உள்ளுணர்வு ஒழுக்கமே உங்களை சொர்க்கத்தில் வாழச் செய்யும்
ஒரு சின்ன கதை.
இளம் சந்நியாசி ஒருவர், அழகிய விலைமகள் குடியிருந்த வீட்டிற்கு எதிரே வாழ்ந்து வந்தார். அந்த இளம் சந்நியாசி எப்போதும் தியானம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தார். மறுபுறம் அந்த விலைமகள் அவருடைய வழியில் சென்று பணம் சம்பாதித்து வந்தார். அவருடைய வீட்டிற்குப் பல ஆண்கள் வருவார்கள், போவார்கள்.
அந்த இளம் சந்நியாசி அவருடைய தியானத்தில் மனத்தை ஒருமுகப்படுத்த மிகவும் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய கவனமெல்லாம் பெரும்பாலும் அந்த இளம் பெண்ணைச் சுற்றியே இருந்தது. ஒழுங்கீனமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணைச் சபித்துக்கொண்டே இருந்தார்.
அந்த விலைமகளுக்கோ எதிர் வீட்டில் சந்நியாசி ஒருவர் இருப்பதே தெரியாது.
அந்த விலைமகள், அவருடைய வாழ்க்கை முறையில் ஈடுபட்டு பணம் சம்பாதித்தாலும்கூட, பகவான் கிருஷ்ணரின் மீது பக்தியில் மூழ்கித் திளைத்து எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அவரை வணங்குவதிலும் அவருடைய விக்ரகங்களுடன் விளையாடுவதிலும் செலவிட்டுக் கொண்டிருந்தார்.
அந்த சந்நியாசியும் விலைமகளும் ஒரே நாளில் இறந்து மரணத்தின் கடவுளாகிய எமனின் எமலோக வாயிலை அடைந்தார்கள்.
எமலோகத்தைச் சென்றடைந்தவுடன் அந்த விலைமகள் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டார். சந்நியாசி அதிர்ச்சி அடைந்தார். இருந்தாலும்கூட, ஒரு விலைமகளே சொர்க்கத்திற்கு அனுப்பப்படும்போது, தமக்கு உபசாரம் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஆச்சரியப்படும் படியாக அவர் நரகத்துக்கு அனுப்பப்பட்டார்.
யமதர்மனின் அநியாயமான இந்த முழுத் தீர்ப்பையும் எதிர்த்து சந்நியாசி தமது கோபத்தை வெளியிட்டார். எமன் அந்த சந்நியாசிக்கு,
நம்மைச் சுற்றி நடப்பவற்றிற்கு ஒரு சாட்சியாக இருக்கும்போதுதான் நாம் உணர்ந்த ஆன்மாவாக ஆகிறோம்.
''உன்னுடைய வாழ்க்கை முழுவதும் தியானம் என்ற போர்வையில் அந்த விலைமகளின் செயல்களைப் பற்றிய எண்ணங்களுக்கே மனத்தில் இடமளித்துக் கொண்டிருந்தாய். ஆனால் அவரோ எந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் மனத்தை முழுவதுமாக கடவுளிடமே ஒருமுகப்படுத்தி வைத்திருந்தார்,'' என்று அமைதியாக விளக்கினார்.
மனப்பாங்குடனும் கட்டுறு ஒழுக்கங்களின்படியும் ஆரம்பித்தோமென்றால் நாம் வேடதாரிகளாகத்தான் இருப்போம்.
துறவு என்பது கேலிக் கூத்தாகிவிடும். இதுவும் உலக இன்பங்களைப்போல, நம்மை துக்கத்திற்குத்தான் அழைத்துச் சென்றுவிடும். அலைக்கழிக்கும் ஆசைகளின் மூலம் நம்மை துக்கத்திற்குள்ளாக்கும் உலக துக்கத்திற்கு வழிவகுத்துவிடும்.
ப்ரூற்மசாயம் என்றால் 'உண்மை நிலையுடன் வாழ்வது' என்று பொருள். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறாற்போல் பிரும்மச்சரியம் என்பது திருமணம் ஆகாதவரைக் குறிப்பது அல்ல. நாம் நம்முள் பரவசமான நிலையில் இருக்கும்போதும் நிகழ்காலத்தில் முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும்போதும், பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு இசைக்கேற்றாற்போல் இசைந்து இயல்பாகவே உண்மையான பிரும்மசாரிகள்.
நாம் நிகழ்காலத்தில் முழுமையாக வாழும்போதும், செய்யும் செயல்களில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படும்போதும், நாம் செய்யும் செயலாகவே மாறிவிடுகிறோம்; செயலைச் செய்பவராக இருப்பதில்லை. அப்போதுதான் நாம் உண்மையிலேயே துறவு மேற்கொண்டுள்ளோம். 'நான் செய்கிறேன்' என்ற உணர்ச்சியை, என்ற ஆணவத்தைத் துறக்க வேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான சந்நியாசிகள்.
ஆனால் நாம் நம் மனத்தைத் துறக்க விரும்புவதில்லை. மனமானது தொடர்ந்து கற்பனைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கற்பனைகள் நம் இயல்பு நிலையுடன் பொருந்தாதபோதும், நம்மைச் செயல்பட தூண்டிக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட நம்முடைய மனத்தைத் துறக்க நாம் விரும்பவில்லை.
நாம் அனுபவித்து உணரவேண்டியது இதுதான். அதாவது வெளியிலிருக்கும் அற்பமான உணர்ச்சிகளுக்குப் பின்னால், நம்முடைய இருப்புத் திடமாக, அமைதியாக இருக்கும் அந்த மையத்தை நாம் உணர வேண்டும். அது இந்த வெளியுலக நிகழ்வுகளால் எள்ளளவும் பாதிப்பு அடையவில்லை என்பதையும் நாம் அனுபவித்து அறிய வேண்டும். நடக்கிற எல்லாவற்றுக்குமே ஒரு சாட்சியாக மட்டுமே இருக்கிற அது அழிவில்லாதது, நித்யமானது, பரிசுத்தமானது.
இந்த உலகத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்று ஹிமாலயத்திற்குச் செல்ல முயற்சி செய்வதற்குப் பதிலாக உங்களுக்குள்ளேயே அந்த ஹிமாலயத்தை உருவாக்குங்கள்.
'நான் செய்கிறேன்' என்ற உணர்ச்சியை, ஆணவத்தைத் துறக்க வேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான சந்நியாசிகளாகிறோம்.
உங்களுக்குள்ளிருக்கும் அமைதியான மையத்தை உணருங்கள். காரணம் என்ன என்பதை மட்டும் பாருங்கள். காரியத்தைப் பற்றி, அறிகுறிகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதைவிட மூலகாரணத்தை உணர்ந்து செயல்படுவதுதான் மிகவும் சிறந்தது.
சத்தியத்தின் அருமையை அனுபவமே உணர்த்தும்
துறவு என்பது ஆசைகளுக்கு அப்பாற்பட்டது. ஆசைகள் என்று நான் சொல்லும்போது எல்லா ஆசைகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்; ஆசை இல்லாமல் இருப்பது உட்பட!
ஆசை என்று சொல்லும்போது வழக்கமான பணம், பதவி, அதிகாரம், உறவுகள் மற்றும் எல்லாப் பொருள் சார்ந்த உலகியல் ஆசைகளை மட்டும் குறிப்பதாக நினைத்துக் கொள்கிறோம்.
ஆனால் ஆன்மீகத்தில் இருக்க வேண்டும், கடவுளை அடைய வேண்டும் என்ற ஆசையும் ஒரு ஆசைதான். ''நான் விடுதலை அடைய வேண்டும், துறவு மேற்கொள்ள வேண்டும்," என்று நினைப்பதும்கூட ஆசையின் பிடியில் நாம் சிக்கியிருத்தலையே வெளிப்படுத்தும்.
ஒரே விஷயம் என்னவென்றால், இந்த ஆசைகள் பொருள் சார்ந்த ஆசைகளின் பட்டியலில் இல்லை. அவ்வளவுதான் ஆனால் அதுவும் ஆசைதான்; அதுவும் மனத்தின் மற்றொரு வெளிப்பாடே! மனம் எப்பொழுதுமே எதிர்காலத்தைப் பார்த்தே தொங்கிக் கொண்டிருக்கும். அது ஒருபோதும் நிகழ்காலத்தில் இருக்காது.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் எதற்காவாவது ஆசைப்படும்போது, அது எந்தவிதமான ஆசையாக இருந்தாலும் சரி, மனத்தின் தளத்திலிருந்துதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
எல்லா ஆசைகளையும் விட்டொழித்து, முற்றிலுமாக வெறுமை நிலையிலிருக்கும் அந்த நேரத்தில்தான் நாம் மனத்தின் பிடிகளைத் தாண்டிச் செல்கிறோம்.
அப்பொழுது மட்டுமே, நம்மால் இங்கேயே இப்போதே இதிலேயே இருக்கும் அழகைப் பார்க்க முடியும். இல்லையென்றால் அது எந்த ஆசையாக இருந்தாலும் சரி, எப்போதும் நாம் நம்முடைய மாயையான ஒரு உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருப்போம். ஏனென்றால் எதிர்காலம் என்பது உண்மை அல்ல, அது வெறும் மாயைதான்.
நிஜம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் இவற்றை மனத்தால் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது. ஏனென்றால் அது தர்க்க அறிவைத் தாண்டியது. அதனால்தான் பிரபஞ்ச சக்தியை ஒருபோதும் மனத்தால் அறிந்துகொள்ளவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. மனத்தால் தத்துவத்தை பேச மட்டுமே முடியும். அதனை அனுபவிக்க முடியாது. ஆனால் சத்தியத்தை, அனுபவிக்க மட்டுமே முடியும்.