KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/மனத்தைக் கட்டுப்படுத்துதல்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

மனத்தைக் கட்டுப்படுத்துதல்

  • 5.10 எவரொருவர் பற்றுதல்களைத் துறந்துவிட்டு, நிலையான பிரபஞ்ச விழிப்பணர்வைச் சரணடைந்து செயல்படுகிறாரோ, தாமரை இலை தண்ணீரினால் பாதிப்படையாமல் இருப்பதைப்போல, அவர் பாவங்களால் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.
  • 5.11 பற்றைத் துறந்த யோகிகள் சித்தத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக உடல், மனம், புத்தி மற்றும் புலன்களாலுமே செயல்படுகிறார்கள்.
  • 5.12 தம்முடைய செயல்களினால் வரும் விளைவுகளில் பற்றுகளைத் துறந்துவிட்டு பக்தியில் ஈடுபட்டுள்ள ஒருவர், தன்னுள் மையம்கொள்ளும் ஒருவர் அமைதியில் நிலைக்கிறார். தம்முடைய பற்றுக்கொண்டு பக்தியில் ஈடுபடாத ஒருவர், துன்பத்தில் சிக்கிக் கொள்கிறார்.
  • 5.13 புலன்களைக் கட்டுப்படுத்தி, மனத்தின் எல்லாச் செயல்பாடுகளையும் விட்டு, எதையும் செய்யாமலும் எதையும் செய்விக்காமலும் இருக்கும் ஒருவர் ஒன்பது வாயில்களைக் கொண்ட இந்த உடலில் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறார்.