உங்களை நிர்ணயிப்பது யார் ?
நம்முடைய வாழ்க்கை முறையை நன்கு ஆழ்ந்து பார்த்தோமென்றால், பொதுவாக நாம் ஏற்றுக்கொண்டிருப்பவை எல்லாமே, உண்மையில், குழப்பங்களாகவும் பைத்தியக்காரத்தனங்களாகவுமே இருக்கும்.
ஆனால் நாம் குழந்தைப் பருவத்திலிருந்தே இம்மாதிரியான கட்டுறு மனப்பாங்கிலேயே வளர்ந்துவிட்டதனால், இதைப் பற்றிய விழிப்புணர்வுகூட நம்மிடம் இல்லை.
சிறு வயதிலிருந்தே நம் மனத்தில் சில நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் ஆழமாக வேரூன்றிவிட்டன. மீதமுள்ள நம்முடைய வாழ்நாளிலும் நாம் இந்த எண்ணப் பாதைகளையும், எண்ணப் பாதைகளின் சுவடுகளையுமே பின்பற்றுகிறோம்.
பாரதக் கிராமங்களில் இன்றும் எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பதற்கு, எண்ணெய் எடுக்கும் எந்திரமான செக்கை இயக்குவதற்கு மாடுகளையே பயன்படுத்தி வருகிறார்கள். செக்கிலிருந்து எள்ளை நசுக்கி, எண்ணெய் எடுப்பதற்காக வட்ட வடிவமாகப் பாதை அமைத்து, அதைச் சுற்றி வரும் படியாக மாடுகளை அதில் கட்டி இருப்பார்கள்.
நம்முடைய வாழ்க்கையை நன்கு ஆராய்ந்து பார்த்தோமென்றால், பெரும்பாலும் இந்தச் பழக்கப்பட்ட பாதையிலேயே சிக்கிக் கொள்கிறோம். நம்முடைய புலன்களாலும் நினைவுப் பதிவுகளாலும் தூண்டப்பட்டு, அதே பாதையில் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறோம்.
செக்கு மாடுகள் உணவை அசை போட்டுக்கொண்டே நடப்பதுபோலத்தான், நாமும் நம்முடைய புலன்கள் வழியாகவும் நினைவுகள் வழியாகவும் பெற்ற கருத்துக்களை அசைபோட்டுக்கொண்டே விழிப்புணர்வற்ற நிலையில் ஒரே நடைமுறையை நாள் கணக்காகவும் வருடக் கணக்காகவும் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம்.
எப்போதாவது, ''இன்று நாம் வழக்கமாகச் செய்யும் செயல்களை எல்லாம் விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமாகவும் நியாயமாகவும் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருக்கின்றோம்,'' என்று நினைப்பதுகூட மனத்தின் மாயையாகத்தான் இருக்கும்.
நாம் இப்போதும்கூட, நமது விழிப்புணர்வற்ற மனத்தாலும், அதில் தேக்கிவைக்கப்பட்டுள்ள எண்ணங்களாலும் விரட்டப்பட்டுத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆழமான எண்ணப் பதிவுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள அந்த விழிப்புணர்வற்ற பகுதியில்தான், நம்முடைய தொண்ணூறு சதவீத மனமும் நிலை கொண்டுள்ளது என்பதை எந்த ஒரு விஞ்ஞானியும் சொல்லிவிடுவார். இதுதான் நம்முடைய மனத்தின் 'ஹார்ட் டிஸ்க்' (Hard Disc).
நம்முடைய விழிப்புணர்வுமனம் மற்றும் பகுத்தறிவு மனம் என்று நாம் நினைப்பதெல்லாம் ஒரு கணத்தில் தோன்றி மறையக்கூடிய எண்ணப் பதிவே!
நம்முடைய நம்முடைய பகுத்தறிவு மனம் என்று நாம் நினைப்பதெல்லாம்கூட, ஒரு கணத்தில் தோன்றி மறையக்கூடிய எண்ணப் பதிவே.
ஆழ்ந்த இந்த மனத்தில் மனப்பதிவுகள்தான், நாம் முற்றிலும் விழிப்பு நிலையில் இல்லாதபோதுகூட, நம்முடைய சார்பில் முடிவுகளை எடுக்கிறது.
உள்ளுணர்வால் எடுக்கப்பட்ட முடிவுகள் என்று நாம் நினைப்பவைகூட, உண்மையில், நிலையிலிருந்தும் விழிப்புணர்வற்ற இயல்புக்கக்கிலிருந்தும் வரக்கூடிய முடிவுகளே!
(Instinctive)
பெரும்பாலான மக்களுக்கு, உள்ளுணர்விற்கும் இயல்பூக்கத்திற்கும் வித்தியாசமே தெரிவதில்லை. இயல்பூக்கம் என்பது விழிப்புணர்வற்ற நிலை.
அதுதான் வழக்கத்துக்குக் கொண்டிருக்கிறது. நம்முடைய மரபணுக்களிலும் அணுக்களிலும் ஆழமாகப் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள பழக்க வழக்கப் பதிவுகளைத்தான் இயல்பூக்கம் என்கிறோம்.
விழிப்புணர்வற்ற நிலையில் உள்ள மூளைதான், விழிப்புணர்வு நிலையில் உள்ள மூளையைவிட அதி வேகமாகச் செயல்படுகிறது. அதனால்தான் நமது விழிப்புணர்வற்ற நிலையினால் தூண்டப்பட்டு செய்யப்படும் செயலே, நம்முடைய வாழ்வாதாரத்திற்கு முக்கிய தேவையாக இருக்கிறது.
மாறாக, உள்ளுணர்வு என்பது மனத்தின் மேலான விழிப்புணர்வு நிலையைக் குறிக்கிறது. இது தியானத்தின் மூலம் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு மன நிலை.
அது நம்முடைய புலன்களை உள்முகமாகத் திருப்பும்போது அடைகிற நிலை. நிகழ்காலத்தில் இருத்தலும், திகழ்காலத்தில் வாழ்தலுமே இதனுடைய நிலை.
உள்ளுணர்வு என்பது காலத்தையும் இடத்தையும் கடந்து செல்லக்கூடியது. உள்ளுணர்வு என்பது நம் எல்லாப் பரிமாணங்களையும் வெளிப்படுத்துவதற்கும், நாம் வெடித்து எல்லாத் திசைகளிலும் பரவுவதற்கும் நம்மை அனுமதிக்கிறது.
ஆனால் இயல்பூக்கம் என்பது நம்மை வழக்கமான கட்டுறுத்தப்பட்ட பாதைகளிலும், விழிப்புணர்வற்ற நினைவுகளிலுமே கட்டுப்படுத்தி வைத்து விடுகிறது.
உண்மையான நிலைக்கு மீண்டும் திரும்புவதே 'யோகம்'
என்னிடம் மக்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி 'நீங்கள் எதைச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களோ, அதையே கடைப்பிடிப்பது உங்களுக்கு மிகவும் சுலபம். ஏனென்றால் உங்களுக்குக் குடும்பம், பந்தம் என்று எதுவும் இல்லை. நீங்கள் செல்வத்தைத் துறந்துவிட்டீர்கள். நாங்கள் உறவுகளாலும் உடமைகளாலும் பந்தப்படுத்தப்பட்டு இருக்கிறோம். நாங்கள் எப்படி ஆன்மீகவாதியாக முடியும் ? ''
நான் தெளிவாகச் சொல்கிறேன், உங்களுடைய இயல்பூக்கம்தான் இவ்வாறு பேசுகிறது. உங்களுடைய இயல்பூக்கம்தான் உங்களை இவ்வாறு பேச வைக்கிறது.
"நீங்கள் ஒரு நேரத்தில் ஒரே வேலையைத்தான் செய்ய முடியும்," என்று சொல்லி உங்களை நம்ப வைத்துக்கொண்டிருக்கும் உங்களுடைய விழிப்புணர்வற்ற மனத்தின் சிக்கியுள்ளீர்கள். ஒரே ஒரு பரிமாணம்தான் உங்களுக்கு இருக்கிறது என்ற நம்பிக்கைக்கு அடிமையாகி, அதற்கு உங்களை நீங்களே விற்றுவிட்டீர்கள்.
இயற்கையிலேயே ஞானம் கொண்டவர்கள்தான். இயற்கையிலேயே உடையவர்கள்தான். இயற்கையிலேயே நாம் ஞானமடைந்தவர்கள்தான். நமக்கு எல்லாமே இருக்கின்றன. ஆனால் நமக்கு இல்லாமல் இருப்பது ஒன்றே ஒன்றுதான்; அது, நமக்கு இருக்கும் ஆற்றலை நாம் உணராமல் இருப்பதுதான்.
நாம் இந்தப் பந்தங்களை உடைத்தெறிந்து விட்டு, பல பரிமாணங்கள் கொண்டவராக மாறுவது எப்படி என்பது பற்றிப் பின்வரும் ஸ்லோகங்களிலும், பகுதியிலும் குருவான கிருஷ்ணர் விளக்கிச் சொல்கிறார்.
நம்முடைய உண்மையான நிலையை நாம் அடைவது எப்படி என்பதைப் பற்றி நமக்கு உபதேசம் செய்கிறார். இதைத்தான் ஸமாதி என்கிறோம்.
ஸ்மாதி உண்மையான இயற்கை
நீங்கள் திரும்பவும் செல்வது' என்பதைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்து, ''நடந்ததற்கு வருந்துங்கள், '' என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறார்.
இந்த வார்த்தை 'நாம் வருத்தத்தோடும் குற்றவுணர்வோடும் இருப்பதைத்தான் அவர் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. அதுவல்ல அதன் உண்மையான பொருள்.
அரேபிய மொழியிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வார்த்தைக்கு, 'மீண்டும் உங்கள் பழைய நிலைக்கே செல்லுங்கள்' என்பதுதான் பொருள். அந்தப் பொருளில்தான் கிறிஸ்துவும் இதைப் பயன்படுத்தியிருக்கிறார்.
நம்முடைய இருப்பு நிலையோடு நாம் இணையும்போது, நாம் பல பரிமாணங்கள் உடையவர்களாக மாறிவிடுகிறோம்.
ஸமாதி என்ற வார்த்தையின் பொருளையே இந்த வார்த்தையும் பெற்றிருக்கிறது. கிருஷ்ணர், கீதை முழுவதும் மித்யாவைப் பற்றிப் பேசுகிறார். எல்லா அத்தியாயங்களுமே ஏதாவது ஒரு மோகத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
யோகம் என்பது நம்முடைய உண்மையான இயற்கை நிலையுடன் நாம் இணைவதையே
யோக என்ற சொல் குறிக்கிறது.
நம்முடைய இருப்புடன் இணையும்போது, நாம் பல பரிமாணங்கள் உடையவர்களாக மாறிவிடுகிறோம். அதற்குப் பிறகு நம்மால் பொருள் சார்ந்த வாழ்க்கையையும் வாழ முடியும்; ஆன்மீக வாழ்க்கையையும் வாழ முடியும். அதற்கு எந்தவித தடைகளோ, எல்லைகளோ கிடையாது. நாம் சுதந்திரமாக இருக்கிறோம்.
அரசர் ஜனகர் ஞானமடைந்த ஆன்மாவாகவும் செல்வ வளம் மிக்கவராகவும் இருந்தார்.
ஜனகரைப்போல ஆன்மீகவாதியாக வாழ்வதற்கு பொருள் சார்ந்த செல்வம் தடையாக இருப்பதில்லை. பேராசையால் செல்வத்தின் மீதுள்ள பற்றும் அந்தச் செல்வத்தை எங்கே இழந்துவிடுவோமோ என்ற பயமும்தான் ஒருவர் சுதந்திரமாவதைத் தடுத்து நிறுத்துகிறது.
- 5.1
ஒ, கிருஷ்ணா! நீங்கள் என்னிடம் செயலைத் துறந்துவிடு என்றும் சொல்கிறீர்கள். பின்பு பக்தியுடன் வேலையைச் செய் என்றும் சொல்கிறீர்கள்.
எப்படியிருந்தாலும் இந்த இரண்டில் எனக்கு ஏற்றது எது என்பதைக் கருணை செய்து சொல்லுங்கள்.
- கிருஷ்ணர் சொன்னது: 5.2
செயலைத் துறந்துவிடுவதும், பக்தியுடன் செயலைச் செய்வதும் ஆகிய இரண்டுமே விடுதலைக்கு ஏற்றவைதான்.
ஆனாலும்கூட இந்த இரண்டில் பக்தியுடன் செயல்படுவது, செயலைத் துறப்பதைவிடச் சிறந்தது.
- எவரொருவர் தம்முடைய செயல்களின் பலன்மீது பற்றோ, 5.3 வெறுப்போ இல்லாமல் இருக்கிறாரோ அவரே துறந்தவராகிறார்.
ஒ, அர்ஜுனா! அப்படிப்பட்டவர் எல்லா இருமைத் தன்மைகளிலிருந்தும் விடுபட்டு, உலகியல் வாழ்க்கை என்ற பற்றிலிருந்து முழுமையாக விடுதலை அடைகிறார்.
- செயல்படும் பாதையானது துறவறப் பாதையிலிருந்து 5.4 வேறுபட்டது என்று அறியாமையில் இருப்பவர்கள்தான் சொல்கிறார்கள்.
ஆனால் துறவறமும் ஒரே சத்தியத்திற்குத்தான் நம்மை அழைத்துச் செல்கின்றன என்று சொல்கிறார்கள்.
முந்தைய நான்கு அத்தியாயங்களிலும் கேட்டுக் கொண்டிருப்பவர்களின் எல்லாச் சந்தேகங்களுக்கும் கிருஷ்ணர் தெளிவாகவும் உறுதியாகவும் பேசுகிறார்.
கிருஷ்ணர் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் இதையே மீண்டும் மீண்டும் விளக்கிச் சொன்ன பிறகும்கூட, அர்ஜுனன் அதே பழைய நிலைக்கே மீண்டும் வந்து கொண்டிருந்தார்.
ஆழ்ந்து பார்த்தீர்களென்றால் அர்ஜுனன் ஏதோ ஒரு விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்பதுபோலத் தோன்றும். ஒரு அரசராக இருப்பவர் இவ்வளவு மோசமான அறியாமையில் ஒருபோதும் இருக்க முடியாது.
வாழ்க்கை விளையாட்டுதான்! அதற்காக ஒரே மாதிரியாகவே விளையாடிக் கொண்டிருக்கக் கூடாது.
ஒன்று, இவர்கள் இருவருமே கீதை தோன்றுவதற்கென்றே ஒரு விளையாட்டை விளையாடியிருந்திருக்கலாம் அல்லது உண்மையிலேயே தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வழி தெரியாமல் நம்பிக்கை இழந்த நிலையிலும் அர்ஜுனன் இருந்திருக்கலாம்.
கீதையைப்போல, நமக்குத் தெளிவாகவும் நேரடியாகவும் அத்யங்களை எடுத்துச் சொல்லக்கூடிய நூல் வேறு எதுவும் இல்லை.
கிருஷ்ணரைப் போல, நேரடியான நுட்பங்களை தரக்கூடிய குரு வேறு ஒருவரும் இல்லை.
கிருஷ்ணர் எல்லா விளக்கங்களையும் தெளிவாகச் சொன்ன பிறகும்கூட அர்ஜுனன் தொடர்ந்து, ''ஓ, கிருஷ்ணா! முதலில் நீங்கள் என்னிடம் செயல்களைத் துறந்துவிடு என்று சொன்னீர்கள். பிறகு பக்தியுடன் பணிகளைச் செய் என்றும் பரிந்துரை செய்கிறீர்கள். இந்த இரண்டில் எது அதிக பலனைத் தரக்கூடியது என்று கருணை கூர்ந்து எனக்குச் சொல்வீர்களா?'' என்று கேட்கிறார்.
எதை தொடங்கினீர்களானால், உங்களுக்கு ஒருபோதும் எந்த ஒரு விடையும் கிடைக்காது; எந்த ஒரு முடிவுக்குமே நீங்கள் வரமுடியாது. ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், பலனைப் பற்றி யோசிக்கத் தொடங்கினால், நம்மால் ஒருபோதும் எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது.
முதலில், முக்கியமானதொரு இதை அளவிடக்கூடிய அளவுகோல் ஒருவருக்கொருவர் வேறுபடுவதாக இருக்கிறது.
ஏதாவதொரு பலனை நாம் மதிப்பீடு செய்வதற்கு முன்னர், பலனை அளப்பதற்குப் பயன்படுத்தும் அளவுகோலைப் பற்றித்தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
பலனைப் பற்றி யோசிக்கத் தொடங்கினால், நம்மால் ஒருபோதும் எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது.
ஒருவருக்குப் பலனைத் தரக்கூடியது வேறொருவருக்கு முற்றிலும் பயனற்றதாக இருக்கும். வெற்றியை மதிப்பிட நாம் பயன்படுத்தும் அளவுகோல் மிகவும் முக்கியமானது.
'நாம் வெற்றி பெற்றவர்கள்' அல்லது 'நாம் தோல்வியடைந்தவர்கள்' என்று நம்மை நாமே முத்திரை குத்திக் கொள்வதற்கு முன்பே, நாம் நம்முடைய வாழ்க்கையை எந்த அளவுகோலைக் கொண்டு அளக்கப் போகின்றோம் என்பதைப் பற்றித் தெளிவாகத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அளவுகோலைப் பற்றித் தெரிந்துகொள்ளாதவரை எதையும் தீர்மானிப்பது என்பது அர்த்தமில்லாததாகிவிடும். புத்திசாலித்தனத்துடன்தான் தீர்மானத்திற்குள்ளும் குதிக்க வேண்டும்.
புத்திசாலித்தனம் இல்லாமல் தீர்மானத்திற்குள் குதிப்பது என்பது பாராசூட் இல்லாமல் ஆகாய விமானத்திலிருந்து குதிப்பதைப் போன்றது. நாம் எங்கே சென்று இறங்கப் போகிறோம் என்பதே நமக்குத் தெரியாது.
வாழ்க்கையை வெற்றி அல்லது தோல்வி என்று அளப்பதற்கு முன், அந்த வெற்றியை எப்படி அளப்பது என்பதை ஒருவர் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
நம்முடைய வாழ்க்கையைப் பணத்தைக்கொண்டு அளப்பது என்று தீர்மானித்தோமென்றால், அதற்குப் பிறகு பணத்திற்காக மட்டுமே நாம் உழைக்க வேண்டும்.
இப்பொழுது நாம் காலையிலிருந்து மாலைவரை நம்முடைய இலக்கை அடைவதற்காகவே பாடுபடுகிறோம். பிறகு அந்த நாளின் இறுதியில்,
புத்திசாலித்தனம் இல்லாமல் முடிவு எடுப்பது என்பது பாராசூட் இல்லாமல் ஆகாய விமானத்திலிருந்து குதிப்பதைப் போன்றது.
''ஆம் இந்த அளவுகோலைக் கொண்டுதான் என்னுடைய வாழ்க்கையை நான் அளக்கப் போகிறேன்,'' என்று தீர்மானிப்பதன் மூலம் நம்முடைய அளவுகோலைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்கிறோம்.
இந்த அடிப்படையில் நாம் நம்முடைய வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறோமா அல்லது தோல்வியைச் சந்தித்திருக்கிறோமா என்பதை முடிவெடுக்க வேண்டும்.
ஆனால் பாருங்கள், நாம் மாலை நேரத்தை அடையும்பொழுது, நம்முடைய அளவுகோல் மாறிவிடுகிறது. அதனால் என்ன நடக்கிறது ?
வைத்துக்கொண்டு வாழ்க்கை தொடங்கினோம். ஆனால் சில ஆண்டுகள் சென்ற பிறகு, நம்முடைய வாழ்க்கையை வேறான அளவுகோலைக் கொண்டு அளக்கின்றோம்.
நம்முடைய வெற்றி அல்லது தோல்வியைத் தீர்மானம் செய்கிற அந்த அளவுகோல் முற்றிலும் ஆகவே மாறிவிடுகிறது.
நான் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும் நல்லவேளை நம் அளவுகோல் மாறுகிறது! மாறிக்கொண்டே இருக்கிறது! நம்முடைய மன முதிர்ச்சிக்கு ஏற்றவாறு நம்முடைய அளவுகோலும் மாறுகிறது.
நம்முடைய மன முதிர்ச்சிக்கு ஏற்றவாறு நம்முடைய அளவுகோலும் மாறுகிறது.
பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்கிறபோதும் சரி, நாம் செய்யும் ஒவ்வொரு தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு வளர்ச்சி அடைகிறபோதும் சரி, நம்முடைய வாழ்வின் வெற்றியை அளவீடு செய்யும் அளவுகோலும் மாறியே தீரும்.
அவ்வாறு தெரிந்துகொள்ளுங்கள், அடுத்த அடிமட்டத்திலிருந்து, பூஜ்யத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
நம்முடைய முந்தைய வாழ்க்கையை எங்கே விட்டோமோ, அதே இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. நாம் பாடங்களைக் கற்றுக்கொண்டு மேலும் முன்னேற்றம் அடையாதவரை இது ஒரு முடிவில்லாத விளையாட்டாகவே தொடர்கிறது.
மீண்டும் மீண்டும் இதே விளையாட்டை நாம் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருப்போம். சரியான பாதையில் நம்முடைய அளவுகோலை நாம் மாற்றிக்கொண்டோமென்றால், உண்மையிலேயே நாம் மனமுதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதையே அது காட்டுகிறது.
வெளியலக சுகத்தின் உச்சத்திற்கே சென்றாலும் வெற்றியைத் தொட முடியாது
பணம், செல்வம் என்று அதே நிலையிலேயே நம்முடைய அளவுகோல் இருந்து கொண்டிருந்தால், நம்முடைய வாழ்க்கையைத் தெளிவாக அளக்க முடியாது என்பது மட்டுமல்ல, அத்துடன் நிச்சயமாக துக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டியது வரும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் பணத்தையும் மற்ற பொருள் சார்ந்த செல்வங்களையும் சேர்ப்பதற்கு ஒரு முடிவு என்பதே கிடையாது.
முதலிலேயே நாம் ஆடம்பரங்களும் உலகியல் சுகங்களும்தான் நம்முடைய வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கக்கூடிய உயர்ந்த அளவுகோல்கள் என நிர்ணயம் செய்துவிடுகிறோம். ஆனால் இவற்றை எல்லாம் அடைந்த பிறகும்கூட, நம்மைப் பொறுத்தவரையில், நாம் வெற்றி பெற்றதாக எண்ணுவதே இல்லை.
ஏனென்றால் அதற்குள் நாம் மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து நம்முடைய இலக்கை பெரிதாக்கியிருப்போம். பேராசையின் காரணமாக அடுத்தது என்ன ? அடுத்தது என்ன ? என்று கேட்டுக்கொண்டேயிருப்போம். இதற்கு ஒரு முடிவே கிடையாது.
இறுதியில் நம்முடைய வாழ்க்கை முடியும் நிலையில், நாம் போதுமான அளவு சாதிக்க முடியவில்லையே என வருந்துகிறோம். அடுத்து என்ன நிகழ்கிறது ?
நம்முடைய வாழ்வின் அளவுகோலாக இருக்க முடியாது.
நாம் ஒரு புது பிறவியெடுத்து, வாழ்க்கை என்னும் மொத்த விளையாட்டையும் நேரடியாக ஒன்றிலிருந்து அதாவது முதல் நாளிலிருந்து ஆரம்பித்து, அதே வரையறுக்கப்பட்ட மனமுதிர்ச்சியுடன் விளையாடத் தொடங்குகின்றோம்.
ஒரு முக்கியமான விஷயம், தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய வாழ்வின் அளவுகோலாக இருந்தால், உலகியல் சார்ந்த வசதிகள், இன்பங்கள் மட்டுமே நம்முடைய வாழ்வின் அளவுகோலாக இருந்தால், தொலைத்துவிட்ட பொருட்களையும் செய்யாமல்விடுத்த செயல்களையும் நினைத்துப்பார்த்து, நாம் இன்னும் கொஞ்சம் சாதித்திருக்க வேண்டும் என்று நினைத்து, நினைத்து மீண்டும் மீண்டும் துக்கப்பட்டுக் கொண்டிருப்போம். எதையுமே அளவின்றி தொலைத்துவிட்டோமோ என்று வருந்துவோம்.
'வெற்றி' என்பதை வரையறை செய்வதற்கான முழுமையான அளவுகோல் எதுவும் இல்லை. முக்கியமாக பணரீதியான அளவுகோலால் நீங்கள் வெற்றியை வரையறுக்க முடியாது.
நம்முடையமனம், நமக்கு நாமே போதுமானவராக இல்லை என்றும், நாம் முழுமையடையவில்லை என்றும் நம்மைத் தொடர்ந்து வருத்தப்படவைக்கும்.
நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் சரி, அதற்கு மேல் ஒரு ரூபாய் அதிகமாகக் கிடைத்தாலும்கூட நாம் அதிக மகிழ்ச்சி அடைகின்றோம், இல்லையா?
இழந்த நிம்மதியைப் பெற்றிட யக்ஷன் பானையை எறிந்துவிடுங்கள்!
ஒரு சின்ன கதை.
அரசருக்கு முடிதிருத்தம் செய்யும் நாவிதர் ஒருவர் மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் அரண்மனைக்குச் சென்று அரசருக்கு முகச் சவரம் செய்து வந்தார்.
அரசர் கொடுக்கும் பத்துப் பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பவார்.
அவருடைய வாழ்க்கை மிகவும் அழகானதாகவும் ஆனந்தமானதாகவும் இருந்து வந்தது. அவருக்கு எந்தவித கவலையும் இல்லை. எதைப்பற்றியும் கவலைப்பட ஒன்றுமே இல்லை. அவர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் அவர் அரண்மனையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபொழுது திடீரென்று ஒரு அசரீரி, ''அன்பு மகனே, உனக்கு நாற்பது பொற்காசுகள் வேண்டுமா?' என்று கேட்டது.
அதற்கு அவர், ''நாற்பது பொற்காசுகளா? அதை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்? அதனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. என்னுடைய செலவு பத்து பொற்காசுகள்தான். அது கிடைத்தாலே போதுமானது. அதற்கு மேல் எனக்கு வேண்டாம்,'' என்று சொல்லிவிட்டார்.
உடனே, அந்த அசரீரி மீண்டும் பேசியது, "நான் உனக்கு இருபத்து நான்கு மணி நேரம் அவகாசம் தருகிறேன். வீட்டிற்குச் சென்று நன்றாக யோசனை செய்துவிட்டு, நாளை வந்து சொல். நீ விரும்பினால் பொற்காசுகள் நிரம்பிய ஒரு மாய ஜாடியைத் தருவேன், " என்றது.
அந்தப் பாவப்பட்ட நாவிதர் இதைப் பற்றி மனைவியிடம் எதுவும் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் மெதுவாக மனைவியிடம் நடந்ததைச் சொல்லி விட்டார்.
'போதும்' என்ற திருப்தியுடன் வாழ்பவர்களின் வாழ்க்கை மிகவும் அழகானதாகவும் ஆனந்தமானதாகவும் இருக்கும்.
அவர் மனைவியோ அலறியே விட்டார்.
''நீங்கள் என்ன முட்டாளா? உங்களுக்கு அறிவு இருக்கிறதா? அந்த ஜாடியை வாங்கிக்கொண்டு வந்திருக்க வேண்டாமா ?'' என்று பைத்தியம் பிடித்தவர்போல உரத்த குரலில் புலம்பினார்.
''எனக்கு என்றைக்காவது இதைச் செய்திருக்கிறீர்களா ? அதைச் செய்திருக்கிறீர்களா? வாழ்க்கை முழுவதும் நான் அதே உடுத்தின பழைய புடவைகளோடேயேதானே இருக்கிறேன். எனக்கு எப்பொழுதாவது நகை நட்டு வாங்கிப் போட்டிருக்கிறீர்களா ? என்னை எப்பொழுதாவது சந்தோஷமாக அழைத்துக்கொண்டு போயிருக்கிறீர்களா? உங்களைத் திருமணம் செய்துகொண்டு என்ன சுகத்தைக் கண்டேன்?' இப்படிக் கேள்வி மேல் கேள்வியை அடுக்கிக்கொண்டே போனார்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? திருமணம் என்பது ஒரு மூன்று வளைய சர்க்கஸ். நிச்சயதார்த்தத்தின்போது ஒரு வளையம் (மோதிரம்) (Engagement ring), திருமணத்தின்போது அடுத்த ஒரு வளையம் (Wedding ring), மூன்றாவதாக, கஷ்டம் என்ற வளையம். (Suffer-ring).
அவர் இப்படிக் கத்த ஆரம்பித்தவுடனே, "சரி, சரி, நீ ஒன்றும் கவலைப்படாதே. அந்த அசரீரிக் குரல் எனக்கு இருபத்து நான்கு மணி நேரம் கெடு கொடுத்திருக்கிறது. யோசிக்க நிறைய நேரம் இருக்கிறது. அதனிடம் பேசி அந்த ஜாடியை நாளை வாங்கிவந்துவிடுகிறேன்,'' என்று அந்த நாவிதர் சொன்னார்.
மறுநாள் காலையில் முதல் வேலையாக அவர் அந்த அசரீரி வந்த இடத்திற்குச் சென்று, ''தயவு செய்து அந்த ஜாடியை எனக்குக் கொடுங்கள்,'' என்றார்.
உடனே அவர் முன்பாக ஒரு யக்ஷன் தோன்றி "வாங்கிக்கொள். இதில் 990 பொற்காசுகள் உள்ளன. அதாவது 1000க்கு 10 பொற்காசுகள் குறைவாக உள்ளன." என்று சொல்லி மறைந்துவிட்டது.
அவர் அந்த தங்க நாணயங்கள் உள்ள ஜாடியை வீட்டிற்குக்கொண்டு வந்தார். ஒரு நாளைக்குப் பத்துப் பத்துப் பொற்காசு களாகச் செலவு செய்தாலும் 99 நாள்களுக்கு வரும் என்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.
அந்த ஜாடியை அவர் மனைவி வாங்கிய உடனேயே, ''என்ன இது? இந்த ஜாடி நிறையவே இல்லை. ஏதோ குறைகிறதே,'' என்று கணவனை மேலும் கீழும் பார்த்துக் கேட்டார்.
''எனக்குத் தெரியாது, எனக்கொன்றும் தெரியாது. யக்ஷன் கொடுக்கும்போதே இப்படித்தான் இருந்தது. நான் ஜாடியை வாங்கிக்கொண்டு அப்படியே நேராக இங்குதான் வருகிறேன். ஆனால் அந்த யக்ஷன் கொஞ்சம் பொற்காசுகள் குறைவாக இருப்பதாகத்தான் சொன்னது,'' என்றார் அவர்.
''ஜாடி நிரம்பியிருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்; எவ்வளவு நன்றாக இருக்கும், '' என்று அவர் மனைவி கவலைப்படத் தொடங்கினார்.
அடுத்த நாள் நாவிதரின் மனைவி, அந்த நாவிதர் அரண்மனைக்குச் சென்று திரும்பியவுடன் விரைந்து சென்ற அரசரிடமிருந்து பெற்றுக்கொண்டு வந்த பத்துப் பொற்காசுகளையும் வெடுக்கென்று பறித்து அந்த ஜாடியில் போட்டார். அந்த ஜாடி நிரம்பி வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.
ஆனால் அவர் ஆச்சரியப்படும் படியாக, அந்த ஜாடியில் பொற்காசுகளின் மட்டம் விளிம்பிற்குக் கீழேயேதான் இருந்தது. அது நிரையவேயில்லை.
அந்த நாவிதரின் மனைவி நிம்மதியை இழக்கத் தொடங்கினார். அந்த ஜாடியை நிரப்புவதற்காக அடுத்த நாள் ஊதியத்திற்காக அவர் மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தார்.
அடுத்து என்ன ? என்று கேட்டுக்கொண்டே இருப்பது!
அடுத்த நாள் மாலையும் அந்த நாவிதரிடமிருந்து பணத்தைப் பிடுங்கி ஜாடியில் போட்டார். அப்போதும்கூட அது நிறையாமல் சிறிது குறைவாகவே இருந்தது. அநேகமாக அது நிறைந்திருந்த போதிலும் முழுமையாக நிறையவில்லை.
இப்படி ஒரு வாரம் தொடர்ந்து நடந்தது. நாவிதரின் மனைவி அவருக்கு உணவு அளிப்பதை நிறுத்தினார். அவரது எல்லாச் செலவுகளையும் நிறுத்தினார்.
அவரிடமிருந்த எல்லாப் பொற்காசுகளையும் பிடுங்கி ஜாடியில் போட்டுவிட்டு, ஜாடி நிரம்பி வழிவதைக் காண மிகுந்த கவலையுடன் காத்துக் கொண்டிருந்தார்.
ஒரே வாரத்தில் அந்த நாவிதர் மிகவும் களைப்புற்றுச் சோர்ந்துவிட்டார். அவர் எதையோ இழந்தவர்போலாகிவிட்டார் என்பதை அவர் முகம் காட்டியது.
இதைக் கவனித்த அரசர், "என்ன நடந்தது? எப்போதும் உற்சாகத்துடன் இருப்பாயே, உனக்கு என்ன ஆயிற்று ? கடந்த ஒரு வாரமாக நான் உன்னைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன், நீ மிகவும் களைத்துவிட்டாய். நீ எதைப் பற்றியோ சிந்தனை செய்து கொண்டிருக்கிறாய். நீ கவலைப்பட ஆரம்பித்துவிட்டாய். என்ன நேர்ந்தது உனக்கு ? அந்த யக்ஷன் கொடுத்த ஜாடியை வாங்கிக் கொண்டாயா?' என்று விசாரித்தார்.
இதைக் கேட்டவுடனேயே நாவிதர் திடுக்கிட்டுப்போனார். "அரசே, தங்களுக்கு எப்படி இது தெரியும் ?' என்று கேட்டார். அதற்கு அரசர், ''இந்த நாட்டில் யாரெல்லாம் கஷ்டப்படுகிறார்களோ, யாரெல்லாம் சந்தோஷமாக இல்லையோ, அவர்களுக்கு எல்லாம் பொதுவாக
எதைப் போட்டாலும் மேலும் மேலும் கேட்கிற சீவனின் கையில் இருக்கும் பிரம்மகபாலம் போன்றவை நம் கவலைகள்.
ஒரே ஒரு விஷயம்தான் உள்ளது. அது அவர்கள் எல்லோரும் யக்ஷனிடமிருந்து அந்த ஜாடியைப் பெற்றிருப்பார்கள், '' என்று சொல்லிவிட்டு, ''நீ மீண்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று விரும்பினால் அந்த யக்ஷனுடைய ஜாடியைத் தூக்கி எறிந்துவிடு, '' என்று சொன்னார்.
அவரும் அவ்வாறே செய்து அன்று முதல் சந்தோஷமாக வாழ ஆரம்பித்தார்.
அந்த அரசர் சொன்னது நம் எல்லோருக்குமே பொருந்தும். வீட்டிற்குத் திரும்பிப் போன உடனேயே உங்களுடைய வீட்டிலேயும் இருக்கிறதா இல்லையா என்று பாருங்கள். இருந்தால் அதைக் தூக்கி எங்காகிலும் தொலைதூரத்தில் எறிந்துவிடுங்கள்.
நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால். நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தால், உங்கள் வீட்டிலும் அந்த யக்ஷுடைய ஜாடி இருக்க அதிக வாய்ப்புள்ளது. யக்ஷனுடைய ஜாடி ஒருபோதும் நிரம்பப் போவதில்லை.
நான் யக்ஷனுடைய ஜாடி என்று சொன்னதும் ஏதோ ஒரு ஜாடியே வந்து உங்கள் வீட்டில் இருக்கும் என்ற அர்த்தம் இல்லை. ஆனால் அது நிச்சயமாக உங்கள் தலைக்குள் புகுந்திருக்கும்.
தேருதல்
ஆனந்தமான, அழிவில்லாத ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காகச் செய்த முயற்சியே!
ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், சில சமயம் யக்ஷன் வங்கி இருப்பு மூலமாகவும் உங்களிடம் அந்த ஜாடியைக் கொடுத்திருப்பான். ஏதோ ஜாடி வடிவத்தில் இருக்குமென்று நினைத்துவிடாதீர்கள். அது உங்கள் மனத்தில்கூட இருக்கலாம். கபாலத்திலிருந்து உருவாக்கப்பட்டது.
சிவனின் கையில் இருக்கிற அந்த பிரம்ம கபாலமானது, அதில் எதைப் போட்டாலும் விழுங்கி விட்டு, இன்னும் வேண்டும் என்று மேலும் கேட்கிற இயல்பு கொண்டதாகவே இருக்கிறது.
அதேபோல அந்த யக்ஷனுடைய ஜாடியும் நாம் எதைப் போட்டாலும் விழுங்கி விட்டு, நாம் இன்னும் முழுமையடையவில்லை என்றும், நாம் போதுமானவர்களாக இல்லை என்றும் நினைக்கச் செய்து நம்மைக் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கும் படியாகச் செய்யும்.
நம்முடைய மனம், நமக்கு நாமே போதுமானவராக இல்லை என்றும், நாம் முழுமையடையவில்லை என்றும் நம்மைத் தொடர்ந்து வருத்தப்படவைக்கும்.
நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் சரி, என்ன பொருள் நமக்கு கிடைத்தாலும் சரி, பத்தே நாளில் அது போதுமானதாக இல்லை என நாம் வருத்தப்பட ஆரம்பித்துவிடுவோம்.
பத்தே நாள்களில் நம்முடைய மனம் எல்லாவற்றையுமே எளிதாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிடும். நம்மிடமிருக்கும் சிறப்பு வாய்ந்த பொருட்களையும் அதிகமான செல்வத்தையும்கூட சாதாரணமாக எடுத்துக்
கொண்டு, இன்னும் அதிகமாக பொருள் சம்பாதிக்க வேண்டும் என ஓட ஆரம்பித்துவிடுவோம்.
தானம் செய்தால் மஹாதானத்தை வென்றுவிடலாம்
நிறைய செல்வம் வைத்துக்கொண்டு தாமும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல் இருக்கிற ஒருவரைத்தான் யக்ஷன் என்று சொல்வோம்.
பாரதத்தில் விவசாய நிலங்களில் இரண்டு அல்லது மூன்று நாய்களை வளர்ப்பார்கள். அந்த நாய்கள் அந்தத் தானியங்களைத் தானும் உண்ணாது, மற்ற விலங்குகளையும் உண்ணவிடாது.
அதேபோல நாமும் நிறைய செல்வத்தை வைத்துக்கொண்டு, நாமும் அனுபவிக்காமல் இருந்தால், நம்மையும் யக்ஷன் என்றுதான் அழைப்பார்கள்.
பேராசைகொண்டு செல்வங்களைக் குவித்துக்கொண்டிருந்தால், யக்ஷனுடைய ஜாடியைப்போல் அதற்கு ஒருபோதும் முடிவே இல்லை. ஏனென்றால் எப்போதும் பேராசை அதிகளிப்பதற்கான வாய்ப்புதான் உண்டே தவிர, அது நிறைவடைவதற்கான வாய்ப்பே இல்லை. இரண்டாவதாக, சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் நிறைந்திருக்கும்போது அனுபவிப்பது என்பது ஒருபோதும் நடக்காது.
மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற பேராசையும் நம்முடைய சேமிப்பு கரைந்துவிடுமோ என்ற பயமும் நாம் சேர்த்த செல்வத்தை நாம் அனுபவிக்கத் தடைக் கற்களாக மாறிவிடுகின்றன; அவை பெரும் தடைகளாகிவிடுகின்றன. நாம் சொத்து சேர்ப்பதை நிறுத்திவிட்டு, சேர்த்த சொத்தை அனுபவிக்கவில்லை என்றால், மேலும் மேலும் ஏன் சொத்துக்களைச் சேர்த்துக்கொண்டே போக வேண்டும் ?
நான் எப்போதும் சொல்வேன், ஒன்று நீங்கள் தானம் செய்யுங்கள் அல்லது நீங்கள் மறையதானத்தை அதாவது மரணத்தை அடைவீர்கள். நீங்கள் தானம் செய்யும்பொழுது, நீங்கள் அதை மற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதுடன், நீங்களும் அனுபவிக்கிறீர்கள்.
நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்பதுதான் கடவுள் நிலை.
நீங்கள் தானங்களைச் செய்யவில்லை என்றால் மறையதானத்தை அடைவீர்கள். அதாவது நீங்கள் இறக்கும்போது எல்லாவற்றையும் இழந்துவிடுவீர்கள்.
ரமண மகரிஷி அழகாகச் சொல்வார். ''சாதிப்பதற்கு முன்னர் கடுகுகூட ஒரு மலையைப் போல் இல்லாமல் உங்களுடைய வாழ்க்கையே நடக்காததுபோல் தோன்றும். அதுதான் உங்கள் வாழ்விற்கு அடிப்படையானது என்றும் மிக மிக முக்கியமானது என்றும் தோன்றும். ஆனால் ஒருமுறை நீங்கள் சாதித்து விட்டால், மலைகூட உங்களுக்கு ஒரு கடுகாகத்தான் தோன்றும். ''
கடுகு எப்படி முதலில் ஒரு மலையைப் போல் தோன்றியதோ, அதே போன்று நம்முடைய வாழ்க்கையில் மிக அற்பமானவைகூட நமக்குச் சாதிப்பதற்கு முன்னால் மிக மிக முக்கியமானதாகவும் பெரியதாகவும் தோன்றும். மனமானது அப்படிப்பட்டதுதான். ஒருமுறை நீங்கள் விரும்பியதை அடைந்துவிட்டீர்களென்றால், அதற்குப் பிறகு ஒரு மலைகூட உங்களுக்குக் கடுகைப் போன்று தோன்றும்.
இது ஏனென்றால் இப்போது சில விஷயங்கள் மலையைப் போன்று தோன்றும். 'சாதனை செய்தல்' என்ற பொறிக்குள் நாம் சிக்கிக்கொண்டுவிட்டால், நாம் என்ன சாதித்தோமோ அதை அனுபவிக்கவும், தளர்வாக இருப்பதற்கான திறனையும் நாம் இழந்துவிடுவோம்.
பலனை எதிர்பாராது செய்யும் செயல் வாழ்வையே சொர்க்கமாக்கிவிடும்
அர்ஜுனன் கேட்கிறார்.
''இப்போது உறுதியாக, தீர்மானமாகச் சொல்லுங்கள், செயலைச் செய்வதா அல்லது வாழ்க்கையைத் துறப்பதா? இரண்டில் எது அதிக நன்மையைத் தரும் ? ''
அதாவது கர்மமா அல்லது சந்நியாசமா? எந்தப் பாதையை அவர் தேர்ந்தெடுக்கப்பது என்று கேட்கிறார்.
நாம் எல்லோருமே மீண்டும் மீண்டும் இதே கேள்வியைத்தான் நமக்குள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். மனம் என்பது குழப்பமானது. தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய மனம் என்பது குழப்பத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.
இரண்டு துருவங்களுக்கிடையே நாம் மாட்டிக் கொண்டிருக்கும்வரை நம்முடைய மனமும் உயிருடன் இருக்கும். ஒரு எல்லையை அடைந்துவிடுகிறோம். ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு நாம் சென்று கொண்டிருக்கும்வரை நாம் அறியாமையிலேயேதான் இருக்கிறோம்.
அறியாமையே ஆனந்தம் என்று சொல்லாதீர்கள். அப்படி அறியாமை என்பதே ஆனந்தமாக இருந்தால், ஏன் இந்த உலகில் நிறைய மக்கள் இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? அறியாமை என்பது ஆனந்தம் அல்ல. கள்ளங்கபடமற்ற தன்மை என்பதே ஆனந்தம். அதுதான் வித்தியாசம்.
நம்முடைய வாழ்க்கையைத் தொடர்ந்து அளந்து கொண்டிப்பதற்கு எந்தவித அளவுகோலையும் வைத்துக் கொள்ளாமல் இருப்பதைத்தான் கள்ளங்கபடமற்ற தன்மை என்கிறோம்.
ஒரு அளவுகோலை வைத்திருப்போம். ஆனால் அந்த அளவுகோலை வைத்து நம் வாழ்க்கையை நிறைவுசெய்ய முடியாமல் இருப்பதைத்தான் 'அறியாமை' என்று சொல்கின்றோம். நாம் ஒரு அளவுகோலையோ, இலக்கையோ வைத்திருக்கவில்லை என்றால்கூட அதில் ஒன்றும் பிரச்சினையே இல்லை.
கள்ளங்கபடமற்ற தன்மை வாழ்க்கையை அளப்பதற்கு எந்தவிதமான அளவுகோலும் வைத்துக் கொள்ளாமல் இருப்பதுவே!
ஆனால் அளவுகோலைத் தீர்மானிக்கத் தேவையான பட்டறிவு நம்மிடம் இருந்தும் அதைக் கொண்டு நம்மால் நம்முடைய விருப்பங்களைப் பூர்த்திச் செய்துகொள்ள முடியாததைத்தான் அறியாமை என்று சொல்கிறோம்.
முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நம்முடைய மனத்தையே ஆட்டி விளையாட்டாகிய குழப்பம்தான் முதலும் கடைசியுமான வியாதி. மனிதர்கள் குழப்பம் என்ற வியாதியோடுதான் வாழ்க்கையைத்
தொடங்குகிறார்கள். அதிலேயே வாழ்க்கையை முடித்தும் கொள்கிறார்கள்.
'முடித்துக் கொள்கிறார்கள்' என்றுகூட சொல்ல முடியாது! ஏனென்றால் அப்பொழுதும் அவர்கள் வாழ்வை முடித்துக்கொள்ளலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருப்பார்கள் !
ஆனால் மரணம் வந்து அவர்களுடைய வாழ்க்கையை முழுமையாக எடுத்துச் சென்றுவிடுகிறது. வாழ்க்கை, அது முழுமையாக அப்படியே எடுத்துச் செல்லப்பட்டுவிடுகிறது.
வாழ்க்கை தனக்கென்று தனியாக எந்தப் பலனையும் கொண்டது அல்ல; வாழ்க்கையே ஒரு பலன்தான்.
இங்கே அர்ஜுனன் இந்த இரண்டில் எது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற குழப்பத்தில் இருந்தார்.
சிலர் சொல்வதைப்போல பலன் ஒன்றையே கருத்தில்கொண்டு, வாழ்க்கை முற்றிலுமே பலனை எதிர்பார்த்தே வாழ்ந்தோமென்றால், ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நமக்கான நரகத்தை நாமே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையை அந்தளவிற்கு நாம் சுருக்கிக்கொண்டோமென்றால், நாம் நரகத்தில்தான் இருப்போம்.
வாழ்க்கை தனக்கென்று தனியாக எந்தப் பலனையும் கொண்டது அல்ல; வாழ்க்கையே ஒரு பலன்தான்.
உங்களைத் துரத்தும் ஆசையையே தூரத்திவிடலாம்
அவர்கள் விரும்பியதைச் சாதித்த மக்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக, மேலைநாடுகளில் அப்படிபட்ட மக்கள் இருக்கிறார்கள். இருந்தபோதும் அவர்கள் தங்களுக்குள் இரு வெறுமையையே உணர்கிறார்கள். இதைத்தான் வெற்றியினால் வரும் மன அழுத்தம் என்கிறோம். அவர்கள் தங்களுடைய கனவுகளையும், மற்றவர்களிடமிருந்து தாங்களாகவே கடன் வாங்கிய கனவுகளையும், தங்கள்மீது மற்றவர்களால் திணிக்கப்பட்ட கனவுகளையும் நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள். இருந்தபோதிலும், அவர்கள் தங்களுக்குள் ஒரு வெறுமையை உணர்கிறார்கள்.
இதுநாள்வரை நாம் என்ன காரணத்திற்காக ஓடிக்கொண்டிருந்தோம், எவற்றை எல்லாம் தேடிக்கொண்டிருந்தோம் என்று ஆச்சரியப்படத் தொடங்குகிறார்கள்.
அவர்கள் ஆசைகள் சமூகாயத்தில் செல்வாக்கை, அந்தஸ்தை மட்டுமே தேடி, வேறு எந்தவித கொள்கையுமின்றி ஓடும் எலி ஓட்டப் பந்தயம் போன்ற வாழ்க்கையில் அவர்களும் பங்கு வகிக்கிறார்கள். ஒரு ஆசை இன்னொரு பெரிய ஆசைக்குத்தான் வழி வகுக்கும்.
இன்பம் தங்களுக்கு கொடுக்கும் எதையெல்லாம் அடைந்தார்களோ, அதை இனிமேலும் சம்பாதிக்கத் தேவையில்லை என்பதை ஒரு நாள் திடீரென்று உணர்கிறார்கள்.
நீங்கள் வாழ்க்கையில் வெற்றிகளையே பெற்றுக் கொண்டிருந்தாலும்கூட, வெற்றியினால் வரும் மன அழுத்தத்தைச் சந்திக்க வேண்டிவரும்.
இனிமேல் அடையவேண்டியது ஒன்றும் இல்லை என்பதைத் திடீரென்று உணர்ந்தவுடன் அவர்கள் இதன் விளைவாக அவர்களைப் பற்றி அவர்களே குழப்பம் அடைந்துவிடுகிறார்கள்.
இனிமேல் எதற்கு ஆசைப்படுவதென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒன்று குறைகிறது என்ற ஒரு குறையை மட்டும் உணர்கிறார்கள். ஆனால் அது என்னவாக இருக்க முடியும் என்பதை மட்டும் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
இந்தக் குழப்பத்திற்கு காரணம் என்னவென்றால், அவர்கள் விழிப்புணர்வு இல்லாமல், தங்களைப் பற்றிய சுய-ஆராய்தல் இல்லாமல், தங்களைத்தாங்களே நின்று பார்க்கக்கூட நேரம் ஒதுக்கிக் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருப்பதுதான் காரணம். அதனால்தான் அவர்களுக்குள் ஒரு அதிருப்தியை உணர்கிறார்கள், குழப்பத்திற்கும் உள்ளாகிறார்கள். அவர்கள் ஏன் ஓடுகிறார்களென்றால், அவர்களைச் சுற்றி உள்ளவர்கள் எல்லோருமே ஓடிக்கொண்டிருப்பதனால் அவர்களும் ஓடுகிறார்கள்.
அவர்கள் ஒரு நிமிடம் நின்று, ''உண்மையில் நாம் எதை முதலிலும் முக்கியமாகவும் அடைய விரும்புகிறோம் ? அதை ஏன் முதலில் அடைய விரும்புகிறோம் ?, '' என்று தங்களைத்தாங்களே கேள்விகேட்டுக் கொள்வதற்குக்கூட, தங்களுடைய ஓட்டத்தை ஒருபோதும் நிறுத்துவதில்லை. அதனால் அவர்கள் ஓட்டத்தை நிறுத்தும்போதோ அல்லது இனிமேல் ஓட முடியாது என்று வரும்போதோ, அவர்கள் தங்களுக்குள்ளேயே விழுகிறார்கள்.