உங்களுக்குள் புது தெளிவு பிறக்க, புதியதோர் தீர்வு
ஆசையாலும் அச்சத்தாலும் நம்முடைய உணர்ச்சிகளுக்கு நாம் சக்தி கொடுக்காமலிருந்தால், நாம் ஒரு புதுத் தெளிவைப் பார்ப்போம். நாம் ஞானத்துடனும் தெய்வீக உணர்வுடனும் அளவில்லாத ஆனந்தத்துடனும் செயல்பட ஆரம்பிப்போம்.
அதனால் தீர்மானம் செய்யுங்கள். ''ஆசையின் காரணமாக நான் எதைச் செய்தாலும் அதன் பலனாய் மேலும் ஆசைகளே விளைகின்றன. நான் ஓடிக்கொண்டே இருந்தும் எங்கும் எதுவும் கிடைக்கவில்லை. இதுவரை ஒடியதுபோதும்!' என்று தீர்மானம் செய்யுங்கள்.
அதேபோல்தான், அச்சத்தால் நீங்கள் எதனிடமிருந்தாவது தப்பித்துக் கொண்டிருந்தால், ''சரி எவ்வளவு நாள்களுக்குத் நான் தப்பிக்க முடியும் ? எவ்வளவு நாள்கள் என்னால் ஓட முடியும்? இந்த அச்சம், வேறு ஏதோ ஒரு ரூபத்தில் வந்து என்னைத் தாக்கத்தான் போகிறது, இதைப் பார்த்து அஞ்சி நான் ஓடினால், பின்னாளில் வேறு எதையாவது கண்டு அச்சப்படப் போகிறேன். அதனால் அதை இப்போதே எதிர்கொள்வேன்,' என்று தீர்மானம் செய்யுங்கள்.
உங்கள் நீங்கள் அஞ்சுகிறீர்கள், பொருளைப் பற்றி நீங்கள் அச்சப்படுவதே இல்லை. அந்தப் பொருள் உங்களைத் துரத்தப் போவதில்லை, ஆனால் அச்சம்தான் உங்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது. நீங்கள் எங்கேயாவது தப்பித்து சென்றுவிடலாம், ஆனால் ஆசை, அச்சம் என்னும் முட்டையைத் தலையில் சுமந்துகொண்டுதான் இருக்கிறீர்கள். நீங்கள் எங்கேயாவது ஒரு சுற்றுலா சென்றால்கூட, உங்களுடைய அந்தச் சிறிய முட்டையை அவிழ்த்துவிடுகிறீர்கள்.
உள்ளலக்ல் நீகழும் தொடர் யுத்தத்தின் பிரதிபலிப்பே களைப்பு
ஆசை, ஆச்சத்திலிருந்து தப்பிப்பதற்கு இன்று நிறைய இடங்கள் இருக்கின்றன. பெரிய பெரிய வகை வகையான ராட்டினங்களையும், வகை வகையான நீர்வழிப் பயணங்களையும் (Roller coaster rides & water rider)கொண்டுள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள்தான் (Theme Park), இன்று உலகத்திலேயே மிக மிக மகிழ்ச்சியான இடங்கள் என்று சொல்லிக்கொள்ளப்படுகின்றன.
மக்கள் என்னையும் இந்த இடங்களைக் காண்பிப்பதற்காக அழைத்துச் சென்றார்கள். அந்த இடங்களைப் பார்த்த பிறகு என்னுள் நான் மிகவும் வரைந்தினேன்.பொமுதுபோக்கு என்ற பெயரில் மக்கள் என்னை இங்கு அழைக்குச் சென்றார்கள்.
மக்கள் தங்களுக்குள் எவ்வளவு மன அழுத்தத்தைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இந்த அளவுக்குப் பொழுதுபோக்கு இவர்களுக்குத் தேவை என்றால், அந்த அளவுக்கு அவர்கள் தங்களுக்குள் மன அழுத்தத்தைச் சுமந்துகொண்டு திரிகிறார்கள்.
மனிதருக்கு அவருடைய இயல்புப் படியே இவ்வளவு பொழுதுபோக்கு என்பது தேவையே இல்லை.
நம்மைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்கு, நமக்கு இத்தனை பொருட்கள் தேவை என்றால், நம்முடைய முழு கட்டமைப்பிலும் ஏதோ மிகப் பெரிய கோளாறு இருக்கிறது. அந்தக் கட்டமைப்பிற்குள் ஆழ்ந்து பார்க்கு அதைச் சரி செய்ய வேண்டும்.
| மீண்டும் | கிருஷ்ணர் | ||
|---|---|---|---|
| தீர்மானமாகச் | சொல்கிறார், | ||
| ' ' ஆனந்தத்துடன் | செயல்களில் | ||
| ஈடுபடுங்கள். ' ' |
நீங்கள் செயல்களில் ஆனந்தத்துடன் ஈடுபட்டீர்களென்றால், உங்களுக்கே நீங்களே ஆனந்தத்தை ஏற்படுத்திக்
கொள்கிறீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கும் ஆனர்த்ததை ஏற்படுத்துகிறீர்கள்; களைப்பு என்றால் என்ன என்பதே உங்களுக்கு ஒருபோதும் தெரியாது. இன்னும் சொல்லப் போனால், 'களைப்பு' என்ற வார்த்தைக்கூட உங்களுக்குத் தெரியாது.
உண்மையாகவே உங்களிடம் நான் சொல்கிறேன், களைப்பு என்ற வார்த்தைக்கான அர்த்தமே இன்னும் எனக்குப் புரியவில்லை. எவ்வாறு நீங்கள் களைப்படைகிறீர்கள் ? 'களைப்பு' என்றால் என்ன ?
உங்களுடைய இச்சா சக்திக்கும் (ஆசையின் ஆற்றல்), கிரியா சக்திக்கும் (செயலின் ஆற்றல்), இருப்புத் தன்மைக்கும் செயலுக்கும் இடையே இருக்கிற முரண்பாடே களைப்பு! உங்களுக்கு உள்ளேயே முரண்பாடு இருக்கிறது. உள்ளே ஒரு ஆழமான பிரச்சினை இருக்கிறது. உங்களுடைய ஆசையும் அச்சமும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்கின்றன, அவ்வளவுதான்.
நாம் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால், நமக்குள்ளே ஒரு மிகப் பெரிய யுத்தம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். நமக்குள்ளேயே இடையேயான ஒரு மஹாபாரதப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
எவரொருவருடைய தெளிவாக இருக்கிறதோ, அவர் களைப்பு என்பதை ஒருபோதும் அடைவதும் இல்லை, உணர்வதும் இல்லை.
நாம் முழுமையாக இல்லாதபோதும், நம்மை நாமே ஒருங்கிணைத்துக் கொள்ளாத போதும்தான் நாம் சோர்வடைகிறோம்.
பிரிந்த உங்களை ஒன்றாய்ச் சேர்த்திடுங்கள்
என்னுடைய இளைமைக் காலங்களில், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது, நான் தியானம் செய்வது வழக்கம். காலையில் நான்கு மணி நேரம், மாலையில் நான்கு மணி நேரம் என அமாவது வழக்கம். சாதாரணமாக, நான் எந்தவிதமான ஆயத்தமும் இல்லாமல் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம்.
என்னுடைய அறைத் தோழா்கள், "எப்படி உன்னால் இப்படிப் பல மணி நேரங்கள் அமர்ந்திருக்க முடிகிறது?' என்று கேட்பார்கள். நான் சொல்வேன், ''இதிலே என்ன இருக்கிறது? நம்முடைய உடல், நம்முடைய மனம். நாம் விரும்பினால் உட்கார முடியாதா? அப்படி நம்முடைய உடல், மனம் இவற்றோடுகூட உட்கார முடியவில்லையென்றால், நாம் என்ன சாதித்துவிட முடியும் ?'' என்று சொல்வது வழக்கம்.
நாம் ஏன் சோர்வடைகிறோம்? நாம் முழுமையாக இல்லாதபோதும், நாம் நமக்குள்ளேயே நம்மை ஒருங்கிணைத்துக் கொள்ளாதபோதும்தான் நாம் சோர்வடைகிறோம்.
நமக்குள்ளேயே நாம் பிரிவினை ஏற்படுத்திக்கொள்ளும்பொழுது, ஒரு பாதியானது மற்றொரு பாதியுடன் சண்டையிட்டுக் கொள்கிறது. நம்முடைய இருப்புத் தன்மையின் ஒரு பகுதி, அதனைத் தன்னுடைய இயல்பான தன்மையிலேயே வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகிறது. ஆனால் பல்வேறு சமுதாயக் காரணங்களால் அதை நாம் அடக்கி வைக்கிறோம். அப்படி அடக்கி வைக்கப்பட்ட முறையிலேயே தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இன்னொரு பாதிப் பகுதி இருக்கிறது.
இவ்வாறு இரு பகுதிகளாக இருப்புத் தன்மை இருக்கும்பொழுது என்ன நிகழ்கிறது? இயல்பாக நாம் எவ்வாறு இருக்கவில்லையோ அவ்வாறு இருப்பதற்காக நாம் இடையறாது முயற்சி செய்து, நம்முடைய சக்தி அனைத்தையும் அம்முயற்சியிலேயே செலவு செய்து கொண்டிருக்கிறோம். ஒருநிலையில் நாம் சோர்வடைந்துவிடுகிறோம்.
நாம் சோர்வாக இருக்கும்பொழுது, அடக்கி வைக்கப்பட்ட விழிப்புணர்வற்ற பாதிப் பகுதி, நம்முடைய விழிப்புணர்வு உள்ள பாதிப் பகுதியைவிட அதிக சக்தியுடையதாக மாறி, சண்டையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடுகிறது. சற்றே உங்களை ஒன்றாகச் சேருங்கள். உங்களை நீங்களே அடக்கி வைப்பதைவிட முழுமையான விழிப்புணர்வுடன் இருங்கள். சண்டை போடுவதற்கு விழிப்புணர்வற்ற நிலை அங்கே இல்லாமல் போய்விடும்.
பிறகு சோர்வடைதலுக்கு இடமில்லை.
நாம் முழுமையாக இல்லாதபோதுதான் சோர்வடைகிறோம்.
புன்னகை உங்கள் இருப்புத் தன்மையில் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் ஒரு கண்ணாடி.
ஒன்றாகச் சேருங்கள், முழுமையாக இருங்கள். அதற்குப் பிறகு நீங்கள் என்ன செய்தாலும் சோர்வடைதல் என்பதே ஒருபோதும் இருக்காது.
இங்கே நான் உட்கார்ந்திருக்கிறேன். எப்படி இப்படிச் சோர்வடையாமல் உங்களால் இத்தனை மணி நேரம் உட்கார்ந்திருக்க முடிகிறது எனப் பாருங்கள். அது எதனால் என்றால், நான் பேசும்பொழுது, என்னுடைய இருப்புத் தன்மையில் முழுமைத் தன்மையுடன் இருந்துகொண்டு பேசுகிறேன். நான் முழுமைத் தன்மையுடன் பேசும்பொழுது, நீங்கள் என்னையும் என்னுடைய சக்தியையும் முழுமையாக உள்வாங்கிக் கொள்கிறீர்கள்.
ஞானிகள் இருந்து இயங்கக்கூடிய நிலை இதுதான். அதனால்தான், ஒவ்வொரு கணமுமே அவர்கள் செய்கிற செயல்களில் தீவிரமாக ஈடுபட்ட போதிலும், அவர்களுக்கு சோர்வு, களைப்பு என்ற உணர்வே இருப்பதில்லை.
நாம் செய்ய விரும்புவதற்கும், செய்து கொண்டிருப்பதற்கும் இடையே இடைவெளி ஏற்படும்பொழுதுதான் நாம் சோர்வடைகிறோம். எதற்கோ ஆசைப்பட்டு நாம் தூண்டிவிடப்படும்பொழுதுதான், நாம் 'இலக்கு' என்பதில் மாட்டிக் கொள்கிறோம்.
'இலக்கு' என்பது நாம் அடைய விரும்புகிற ஒன்று. ஆனால் வாழ்வு என்பது அடையப்படவேண்டிய இலக்கு அல்ல; அது அனுபவிக்கப்படவேண்டிய ஒன்று என்பதை உணருங்கள். நாம் நிர்ணயித்த இலக்கை அடையாதபொழுது, நாம் இலக்கை நோக்கி ஒடுவதைப் போன்று உணர்கிறோம்.
வாழ்வு, அது அடையப்படவேண்டிய இலக்கு அல்ல : அனுபவிக்கப்படவேண்டிய ஒன்று என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
எதன் மீதோ நாம் கொண்டுள்ள அச்சத்தால் விரட்டப்படுகிறோம் ;
அதனால் அச்சத்திற்கான பொருளிலிருந்து நாம் தப்பிக்க விரும்புகிறோம். அதனால் இங்கேயும் நாம், நாம் செய்கிற செயலில் முழுமையாக ஈடுபடுவதில்லை.
உண்மையிலேயே இந்த ஒரு விஷயத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை ; ஒரு இருப்பதற்கு, அவருடனேயே அவர் அமர்வதற்கு ஏன் முடியாது. இது நம்முடைய உடல், நம்முடைய மனம் அவ்வளவுதான்.
அப்படியே உட்காருங்கள் முடிந்து விட்டது!
உடலும் மனமும் நம் கட்டுப்பாட்டில் இருக்கட்டும் !
உங்களால் உட்கார முடியவில்லை. ஏனென்றால் நீங்கள் தொடர்ந்து தவறான சக்தியை உங்கள் கட்டமைப்புக்குள் செலுத்தி வருகிறீர்கள்.
நாம் தொடர்ந்து அதிகாரத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் நாம் பல விஷயங்களை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்புகிறோம். அந்த அளவுக்கு அதிகாரத்திற்கு நாம் ஆசைப்படுகிறோம். அதிகாரப் பசி நமக்கு மிக அதிகம். அதனால் நாம் எதன் மீதாவது ஆதிக்கம் செலுத்துவதற்காக, அதன் பின்னால் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
புரிந்துகொள்ளுங்கள், முதலில் நம்முடைய உடல் மற்றும் மனத்தை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வருவோம். இப்போதைக்கு, அது ஆசை மற்றும் அச்சத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அது முதலில் நம்மால் கட்டுப்படுத்தப்படட்டும் அதன் பிறகு, தானாகவே எந்த விஷயமும் நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.
நம்முடைய உடலும் மனமுமே நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றால், நாம் எதை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வர விரும்பினாலும் அவை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வராது.
ஆசையிலிருந்து ஒரு எண்ணமே போதும். உடனே நம்முடைய உடல் ஓடத் தொடங்கிவிடுகிறது.
அச்சத்திலிருந்து ஒரு எண்ணம் போதும். உடனே நம்முடைய உடல் ஓடத் தொடங்கிவிடுகிறது. அவை இரண்டும் உங்களுடைய முழு கட்டுப்பாட்டுக்குள் வரட்டும்.