செயலை மட்டும் செய்து லக்ஷியத்தை அடையுங்கள்
உண்மையாகவே, ஊடகங்கள் மற்றும் 'இன்டர்நெட்' போன்றவற்றின் பாதிப்பால் இந்த நவீனயுக மனிதர்களுக்குள் ஒரு படிவே ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் இந்த ஊடகங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மனத்தோற்றம் மற்றும்
கற்பனைகளையே சார்ந்து இருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் உண்மையுடன் தொடர்பு கொண்டிருப்பதில்லை.
நிலையிலிருந்து உண்மை அவர்கள் வைத்திருந்தார்களோயானால், அது சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவர்கள் தொடர்புகொள்ள ஆரம்பிக்கிறார்கள். அந்தக் கற்பனை உலகத்திலேயே வாழ்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் அவர்களிடம் என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்பதில்லை.
ஒருமுறை கற்பனை உலகத்தோடு இணையத் தொடங்கிவிட்டார்களேயானால், அவர்கள் ஒருபோதும் நிகழ்காலத்தில் இருப்பதில்லை. அவர்கள் ஏற்கெனவே கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் கனவு நிறைவேறிவிட்டாலும்கூட, அது நிறைவேறிய கணம்மே, மனம் ஒரு புதிய விஷயத்தின் பின்னால், ஒரு புதிய கற்பனையின் பின்னால் ஓட ஆரம்பிக்கிறது. இதைச் செய்தால் மட்டுமே மனமானது தொடர்ந்து இருக்க முடியும். பின்னால் ஓடுவதற்கு எதுவுமே இல்லையென்றால், மனம் அல்லது அஹங்காரம் உயிர்வாழ முடியாது.
ஒவ்வொரு 'நாளை' என்பதும் 'இன்று' என்றுதான் வருகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவில்லை. நாளை என்பது இன்றாக வரும்பொழுது, நாம் அதைத் தொலைத்தே விடுகிறோம். ஏனென்றால் நாம் மீண்டும் நாளை என்பதை எதிர்நோக்கத் தொடங்கிவிடுகிறோம் !
விளைவுகளைச் செயல்படும்பொழுது, நம்முடைய சக்தி அனைத்தும் இலக்கை அடைவதை நோக்கியே பயன்படுத்தப்படுகின்றன. பலன்களைப் பற்றிய கற்பனையில் ஆற்றலானது விரயம் செய்யப்படுவதில்லை.
ஆசை எனும் சக்தியே இச்சா சக்தி. அது செயல் எனும் சக்தியாக, கிரியா சக்தியாக மாற்றப்படுகிறது. ஆரம்பத்தில் இலக்கை அடைவது என்பதுதான் ஆசையாக இருக்கும். ஆனால் எது முக்கியமென்றால், செயலைச் செய்வதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட பாதைதான் முக்கியமே தவிர. இறுதியில் வருகிற பலன்கள் அல்ல. குறிக்கோள் என்பது ஒரு உப உற்பத்திப் பொருள் மட்டுமே.