நீங்கள் ஓய்வெடுங்கள் பிரபஞ்சம் பொறுப்பெடுத்துக்கொள்ளும்
கிருஷ்ணர், 'நாம் இந்தச் செயலை செய்கிறோம்' என்ற எண்ணம்கூட இல்லாமல், எதிலுமே முழுமையாக ஈடுபடுவதையும், நாம் அந்தச் செயலாகவே மாறிவிடுவதைப் பற்றியும் இங்கே பேசுகிறார்.
முதலில் நாம் அந்தச் செயலுக்குச் சாட்சியாக மாறுகிறோம். அப்பொழுது மட்டுமே நம்மால் எந்தச் செயலிலும் முழுமையாக ஈடுபாடுகொள்ள முடியும். நாம் விலகியிருந்து, சாட்சியாக மாற ஆரம்பிக்கும் பொழுதுதான் நாம் செய்கிற செயலில் முழுமையாக ஈடுபடுகிறோம்.
அதன் பிறகு, செயலைச் செய்பவரும் செயலும் ஒன்றுக்கொன்று இணைந்துவிடுகின்றன. அதன்பிறகு, செயலிலிருந்து செய்பவர் தனித்து இருப்பதில்லை.
உண்மையில், செயல் நமக்கு இன்பத்தைத் தருவதில்லை; செயலின் மூலமாக நமக்குள் இருக்கும் ஆனந்தத்தை விழிப்புணர்வுடன் உணர்வதுதான் நமக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தருகிறது.
ஒரு சின்ன கதை:
நாய் ஒன்று ஒரு எலும்புத் துண்டைப் பார்த்தது. அது மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த எலும்புத் துண்டைச் சுவைக்க ஆரம்பித்தது. ஆனால் அது உலர்ந்திருந்தது. இருந்தாலும் அது பற்களால் கடித்துக் கடித்துச் சுவைக்க ஆரம்பித்தது.
சிறிது நேரத்திற்குப் பின்னர் அந்த உலர்ந்துபோன கடினமான எலும்புத் துண்டின் உரசலால், நாயினுடைய ஈறுகளிலிருந்தே இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இந்த இரத்தத்தைச் சுவைத்த நாய் மிகுந்த மகிழ்ச்சியடைந்தது.
எலும்பை இன்றும் மேலும் நக்கிச் சுவைத்தது. அதனால் அதனுடைய வாயிலிலிருந்தே மேலும் இரத்தம் கசியும் கொண்டது.
தான் அனுபவித்துச் சுவைத்துக் கொண்டிருப்பது தன்னுடைய சொந்த இரத்தம்தான் என்பது அந்த நாய்க்குத் தெரியாது. அந்த இரத்தத்தின் சுவைக்கும் எலும்புக்கும் சம்பந்தமே இல்லை என்பதும் அந்த நாய்க்குத் தெரியாது.
வாழ்க்கையின் ஆனந்தம் என்பது முற்றிலுமாக நமக்குள்ளேயேதான் இருக்கிறது என்பதை, நாம் அனுபவத்தின் மூலமும் புரிந்துகொள்ளுதல் மூலமும் உணரும்பொழுது மட்டுமே, வெளிச் சந்தோஷங்கள்தான் நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன என்ற தவறான கோட்பாட்டை விட்டு வெளியே வருகிறோம். அதன் பிறகு நாம் எந்த ஒரு செயலையும் செய்வதும் இல்லை; எந்த ஒரு செயல் செய்யப்படுவதற்குக் காரணமாக இருப்பதும் இல்லை.
நாம் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்தோமோ அதைக் காட்டிலும் மேலான, உயர்வான நிலையில்தான் ஏற்கெனவே இருக்கிறோம் என்பதை உண்மையாகப் புரிந்து கொள்கிறபொழுது, நாம் இறுதி இலக்கை, குறிக்கோளை அடைந்துவிட்டோம்.
பிரபஞ்ச சக்தியின் அன்புக் கரங்களுக்குள் நாம் தளர்வாகவும் அதே சமயத்தில் அதனுடன் இயைந்து அழகாகவும் ஆனந்தத்துடனும் செல்வோம். அதுவரையிலும் நாம் ஏற்கெனவே இருக்கிற நிலையை அடைவதற்குக்கூட போராடிக் கொண்டிருப்போம்.
பழம்பெரும் இந்து தேசத்தின் ஞானியும் பால யோகியும் 'ஞானமடைதல்' என்ற என்ற விஞ்ஞானத்தை, மிதிலையின் அரசரும் தந்தையுமாகிய ஜனகருக்கு உபதேசித்தார்.
அவர் இன்பம் துன்பம் இவை எல்லாம் நம்
நமக்கு இன்பத்தைத் தருவது செயலல்ல, செயலின் மூலமாக நமக்குள் இருக்கிற ஆனந்தத்தை உணர்வதுதான் இன்பத்தைத் தருகிறது.
சம்பந்தப்பட்டவை அல்ல. முற்றிலும் மனத்தினுடையவை.
நாம் கர்த்தாவும் அல்ல, பலன்களை அறுவடை செய்பவரும் அல்ல. அதனால் நாம் எப்போதும் சுதந்திரமானவர்கள். நாம் எல்லாவற்றுக்கும் ஒரு சாட்சியாக மட்டுமே இருக்கிறோம். நாம் எப்போதும் முழுச் சுதந்திரமாய் இருக்கிறோம்.
சாட்சியாக இருக்கிற நாம் அந்த லக்ஷி மாவத்தை விட்டுவிட்டு நம்மையே கர்த்தாவாகப் பார்ப்பதுதான் நம்முடைய பந்தங்களுக்குக் காரணம்,'' என்று நம்முடைய பந்தத்திற்கான காரணத்தை அழகாக எடுத்துக் காட்டுகிறார்.
இன்பம் துன்பம், மகிழ்ச்சி சந்தோஷம், பாவம் புண்ணியம், சரி தவறு போன்ற எல்லா உணர்ச்சிகளும் நமக்குள்தான் நிகழ்கின்றன என்று அஷ்டவக்ரா
நாம் எப்படி இருக்க வேண்டுமென்று கற்பனை செய்தோமோ அதைக் காட்டிலும் மேலான, உயர்வான நிலையில்தான் ஏற்கெனவே இருக்கிறோம்.
நமக்குச் சொல்கிறார். ஏனென்றால் நாம் செயல்களிலும் அதனுடைய விளைவுகளிலும் நம்மை இணைத்துக் கொள்கிறோம்.
இந்த நம்முடைய மனம்தான். நம்முடைய மனமும் அஹங்காரமும்தான் நாம் எதைச் செய்தாலும் அதனுடன் நம்மை இணைத்துவிடுகின்றன.
நாம் ஒவ்வொரு செயலுடனும் ஒரு உணர்ச்சியைச் சேர்த்துவிடுகிறோம். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ, அதைச் செய்வது நாம்தான் என்று அஹங்காரம் சொல்லும். நம்முடைய அஹங்காரம் நம்முடைய பொறுப்பை எடுத்துக் கொள்கிறது.
அதனால் நாம் நம்முடைய செயல்களிலும் அதன் பலன்களிலும் ஈடுபாடு கொள்கிறோம். நாம் எதைச் செய்தாலும் அத்துடன் உணர்ச்சிப்பூர்வமாக நம்மைப் பிணைத்துக் கொள்கிறோம்.
நாம் இவ்வாறு நம்முடைய நம்மை இணைத்துக்கொள்ளும்பொழுது, நம்முடைய செயல்களின் முடிவைப் பொறுத்து சந்தோஷம் அல்லது துக்கம், இன்பம் அல்லது துன்பம் என்று ஏதோ ஒன்று நிகழ்கிறது.
நம்முடைய செயல்களுடன் நம்மை இணைத்துக்கொள்ளும் பந்தத்திலிருந்து நாம் வெளியே வருவதற்கு அஷ்டவக்ரா மேலும் ஒரு உபாயம் சொல்கிறார். நாம் வெளியே வருவதற்கான ஒரே வழி, நம்முடைய செயல்களுக்கு நாம் சாட்சியாக இருப்பது மட்டுமே!
ஒரு கருவியாக இருக்கும் மனிதரைப்போல் பார்க்க வேண்டும். நாம் செய்யும் செயல்களிலிருந்து நம்மை நாம் விடுவித்துக்கொள்ள வேண்டும். இந்தப் பிரபஞ்ச சக்தி பொறுப்பை எடுத்துக்கொள்ளும்படி நாம் விட்டுவிட வேண்டும். நாம் நம்மை ஒரு கருவியாக மட்டுமே இருக்கும்படி விட்டுவிட வேண்டும்.
நாம் நம்முடைய உடைமை உரிமையை யாருக்காவது விட்டுக் கொடுக்கும்பொழுது, நாம் சுதந்திரமாகிவிடுகிறோம். அந்தச் சுமை நம்மீது இல்லை. அப்பொழுது நாம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்க முடியும்.
நாம்தான் இவற்றிற்கு உரிமைதாரர்கள் என்று நாம் நினைக்கிறவரையில், உரிமையாளர்களுக்கே உரிய எல்லாக் கவலைகளையும் நாமும் எப்போதும் எதிர்கொள்ளவேண்டியது இருக்கிறது. நீங்கள் ஏன் அந்தக் கவலைகளைச் சுமக்க வேண்டும் ? இந்தப் பிரபஞ்ச சக்தி அக்கறை எடுத்துக்கொள்ளட்டும் நீங்கள் உங்கள் வேலைகளைச் செய்யுங்கள்!