KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/காரணமில்லா மங்கலத்துவத்தோடு உங்களாலும் வாழ முடியும்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

காரணமில்லா மங்கலத்துவத்தோடு உங்களாலும் வாழ முடியும்

நாம் நம்முடைய இயந்திரத்திற்குத் தவறான எரிபொருளைப் போடுவதன் மூலம் இந்த இணக்கமற்ற தன்மையை நமக்குள்ளேயே தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.

தவறான எரிபொருளை நம்முடைய இயந்திரத்திற்குப் பயன்படுத்தினோமானால், ஒரு வித்தியாசமான சத்தம் வெளி வருவதுடன், வித்தியாசமான புகையையும் கக்கும் என்பது நமக்குத் தெரியும். எரிபொருள் சுத்தமானதாக இல்லாவிட்டால் இயந்திரம் வித்தியாசமான சத்தத்தைத்தான் எழுப்பம்.

ஒரு சின்ன கதை.

கணவனும் மனைவியும் ஒருகாரில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிக்னலில் நின்றார்கள். திடீரென்று அவர்களுக்கு அடுத்தாற்போல ஒரு மொ்ஸிடஸ் பென்ஸ் கார் ஒன்றைப் பார்த்தார்கள். "நேற்று இரவு என்னுடைய கனவில் இதே போன்று ஒரு அழகான கார் ஓட்டிக் கொண்டிருந்தேன், ' என்று கணவன் சொன்னார்.

"ஆமாம் ஆமாம், நானும் எஞ்சின் சத்தத்தைக் கேட்டேன், '' என்று மனைவி சொன்னார்.

உங்களுக்கும் உங்களுடைய இருப்புத் தன்மைக்கும் இடையேயுள்ள இணக்கமற்ற தன்மைதான் இரைச்சலாக வெளிப்படுகிறது.

ஆழ்ந்த தூக்கம்: அவர்களுக்குத் தூக்கம்; மற்றவர்களுக்குத் துக்கம்.

தெளிவாகப் புரிந்துகொள்ளாவிட்டால், சத்தம் வித்தியாசமானதாக இருக்கும். சத்தம் இருந்துகொண்டே இருந்தால், எரிபொருள் சுத்தமானதாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

அதனால் உங்களுடைய வாகனத்திற்கு ஆசை, பயம் என்ற எரிசக்தியைப் பயன்படுத்தமாட்டேன் என்று ஒரு பத்தே பத்து நாள்களுக்குத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.

திடீரென்று நீங்கள், உங்கள் இருப்பில் இருந்து ஒரு புதிய சக்தியும் சுத்தமான மங்கலத்துவ சக்தியும் மேலெழும்பி வருவதை உணர்வீர்கள். காரணமில்லாத மங்கலத்துவ சக்தியைத்தான் நாம் சிவம் என்கிறோம். சமஸ்கிருதத்தில் சிவம் என்றால் 'காரணமில்லாத மங்கலத்துவம்' காரணமில்லாத சக்தி என்று பொருள்.

அந்தக் காரணமில்லாத சக்தியுடன், நோக்கம் இல்லாத சக்தியுடன் மட்டுமே நம்மால் வாழ முடியும். இரண்டே இரண்டு விஷயங்கள்தான் அதற்குத் தேவைப்படுகின்றன.

முதலாவதாக, நீங்கள் உங்களிடம் அந்தச் சக்தி இருப்பதை நம்புங்கள். அடுத்தது, அதை வாழ ஆரம்பியுங்கள். நாம் தெய்வீக உணர்வை அடைவதற்கு இந்த இரண்டே இரண்டு விஷயங்கள்தான் தேவைப்படுகின்றன.

காரணமில்லாத மங்கலத்துவ சக்தியுடன் நாம் செயல்படத் தொடங்கும்போது நாம் சிவமாக மாறுகிறோம். அப்படி இல்லையென்றால் நாம் சவம் (உயிரற்ற உடல்) ஆகிறோம்.