KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/ஆனந்தத்தை நோக்கி அழைத்துச்செல்லும் நம் சாரதிSign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

ஆனந்தத்தை நோக்கி அழைத்துச்செல்லும் நம் சாரதி

உள்ளபடியாகவே, நம்முடைய உண்மையான இயல்பானது சுத்தமானதும் அல்ல; அசுத்தமானதும் அல்ல. அது சுத்தம் அசுத்தம் இந்த இரண்டிற்குமே அப்பாற்பட்ட ஏதோ ஒன்று. அதைத்தான் நாம் விசு’த்தி என்கிறோம். விசு’த்தி சுத்தம் அசுத்தம் இரண்டிற்கும் அப்பாற்பட்டது என்று பொருள்.

தொண்டையில் அமைந்து உள்ள உங்களுடைய விசு’த்தி மையம் விழிப்படையும்பொழுது, நாம் நம்முடைய உண்மை இயல்பை நெருங்கத் தொடங்குகிறோம்.

நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நாம் ஆனந்தமானவர்கள்! நம்முடைய இயல்பே ஆனந்தம்தான்.

நம்முடைய உண்மையான இயல்பே சுயக் கட்டுப்பாடுதான். நம்முடைய இருப்புக் கன்மை தூய்மையான ஆனந்தம் என்பதை நாம் உணர்ந்து கொண்டு அனுபவிக்கும்பொழுது, மற்ற உணர்ச்சிகள் தானாகவே காணாமல் போய்விடும். அதுவரை நம்முடைய உண்மையான இயல்பை மற்ற உணர்ச்சிகள் முகமூடியிட்டு மறைத்துவிடும்.

நம்முடைய உண்மையான இயல்புடன், ஆனந்தத்துடன் இருக்க முயலும்பொழுதுதான் நாம் இயல்பாக தன்னிச்சையாக வாழ்கிறோம். ஏற்கெனவே திட்டமிட்டு வைத்துள்ள உணர்வற்ற நிலையிலிருந்து பதிலளிப்பதற்குப் பதிலாக, நாம் புத்திசாலித்தனத்துடன் பதிலளிக்கிறோம்.

ஜீவன் முக்கியை, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள முடியாது. ஜீவன் முக்திதான் உங்களை சொந்தமாக்கிக் கொள்ளும். புலன்களைக் கட்டுப்படுத்துவது என்பது அப்பொழுது பிரச்சினையாகவே இருக்காது. அவை ஆதாரமாக இருக்கிற இருப்புத் தன்மையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றன. அவற்றை அடக்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்.

அர்ஜுனன்னுடைய மஹாபாரதக்கில் தேரைக் கிருஷ்ணர் செலுத்தினார். தேரினில் பூட்டபட்டிருக்கும் குதிரைகள் புலன்களைக் குறிக்கின்றன. அவை, தெய்வீகச் சாரதியால் கட்டுப்பட்டுத்தப்பட்டு, அழகாக அவர் கட்டுப்பாட்டுக்குள் இருக்குக்கும் குறிக்கின்றன.

இங்கு இருப்புத் தன்மை போர் வீரராக சித்திரிக்கப்பட்டு உள்ளது.

அந்த இருப்புத் தன்மையை ஊக்கமளித்து அழைக்குச் செல்லும் சாரதியாக கிருஷ்ணர் இருக்கிறார். இருப்பை அவர் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

வெற்றியை நோக்கியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ரதமாக உடல் சித்திரிக்கப்பட்டு உள்ளது.

தனி மனிதரின் உணர்வு (ஜீவாத்மா) சரணடையும்பொழுது, இரைவனைச்

இரைவன் அந்த மனிதரின் உடல், மனம், ஆன்மா இவற்றைக் கட்டுப்படுத்தி, அவருடைய உண்மை இயல்பை நோக்கி, ஆனத்தத்தை நோக்கி செலுத்தத் தொடங்குகிறார்.

ஒவ்வொருகண மும் கொண்டாட்டமாகவிடும்

மிகவும் இளவயதிலிருந்தே, சமுதாயம் எது சரி, எது தவறு, எது நல்லது, எது கெட்டது என்பதை நமக்குச் சொல்லிக் கொடுத்து வந்துள்ளது. அதனால் நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் எப்படி எதிர்ச்செயல் புரிவது என்பதைப் பற்றி ஏற்கெனவே நாம் திட்டமிட்டு வைத்திருக்கிறோம். அதேபோல் எல்லா விஷயங்களைப் பற்றியும் ஒருநிலையான கருத்தை நம்முள் பதித்துவைத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஒரு சூழ்நிலையைப் பார்த்த மாத்திரத்திலேயே, நமக்கு ஏற்கெனவே கற்பிக்கப்பட்டுள்ளதைப்போலவே அதற்கு எதிர்ச்செயல் புரிகிறோம். நாம் பதில் அளிக்கவில்லை, எதிர்ச்செயல் மட்டுமே புரிகிறோம். மனசாட்சியின் படி, நாம் எதிர்ச்செயல் மட்டுமே புரிகிறோம்.

மனச்சாட்சியின்படி நாம் செயல்படும்பொமுது, நம்மால் எதிர்ச்செயல் புரிய மட்டுமே முடியும். கடந்தகாலத்தில் இதே போன்ற குழ்நிலையைச் சந்திக்கும்பொழுது நாம் என்ன செயல் செய்தோம், அப்பொழுது மற்றவர்களின் எதிர்ச்செயல் எப்படி இருந்தது என்பது போன்ற கடந்தகாலத்தைப் பற்றிப் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள தகவல்களைப் பார்த்து நாம் எதிர்ச்செயல் புரிகிறோம்.

சுத்தம் அசுத்தம் இரண்டிற்கும் அப்பாற்பட்டதுதான் விசு தீதி.

கடந்தகாலத்தில் நமது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நாம் புகழப்பட்டிருந்தால், நாம் முன்பு செயல்பட்ட அதே முறையிலேயே எதிர்ச்செயல் புரிவோம். ஏற்றுக்கொள்ளபடாமல், நாம் இகழப்பட்டிருந்தால், இப்பொழுது மற்றவர்கள் எதிர்ச்செயலைப் புரிவோம்.

நாம் செய்வது சுற்றியுள்ள மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நாம் சற்று அசௌகரியமாக உணர்வோம். அந்த அசௌகரியத்தை நீக்குவதற்காக, மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதை நாம் நினைக்கிறோமோ, அந்த முறையிலே இப்பொழுது எதிர்ச்செயல் புரிவோம். இதுதான் எல்லாக் காலத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.

நமக்கு இது வெளிப்படையாகத் தெரியாது. ஏனென்றால் இதே மாதிரி எதிர்வினை புரிவது என்பது, நம்முடைய வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டது. புத்திசாலித்தனமாக எப்படிச் செயல்பட வேண்டும் என்பதே நமக்கு மறந்தே போய்விட்டது.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எந்த ஒரு சூழ்நிலையும் முன்னர் நிகழ்ந்ததுபோலவே மிகச் சரியாக இருப்பதில்லை. அது எப்படி முடியும் ? ஒரு நதியானது இரண்டு வித்தியாசமான இடங்களில் மிகச் சரியாக ஒரே மாதிரியாகப் பாய்வது என்பது முடியுமா? முடியாது. இரண்டு இடங்களும் வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும்கூட, அதே தண்ணீர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பாயும்போதே மாறியிருக்கும்.

வாழ்க்கையும் நதி போன்றதுதான். அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடிக்கொண்டே இருக்கும்.

சுயக் கட்டுப்பாடுதான்.

பிரபஞ்ச இருப்புத் தன்மைதான் சக்தி. அது செய்ததையே திரும்பவும் ஒருபோதும் செய்யாது. அது ஒவ்வொரு கணமும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும்.

நாம் நம்முடைய மனத்தின் குறுகிய கண்ணோட்டத்தைக்கொண்டுதான்பார்க்கிறோம்.

ஏனென்றால் வாழ்க்கையை பல கூறுகளாக்கிப் பகுத்தும் பிரித்தும் பார்க்கும் தன்மையுடையது.

''இவை எல்லாம் சந்தோஷமான நிலைகள், இவை சூழ்நிலைகள், இது நல்லது, இது மோசமானது, இது சரியானது, அது தவறானது, இது நடக்க வேண்டும், இது நடக்கக் கூடாது, " என்றெல்லாம் சொல்லுகிறோம். இவ்வாறு வித்தியாசப்படுத்திப் பார்ப்பதைப் பிரபஞ்சம் செய்வதில்லை. நாம்தான் செய்கிறோம்.

இதை இந்த அளவிற்குப் புரிந்துகொண்டு, அவ்வாறு புரிந்து கொண்டதை நமக்குள் ஆழமாகச் போதும், நம்மை எளிமையாகத் தளர்வாக இருக்கச் செய்து கொள்ளலாம். அதன் பிறகு

வாழ்க்கையும் நதி போன்றதுதான். அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.

நம்முடைய விழிப்புணர்வின் வழிகாட்டுதலின்படிதான் நாம் பதில் செயல் புரிவோம்.

மனசாட்சி என்பது விழிப்புணர்வுக்கு மிக மோசமான மாற்றுப்பொருள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்,

வாழ்க்கையை தன்னிச்சையாகவும் இயல்பாகவும் வாழ்வதற்கான தைரியத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

அது உங்களுடைய வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் என்ன அற்புதமான வித்தியாசத்தை ஏற்படுத்துகிறதென்று பாருங்கள். உங்கள் மனப்பான்மையில் நீங்கள் கொண்டு வரும் இந்தச் சிறு மாற்றமானது, பல அற்புதங்களை உங்களுக்குள் ஏற்படுத்தும். பிறகு, ஒவ்வொரு கணமும் கொண்டாட்டமே!