KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடலாம்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடலாம்

நீங்கள் கீழே வரும்போதே, உங்கள் உடலும் புலன்களும் செயல்படுவதற்குத் தேவையான ஆற்றலையும், அவை விரும்பிய அனைத்தையும் தேடி அடைவதற்கான சக்தியையும், அடைந்ததை அனுபவிப்பதற்கான சக்தியையும், வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வதற்குப் போதுமான ஆற்றலையும் சக்தியையும் கொண்டு வருகிறீர்கள்.

நீங்கள் அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறீர்கள். பிரச்சினை என்னவென்றால், நீங்கள் எல்லாவற்றையும் கொண்டு நம்புவதில்லை. நீங்கள் அதுதான் பிரச்சினை. இன்னொரு விஷயம் கீழே வந்த பிறகு, நீங்கள் மற்றவர்களிடமிருந்தும் மேலும் மேலும் ஆசைகளைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

லட்சுமி உங்கள் வாழ்வில் இரண்டு வெளிப்பாடுகளை எடுக்கிறாள். ஒன்று வெளியுலக வசத்தள், மற்றொன்று உள்ளுலக ஆனந்தம்.

நீங்கள் ஒரு பத்து ஆசைகளுடன் கீழே வந்திருந்தால், அந்தப் பத்து ஆசைகளை நிறைவேற்றப் போதுமான சக்தியைப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் இங்கே கீழே வந்த பிறகு, உங்களுடைய நண்பர்கள், அண்ணன், தம்பிகள், அக்கா, தங்கைகள் இப்படி எல்லோருடைய ஆசைகளையும் மேலும் மேலும் சேர்த்து வைக்குக் கொள்கிறீர்கள். பிறகு அந்த எல்லா ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளைச் செய்கிறீர்கள்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய ஆசைகளை மட்டும் நிறைவேற்றுங்கள். மற்றவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றுவதில் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை வீணடிக்காதீர்கள்.

மற்றவர்களுடைய ஆசைகளை செய்யும்பொழுது, நீங்கள் உங்கள் வாழ்வையே வீணடித்துக் கொள்கிறீர்கள். ஆசைகளைப் பற்றிய அத்தியாயத்தைப் பார்க்கும்போது, அவை என்ன; அவற்றின் பின்னால் நாம் எவ்வாறு ஓடிக்கொண்டிருக்கிறோம் பற்றியெல்லாம் ஆழமாகப் பார்ப்போம். இப்பொழுது இந்த அளவுக்குப் புரிந்து கொண்டால்போதும்.

'பயத்தாலும் ஆசையினாலும் நான் தூண்டப்படமாட்டேன்' என்று தெளிவாக முடிவு எடுங்கள்.

இந்த ஒரு கருத்துக்குப் பத்தே பத்து நாள்கள்போதும்.

நாள்களுக்கு நான் சந்தோஷத்துடனும் ஆனந்தத்துடனும் செயல்படுவேன். நான் மகிழ்ச்சியான மன நிலையுடனும் சந்தோஷத்துடனும்தான் எல்லாவற்றையும் செய்வேன்' என்று முடிவு செய்யுங்கள். நான் உறுதி அளிக்கிறேன், அது உங்களுடைய வாழ்க்கையையே உணர்வுருமாற்றம் செய்துவிடும்.

எப்படியிருந்தாலும் பத்து நாள்களுக்குப் பிறகும் இங்கேதான் நான் இருக்கப் போகிறேன். இது எதுவும் வேலை செய்யவில்லை என்றால், வந்து என்னை பிடித்துக்கொள்ளுங்கள்.

ஆசையிலும் பயத்திலும் வாழ்வதைவிட, சந்தோஷத்திலும் ஆனந்தத்திலும் இந்தப் பத்து நாள்கள் நீங்கள் வாழ்ந்தீர்களென்றாலே போதும் அது உங்கள் முழு வாழ்க்கையையே உருமாற்றி அமைத்துவிடும்.

இந்த ஒரு கருத்தே உங்களை நேரடியாகவே, உங்களுடைய எல்லாத் தளைகளிலிருந்தும், கட்டுக்களிலிருந்தும் உங்களை விடுவித்துவிடும்.