KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/ஆனந்தம் மட்டுமே நம்மிடமிருந்து வெளிப்படும்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

ஆனந்தம் மட்டுமே நம்மிடமிருந்து வெளிப்படும்

'நாம் யார்' என்பதை உணர்ந்து கொள்வதற்காக ஒரு அருமையான நுட்பத்தை இங்கே கிருஷ்ணர் நமக்கு வழங்குகிறார்.

புலன்களால் உணரப்படுகிற பொருட்களின் மீதுள்ள பற்றை நீக்குவதனாலும் நம் உடல், புலன்கள் மற்றும் மனம் இவற்றுடனான நமக்குள்ள தவறான அடையாளங்களைக் கைவிட்டுவிடுவதனாலும் நாம் புத்தி சாதுர்யத்துடன் வாழ்க்கையை வாழ முடியும். அதுவே நம்மை நாமே தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு, நம்மை வழிகாட்டி அழைத்துச் செல்கிறது.

நம்முடைய கடமை, செயல்களைச் செய்வது மட்டுமே ! விளைவுகளைப் பற்றிக் கவலைப்படத் தேவை இல்லை என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

ஏதாவது ஒன்றை நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் அந்த அளவிற்கு, மிக அதிகமான அன்பு சக்தியை நம்முள் பெற்றிருக்கிறோம்.

எந்தவித காரணமும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்தச் சக்தியை நம்மால் எல்லாத் திசைகளிலும் பரவச் செய்ய முடியும். இந்த அன்பு வழியில், நம் வாழ்க்கையில் செயல்களைச் செய்யும்பொழுது, நாம் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படமாட்டோம்.

விளைவுகளைப் பற்றி நாம் கவலைப்பட மாட்டோம் என்று நான் சொல்லும்பொழுது, இதை ஏமாற்றத்துடனோ அல்லது மனிதரின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினாலோ சொல்லவில்லை.

எந்த உணர்ச்சிக்குள்ளும் நாம் ஆழமாகச் சென்றோமானால், அந்த உணர்ச்சி மட்டுமே மிஞ்சி நேருகும். நாம் இல்லாமல் போய்விடுவோம்.

விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், அந்த நிலையில் நாம் விளைவுகளை எதிர்பார்ப்பதற்குக்கூட தெரியாமல் இருக்கிறோம். ஏனென்றால் நாம் தொடர்ந்து நம்முடைய உள் சக்தியான ஆனந்த சக்தியிலிருந்து இயங்கிக்கொண்டும், அதை வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கிறோம். அவ்வளவுதான்.

அதனால்தான், ''நாங்கள் விளைவுகளை எதிர்பார்க்கவில்லை, '' என்று சொல்லக்கூட முடியாமல் நாம் இருக்கிறோம். நாம் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய வழியில் என்ன வருகிறதோ

அதைச் செய்து கொண்டிருக்கிறோம்.

வருவதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். நிகழ்காலத்தில் நாம் செய்து கொண்டிருக்கிற செயல்களிலிருந்து விளையும் விளைவுகளைப் பற்றி நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க மாட்டோம். நாம் இன்பமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். அவ்வளவுதான். பிரபஞ்ச சக்தியுடன் இயைந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். பாய்கிற இந்தச் சக்திதான் உண்மையான அன்பு.

நாம் நம்முடைய உடல், மனம், அஹங்காரம் இவற்றைக்கொண்டு அடையாளப்படுத்திக்

பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து நம்மை நாமே விலக்கிக் கொள்கிறோம். அதனுடனான நட்பை முறித்துக் கொள்கிறோம்.

இந்தத் தெய்வீக நாடகத்தில் நாம் 'நடிகா' என்ற கதாபாத்திரத்தைச் செய்வதற்குப் பதிலாக, நாம்தான் அந்த நடிகர் என்று நினைக்க ஆரம்பித்து, நமக்கு நடிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு உண்டான எல்லா உணர்ச்சிக் குழப்பங்களுக்குள்ளும் நாம் விழுந்துவிடுகிறோம்.

இப்படி நாம் நம்முடைய கதாபாத்திரத்தில் சிக்கித் துன்பப்படும்பொழுது, நாம் அந்த நாடகத்தின் முழு இன்பத்தையும் இழந்து, வாழ்க்கையே ஒரு போதிர்ச்சிதான் என்று உணர்கிறோம்.

அதேபோல நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து மட்டுமே செயல்களைச் செய்யும்போதும், நிகழ்கிற கணத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதைச் செய்யும்போதும், அதன் விளைவைப் பற்றி நாம் கவலைப்படாதபோதும், நாம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்.

ஒரே ஒருமுறை நாம் செய்கிற செயல்களின் விளைவுகளைப் பற்றி நாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டால்கூட போதும், நாம் அந்தக் கவலையில் நம்மை நாமே சிக்க வைத்துக் கொள்கிறோம். அப்பொழுது, அந்தக் கணத்தில் செய்யும் செயல்களை ஆனந்தத்துடன் செய்யும் மன நிலையையும் இழக்கிறோம்.

நாம் நமக்குள் நிலை கொண்டிருக்கும்பொழுது, நம்மைச் சுற்றி எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் அமைதியோடு இருப்போம். நாம் நமக்குள்ளே மையம் கொண்டிருக்கும்பொழுது, நம்முடைய செயலின் விளைவைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை. நாம் நம்மால் இயன்றவரை நன்றாகச் செயல்பட்டுவிட்டதால், அதனுடைய விளைவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.