தமக்கு, கடவுளைவிட ராமகிருஷ்ணரே மிகவும் உயர்ந்தவர் என்று விவேகானந்தர் சொன்னார். ஏனென்றால் கடவுள் என்பது விவேகானந்தரின் மூளையில் ஒரு கருத்து மட்டுமே.
ஆனால் அவருடைய குருவான இராமகிருஷ்ணர் ஸ்தூலமாக வாழ்ந்த ஒருவர். விவேகானந்தருக்குக் கடவுளைக் காட்டிய குரு. கடவுள் என்ற அனுபவத்தை அவருக்குள் நிகழ்த்தியவர். எனவே குரு என்பவர்
ஏனென்றால் மனிதருக்குள் 'கடவுள்' அனுபவம் நிகழ்வதற்கு ஒருவர் இருக்கிறார். நம்மால் இதுவரை அறிந்துகொள்ளப்படாத ஒன்றை நாம் எப்படி விரும்ப முடியும் ?
கடவுளையும்விட மிகவும் உயர்ந்தவர்.
ஏனெனில் நமக்கு என்ன தெரியுமோ அதை அடிப்படையாகக்கொண்டோ
அல்லது நாம் பார்த்தவற்றை அல்லது அறிந்தவற்றை அடிப்படையாகக் கொண்ட கற்பனைகளைக்கொண்டோதான் நம்முடைய எல்லா ஆசைகளும் அமைய முடியும்.
கடவுளைப்பற்றியே அறிந்திராத நாம் எப்படிக் கடவுளின் மீது ஆசைப்பட முடியும் ? நாம் ஜீவன் முக்திக்கு எப்படி ஆசைப்பட இயலும் ? ஞானிகளைப் பற்றி நாம் படித்ததையும் கேட்டதையும் அடிப்படையாகக்கொண்டு, நமக்கிருக்கும் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட புரிதலுடன் அதைப் பொருத்திப்பார்த்த பிறகுதான் ஜீவன் முக்திக்கு நாம் எப்போதும் ஆசைப்படுகிறோம்.
ஆனால் புரிந்துகொள்ளுங்கள், அதுவும் நம்முடைய கற்பனையே. ஜீவன் முக்தி என்றால் எப்படியிருக்கும் என்று நம்முடைய மனம் அறிந்து வைத்திருக்கும் அடிப்படையில்தான் அதுவும் இருக்கும். ஜீவன் முக்தியை சொந்தமாக்கிக்கொள்ள உங்களுக்கு முடியாது. உங்களால் ஜீவன் முக்தியை அடைய முடியாது. முழீவன் முக்திதான் உங்களைச் சொந்தமாக்கிக்கொள்ள முடியும். நீங்கள் ஆசைகளை விடும்பொழுதுதான் அது நடக்கும்.
'கடவுள் அல்லது பிர்பஞ்ச இருப்புத் தன்மை என்பது நமக்குத் தெரிந்தவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. '