இறைவன் இசைக்கும் புல்லாங்குழலாய் மாறிவிடலாம்
புத்திசாலித்தனம் ஏற்படும்பொழுது, கருணையும் சேர்ந்தே வந்துவிடும். உங்களுக்குள் இந்த முழு உலகத்தின் மீது தானாகவே கருணை பிறக்கும். ஏனென்றால் ஒவ்வொருவரிடத்திலும் நீங்கள் உங்களையே பார்ப்பீர்கள்.
கருணையைத் தவிர வேறு எதை நீங்கள் உணர முடியும் ? அதனால்தான் குருவாக இருப்பவர்கள் எல்லோரிடத்திலும் கருணையோடு இருக்கிறார்கள். அதனால்தான் இந்த முழு உலகத்திற்கும் அவா்கள் பொறுப்பு ஏற்கிறார்கள். நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவு பெற்று அதனோடு இயைந்து பாயும்பொழுது, நம்முள் தெய்வீக ஆற்றல் பாய்வதற்கு நாம் ஒரு கால்வாயாக மாறிவிடுகிறோம்.
மூங்கில் தன்னுள் வெற்றிடத்தை வைத்துக் மட்டுமே, அது ஒரு அழகான புல்லாங்குழலாக தெய்வத்தின் உதடுகளிலிருந்து வரும் காற்றினை உள்வாங்கி, அதனை
ஒரு தெய்வீக இசையாக, அழகான இன்னிசைச் சரங்களாக வெளிவிட முடியும்.
மாறாக அந்த மூங்கில் அழுக்கடைந்து அடைபட்டிருந்தால், அது அப்படியே இறந்து போன மாதிரியே இருப்பதுடன், இறந்து போனவர்களின் உடலை எடுத்துச் செல்லப் பயன்படும் மூங்கிலாகவே இருக்கும்.
கிருஷ்ணரின் இந்த ஸ்லோகங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஆனால் பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகின்றன.
பலர், தங்களுடைய செயல்களை தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல், சௌகரியத்திற்கு ஏற்றாற்போல் நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால், நீங்களாகவே ஒரு கொலையைச் செய்து விட்டு, ''நான் இந்தக் கொலையைச் செய்யவில்லை, என்னுடைய கைகள்தான் அதைச் செய்தன, '' என்று சொல்லுவதைப் போன்றது.
வாழ்க்கையை, புத்திசாலித்தனத்துடனும் விழிப்புணர்வுடனும் தன்னீச்சையாகவும் இயல்பாகவும் வாழ்வதற்கான தைரியத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எதையும் செய்யவில்லை நம்முடைய பொறுப்பேற்கவில்லை அது மிகவும் சரியான எதிர்மறையான பொருளைத்தான் கொடுக்கும். எந்த ஒரு செயலிலும் நாம் மிகவும் ஈடுபாட்டுடன் இருக்கும்பொழுது, நாம் முழுமையாகவும் தளர்வாகவும் ஓய்வாகவும் இருப்போம். அப்பொழுது கருணையினாலும் நிரம்பி வழிவதுடன், நாம் நமக்குள் இருக்கும் ஆனந்த சக்தியால் மட்டுமே இவற்றை எல்லாம் செய்வோம்.