KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/விழிப்புணர்வுக்குள் நுழையவைக்கும் அருமையான சூத்திரம்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

விழிப்புணர்வுக்குள் நுழையவைக்கும் அருமையான சூத்திரம்

கிருஷ்ணரிடமிருந்து ஒரு அழகான சூத்திரம்; உன்னதமான விழிப்புணர்வு நிலைக்குள் நுழைவதற்கான சூத்திரம்.

உங்களுக்குள்ளேயே இருங்கள். சுயநலக் காரணங்களுக்காக மட்டுமே புன்னகைக்காதீர்கள்.

புன்னகையானது உங்களுடைய இருப்புத் தன்மையில் இருக்கும் அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும்.

நாம் எல்லோரும் ஒரு செயற்கையான வாழ்க்கையை, உந்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய இருப்புத்

தன்மையின் இயல்பை மறந்துவிட்டோம். இங்கே மகிழ்ச்சி என்பது எவ்வித வெளிக் காரணமும் இல்லாமல் நமக்குள் நிகழ்கிற, ஆனால் நம்முடைய இயல்பினை வெளிப்படுத்துவதற்காகவே நிகழ்கிற ஆனந்தத்தைக் குறிக்கும்.

நாம் நம்முடைய ஆசைகளின் பின்னால் ஓடும்போதும், நம்முடைய அச்சங்களிலிருந்து நம்மை நாமே விலக்கி வைத்துக்கொள்ளும்போதும் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறோம்.

அதனால் ஒவ்வொரு கணமும் நாம் நம் ஆசையின் காரணமாக, நம்முடைய விருப்பங்களின் பின்னால் ஓடிக்கொண்டோ அல்லது பயத்தின் காரணமாக ஏதாவது ஒன்றிலிருந்து விலகி ஓடிக்கொண்டோ இருக்கிறோம். ஒவ்வொரு கணமும் நம்முடைய மகிழ்ச்சி என்பது ஒன்று ஆசை அல்லது அச்சத்தால் மட்டுமே அளக்கப்படுகிறது.

நாம் அந்தக் கணத்தை உண்மையிலேயே அனுபவிக்கவில்லை என்பதுதான் இதன் பொருள். நாம் நிகழ்காலத்தில் உண்மையாகவே வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. நாம் தொடர்ந்து ஆசை அல்லது அச்சத்தின் வலையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஒருபோதும் நிகழ்காலத்தில் இருப்பதே இல்லை. நாம் எதனுள்ளும் பூர்ணத் தன்மையுடன் இருக்கும்பொழுது மட்டுமே, நாம் அதை முழுமையாக அனுபவிக்கவும் முடியும். முழுமையாக நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது மட்டுமே நாம் பூர்ணத் தன்மை உடையவராக முடியும்; அப்பொழுதுதான் நாம் இப்பொழுது, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதனை முழுமையாக அனுபவிக்க முடியும்.

நிகழ்கால ஆனந்தமயமான கணமானது, இயல்பாகவே எதிர்கால ஆனந்தமயமான கணத்தைத்தான் பிரசவிக்கும்.

நிகழ்காலத்தில் இருக்கும்போதும், முழுமையாகவும் முழு உற்சாகத்துடனும் நீங்கள் இருக்கும்போதும், நீங்கள் ஆனந்தமான நிலையில் இருக்கிறீர்கள். ஆனந்தம் என்பது எந்தவிதமான காரணமும் இல்லாமல், கடந்த காலத்தினால் பாதிக்கப்படாமலும் இருக்கிற சந்தோஷமான நிலை. அது நம்முடைய ஆசையினாலோ அச்சத்தாலோ பாதிக்கப்படுவதில்லை.

அது எப்போதும் இருந்து கொண்டிருப்பது, அவ்வளவுதான்.

நிகழ்காலத்தில் இயல்பாகவே கணக்கைத்தான் இப்பொழுது அகப்பட்டுள்ள அச்சம் என்னும் விஷச் சூழலில் இருந்து ஒரு ஒழுக்கமான ஆனந்தமயமான சூழலுக்குள் நுழைந்துவிடுவோம்.

விழிப்புணர்வு ஆசைகளின் மீதான பற்றை எடுத்துவிடுகிறது

ஏன் நாம் ஆசையின் பின்னால் ஓடிக்கொண்டும் அல்லது எதற்காகவாவது பயந்துகொண்டும் இருக்கிறோம் ? இதை நாம் சற்று ஆழமாக ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், வாழ்க்கை என்பதே நம்மால் அடையப்படவேண்டிய சில லட்சியங்களைக் கொண்டதுதான் என்று நினைத்துக் கொண்டிருப்பதனால்தான், நாம் எதையாவது நோக்கி அல்லது எதிலிருந்தாவது விலகி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

வாழ்க்கையில் நாம் அடைய வேண்டும் என்று நிர்ணயித்து வைத்துள்ள லட்சியங்களை நோக்கி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தனக்கென்று எந்த லட்சியத்தையும் வைத்துக் கொள்வதில்லை.

வாழ்க்கையே ஒரு இலட்சியம்தான். பாதையே இலட்சியம்தான்! இலட்சியமும் பாதையும் வேறு வேறானவை என்று நாம் நினைத்தால், நாம் இலட்சியத்தை நோக்கி ஓடுவோம். தொடுவானத்தை நோக்கி ஓடுவோம்.

எப்பொழுதுதாவது நாம் தொடுவானத்தைத் தொட்டுவிட முடியுமா? நாம் அதை நோக்கி ஓட ஓட, அது நம்மை விட்டு விலகிச் சென்றுகொண்டே இருப்பதைப் பார்க்கிறோம் இல்லையா ? ஏன் ? ஏனென்றால் தொடுவானம் என்பதே ஒரு கற்பனைதான், அது ஒரு மாயைதான்.

வாழ்க்கையில் ஒரு லட்சியத்தின் பின்னால் நாம் ஓடிக்கொண்டே இருந்தால், வாழ்க்கையின் முடிவில் நாம் ஏமாற்றத்தைத்தான் அடைவோம்.

ஆனால் இலட்சியமாக மட்டுமே, அந்தப் பாதையையே நாம் இலட்சியமாக மாற்றிவிடுகிறோம்.

அதனால் நாம் வாழ்க்கைப் பாதையில் இருக்கிற ஒவ்வொரு கணமும் ஆனந்தம் என்கிற இலட்சியத்தை அடைந்து கொண்டிருக்கிறோம் !

ஆகவே, ஒவ்வொரு கணத்தையும் நாம் முழு விழிப்புணர்வுடனும் முழு உற்சாகத்தோடும் வாழும்பொழுது, நாம் உண்மையாகவே அந்தக் கணத்தை அனுபவிக்கிறோம்.

நாம் எதைச் செய்து கொண்டிருந்தாலும் சரி, அந்தச் செயலிலேயே முழுமையாக மூழ்கிவிடும்பொழுது அந்தப் பாதையையே நாம் அனுபவிப்பவர்களாகிவிடுகிறோம். ஒவ்வொரு கணமும் நாம் லட்சியத்தையும் சேர்த்தே அனுபவிக்கிறோம்.

தன்னைஒருவர்எப்போதும்சந்தோஷமாகவும்
சுறுசுறுப்பாகவும் இருக்கிறார். ஏனென்றால் அவர் முழுமையாக
நிகழ்காலத்திலேயேவாழ்ந்து
கொண்டிருக்கிறார்.

இலட்சியம், அது தொடுவானத்தைப் போன்றதுதான். தொடுவானத்தை நாம் என்றுமே தொடமுடிவதில்லை. தெய்வீக ஆற்றலானது

அவருக்குள் ஊற்றாகப் பாய்ந்துகொண்டே இருக்கிறது. அந்த ஆனந்த ஆற்றலுடன் அவர் அவருடைய செயல்களைச் செய்து செயல்களுக்காக அச்சத்திடமிருந்தும் சக்தியைப் பெறவேண்டிய அவசியமே அவருக்கு ஏற்பட்டதில்லை.

பொறுப்பெருக்கச் செய்வதே அன்பு!

கிருஷ்ணர், தமக்குள்ளேயே சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் ஒரு குருவைக் குறிப்பிடுகிறார். வெளியே உச்சவூகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் உள்ளே மையத்தில் முழுமையான ஒய்வு நிலையில், தளர்வு நிலையில் இருக்கிற நிலையையேயே அவர் குறிப்பிடுகிறார்.

இந்த நிலையும் சாத்தியப்படக்கூடியதே. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த நிலையில்தான் நாம் செய்து கொண்டிருக்கும் செயலில் இயல்பாக, முழு

கன்னை உணர்ந்த ஒருவர் கும்முடைய செய்களுக்காக ஆசையிடம்ருந்தும் அச்சத்திடமிருந்தும் சக்கியைப் பெற மாட்டார்.

ஈடுபாட்டுடன் ஈடுபட முடியும். இந்த ஒருநிலையில்தான் நாம் எந்தச் செயலைச் செய்தாலும் செய்கிற செயலில் முழுமையான திருப்தியை உணர முடியும்; ஆனந்தமாக இருக்க முடியும்.

கிருஷ்ணர் இதைத்தான் சொல்கிறார். நாம் முற்றிலும் உள்முகமாகத் திரும்பும்பொழுது, வெளியே நடப்பனவற்றின் மீது எந்தவித பற்றும் இருப்பதில்லை; எல்லாவற்றுடனும் தெய்வீகத்துடனும் ஒன்றாகி எல்லாக் காமாக்களையும் பாவங்களையும் கடந்துவிடுகிறோம்.

பிறகு பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு ஒன்றாகிறோம். நாம் நிலையான, எல்லை இல்லாத, ஆனந்தமான நித்யானந்தத்தை அடைகிறோம்.

நாம் மற்றவர்களிடம் உண்மையிலேயே அன்பாக இருக்கும்பொழுது, நாம் மேலும் மேலும் அதிகமான பொறுப்புக்களை எடுத்துக் கொள்கிறோம். எத்தனை பேரிடம் முடியுமோ அத்தனை பேரிடமும் நாம் அன்பைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். அதற்காக நாம் பொறுப்பு எடுத்துக் கொள்கிறோம்.

நாம் உள்ளுலகத்தோடு இசைவாக இணைந்து இருக்கும்பொழுது, நாம் நிகழ்காலத்தில் வாழ்கிறோம். கடந்தகாலம் என்பதும் எதிர்காலம் என்பதும் நமக்கு இருப்பதில்லை.

நாம் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன், தெய்வீகத்துடன் ஒன்றாகிவிடுகிறோம். நான் இதை, 'அனைத்தும் ஒன்றான நிலை' என்று சொல்கிறேன். நாம் அனைவரும் ஒன்றாகிறோம். நாம் எல்லாவற்றையும் குழ்ந்து இருக்கிறோம். நாம் எதையும் வேறுபடுத்துவதில்லை.

இந்த நிலையில், நாம் தன்னிச்சையாக செயல்படுதல் இருக்கிறோம். தன்னிச்சையாக செயல்படுதல் என்பது படைப்பாற்றலைக் குறிக்கவில்லை. படைப்பாற்றல் என்பது ஒரு உப உற்பத்திப் பொருளோ.

தன்னிச்சையாக சுற்றி இருக்கும் பொறுப்பேற்றலுமே! எதுவுமே விடுபடுவதும்

கன்னீச்சையாக செயல்படுதல் என்பது நீகழ்காலத்தில் இருத்தலும் நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றலுமே!

இல்லை; எதுவுமே நிர்ணயிக்கப்படுவதும் இல்லை. நாமே பாய்ந்து சென்று அடைகிறோம். நாமே விரிவடைந்து, உள்ளடக்கிக் கொள்கிறோம்.

நாம் எந்த அளவு பொறுப்பெடுத்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு விரிவடைகிறோம். பொறுப்புணர்வு என்பது ஏதோ எளிதாகத் தோள்களைக் குலுக்குவதுபோலத்தான். ஆனால் நாம் வெறுமனே அதற்குத் தோள்களைக் குலுக்கிக்கொண்டிருக்காமல், அதற்குத் தோள் கொடுப்போமேயானால், நாமும் விரிவடைவோம். நமக்குள் தானாகவே அந்தத் தெய்வீகச் சக்தி பாயும். நமக்குள் ஆற்றல் நிறைந்து தழும்பிக் கொண்டிருந்தால் மட்டுமே, நாம் மேலும் மேலும் மேலும் பொறுப்பெடுத்துக்கொள்ள முடியும்.

நாம் முதலில் பொறுப்பு எடுக்கும்பொழுது, எந்தவித சந்தேகமும் இல்லாமல்தான் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் நம்மை எதையாவது செய்யச் சொல்லும்பொழுது மட்டும், இடையில் இந்த மனம் வந்துவிடுகிறது. அது ஒரு தடுமாற்றத்தை உண்டு பண்ணுகிறது. அது நம்மை நிறைய விஷயங்களைச் சிந்திக்க வைக்கிறது. உடனே நாம் பட்டறிவுப்பூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் ஆராயத் தொடங்கிவிடுகிறோம்.

நம்முடைய மனம் சாதக, பாதகங்களைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது. நாம் தொடங்கிவிடுகிறோம். ஆனால் முடிவில் நாம் ஆசை அல்லது அச்சத்தின் படியேதான் செயல்படுகிறோம்.

தடுமாற்றத்தையே தடுமாறச் செய்யலாம்!

தடுமாற்றமே மனம். இரட்டைத் தன்மை இருக்கும்வரை மனமும் இருக்கும். சூழ்நிலையை நல்லது, கெட்டது என்று நாம் அறிவுப்பூர்வமாக எடைபோடும்வரை மனம் இருக்கும். இந்தத் தடையை நாம் தாண்டியாக வேண்டும். சுவரைத் தகர்த்தாக வேண்டும். ஏதாவது ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கும்பொழுது, இதைச் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்ற தடுமாற்றம் இனி வரவே கூடாது.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், துடுமாற்றம் என்பது இருக்கிறவரையில், மனம் என்பது இயங்கிக் கொண்டிருக்கும்.

பல நேரங்களில் மக்கள் என்னிடம் வரும்பொழுது, நான் அவர்களை எதையாவது செய்யச் சொல்லிக் கேட்பேன்.

''சரி வைத்தே, விரும்புகிறார்களா இல்லையா என்பதைச் சொல்லிவிடுவேன். நம் மனம் இயங்கிக்கொண்டிருக்கும்போதும், நாம் குழுப்பத்திலிருக்கும்போதும், ஒரு பொறுப்பை எடுத்துக் கொள்வதில் நமக்குத் தடுமாற்றம் இருக்கும்.

பொறுப்பை இயல்பாக நாமே எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது, மனம் சொல்வதற்கு ஒன்றுமே இருக்காது. நமக்குத் தெரியும். அவ்வளவுதான்.

நாம் மனத்தில் மிகவும் தளர்வான நிலையிலும் தன்னிச்சையாகவும் இயங்குவோம்.

இயல்பாகச் செயல்படும் திறமையைத்தான் பொறுப்புணர்வு மனத்தைக் கடந்து செல்லும்பொழுதுதான், இருமைத் தன்மையைத் தாண்டிய யூர்ணமான ஒருமைத் தன்மையையும், ஒத்திசைந்து இயங்குகிற தெய்வீகத்தின் தன்மையையும் பார்க்கிறோம். தெய்வீகத்துடன், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் நாம் ஒன்றாகி நிற்கிற நிலையில்தான், நாம் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.

தடுமாற்றம் என்பது இருக்கிறவரையில், மனம் என்பது இயங்கிக்கொண்டே தருக்கும்.

நாம் இந்த நிலையை அடையும்பொழுது, செயல்படுவதற்கு அங்கே மனம் இருக்காது. நாம் ஆழமான தளர்வான நிலையில் அல்லது ஆனந்தத்தில் இருக்கிறோம். நாம் இந்த நிலையில் இருக்கும்பொழுது, அது தன்னிச்சையாக பதில்செயல் புரிகிற திறமையை நமக்குள் உருவாக்குகிறது.

நல்ல செயல்களைச் செய்வதற்கு இது நமக்கு மிகவும் முக்கியம். உண்மையாகவே மற்றவர்கள்மீது தூய்மையான, நேர்மையான அன்பு இருப்பதை நாம் உணரும்பொழுது மட்டுமே, நாம் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.

ஏனென்றால் நம்மைச் சுற்றி உள்ளவர்களிடமும் நாம் அந்த ஆனர்தத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். ஆனந்தத்தோடு நாம் செயல்புரியும்பொழுதுதான், நாம் நல்ல விஷயங்களை மற்றவர்களுக்காகச் செய்வோம்.

நாம் ஆசையினாலோ அச்சத்தினாலோ தூண்டப்பட்டு ஒரு நல்ல செயலைச் செய்தாலும்கூட. அது ஒரு சேவையாக முடிவு பெறாது.

தடுமாற்றம் இல்லாமலிருக்கும்போதும், நாம் தன்னிச்சையாக எடுத்துக்கொள்ளும்போதும், நாம் ஆசையினாலோ, செயல்படமாட்டோம்.

நாம் சேவையை மெட்டுமே செய்து கொண்டிருப்போம், நாம் நல்ல விஷயங்களை மட்டுமே செய்து கொண்டிருப்போம். நமக்கு அங்கே எந்தவிதமான எதிர்ப்பார்ப்பும் இல்லை, ஆசையும் இல்லை, அச்சமும்

இல்லை. நாம் எப்போதும் கொடுத்துக்கொண்டே இருப்போம்.

நாம் அச்சத்தினாலோ அல்லது பேராசையினாலோ தூண்டப்பட்டு ஒரு செயலைச் செய்தோமென்றால் அது நல்ல விஷயமாக இருந்தால்கூட, தொந்தரவில்தான் முடியும். அது ஒரு சேவையாக முடிவு பெறாது.

கேள்வி: ஸ்வாமிஜி. புலன்களினால் ஏற்படுதிற தொல்லைகளை அமு த்தத்தை ஒருவர் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? அதைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. ஆனால் அதற்கான திறமை என்னிடத்தில் இல்லை. எனக்கு உதவி தேவை.

சரியாகச் சொன்னீர்கள். அது அந்த அளவுக்குச் சுலபமானதென்றால், ஒவ்வொருவரும் அவரவர் வழியில் ஞானமடைந்திருப்பார்கள். ஆனால்

புலன்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மைதான், ஏனெனில் பல ஞானமடைந்தவர்கள் அதைச் செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

இதை அடைய உங்களுக்கு இரண்டு விஷயங்கள் தேவை. பொறுப்பும் பொறுமையும். இதைத்தான் நாம் தமஸ் என்கிறோம். சிலா் ஸ்பானிஷ் மொழியில் மதிய சிற்றுண்டிக்கு 'தபஸ்' என்ற வார்த்தை இருப்பதாக என்னிடம் சொன்னார்கள்! இல்லை, இது அது இல்லை! தமஸ் என்றால் வழக்கமாக நீங்கள் கற்பனை செய்து வைத்திருப்பதுபோல் கிடையாது; அது, ஒரு பாதத்தில் நின்றுகொண்டு, மற்றொரு பாதத்தைத் தூக்கி வைத்துக் கொள்வது அல்லது ஒரு கையை உயா்த்திக் கொள்வது அல்லது தண்ணீருக்குள் நிற்பது அல்ல.

தம்மை உணர்ந்து கொள்வதற்காக, தம்முடைய உண்மையான இயல்பை உணர்ந்து கொள்வதற்காக ஒருவர் ஒழுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் அதன் மூலம் ஏதாவதுகிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எதுவுமின்றியும் மேற்கொள்கிற பொறுப்புகளைதான் தமஸ் என்ற வார்த்தை குறிக்கிறது.

தமஸ் என்பது மனத்தின் ஒருநிலை. அதை வளர்த்துக்கொள்ள முடியும். அதில் வெற்றி பெற, குருவிடமும் குரு அருளிடமும் ஆழமான பத்தியும் ச 'ரணாகதி உணர்வும் இருக்க வேண்டும்.

'ஜீவன் முக்த நிலை' என்று எதைச் சொல்கிறேனோ, அதைப் பற்றி நான் பேசியிருக்கிறேன். எதையாவது அது சரியா தவறா என்று உறுதியாகத் தீர்மானிக்க வேண்டிய தேவை எழும்பொழுது அல்லது விமிப்புணர்வுடன் செயலைச் செய்து கொண்டிருக்கும்பொழுது உங்களை

நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், "இந்தச் சூழ்நிலையில், இந்தச் செயலை என்னுடைய குரூ எப்படிச் செய்திருப்பார்?'' என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

அதன் பின்னர், குரு என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறீர்களோ அதே வழியில், அதே முறையில் அதைச் செய்துவிடுங்கள்.

ஒரு இது ஞானமடைவதற்கான உங்களுடைய வாழ்க்கையில் உங்களுடைய குருவைத் தவிர ஒரு பெரிய வழிகாட்டியாக,

தபஸ் என்பது மனத்தின் ஒருநிலை. அதை வளர்த்துக்கொள்ள முடியும். அதில் வெற்றிபெற, குருவிடமும் குரு அருளிடமும் ச் ரூணாகதி அடைய வேண்டும்.

ஒரு நல்ல முன் மாதிரியாக வேறு யார் இருக்க முடியும்.

நீங்கள் அவருடைய போதனைகளை ஆழ்ந்து உள்வாங்கியிருந்தால், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர் எவ்வாறு நடந்து கொண்டிருப்பார் என்பதற்கான பதிலை உறுதியாக நீங்கள் பெற முடியும். அதை அப்படியே அதே முறையில் செய்துவிடுங்கள்.

நான் இந்த நுட்பத்தைப் பற்றி பேசிய பிறகு, என்னுடைய சீடர்களில் ஒருவா் ஒரு சம்பவத்தை விவரித்தார். அவர் ஒரு வேலையாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது, அந்த நடைபாதையில் விழுந்து கிடந்த ஒரு நபரைக் கடந்து சென்றார். பொதுவாக அவர் வேகமாக நடக்கக்கூடியவர். அன்றைக்கூக்கூட அதே போன்றுதான் சென்றார். ஆனால் என்னுடைய வார்த்தைகளை நினைவு கூர்ந்தபொழுது அவருடைய கால்கள் நகர மறுத்து, அவரை விழுந்து கிடந்த அந்த நபரிடம் இழுத்துச் சென்றன. அவர் 'மருத்துவ உதவி மையத்திற்கு' தொடர்புகொண்டு, அவர்களை வரவழைத்து, உதவிகள் வந்து சேருகிற வரைக்கும் அந்த நபருடனேயே தங்கினார்.

ஒவ்வொரு முறை நீங்கள் இதைச் செய்யும்போதும், உங்களுக்குள் ஏதோ ஒன்று நிகழ்ந்து, உங்களுடைய இயல்பூக்க நடவடிக்கைகளை அதாவது விழிப்புணர்வற்ற நிலையில் நடைபெறும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் சில படிகள் முன்னேறிச் செல்கிறீர்கள். நீங்கள் மேலும் மேலும் விழிப்புணர்வு பெறுகிறீர்கள்.

நீங்கள் உங்கள் புலன்களுக்கு இடம் கொடுத்தாலும்கூட, அதுவும் நல்லதுதான். செயல்களை அடக்கி வைக்காதீர்கள். அப்படி இடம் கொடு த்தற்காகக் குற்ற உணர்ச்சிக்குள் விழுந்துவிட வேண்டாம். நீங்கள், 'நாம் வேறு முறையில் நடந்துகொண்டிருக்க வேண்டும்' என்ற விழிப்புணர்வை உங்களுக்குள் பெறுகிறீர்கள், அதுபோதும். அந்த விழிப்புணர்வும் குருவின் வார்த்தைகள்மீது உங்களுக்குள்ள நம்பிக்கையும் சேர்ந்து, நீங்கள் வேறு முறையில் நடப்பதற்கு உதவும். இந்த வழியில் படிப்படியாக நீங்கள் உணர்வுருமாற்றம் அடைவீர்கள்.