KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/புதிய உணர்விற்குள் குடியேறிவிழ்வோம்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

புதிய உணர்விற்குள் குடியேறிவிழ்வோம்

நீங்கள் இதைப் பயிற்சி செய்யும்பொழுது முதல் சில நாள்களுக்கு உங்களுக்குக் கொஞ்சம் குழப்பமாக இருக்கும். ஏதாவது ஆசை மேலே வரும்பொழுதெல்லாம் 'இல்லை' என்று சொல்லிவிடுங்கள். ஏதாவது பயம் வரும்போதும், 'இல்லை' என்று சொல்லிவிடுங்கள்.

முதல் சில நாள்கள் கொஞ்சம் குழப்பமாகவே தெரியும்; ஏனென்றால் உள்ளே ஒரு புதிய வெற்றிடம் உருவாக்கப்பட்டுவிடுகிறது. நீங்கள் உங்களுக்குள் ஏதோ காலியாக இருப்பதை, ஒரு கவலைப்படாதீர்கள்.

சில நாள்களில், நீங்கள் அழகாக அந்தப் புதிய அமைப்பில் நிலைபெற்றுவிடுவீர்கள். அந்த வெறுமைத் தன்மையுடன் இணக்கமாக இருக்கக் வெறுமையைத்தான் புத்தர் சூன்யம் அல்லது நிர்வாணம் என்று அமைக்கிறார்.

'நான் சந்தோஷத்துடன் செயல்படுவேன். ஆசையையும் அச்சத்தையும் என் மனத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன்' என்று பத்தே பத்து நாள்களுக்கு முழவு எடுங்கள்.

விழிப்புணர்வு நிலையிலிருந்து செயல்படுதல், ஆனந்த உணர்விலிருந்து செயல்படுதல், ஆசை அச்சத்தால் விரட்டப்படாமலும் இழுக்கப்படாமலும் தள்ளப்படாமலும் வாழ்தல் இவற்றைத்தான் புத்தர் சூன்யம் என்று குறிப்பிடுகிறார்.

"நான் சந்தோஷத்துடன் செயல்படுவேன். நான் ஆசையையும் அச்சத்தையும் என் மனத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன்," என்று பத்தே பத்து நாள்களுக்கு முடிவு எடுங்கள்.

ஒரு வேளை, இந்தப் பத்து நாள்களில் நீங்கள் சில முறை தோல்வியடைய நேரலாம். அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இந்த வழியை முயற்சி செய்வது என்பது பயத்தினால் ஏற்படும் தோல்வியைவிட மிக உயர்ந்தது.

தோல்வியைப் பற்றிய பயமிருக்கும்போது, நீங்கள் ஒருபோதும் ஆரம்பிக்கவே மாட்டீர்கள். ஆரம்பியுங்கள், தோற்றாலும்கூட பரவாயில்லை!

இதனுடைய தெரிந்துகொள்வீர்கள். குறைந்தது அந்த நுட்பத்தைத் எங்கே தோல்வியடைந்தோம் என்பதைத் தெரிந்துகொள்வீர்கள். நீங்கள் ஆரம்பிக்கவே இல்லையென்றால், தோல்வியடைந்தீர்கள் உங்களால் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விடும்.

ஆனந்த உணர்விலிருந்து செயல்படும்பொழுது ஆசையாலும் பயத்தாலும் அலைக்கழிக்கப்பட மாட்டீர்கள்.

உண்மையாகச் ஆரம்பித்து தொடர்ந்து செய்தீர்களென்றால்,

அது உங்கள் முழு வாழ்க்கையையே உருமாற்றிவிடும். நீங்கள் விடுதலை பெறுவதற்குத் தேவையான அளவு பெரிய பலத்தையும் தைரியத்தையும் உங்களுக்குத் தந்துவிடும். முதலில் வெறுமையாக உணர்வதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.

ஒருவர், தம்முடைய மாமியார் இறந்துவிட்டாரென்றால் சில நாள்களுக்கு ஒரு வெறுமையை உணர்வார் அல்லவா! அதுபோலத்தான் இதுவும். நம்முடன் வாழ்ந்து வந்த ஒருவர் இறந்துவிட்டால், நாம் சில நாள்களுக்கு ஏதோ இழந்து விட்டதைப்போல உணர்வோம்.

குற்றம் கண்டுபிடித்து, நம்மைக் குத்திக் காட்ட யாருமே இல்லையென்றால், எதையோ இழந்துவிட்டதைப்போலத்தான் நாம் உணர்வோம் !

இந்த ஆசையும் கொடுத்துக்கொண்டே இருக்கும். அதனால் அடுத்த பத்து நாள்கள் நீங்கள் இதைப் பயிற்சி செய்யும்போது, நமக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த யாரையோ இழுந்து விட்டதைப்போலத் தோன்றும். கவலைப்படாதீா்கள். அந்தப் புதிய உணர்விற்குள் விரைவில் நிலைபெற்றுவிடுவீர்கள். உங்களுடைய முழு இருப்புமே புதியதாக மாறிவிடும். நாம் புதிய தனித் தன்மையுடன் இருப்போம்.