ஞாணம் தப்பியோடுபவருக்கல்ல, தைரியமுடன் எதிர்கொள்பவருக்கே!
இங்கே துறவறம் என்று குறிப்பிடும்பொழுது நாம் பரம்பரை சம்பிரதாயப்படி புரிந்து வைத்திருக்கிற துறவறம் அல்ல என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். துறவறம் என்றால் பொதுவாக எல்லாவற்றையும் விட்டுவிடுவது, குறிப்பாக பொறுப்புகளை விட்டுவிடுவது என்று நினைக்கிறோம். துறவு என்ற பெயரில் ஹிமாலயத்திற்கே சென்று உட்கார்ந்து தியானம் செய்வதற்கு முயற்சித்தாலும் நாம் ஒரு சந்நியாசி ஆக முடியாது.
'துறந்துவிடுதல்' என்ற வார்த்தையை நாம் எந்த முறையில் புரிந்து கொண்டிருக்கிறோமோ அந்த முறையில்தான் செயல்படவும் செய்கிறோம். 'துறந்துவிடுதல்' என்றால் 'பொறுப்புகளைத் துறந்துவிடுதல்' என்றே நாம் புரிந்து வைத்திருக்கிறோம். அதனால் நாம் புரிந்து கொண்டதுபோலவே, உலகத்தைத் துறந்துவிட முயலும்போது சில விஷயங்களைத் தவிர்த்துவிடுகிறோம்.
'தவிர்த்துவிடுதல்' என்பது ஒருபோதும் தீர்வாகாது.
நான் 'சில விஷயங்களை நான் விட்டுவிட வேண்டும், தவிர்த்துவிட வேண்டும்' என்று சொல்லும்போது, பிரபஞ்ச சக்தியின் படைப்புகளையும் உலகத்தைத் துறக்கும்போது, பிரபஞ்ச சக்தியால் படைக்கப்பட்டவற்றைத் துறந்துவிடுகிறோம்.
காரணமில்லாத மங்கலத்துவ சக்தியைத்தான் நாம் சிவம் என்கிறோம்.
நாம் பிரபஞ்ச சக்தியைக் காட்டிலும் அதிக புத்திசாலிகள் என்று நிரூபிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அப்போது நமக்கு மிகவும் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும்கூட அது நம் ஆணவத்தையே காட்டுகிறது. நம்முடைய துறவு என்பது நம்முடைய ஆணவத்தைக் காட்டுவதாகத்தான் அமைந்துவிடுகிறது.
உண்மையிலேயே, சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காகவே நாம் துறவுகொள்ள முயற்சி செய்கிறோம். அந்தத் தொந்தரவு எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டு, நாம் எதைத் துறக்க வேண்டுமென்பதை முடிவு செய்ய வேண்டும்.
வெளி நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளோ, ஒருபோதும் தொந்தரவுதர முடியாது. அவை எப்படி நம்மைக் கட்டுப்படுத்த முடியும் ? உண்மையிலேயே பயம் ஆசை இவற்றின் தன்மைகளும் வெளிப்பாடுகளும்தான் நமக்குத் தொந்தரவு தந்து கொண்டிருக்கின்றன.
பொருட்கள், மக்கள், நம்முடைய வாழ்க்கை இவை இப்படி அமைய வேண்டும் என்று நம்முடைய மனமானது தொடர்ந்து ஒவ்வொரு கணமும் எதிர்பார்ப்புக்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.
தவிர்த்துவிட வேண்டும் என்றுசொல்லும்போது, நாம் இருப்பதற்காகவே பிரபஞ்சத்தால் படைக்கப்பட்ட சிலவற்றைக்கூட தவிர்த்துவிடுகிறோம்.
உண்மையை எதிர் கொள்வதற்குப் பயந்துகொண்டு, எதையாவது விட்டு விட்டு ஓடிவிடுதல் என்ற மன அமைப்பை மாற்ற வேண்டும். உண்மையை எதிர்கொள்ள பயந்துகொண்டு அல்லது சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட குற்ற மனப்பான்மையை எதிர்கொள்ள பயந்துகொண்டு பொருள் சார்ந்த உலக இன்பங்களை விட்டு ஓடிவிடுவது என்பது துறவு ஆக முடியாது.
ஒரு ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து, அந்த ஐந்து நிமிடங்களில் நடக்கும் விஷயங்களையும் அந்தச் சூழ்நிலைகளையும் நீங்கள் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள் என்பதை விழிப்புணர்வுடன் பாருங்கள்.
நீங்கள் நினைப்பது, உணர்வது, செய்வது என எல்லாவற்றையும் விழிப்புணர்வுடன் கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள். அப்பொழுது நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்கே புரியும்.
நம்மைச் சுற்றி ஆழமான பாதிப்பு ஏற்பட்டு, சுற்றி உள்ளவர்களாலும் நாம் எந்தவிதத்திலும் பாதிப்படையாமல், நம்மைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையுமே ஒரு சாட்சியாக மட்டுமே இருந்து, வாழ முடிந்தால்தான், நாம் உணர்ந்த ஆன்மாவாக ஆகிறோம். நாம் யார் என்பதை உணர்ந்தவர்களாகிறோம்