாரமான, முக்கியமான பொருள், ' என்று உங்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கும்.
சில எதிர்பார்ப்புகளையும் விட்டுவிட முயற்சி செய்யுங்கள். சில நாள்களுக்கு உங்களுடைய பயக்கையும் உங்களுடைய
பிரபஞ்ச இருப்புத் தன்மை நமக்கு அளித்துள்ள எளிமையான அற்புதமான விஷயங்களை உள்வாங்க ஆரம்பியுங்கள்.
அவரங்காரத்தை காப்பாற்றுவதையும் விட்டுவிடத் தீர்மானியுங்கள்.
வாழ்க்கையை எளிய முறையில், இயற்கையின் வைபவங்களுடன் ஒவ்வொரு கணமும் அனுபவித்து வாழுங்கள்.
பிரபஞ்சம் படைத்திருக்கிற ஒவ்வொன்றையும் அனுபவியுங்கள். காலையில் உதிக்கிற சூரியனையும் அசைந்து கொண்டிருக்கும் காலை வானத்தின்
நிறங்களையும் வர்ணங்களையும் இவை போன்ற எளிமையான, அற்புதமான விஷயங்களை உள்வாங்க ஆரம்பியுங்கள்.
புதிய அனுபவிக்கக் தயாராகிக் கொண்டிருக்கும் கீச்சிடும் ஒலியைக் கவனியுங்கள்.
காலைக் கதிரவனின் ஒளியில் மலர்கள் தங்களுடைய எல்லா
மகிமையோடு மலர்வதையும் கதிரவனின் இதமான கதிர்கள் பட்டவுடன் பரவசத்துடன் மடல் விரிப்பதையும் பாருங்கள்.
இந்தச் சில கணங்கள்தான் நம்முடைய இருப்பின் முழுமையான புதிய பரிமாணத்தை நமக்குக் காட்டுகின்றன. 'எதன் பின் ஓடாமலும் எதையும் விட்டு விலகியிருக்காமலும் காரணம் ஏதுமில்லாமலேயே வாழ்க்கையை அனுபவிப்பதென்றால் என்ன' என்பதை அவை நமக்குக் காட்டுகின்றன. வரவேற்கிற, தழுவிக் கொள்கிற பிரபஞ்ச சக்தியின் கரங்களுக்குள் நாம் எப்படி இளைப்பாறுவது என்பதை வாழ்க்கை நமக்குக் கற்றுத் தருகிறது.