அமைதியின் பிறப்பிடமே ஆனந்தம்
ஒரு மனிதர் ஞானி இரமண மகரிஷியிடம் சென்று "பகவான், எனக்கு அமைதி தேவை, '' என்று சொன்னார்.
இரமணர், "உன்னுடைய வாக்கியத்தில் இருக்கிற, 'எனக்கு' என்ற வார்த்தையை அகற்றிவிடு, 'தேவை' என்ற வார்த்தையையும் அகற்றிவிடு, மீதமிருப்பது 'அமைதி' மட்டுமே,' என்று பதிலளித்தார்.
அமைதிக்கான நம் விருப்பமெல்லாம்கூட ஒரு 'விருப்பம்'தான். ஆனால் 'விருப்பம்' இல்லாமல் இருப்பது எப்படி, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவது எப்படி என்பது நமக்குத் தெரியாது.
ஆழ்ந்து யோசியுங்கள், அமைதி என்பது தன்னியல்பில் விருப்பம் என்பதே இல்லாதது. 'அமைதி' என்பதின் அடிப்படை 'விருப்பம்' இல்லாமல் இருப்பதுதான். விருப்பமில்லா நிலையே அமைதி!
அப்படிப்பட்ட 'விருப்பமில்லா நிலையான அமைதியை'விருப்பத்தால் அடைய முடியுமா? அப்படிப்பட்ட ஒன்றை நாம் எப்படி விரும்ப முடியும் ? அமைதியை நாம் நாட ஆரம்பிக்கும்பொழுது, நாம் நமக்குள் ஆசையை உருவாக்கிக் கொள்கிறோம்.
நாம் நமக்குள்ளேயே கருக்கும்பொழுது, நம்மைச் சுற்றி எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் இயல்பாகவே அமைதியோடுதான் கருப்போம்.
'அமைதியை' அடைய வேண்டுமென்கிற ஆசை, நம்மை பல்வேறு வழிகளில் செயல்புரியத் தூண்டுகிறது; அதன்பிறகு அந்தச் செயல்களுக்கான பலனை நினைத்து நம்மைக் கவலைப்படச் செய்கிறது.
இந்தக் கவலைகள் நம்மை அமைதியிலிருந்து விலக்கி சென்றுவிடுகின்றன. மீண்டும் நமக்கு அமைதி தேவைப்படுகிறது. அதனால் மீண்டும் நாம் அமைதியை விரும்ப ஆரம்பிக்கிறோம். இது ஒரு விஷச் சூழற்சியாக மாறிவிடுகிறது.
முதலில் நமக்கு அமைதி தேவைப்பட்டது.
அதனால் எதையோ ஒன்றைச் செய்வது என்பதே கவலையை உண்டாக்கிவிடுகிறது. அதனால் மீண்டும் நாம் இந்தக் கவலைகளிலிருந்து விடுபட்டு அமைதியை அடைய விரும்புகிறோம்.
இது ஒரு விஷச் சூழல். ஏனெனில், நாம் 'அமைதி 'தேவை' என்ற எண்ணத்தை நாம் விடும்பொழுதுதான், நாம் இருக்கிற இயல்பிலேயே இருந்துகொண்டு நம்மைக் கவனித்துக்கொள்ள பிரபஞ்ச இருப்புத் தன்மையை அனுமதிக்கும்பொழுது, அமைதி தானாகவே நிகழ்ந்துவிடுகிறது.
அமைதி என்பது கன்னியல்பில் விருப்பம் என்பதே இல்லாமல் இருப்பதுதான்.
அமைதிக்கான தேவை அல்லது ஆசையை விட்டு விட்டு நம்மிடம் இருப்பதைக்கொண்டு, நிகழ்காலத்தில் வாழ்வதனால்தான், இப்போது நாம் அமைதியில் இருக்கிறோம். அதனால் அமைதியாக இருப்பதற்கான அடிப்படை தத்துவமே, விருப்பம் இல்லாமல் இருப்பதுதான்!
கவலையில்லாமல் அமைதியாக இருப்பதையே தாங்கள் விரும்புவதாகச் சிலர் உயிரோட்டமானதல்ல; அது இறந்து போன அமைதி.
வாழ்க்கையின் பலவிதமான உணர்ச்சிகளை எப்படிக் கையாளவது என்பதைத் தெரிந்துகொள்ளாத, உயிரில்லாத, உறக்க நிலையில் இருக்கிற அமைதியாக அது இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கு வாழ்க்கை என்பது கையாள்வதற்கு மிகவும் கடினமானதாகவும் 'அமைதி' என்பது தேடி அலைந்து அடையக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.
வாழ்க்கையை எப்படிக் கையாள்வது என்பதற்கான தீர்வுகள் அவர்களிடம் இல்லாததால்தான் அவர்கள், ''சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்,''என்று சொல்லிவிட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கிறார்கள்.
உண்மையான அமைதி என்பது நமக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அது வெளியே நடந்துகொண்டிருக்கும் செயல்களைப் பொறுத்தது அல்ல. நமக்குள் நாமே சந்தோஷமாக இருக்கிறோம். நம்முடைய அமைதி என்பது நம்மைச் சுற்றியுள்ள மக்களையோ, சூழ்நிலையையோ சார்ந்து நிற்பதில்லை.
'அமைதி' என்பது, நாம் நமக்குள்ளே உணர்கிற ஆனந்தத்தைத் தவிர
வேறொன்றுமில்லை. ஆனந்தத்தில் பிறந்த அமைதியானது, நம்மையும் நம்மைப்போலவே மற்றவர்களையும் அமைதியானதொரு நிலையில் வைக்கிறது. நமக்குள் நாமே திருப்திப்பட்டுக் கொள்ளும்பொழுது, அமைதிக்காக நாம் வெளியில் இருக்கிற எதையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.