குழந்தைகளின் நீஜமான தேவை சுதந்திரம், சொத்தல்ல !
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகவும் சொந்தம் கொண்டாடுவது எதற்காக ? ஏனென்றால் பெற்றோர்களுக்குக் கொஞ்சம் பழி வாங்கும் எண்ணம் உண்டு. நாம் உழைத்து இவ்வளவு செல்வம் சேர்த்திருக்கிறோம்; இந்தக் குழந்தைக்காக அதை நாம் விட்டுச் செல்கிறோம்; அதற்காக வே இந்தக் குழந்தை எனக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்; அவன் என் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
எல்லாவற்றையும் 'எனது' என்று நினைக்கும் சுபாவம் உங்களுக்கு ஏன் வருகிறதென்றால் நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு இந்தச் செல்வங்களைச் சம்பாதித்து இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டுச் சம்பாதித்திருப்பதால்தான், அதை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உங்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. அதனால்தான் உங்களுடைய
குழந்தைகளை எத்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு உங்களுடையகட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள முயற்சி செய்கி றீர்கள்.
நாம் கஷ்டப்படாமல் சம்பாதித்த கொடுக்கும்போது, ் அருமையானதாக,
இருக்கும்; தயவு நிறைந்ததாக இருக்கும்; நாம் அன்போடு கருணையோடு அதை ஒரு வெகுமதியாகக் கொடுப்போம். அவர்களைப் பல வழிகளில் கட்டுப்படுத்த மாட்டோம்.
அவர்களைச் சித்ரவதை செய்யமாட்டோம். அவர்கள் நமக்கு பல விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கமாட்டோம். நம்முடைய மாட்டோம். அனைவரும் அறிகிற வகையில் தெளிவாக உயிலை எழுதி வைத்துவிடுவோம்.
மக்கள் என் உயிலை எப்போதும் ரகசியமாகவே எழுத வேண்டுமென்று நினைக்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் குடிந்தைகளின் முன் கேரட்டைக் கட்டித் தொங்கவிட்டு ஆசை காட்ட நினைக்கிறார்கள்.
அப்படிச் செய்தால்தான் மகனோ, மகளோ இவர்கள் சாகும்வரை தொடர்ந்து இவர்கள் பின்னாலேயே இருப்பார்கள். இவர்கள் இறந்த பின்னர்தான் அந்த உயிலையே அவர்கள் வாசிப்பார்கள்.
கஷ்டப்பட்டுச் சேர்த்த சொத்தை ஒருவா் யாருக்காவது கொடுக்கும்போது
அவருடைய சேர்த்துத்தான் என்னிடம் வந்து, வந்து, பெற்றோர்களுடைய காமாக்கள் குழந்தைத்துளுக்கு வரும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?" என்று கேட்பார்கள்.
பெற்றோர்களுடைய புண்ணியமோ உங்களுக்கு வந்து சேராது. ஆனால் அவர்களுடைய மன அமைப்பு உங்களை ஆதிக்கம் செய்யும். உங்களிடம் வந்து சேரும். ஏனென்றால் அவர்கள் அதை உங்கள்மீது திணிக்க முயற்சி செய்வார்கள்.
நாம் கஷ்டப்படாமல் சம்பாதித்த செல்வத்தைக் கொடுக்கும்போது, அதை நாம் அன்போடும் கருணையோடும் வெகுமதியாகக் கொடுத்துவிடுவோம்.
அவர்களுடைய மன அமைப்பை உங்கள்மீது திணிக்க முயற்சி செய்வார்கள்.
அவர்களுக்குப் பிடித்த வழிகளில்தான் நீங்கள் வாழ வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். நாம் எப்போதுமே நம்முடைய ஆசைகளை நம்முடைய குழந்தைகள் மூலமாக நிறைவேற்றிக்கொள்ளவே முயற்சி செய்கிறோம்.
நாம் ஒரு மருத்துவராக வேண்டுமென்று விரும்பி அது நடக்கவில்லை என்றால், நாம் அதை அடையாவிட்டால், நாம் நம்முடைய நோக்கத்தை நம்முடைய குழந்தைகளின் மூலமாக நிறைவேற்றிக்கொள்ள முயற்சி செய்வோம்.
நாம் நம்முடைய நோக்கங்களை நம்முடைய குழந்தைகளின் மூலமாக, அடுத்த தலைமுறையின் மூலமாக நிறைவேற்றிக்கொள்ள முயற்சி செய்கிறோம். தயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள். அப்படி நாம் அழித்துவிடுகிறோம்.
நாம் நம்முடைய சொத்துக்களை மட்டும் பங்கிட்டுக் கொடுக்கவில்லை. நம்முடைய கஷ்டங்களையும் சேர்த்துத்தான் பங்கிட்டுக் கொடுக்கிறோம்.
கஷ்டப்பட்டு சொத்துக்களைச் சேர்த்த ஒரு மனிதா் யாருக்குத் தம்முடைய சொத்துக்களைக் கொடுக்கிறாரோ, அவருக்குத் தம்முடைய கஷ்டங்களையும் சேர்த்தே கொடுக்கிறார்.
இன்னொரு விஷயம். சொத்துக்களைப் பெற்றுக் கொண்ட மகனையோ மகளையோ ஒருவரால் கஷ்டப்படுத்த முடியவில்லை என்றால், அவர் தம்மைத்தாமே கஷ்டப்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிடுவார்.
அவருடைய பிள்ளை அவருடைய பேச்சைக் கேட்கப் போவதில்லை,
பெற்றோர்களுடைய பாவமோ பூண்ணியமோ உங்களுக்கு வந்து சேராது. ஆனால் அவர்களுடைய மனஅமைப்பு உங்களை ஆத்க்கம் செய்யும்.
அவர் பிள்ளை வாழப் போவதில்லை என்பதைத் தெரிந்து கொண்டவுடன், அவர் துக்கப்பட ஆரம்பிக்கிறார்.
'நான் இவன் மேல் நம்பிக்கை வைத்து இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்கிறேன். எனக்குத் தெரியவில்லை. அவன் என்ன செய்யப் போகிறான் என்பதும் எனக்குத் தெரியப் போவதில்லை' என்று நினைத்து நினைத்து துக்கத்திலேயே தம்மை ஆழ்த்திக் கொள்கிறார்.
அவர் இறக்கும்போது மரணத்தைத்தான் சந்திப்பார்.
அவர் ஒரு திரும்பவும் வந்து அந்தச் சொத்துக்களின் மேல் உட்கார்ந்து கொள்வார். ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
அவருடைய அகற்குப் பிள்ளையைக்கூட அந்தச் சொத்துக்களை அனுபவிக்க விடமாட்டார். திரும்பவும் வந்து அந்தச் சொத்துக்களின் மேல் அமர்ந்து கொள்வார். நான் நிறைய வழக்குகளைப் பார்த்திருக்கிறேன். பெற்றோர்கள் அவர்களுடைய சொத்துக்களைப் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிடுகிறார்கள்.
உங்களுடைய நோக்கத்தை உங்கள் குழந்தைகள்மீது திண்க்காதீர்கள்.
ஆனால் எப்படியோ இருபது, முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னரும்கூட அந்தப் பிள்ளைகளால் அந்தச் சொத்துக்களை அனுபவிக்க முடியவதில்லை. ஏனென்றால் அவை, அந்தச் சொத்துக்களைக் காவல் செய்து கொண்டிருக்கிற ஒரு யக்ஷனிடம் இருக்கிறது.
அந்த மனிதர் திரும்பவும் வந்து அந்தச் சொத்துக்களின் மேல் ஒரு யக்ஷனைப்போலவே உட்கார்ந்து இருக்கிறார். அவரும் அவற்றை அனுபவிக்கமாட்டார். மற்றவர்களையும் அவற்றை அனுபவிக்க விடமாட்டார். உயர்நீதி மன்றம் எப்போது தீர்ப்பு வழங்குமென்று கடவுளுக்குத்தான் தெரியும். தீர்ப்பு, அது தனக்குத் தேவையான அளவு இனிமையான காலங்களை எடுத்துக்கொண்டு, காலம் கடந்து வந்து சேரும்.
மீண்டும் மீண்டும் நாம் சேர்த்து வைத்ததை நாமே பங்கிட்டுக் கொள்கிறோம். அதனால்தான் எப்பொழுதுமே நான் சொல்வேன். உடல் நோகும் படியாக நீங்கள் உங்கள் சொத்துக்களை மாற்றிக் கொடுக்கும்போது, கூடவே அந்த உடல் கஷ்டத்தையும் சேர்த்துத்தான் கொடுக்கிறீர்கள்.
சொத்துக்கள் தளர்வான மன நிலையிலும் தன்னிச்சையான முடிவுகளாலும் சேர்க்கப்பட வேண்டும். இன்னும் ஆழமாகச் சொல்லவேண்டுமென்றால் எந்தவித பலமான நோக்கமும் இல்லாமல் சேர்க்கப்பட வேண்டும்.