கோபம்கூட நம்மை குணப்படுத்துவதற்காகவே !
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கவனிக்கிருப்பீர்கள். சிலரின் செயல்கள் வழக்கமான பார்வையில் பார்க்கப்படும்பொழுது, அவமரியாதையான முறையில் நடந்து கொள்வதாகத் தோன்றும். ஆனால் அவர்கள் மரியாதை என்னும் கோட்டைத்தாண்டி அவமரியாதையாக நடந்துகொள்ளவே மாட்டார்கள். அவர்கள் செயலுக்குப் பின்னால் இருக்கிற சக்திதான், செயலை உணர்ந்து கொள்கிற சக்தியையும் அதனுடைய விளைவுகளையும் தீர்மானிக்கின்றன.
சில உள்ளவர்களிடம் நேரடியாகவும் கோபப்படும்பொழுது, அது அவர்களிடம் நான் கடுமையாக நடந்து கொள்வதுபோல்தான் இருக்கும். ஆனால் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, நான் கோபப்படுகிறேன் என்பதற்காக ஒரு நபர்கூட ஆசிரமத்தை விட்டுச் சென்றதில்லை.
குருவானவர் திட்டும்பொழுது, அந்தக் கோபத்திற்குப் பின்னால் இருக்கும் சக்திகூட கருணை மயமானதுதான். அவர்கள் எதைச் செய்தாலும் அது நம்முடைய வளர்ச்சிக்காகவே செய்கிறார்கள்.
நாம் முழுமையாகவும் தளர்வாகவும் ஓய்வாகவும் இருக்கும்பொழுது மட்டுமே, அன்பினாலும் கருணையினாலும் நிரம்பி வழிகிறோம்.
கோபப்பட்டுச் சொல்கிற வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள சக்திக்கு நம்மை உணர்வுருமாற்றக்கூடிய, நம்முள் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளப்பறிய சக்தி உண்டு.
நாம் அதைத் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ளும்பொழுது நம்முடைய அமைப்புக்குள் இருக்கும் அடைப்புகளும் கட்டிகளும் மிகவும் எளிதாக அகற்றப்பட்டு, நாம் எளிதாக மலர்ச்சியடைகிறோம்.
செய்யக்கூடிய முழுமையாகவும் இருக்கிறோமோ, அப்பொழுது புத்திசாலித்தனமும் முழு சக்தியும் நம்முடைய செயலுக்குப் பின்னால் இருக்கும். எந்தச் செயலிலும் நாம் உண்மையாக ஈடுபடும்பொழுது, நாம் அந்தச் செயலாகவே மாறிவிடுகிறோம். நாமும் அந்தச் செயலும் வேறு வேறானவர்கள் அல்ல.
இல்லையென்றால், வேறுவிதமாகச் சொன்னால், முழுமையான ஈடுபாடு இல்லாமல் எதையாவது செய்தால், அந்தச் செயலுக்குப் பின்னால் நம்முடைய ஆற்றல் முழுமையாக இருக்காது.
நம்முடைய ஈடுபாடு இல்லையென்றால், நம்முடைய செயலுக்குப் பின்னால் இருக்கிற புத்திசாலித்தனமும்கூட முழுமையாக இருப்பதில்லை என்பதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.
செயலுக்குப் பின்னால் ஆற்றல் முழுமையாக இருக்கும்பொழுது, நாம் எந்தச் செயலைச் செய்தாலும்
அதற்குப் பின்னால் இருக்கிற ஆனந்த சக்தியை அது எப்போதும் பறைசாற்றிக்கொண்டே இருக்கும்.
அதனால்தான் எளிமையான நுட்பங்கள்கூட, புத்தரால் சொல்லப்பட்ட சுவாசத்தைக் கவனிப்பது போன்றவைகூட, மிக சக்தி வாய்ந்தவையாக உள்ளன. ஆனால் பெரிய செயல்களாகக் கருதப்படும் நல்ல நெறிகள்கூட, எதிர்பார்த்த சக்தியையும் விளைவையும் கொடுக்க இயலாதனவாக இருக்கின்றன.