நீஜத்தில் வாழச் செய்வதே நீஜமான தியானம்
குருமார்கள் எதைச் செய்தாலும்
அது நம்முடைய
வளர்ச்சீக்காகவே!
இந்த ஸ்லோகத்தில் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் :
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு செயலும், அது பேசுவது என்றாலும் சரி, சுவாசிப்பது, பார்ப்பது என்று எதுவாக இருந்தாலும் சரி, விழிப்புணர்வுடன் செய்யப்பட வேண்டும். அதுவே உண்மையான தியானம். காலையிலும் மாலையிலும் ஒரு குறிப்பிட்ட அளவு நேரம் மட்டும் செய்கிற ஏதோ ஒன்று அல்ல தியானம். அது உங்கள் வாழ்வில் சேர்த்துக்கொள்ள முடிகிற கால அளவைப் பொறுத்தது அல்ல என்பதனை மக்களுக்கு எப்பொழுதுமே சொல்கிறேன்.
நான் 30, 40 அல்லது 50 ஆண்டுகள் தியானம் செய்வதாகக் கூறும் நிறைய பேரைப் பார்க்கிருக்கிறேன்.
கண்களை மூடி அமர்ந்திருப்பது, சில சுவாசப் பயிற்சிகளைச் செய்வது,
மனத்தை ஒருமுகப்படுத்த முயற்சி செய்வது, இன்னும் இது போன்ற பல நுட்பங்களை எல்லாம் செய்தும் அநேக வருடங்கள் சென்ற பிறகும்கூட, உள்ளிருக்கக்கூடிய நபர் அப்படியே எவ்விதமானதொரு உணர்வுருமாற்றமும் நிகழாமல் அப்படியே உள்ளார். இதுவல்ல தியானம்.
தியானம் என்பது நம்முடைய நாம் சேர்த்துக்கொள்ளப்படவேண்டிய ஒரு விசேஷமான தன்மை. அது, வாழ்க்கையை நாம் பார்க்கிற கோணத்திலும், எந்த விஷயத்தையும் நாம் உணர்ந்தறியக்கூடிய மனப்பாங்கிலும்கூட ஊடுருவியிருக்க வேண்டும்.
ஒவ்வொரு செயலிலும் அதிகப்படுத்தும்பொழுது, நாம் தியானத்தில் இருக்கிறோம்.
நாம் முழுமையான விழிப்புணர்வில் இருப்பது எப்படி? நடக்கிற நிகழ்வுகளிலிருந்து நம்மை நாமே விலக்கி வைக்க முடியும்பொழுது மட்டுமே, நாம் முழுமையான விழிப்புணர்வில் இருக்க முடியும்.
நடக்கிற காட்சியில் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ளாமல், ஒரு சாட்சியாக இருக்கும்பொழுதுதான் அந்தக் காட்சியை நாம் தெளிவாகப் பார்க்க முடியும். இல்லையென்றால் அந்தக் காட்சியில் நம்மையும் ஒரு பாத்திரமாகக் கருதிக் கொள்கிறோம். அப்படி நிகழும்பொழுது, நாம் அதில் சுயநலத்தை, தனிப்பட்ட ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்கிறோம்.
நமக்குப் பலன் அளிக்கக்கூடிய முறையில் செயல்கள் நடக்க வேண்டும் என்று சில எதிர்பார்ப்புகளையும் வைத்திருக்கிறோம்.
நாம் ஈடுபாடு கொண்ட கணத்திலேயே, நமக்கும் அந்தக் காட்சிக்குமான இடைவெளி இல்லாமல் போய்விடுகிறது; நம்முடைய சாட்சி பாவனையும் இல்லாமல் போய்விடுகிறது. பிறகு நம்மால் செயல்களை அவை இருக்கிறவாறே பார்க்க முடிவதில்லை
அது நாம் ஒரு கனவில் இருப்பது போன்றதுதான். கனவில் இருக்கும்பொழுது, நாம் பார்ப்பது கனவு என்று நமக்குத் தெரிவதில்லை. நடக்கிற எல்லாமே நிஜம்தான் என்று எண்ணுகிறோம்.
கனவிலிருந்து நாம் விழிக்கிற அந்தக் கணப்பொழுதில்தான், மிக வேகத்தில், அது வெறும் கனவு என்பதை உணர்ந்து கொள்கிறோம். அதற்கு எந்த அடிப்படையுமில்லை. முக்கியத்துவமும் இருப்பதில்லை.
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு செயலும் பேசுவது என்றாலும் சுவாசிப்பது என்றாலும் பார்ப்பது என்றாலும் விழிப்புணர்வுடன் செய்யப்படுவதே உண்மையான தியானம்.
இப்பொழுது நாம் வாழ்கிற இந்த வாழ்க்கை முறையும் இதே போன்றுதான் உள்ளது. நாம் எதிர்கால மற்றும் கடந்தகாலக்கனவுகளில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நாம் அந்தக் கனவையே யதார்த்தமென்று நினைக்கிறோம். நாம் அதை லட்சியமென்று நினைத்து, கனவின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் இதை நாம் உணரும்பொழுது, கனவு என்னும் மாயையிலிருந்து விழித்துக் கொள்கிறோம். உண்மையான நிஜத்திற்குள் மிக
அப்பொழுது புலன்கள், உடல் மற்றும் மனம் என்பது நாம் அல்ல என்பதைப் புரிந்து கொள்கிறோம். நாம் இதையெல்லாம் தாண்டிய ஏதோ ஒன்றாக இருக்கிறோம். இந்த விழிப்புணர்வு நம்முள் ஏற்படும்பொழுது நாம் ஆனந்தமானவர்களாகவே மாறிவிடுகிறோம் .
கேள்வி: போயிருக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை அதுவும் சந்தோஷம் அல்லது மகிழ்ச்சி போன்றதுதான். ஆனால் நீங்கள் மகிழ்ச்சி என்பது வேறு, ஆனத்தம் என்பது வேறு என்று சொல்கிறீர்கள். தயவு செய்து விளக்குங்கள்.
ஆனர்தம் என்பது தன்னிச்சையாக இருப்பது, நிகழ்காலத்தில் இருப்பது, நம்மைச் சுற்றி நிகழ்பவைகளுக்கு பதிலளிப்பதே தவிர, எதிர்வினை புரிவது அல்ல. தன்னிச்சையாக இருப்பது என்றால் முன்கூட்டியே திட்டமிடாமல், பாரபட்சமில்லாமல், மனமில்லாமல், கடந்தகாலமில்லாமல், நிகழ்காலமில்லாமல், மொத்தத்தில் காலம் என்பதே இல்லாமல் எது நடந்தாலும் அதைக் கணத்திற்குக் கணம் வாழ்தலையும் அதற்குப் பதில்செயல் புரிதலையும் குறிக்கிறது.
அப்பொழுது திடீரென்று ஒரு சந்திப்பு நிகழ்கிறது. உங்களுக்கும் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கும் இடையிலான ஒரு சந்திப்பு. அந்தச் சந்திப்புதான் ஆனந்தம். அந்தச் சந்திப்புதான் கடவுள்.
நிகழ்காலத்திற்கு மட்டும் பொறுப்பேற்பதே தன்னிச்சையாக இயங்குதல். ஆனால் மக்கள் கடந்தகாலத்தால் ஆளப்படுகிறார்கள். வாழ்க்கை ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் மனம் கடந்தகாலத்தையே பற்றிக்கொண்டு, தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது மனத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில் ஒரு இடைவெளி ஏற்படுகிறது.
மனத்திருந்து வருகிற எதுவாக இருந்தாலும் அது உண்மையான பதிலாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை. அது ஒரு எதிர்ச்செயல்தான். அதுவும் எப்பொழுதுமே குறைபாடு இருப்பதாகவே இருக்கும். அது குறிக்கோளை ஒருபோதும் அடையாது. எதிர்ச் செயலுக்கு நிகழ்காலத்தைப் பற்றி ஒன்றும் தெரியாததால், அது கடந்தகாலத்தைவிடக் கூடுதலாக இருக்கும் அல்லது குறைவாக இருக்கும்.
ஆனந்தம் என்பது இன்பம், களிப்பு, மகிழ்ச்சி என்பவற்றிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட அற்புதமான ஒன்று. அது இன்பம் அல்ல. ஏனென்றால் அதில் உடலால் செய்வதற்கு ஏதும் இல்லை.
அது களிப்பும் அல்ல, ஏனென்றால் களிப்பு என்பது மனத்தினுடையது. அதுவும் நொடிப்பொழுதிலேயே தோன்றி மறையக்கூடியது. அது வரும், போகும். உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். ஒருபோதும் அதை நீங்கள் நம்பக் கூடாது. அது உங்களைக் ஏமாற்றக்கூடியதாக இருக்கிறது. அதுதான் அதனுடைய உண்மையான இயல்பு.
ஆனந்தம் என்பது மகிழ்ச்சியும்கூட இல்லை. ஏனென்றால் மகிழ்ச்சி என்பது இதயத்தினுடையது.
ஆனந்தம் என்பது இந்த மூன்றையும்விட மேலானது, அது ஆன்மாவினுடையது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஏதோ ஒன்று அல்ல அது. அது அதுவாகவே நிகழ வேண்டும். அதுதான் உங்களைத் தேர்ந்தெடுக்கிறது.
அந்த அனுபவம் பெற ஒருவர் தம்மை உடல், மனம் மற்றும் இதயம் என்றெல்லாம் அடையாளம் காணுவதை நிறுத்த வேண்டும்.
அது வந்துவிட்டால், அது இருக்கக்கூடியது. அதன்பின் நம்பிக்கையுடன் தளர்வாகவும் ஒய்வாகவும் இருக்கலாம். அதை யாரும் திருடிவிட முடியாது. யாரும் எடுத்துச் சென்றுவிட முடியாது, எரித்துவிடவும் முடியாதது.
ஆனந்தத்தைப் பொறுத்தமட்டில் மரணம்கூட செயல் இழந்தது, ஏனென்றால் ஆனந்தத்தை அறிந்து கொண்ட ஒருவர், மரணமில்லாத ஒன்றைப் பற்றி அறிந்து கொள்கிறார்.
ஆனந்தம் என்பது தன்னிச்சையாக வருவது.
ஆனந்தமான, அழிவில்லாத ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காகச் செய்கிற முயற்சிதான் தேடுதல். அதை அடையும் வழி தியானம். உடல் -மனம் ஆகியவற்றைக் கடந்து நம்மை எடுத்துச் செல்வது தியானமே. ஏனென்றால் இதுவரை 'நான்' என்று நம்மை பற்றி நாம் நினைத்துக் கொண்டிருந்த அடையாளங்களை எல்லாம் அதாவது நான் இந்த உடல், நான் இந்த மனம், நான் இந்த இதயம் என்ற அடையாளங்களை எல்லாம் நம்முடைய உண்மையான அடையாளங்கள் அல்ல என்று காட்டுவது தியானம்தான்.
நான் இந்த உடல் அல்ல, மனம் அல்ல, இதயமும் அல்ல என நமக்குப் புரிய வைப்பது தியானம்தான். இந்தப் புரிந்துகொள்ளுதல் நம்முள் நிகழும்பொழுது தியானம் மலர்ந்துவிடுகிறது. அந்த மலர்தலில்தான் ஆனந்தம் இருக்கிறது.
சிலர் ஆனந்தத்தைத் தேர்ந்தெடுக்கும்பொழுது, பலர் துக்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏன் அப்படி விரும்புகிறோம். பிறகு ஏன் துக்கத்தைத் தேர்ந்தெடுக்கிறோம் ?
காரணம் என்னவென்றால், மிக அதிகமானதுக்கத்தில் இருக்கிறோமென்றால், நம்முடைய ஆணவம் மிகவும் பெரிதாக இருக்கிறது என்பதாகும். அஹங்காரம் துக்கத்தையும் எதிர்மறைகளையும் அறியாமையையுமே உணவாகக் கொள்கிறது. அவைதான் அதனுடைய உணவும் ஊட்டச்சத்தும்.
ஆனந்தமாயிருக்க வேண்டும் என்றால், நாம் ஒரு இனிய சங்கீதமாக இருக்க வேண்டும் என்றால், நாம் ஒரு விஷயத்தை இழக்க வேண்டும். அந்த ஒரே ஒரு விஷயம் ஆணவம். ஏனென்றால் அது ஒன்றுதான் நம்முடைய இருப்புத் தன்மையிலிருக்கும் ஒரு முரண்பாடான விஷயம்.
'நான் இருக்கிறேன்' என்ற நம்முடைய எண்ணத்தைக் கைவிட வேண்டும். நாம் முற்றிலும் புதிதான ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். ''கடவுள் இருக்கிறார், நான் இல்லை,'' என்ற மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். 'நான்' மற்றும் 'கடவுள்'-இவை இரண்டும் ஒன்றிணைந்து இருப்பதில்லை'. அது முடியவும் முடியாத செயலும்கூட!
ஒன்று 'நான்' இருக்க வேண்டும் அல்லது 'கடவுள்' இருக்க வேண்டும்.