KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/உங்களுக்குள் சக்தியைப் பாய்ச்சுங்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

உங்களுக்குள் சக்தியைப் பாய்ச்சுங்கள்

உங்களுடைய வாழ்க்கையில் நீங்களும் இதை அனுபவித்திருப்பீர்கள். எந்தச் செயலையும் செய்துகொண்டிருக்கும்பொழுது, உங்களையே நீங்கள் மறந்துவிடுவீர்கள். அது எந்த ஒரு செயலாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

வர்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல், படித்தல் போன்ற எளிமையான செயலாகக்கூட இருக்கலாம். செல்லும்பொழுது, உங்களையே நீங்கள் மறந்துவிடுகிறீர்கள்.

நீங்கள் மிகுந்த தலைவலியால் அவதிப்படும்பொழுது, உங்களுக்கு விருப்பமான ஒன்றை மிக ஆழமாகச் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள், உங்கள் தலைவலி காணாமல் போய்விடும்.

தலைவலி இருக்கும்பொழுது, உடலின் அந்தப் பகுதிக்குப் போதுமான அளவு சக்தியைப் பாய அனுமதிக்கிற அளவிற்குப் புத்திசாலித்தனம் கொண்டதாகவே உடல் இருக்கிறது. ஆனால் நாம் தலைவலி என்ற விழிப்புணர்வுடன் இருந்துகொண்டு, சக்தி பாய்வதைத் தடைசெய்கிறோம்.

நம்முடைய தலையை நினைக்கும்போதே, உண்மையில் நாம் தலைவலியைத்தான் இணைக்கிறோம். அதனால் நினைக்கிறோமோ தலைவலியைப் பற்றியே விழிப்புணர்வு கொள்கிறோம்.

ஏனென்றால் நாம் தொடர்ந்து நம்முடைய தலையைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கிறோம். நம்முடைய தலைவலியும் நமக்குத் தொல்லை தருவதைத் தொடர்கிறது.

நிகழ்காலத்தில் வாழ்வதும் நிகழ்கிற ஒவ்வொரு கணப் பொழுதினை அனுபவித்தலுமே தியானம்தான்.

நாம் தலையைப் பற்றி மறக்கும்பொழுது, தலைவலிக்குக் காட்டி வந்த எதிர்ப்பை விட்டுவிடுகிறோம். தடையின்றி பாய்ந்து தலைவலி குணமாகிறது. அல்லது நீங்கள் இன்னொரு முறையையும் முயற்சி செய்யலாம்.

உங்கள் செல்வதையும் அது உங்கள் தலைவலியைக் குணப்படுத்துவதையும் சாட்சியாக மட்டுமே இருந்து பாய்வதை முழு ஆர்வத்ததுடன் உற்றுப் பாருங்கள். நீங்கள் ஒரு பங்கேற்பாளராக இல்லாமல், முற்றிலும் வெளி நபராகவே இருங்கள். அந்தப் பகுதிக்கு சக்தி பாய்ந்தோடுவதற்கும் தலைவலியின் மேல் அது செயல்படுவதற்கும் அமைதியுங்கள்.

உங்கள் உடலின் எந்தப் பகுதியில் வலி இருந்தாலும் அதைப் போக்குவதற்கு நீங்கள் இதை ஒரு நுட்பமாகப் பயன்படுத்த முடியும்.

வலியைப் பற்றி நினைக்காமல், அந்தப் பகுதியில் உங்கள் எண்ணத்தை ஆர்வத்துடன்,

உடலின் நோய்வாய்ப்பட்ட பகுதிக்குப் போதுமான அளவு சக்தியைப் பாய அனுமதிக்கிற அளவிற்கு உடலுக்குப் புத்திசாலித்தனம் இருக்கிறது.

உத்சாகத்துடன் குவியுங்கள். முதலில் அதிகரிப்பதைப்போல் தோன்றும். ஆனால் விரைவில் அது குறைந்து, மறைந்துவிடும்.

எந்த உணர்ச்சிக்குள்ளும் நாம் ஆழமாகச் சென்றோமானால், மட்டுமே மிஞ்சி நிற்கும். நாம் இல்லாமல் போய்விடுவோம். இதைத்தான் நாம் 'முழுமை' அதாவது பூர்ணம் என்கிறோம்.

'நீங்கள்' மறைகிற அந்தத் தருணத்தை, உங்களுடைய இப்போதைய வாழ்க்கை நிமிடங்கள் அனுபவித்திருக்கலாம். ஆனால்

நீங்கள், எல்லாவற்றிலும் ஆழமாக இருப்பதற்கும், பூர்ணத் தன்மையுடன் இருப்பதற்கும் செயல்பட்டீர்களென்றால் 'நீங்கள்' மறைந்து போகிற இந்த அனுபவம் உங்களுக்குள் அடிக்கடி நிகழ்வதாகவும், அதிகக் காலம் நீடிப்பதாகவும் இருக்கும்.

விரைவில் 'நீங்கள்' இல்லாமலேயே உங்களை மறந்து உங்கள் வேலைகளைத் தீவிரமாகச் செய்வதில் நீங்கள் கைத்தேர்ந்தவர்கள் ஆகிவிட முடியும். நாம் வெளி உலக வேலைகளைச் சுதந்திரமாகச் செய்பவர்களாகிவிடுகிறோம்.