KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/உணர்ச்சி உங்களைத்தாக்காதுSign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

உணர்ச்சி உங்களைத்தாக்காது

புத்தரின் வாழ்க்கையிலிருந்து அழகான ஒரு கதை:

புத்தரின் சீடர் ஒருவர் புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்காகச் சென்று கொண்டிருந்தார். ஆனால் அந்தத் துறவி இன்னும் ஞானமடையவில்லை.

புத்தர் அவரை அழைத்துச் சொன்னார்:

'நான் எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், நீ இன்னும் ஞானமடையவில்லை. நீ தெளிவு பெற்றிருக்கிறாய். நீ நன்றாகப் பேசுகிறாய். அதனால் போதனைகளை உன்னால் பரப்ப முடியும். ஆனால் உன்னால் விதைகளை விதைக்க முடியாது. சில பேரை மட்டும் கவர்ந்து என்னிடம் வரும்படி செய்ய முடியும். இந்த வாய்ப்பை உன்னுடைய வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொள். ''

''நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது எப்படி?' என்று அந்தத் துறவி கேட்டார்.

புத்தர் சொன்னார், "ஒவ்வொரு வாய்ப்பிலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒரே ஒரு விஷயம்தான் நீ செய்ய முடியும். அது 'சாட்சியாக இருத்தல்'. சில சமயங்களில் மக்கள் உன்னுடன் கோபப்படுவதையும் பார்ப்பாய். ஏனென்றால் அவர்களுடைய கொள்கைகளையும் தவறாக காயப்படுத்திவிடுவாய்.

அப்படியே அமைதியாக இருந்து விழிப்புடன் இரு. மக்கள் உனக்கு எதிராக இருப்பதால் சில சமயங்களில் பல நாள்களுக்கு உணவு கிடைக்காது. அவர்கள் உனக்குத் தண்ணீர்கூடத் தர மாட்டார்கள். அதற்காக எரிச்சலடையாதே, கோபமடையாதே! உன்னுடைய பசியையும் உன்னுடைய தாகத்தையும் சாட்சியாகப் பார்.

சாட்சி பாவனையை விட்டுவிட்டு நம்மையே கர்த்தாவாகப் பார்ப்பதே பந்தங்களுக்குக் காரணம்.

நீ மக்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கிறாய் என்பதைவிட, உன்னுடைய கவனிக்கிற நிலைதான், விழிப்புதான், ஸாக்ஷி மாவுத்துதான் மிக மிக முக்கியம்."

''நீ விழிப்புடன் என்னிடம் வந்தால், நான் அளவற்ற மகிழ்ச்சி அடைவேன். எத்தனை பேரை நீ அணுகினாய் என்பது ஒரு பொருட்டல்ல ; எத்தனை பேரிடம் நீ பேசினாய் என்பதும் பொருட்டல்ல. நீ சாட்சியாக இருந்து செயல்களைப் பார்ப்பதில் உறுதியாக இருந்ததை, நீயே உணர்ந்து கொண்டாயா என்பதுதான் முக்கியம். மற்றவையெல்லாம் முக்கியமானவை அல்ல. ''

புத்தர் தெளிவாகச் சொல்கிறார்: ''உங்களுடைய செயல்களில் முழு விழிப்புடன் இருங்கள். நாம் முழு விழிப்போடு இருக்கும்பொழுதுதான், நாம் நம்முடைய செயல்களுக்கு ஒரு மூன்றாவது மனிதராக, சாட்சியாக இருக்கும்பொழுதுதான், நம்முடைய செயல்களுடனோ அல்லது செயல்களின் விளைவுகளுடனோ நம்முடைய எந்தவிதமான உணர்ச்சிகளையும் இணைத்துக்கொள்ள மாட்டோம்.

இப்படிச் செய்வதன் மூலமாக நாம் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறோம். வெளிஉலகில் என்ன நடந்தாலும், அது நம்மைப் பாதிப்பதில்லை. ஏனென்றால் நாம் எதனுடனும் எந்தவித உணர்ச்சியையும் இணைக்கவில்லை; தொடர்புபடுத்தவில்லை.

அத்துடன். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் உபதேசிப்பதைத்தான் நாமும் பயிற்சி செய்கிறோம். அதுதான் உண்மையான புரிந்துகொள்ளுதலுக்கும், பட்டறிவு மூலமாக நாம் புரிந்து கொண்டதை உள்வாங்குதலுக்கும் உதவுகிறது.