KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/Part 4: Bhagavad Gita ExplainedSign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

Part 4: Bhagavad Gita Explained

நம்முடைய கொள்கைகளின்படி நாம் வாழ்ந்துகாட்ட வேண்டும். நாம் உண்மையென நம்பும் கொள்கையில் உறுதியாக நிற்க வேண்டும். நாம் பேசுவதைக் கடைப்பிடிக்கும்பொழுது மட்டுமே, மற்றவர்களையும் அவற்றைப் பின்பற்றும்படியாகத் தூண்டுகிறோம். நாம் அதற்காக முயற்சி செய்யக்கூடத் தேவை இல்லை. நாம் மிக சுலபமாக மக்களுக்கு ஊக்கமளிக்கலாம். நம்முடைய சொந்த உணர்வுருமாற்றம் என்பது மகிழ்ச்சியான இறுதி விளைவாக இருக்கும்பொழுது நிகழும் துணைப்பலன்தான் 'ஊக்கமளித்தல்' என்னும் நிகழ்வு !

நீங்கள் சாதாரணமானவர் அல்ல

கேள்வி : ஸ்லாமிஜி, புலனின்பங்களைத் தவிர்த்தல், எல்லாவற்றையும் சமமாகப் பாவித்தல் என்று கிருஷ்ணர் சொல்வதில் உள்ள உண்மையை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் இந்தப் புரிந்துகொள்ளுதலை எவ்வாறு நான் பயிற்சி செய்ய முடியும் ? ஒரு சாதாரண மனிதன் என்ற முறையில், நான் என்னுடைய புலன்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறேன். தயவு செய்து வழி காட்டுங்கள்.

நீங்களே உங்களைக் குறைத்து மதிப்பீடு செய்கிறீர்கள். எந்த ஒரு மனிதப் பிறவியும் சாதாரணமானது இல்லை. நீங்கள் அபூர்வமானவராக ஆவதற்குரிய சாத்தியம் உங்களிடம் இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்களைச் சாதாரண மனிதருக்கும் கீழானவராகவே நினைத்துக் கொள்கிறீர்கள்; அது மட்டுமல்ல இயற்கைக்கு மாறான ஒழுங்கற்ற மன நிலை கொண்டவராகவும் உங்களை நீங்களே குறைந்து மதிப்பீடு செய்து கொள்பவராகவும் இருக்கிறீர்கள்! நீங்கள் ஒரு மேலான மனிதர். தயவு செய்து இதை நீங்கள் நம்புங்கள். உங்களை நீங்களே மிகக் குறைவாக மதிப்பிடுவதற்குப் பதிலாக இதை நம்புங்கள்.

நீங்கள் என்று எடைபோடுவது உங்களுடைய அக மதிப்பீடே.

நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்று மமகாரம் நீங்கள் எப்படி உங்களை மற்றவர்களுக்கு வெளிக்காட்டுகிறீர்கள் அகங்காரம். அது, மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்களோ அதனைப் பொறுத்து அமையும்.

நீங்கள் மக்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கிறீர்கள் என்பதைவிட, உங்களுடைய விழிப்புதான் மிக மிக முக்கியம்,

நீங்கள் உங்களைப் பற்றி உங்களுக்குள்ளே என்ன சத்தமாக வெளிக்காட்டிக்கொள்ள ஆனால் உங்களுக்குள்ளே எப்போதும் உங்களைப் பற்றிய சந்தேகங்களுடன்தான் இருப்பீர்கள். அத்துடன் உண்மையிலேயே, நீங்கள் இருப்பதைவிட உங்களுக்குள் உங்களைப் பற்றி உணர்வீர்கள்.

நிறைய போர், குழந்தைப் பருவத்திலிருந்தே தங்களைப் பற்றிய தவறான கருத்துக்களால் ஆன நிரப்பப்பட்டவர்களாக காணப்படுகிறார்கள்.

''இல்லை. நீங்கள் சொல்வது தவறு. நான்

எந்த ஒரு மனிதப் பிறவியும் சாதாரணமானது இல்லை. நீங்கள் அபூர்வமானவராக ஆவதற்குரிய சாத்தியம் உங்களிடம் இருக்கிறது.

என்னைப் பற்றி ஒரு உயர்ந்த சுய மதிப்பீட்டையே வைத்திருக்கிறேன். அது என்னுடைய பிரச்சினை அல்ல, '' என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால் இப்போதும் நான் சொல்கிறேன், 'நீங்கள் உங்களைப் பற்றி குறைவாகவே மதிப்பிட்டிருக்கிறீர்கள். ஏனென்றால் 'நாம் கடவுள்' என்ற கருத்தைத் தவிர, நாம் நம்மைப் பற்றி வேறு எந்தக் கருத்தைக் கொண்டிருந்தாலும் அது குறைவான மதிப்பீடே!

நாம் தெய்வீகமானவர்கள்! நாம் கடவுள்!

நாம் விழிப்புணர்வுடன் வாழ்ந்துகொண்டு, உண்மையாகவே அதை நம்பும்பொழுது, நாம் ஜீவன் முக்தர் ஆகிறோம்.

ஆனால் அதை நாம் நம்ப மறுக்கிறோம். ஏனெனில் நாம் கடவுளாக முடியாது என்று நமக்குச் சமுதாயம் சொல்லி வைத்திருக்கிறது.

மனிதர் ஊர்ந்து செல்வதற்கும் படர்ந்து செல்வதற்கும் மட்டும் இந்தப் பூமியில் படைக்கப்படவில்லை. உச்சத்தை எட்டுவதற்கு அவரால் பறந்துகூடச் செல்ல முடியும்.

ஒருவர் தீஷை எடுத்துக்கொள்ளும்பொழுது, ஒரு சீடராகும்பொழுது அவருக்கு அது சாத்தியமாகிறது. சி'ஷ்ய என்ற வார்த்தைக்கு, கற்றுக் கொள்வதற்கான தயார் நிலை, ஆயத்த நிலை, மதிப்பளித்தல், கற்பதற்கு ஏற்ற திறந்த மன நிலை என்றெல்லாம் பொருள்படும்.

இந்த முழுமையான, முடிவில்லாத் தன்மை உடைய பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. இந்த அபரிமிதமான அழகான பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து தெரிந்து கொள்வதற்கு ஏராளமானவை இருக்கின்றன. அன்பு செய்வதற்கும் வாழ்வதற்கும் நிறைய இருக்கின்றன. சாதாரணமானதைக்கொண்டு ஒருவர் திருப்தி அடைந்துவிடக் கூடாது.

ஆன்மீகம் என்பது ஆழமான தெய்வீக தன்மை. அந்தத் தெய்வீக தன்மை. சாதாரணமான தன்மையில் திருப்தி அடைவதில்லை.

உங்களிடம் இல்லாததை விட்டுவிடுங்கள்

மக்கள் மேம்போக்காகவும் வெளியுலக விஷயங்களில் ஆர்வத்துடனும் சாதாரணமாக வாழ்வதையுமே விரும்புகிறார்கள். ஸ்தீயத்தைத் தேடுதல் என்பதே வாழ்க்கையின் உண்மையான ஆரம்பம். பிறகு வாழ்க்கை, இறக்கை கட்டிக்கொண்டு, அதிக உயரம் பறக்க ஆரம்பிக்கும்.

நாம் அகங்காரத்தைப் பெருக்கிக் கொள்கிறோம். மேலும் இந்தச் சமூதாயம் அகங்காரத்தின் மூலம் ஒவ்வொரு தனி மனிதனையும் அதிகாரத்துக்கும் நிர்வாகத்துக்கும் ஆலயத்திற்கும் அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பூசாரிகளுக்கும் அடிமையாக்கி, அவர்களைப் பொய்யர்களாக மாற்றி அமைத்துவிடுகிறது.

துக்கத்தில் இருப்பவர் போராட முடியாது. துக்கத்திலிருக்கும் ஒருவர் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே பற்றிக் கொண்டிருக்கிறார்.

தம்முடைய துக்கங்களைக்கூட பணயமாக வைக்க அவரால் முடியவில்லை.

ஏனென்றால் அவர் ''யாருக்குத் தெரியும் ? இதைவிட அதிகமான துக்கத்தை நான் அடையலாம். இந்தத் துக்கமாவது எனக்குத் தெரிந்ததாக இருக்கிறது. நான் இதனுடன் பழக்கப்பட்டுவிட்டேன். நான் அதற்கு ஏற்றாற்போல் என்னைச் சரி செய்து கொள்கிறேன். அதை எதிர்த்துச் சமாளித்துவிட முடியும்.

புதிய துக்கத்தைப் பற்றி யாருக்குத் தெரியும் ? பழைய துக்கத்துடனே அதன் வரையறைக்குள்ளேயே இருந்துவிடுவதுதான் நமக்கு பயந்துவிடுகிறோம்.

நாம் கடவுள். என்ற விழிப்புணர்வுடன் வாழ்ந்துகொண்டு, உண்மையாகவே அதை நம்பும்பொழுது. ஜீவன் முக்கர் ஆகிறோம். நாம் முதலில் நம்முடைய புலன்களின் உணர்ச்சிகளைப் பற்றிப் புரிந்துகொள்வோம். எல்லாப் புலன் உணர்தல்களுமே மாயைதான். நாம் கேட்பது, பார்ப்பது, தொடுவது, சுவைப்பது, முகர்வது இவற்றின் மூலம் நம்முள் செலுத்தப்படும் எல்லாமே நிலையற்றனவே.

இவற்றில் 90% நேரடியாக நம்முடைய விழிப்புணர்வற்ற நிலைக்கே சென்றுவிடுகின்றன. இவற்றை நாம் ஒருபோதும் உணர்வதுகூட இல்லை. பத்து விழுக்காடு நம்முடைய விழிப்புணர்வின் நினைவில் பதிந்திருந்தாலும் அவை நமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றிய இசைவான அல்லது முரண்பாடற்ற ஒரு கருத்தைத் தருவதில்லை.

இது எப்படியென்றால் 1000 பக்கங்கள்கொண்ட ஒரு புத்தகத்தில் 100 பக்கங்களே படித்ததுபோலத்தான். அதுவும்கூட துளித் துளியாக இங்கொன்றும் அங்கொன்றுமாக படிப்பதுபோலத்தான்.

இந்த அறிவுடன் நாம் இந்தப் புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனம் அல்லது ஒரு மதிப்புரை எழுதுவதற்குத் தகுதி அடைந்துவிட்டோம் என்று நினைக்கிறோம்.

தர்க்கச் சங்கிலியை உருவாக்குவதற்காக நாம் சம்பந்தமில்லாத சம்பவங்களைச் சம்பந்தப்படுத்துகிறோம் என்று Quantum Physics நிரூபித்துள்ளது. இதைத்தான் நான் க்ளட்ச்சிங் என்று அழைக்கிறேன்.

புலன்கள் வழியாக நாம் உள்கிரகித்த உணர்ச்சிகள், நம்முடைய எண்ணங்கள் இவை எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாதவை.

ஆனால் நம்முடைய கடந்தகால விழிப்புணர்வற்ற நினைவுகளின் அடிப்படையில் அவற்றை நாம் இணைத்துக்கொண்டு, இன்ப துன்பங்களை அனுபவிக்கத் தொடங்குகிறோம். நம்முடைய துக்கங்களுக்கு எல்லாம்

எல்லாப் புலன் உணர்வுகளுமே மாயைகான். நாம் கேட்பது, பார்ப்பது, தொடுவது, சுவைப்பது, முகர்வது என எல்லாமே மிகவும் நிலையில்லாத உள்ளீடுகளே.

இதுதான் காரணம்.

நாம் அவற்றிலிருந்து

நம்மை விடுவித்துக்கொண்டு, அண்களட்ச் செய்துகொண்டு, எண்ணங்களை இங்கேயே, இப்போதே அனுபவிக்கும்பொழுது மட்டுமே, நம்முடைய அனுபவங்கள் உண்மையான அனுபவங்களாகின்றன. அப்பொழுது நமது துக்கம் மறைந்துவிடுகிறது.

இரண்டாவதாக, நம்முடைய புலன்கள் சில விஷயங்களை நம்மைச் செயல்படும்படி தூண்டிவிடுகின்றன. அந்தச் பெற்றுவிடுவோம் என்ற என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் செய்யப்படுகிறது. எதிர்காலம் எப்பொழுதுமே இன்பமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறது. நாம் எதிர்காலத்திற்குள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நுழையும்போது ஏமாற்றமடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

கீதையின் மூலமாகக் கிருஷ்ணர் கற்றுக் கொடுப்பது இதுதான். அவர் நம்மைச் செயல் புரியாமல் இருக்கும்படி சொல்லவில்லை. எதிர்பார்ப்பில்லாமல் செயல் புரியுமாறுதான் சொல்கிறார்.

கர்க்கச் சங்கிலியை உருவாக்குவதற்காக நாம் சம்பந்தமில்லாத சம்பவங்களைச் சம்பந்தப்படுத்துகிறோம் என்று Quantum Physics ந்ரூபித்துள்ளது.

என்ன கிடைக்கிறதோ அதைக்கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். உங்களுடைய நீங்கள் முன்னதாகவே முடிவு செய்யாதீா்கள். அப்பொழுதுதான் நீங்கள் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் இருப்பீர்கள்.

மூன்றாவதாக, நம்முடைய புலன் வழியாகப் பெற்று உட்கிரகித்துக் கொண்ட உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியும். இல்லையென்றால் அடக்கி வைக்க முடியும். அது ஆசைக்கு வழி வகுக்கும். அடக்கி வைப்பதன் மூலமாக நாம் ஆபத்தான பகுதிக்குள் நுழைகிறோம்.

எதை நாம் அடக்கி வைக்கிறோமோ, அதுவே பிறகு வெடித்துச் சிதறும். அது, கற்பனைகளுக்கும் மோசமான உடல் நோய்களுக்கும் காரணமாக அமைந்துவிடும்.

வெளிப்படுத்தும்பொழுது, ஆசை வளர்கிறது. நம்முடைய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் அளவுக்கு நமக்கு புத்தி சாதுர்யம் கிடையாது. அதனால் அதை நாம் அரைகுறையாகவே நிரைவேற்றுகிறோம். அதனால் அவை பல தலைகளைக் கொண்ட பாம்பைப்போல மீண்டும் வளர்கின்றன. இதைத்தான் காமா என்று சொல்கிறோம்.

இருந்தபோதிலும், நம்முடைய புலன்கள் சொல்பவற்றைப் பின்பற்றாமல் நாம் அவற்றைக் கடந்து செல்லக் கற்றுக்கொள்ள முடியும். நாம் நிகழ்காலத்தில் விழிப்புணாவுடன் இருக்கும்பொழுது, புலன் வழியாக அறிந்து உணர்பவற்றைச் சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும். அப்பொழுது மட்டுமே அவற்றில் பெரும்பாலானவை நம்முடைய சொந்தப் படைப்புகளாகவும் கற்பனைகளாகவும் இருப்பதைப் பார்க்க முடியும்.

அதனால்தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், ''உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை அனுபவியுங்கள். ஆனால் உங்களிடம் எது இல்லையோ அதை விட்டுவிடுங்கள். ''

நாம் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது மட்டுமே, நம்மிடம் இருப்பவற்றை உண்மையாகவே அனுபவித்துக்கொண்டும் நம்முடைய ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டும் இருக்க முடியும்.

நாம் யைப் பார்க்காமல் அல்லது அரட்டையடிக்காமல் ஒருமுகப்பட்டு சாப்பிட்டோமென்றால், நாம் குறைவாகச் சாப்பிடுவதையும், அதன் மூலம் நாம் நிறைவடைவதையும் உணர முடியும்.

நாம் இதை எப்பொழுது முடிப்போம், மிகவும் சீக்கிரமாக முடிக்க வேண்டுமே, கஷ்டம் இல்லாமல் மிக நன்றாக முடிக்க வேண்டுமே என்றெல்லாம் கவலைப்படுவதற்குப் பதிலாக, அந்தக் கணத்தில் எந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அந்த வேலையில் ஒருமுகப்பட்ட மனத்துடன் ஈடுபடுங்கள்.

இதை செய்யச் சொல்லித்தான் கிருஷ்ணர் நமக்கு அறிவுறுத்துகிறார். நம்முடைய புலன்கள் நமக்குத் தலைவராக இருப்பதைக் காட்டிலும், நம்முடைய புலன்களுக்கு நாம் தலைவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

கழுத்தில் கட்டப்பட்டுள்ள சங்கிலியால் வழிகாட்டப்படுகிற ஒரு நாயைப்போல, நம்முடைய கழுத்தில் கட்டப்பட்டுள்ள புலன் இன்பங்கள் என்னும் சங்கிலியால் நாம் வழிநடத்தப்படுகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால் அதைப் பற்றிய விழிப்புணர்வுகூட இல்லாமலேயே இப்போதைக்கு இருந்து வருகிறோம். நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; அந்தச் சங்கிலியை விட்டுவிடுவதுதான்! புலன்களின் கட்டுப்பாட்டையும்கூட நாம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

அறிவைக்கொண்டு அறியாமையைச் சுத்தும் செய்தல்

  • 5.14 குருவாக இருப்பவர்கள், செயல்களை உருவாக்குவதும் இல்லை அல்லது மக்களைச் செயல்களைச் செய்யும்படி தூண்டுவதும் இல்லை அல்லது அச்செயல்களின் பலன்களோடு தங்களை இணைத்துக் கொள்வதும் இல்லை.

இந்தச் செயல்பாடுகள் எல்லாம் பொருள் சார்ந்த இயற்கையால் செய்யப்படுகின்றன.

  • 5.15 நிச்சயமாக, யாருடைய பாவங்களையும் புண்ணியங்களையும் பகவான் ஏற்றுக்கொள்வதில்லை. உயிரினங்கள் எல்லாம் அறிவை மறைத்துக் கொண்டிருக்கும் அறியாமையினால் குழப்பமடைந்து இருக்கின்றன.
  • 5.16 யாருடைய அறியாமை ஞானத்தால் அழிக்கப்படுகிறதோ, அவருடைய அந்த ஞானம், ஒரு உதய சூரியனைப்போல், மேலான விழிப்புணர்வின் மேல் ஒளியைப் பாய்ச்சுகிறது.
  • 5.17 யார் ஒருவர் இறைவனிடம் சரணடைகிறரோ, யாருடைய அறிவும் மனமும் நம்பிக்கையும் அந்த மேலான இறைவனிடம் ஒன்றியிருக்கிறதோ, அவருடைய அறியாமை அறிவின் மூலம் சுத்தம் செய்யப்பட்டுவிடுகிறது. அவர் முக்தியை நோக்கிச் செல்கிறார்.

வேதத்தின் முதல் வாக்கியமே விஞ்ஞானத்தின் கடைசி வாக்கியம்

இந்த ஸ்லோகத்தின் மூலம் கிருஷ்ணர் மிக ஆழமானதொரு கருத்தைப் பதிய வைத்திருக்கிறார். ''நான் செயல்களை உருவாக்குவதும் இல்லை அல்லது மக்களைச் செய்ய வைப்பதும் இல்லை அல்லது செயல்களுக்கான பலன்களுடன் இணைவதும் இல்லை. இவை எல்லாமே வெளி உலக சுகங்களை நாடும் மனித சுபாவத்தாலேயே செய்யப்படுகின்றன.''

கிருஷ்ணர் ஒரு தனி மனித பக்தரைப் பற்றியோ, சீடரின் செயல்களைப் பற்றியோ பேசவில்லை. ஆனால் இந்த மொத்த மனிதகுலத்தைப் பற்றிப் பேசுகிறார்.

அவர் இந்தப் பிரபஞ்சத்தின் உற்பத்தியைப் பற்றிப் பேசுகிறார். புரிந்துகொள்ளுங்கள், இந்தப் உருவாக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. நான் 'எதையும்' என்று சொல்லும்பொழுது புழுது 'எதையும்' என்ற பொருளில்தான் சொல்கிறேன். இங்கு இருப்பவை எல்லாமே எப்போதும் இங்கேயே ஏதோ ஒரு வடிவத்திலிருந்துகொண்டுதான் இருக்கின்றன.

இனிமேலும் அது ஒரு வடிவத்திலோ அல்லது மற்றொரு வடிவத்திலோ தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும்.

அது ஒரு பொருளாக இருந்தாலும் சரி அல்லது உயிரினமாக இருந்தாலும் சரி அது எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. வடிவம் மட்டும் வேண்டுமானால் மாறுபடலாம்.

பட்டறிவு மனத்திற்கு, பொருளும் ஆற்றலும் ஒன்றுக்கொன்று இருக்கின்றன. ஆற்றல் என்பது ஒருபோதும் அழிக்கவே முடியாதது என்றெல்லாம் விஞ்ஞானம் சொல்கிறது. விஞ்ஞானம் இப்பொழுது புரிந்து கொண்டதை முன்பே சொல்லியதுதான் வகுத்தினுடைய சிறப்பு,

ஆற்றல் என்பது ஒருபோதும் அழிக்கவே முடியாகது என்பதை விஞ்ஞானமும் ஒத்துக் கொள்கிறது.

அழகு! விஞ்ஞானத்தின் கடைசி வரிதான் உபநிஷத்தின் முதல் வரி.

ஈசா'வாஸ்ய உபநிஷதம், ஈசா' வாஸ்யம் இதம் ஸர்வம் என்றுதான் ஆரம்பிக்கிறது. இதன் பொருள், 'இங்கிருப்பவை எல்லாமே ஆற்றலிலிருந்து வெளி வந்தவையே!' என்பதாகும்.

இப்பொழுது பற்பல விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு குவாண்டம் இயற்பியலும் (Quantum Physics), 'பொருளும் ஆற்றலும் ஒன்றே' என்ற முடிவுக்குத்தான் வந்திருக்கிறது. இதுதான் தற்காலத்திய விஞ்ஞானத்தின் முன்னேற்றம் அல்லது கண்டுபிடிப்பு. ஆனால் ஈசாவாஸ்ய உபநிஷத்தின் முதல் வாக்கியமே 'எல்லாமே சக்திதான்; எல்லாமே ஆற்றல்தான்' என்பதுதான்.

படைப்பும் படைப்பாளியும் தெய்வீகமே!

''இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தது யார்?'' என்று மக்கள் என்னிடம் கேட்பார்கள். படைப்பாளன், படைக்கப்பட்டது, படைப்பு இவை அனைத்தும் பிரபஞ்சம் மட்டுமே அன்றி வேறில்லை. படைப்பாளனும் படைப்பும் வேறு வேறாக இருந்திருந்தால், படைப்பைவிட படைத்தவர் மிகுந்த புத்திசாலி என்றாகிவிடும். ஆனால் படைப்பும் படைப்பாளியும் ஒன்றே தவிர, வேறு வேறு அல்ல. அவை இரண்டுமே தெய்வீகம்தான்.

நம் கண்ணுக்கு முன்னால் தெரிவதைப் பிரபஞ்சம் என்று கருதிக்கொண்டு, இத்தகைய ஒரு வடிவம் கொண்ட பிரபஞ்சத்தைப் படைத்தது யார் என்று கேட்கிறோம். நாம் பிரபஞ்சமாக புலன்களால் உணர்ந்து கொண்டிருக்கும் இந்தப் படைப்பைப் படைத்தவர் மிகுந்த சக்தியுடையவராகத்தான்

படைப்பாளன், படைக்கப்பட்டது, படைப்பு இவை அனைத்தும் பிரபஞ்ச இருப்புத் தன்மையேயன்றி வேறில்லை,

இருக்க வேண்டும் என நம்புகிறோம்.

எல்லாமே சக்திதான், பருப்பொருளின் ஒவ்வொரு பகுதியும் சக்திதான் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம். அதனால் எல்லாமே சக்திதான் என்றாகிவிடும்பொழுது படைப்பாளி, படைப்பு என்கிற பேதமெல்லாம் எங்கிருந்து வந்தது? படைப்பாளியும் படைப்பும் இரண்டுமே ஒன்றுதான். இரண்டுமே தெய்வீகமானதுதான்.

நாம் அவற்றைத் தெரிந்து, உணர்ந்துகொள்ளும் வழிமுறைகளில்தான் வித்தியாசம் உள்ளது. படைப்புக்கு என்று ஒரு வடிவத்தை நாம் இணைத்துப் பார்க்கிறோம். அதைத்தான் லீலா, வெளிப்படாத, வடிவமில்லாத ஒரு சக்திதான் படைப்பின் மூலமாகத் தன்னை வடிவமாக வெளிப்படுத்திக் கொண்டது. வடிவமற்ற சக்திதான் படைப்பாளி. வடிவத்துடன் நாம் உணர்ந்து அறிந்துகொள்ளக்கூடிய படைப்பின் மூலமாக அது வெளிப்படுகிறது.

படைத்தலைச் செய்த அதே சக்திதான் படைப்பாகவும் வெளிப்படுகிறது என்பதை நாம் உணரும்பொழுது, இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறோம். பிரபஞ்சமே பிரபஞ்சத்தைப் உண்மையைப் புரிந்து கொள்கிறோம்.

'ஏன்' என்ற கேள்விக்கு நாம் தர்க்க ரீதியாகப் பதில் சொல்ல முடியாது. ஆரம்பத்திலேயே 'ஏன்' என்ற கேள்வியின் பிடியில் சிக்கிக் கொண்டால், நாம் எப்பொழுதுமே அதனுடனேயேதான் ஒட்டிக்கொண்டிருப்போம். 'ஏன் ?' என்று கேட்பதற்கு பதிலாக 'என்ன' என்று ஆராயத் தொடங்குங்கள். உண்மையில், நான் என்பது 'என்ன' இந்தப் பிரபஞ்சம் என்பது 'என்ன' என்பவற்றைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

நான் யார், நான் என்னவாக இருக்கிறேன் என்கிற இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைக்கும்பொழுது, இந்த 'ஏன்' என்ற கேள்வி தானாகவே மறைந்துவிடும். அது மிகச் சுலபமாகக் கரைந்துவிடும்.

'நான் யார்?' என்பதைக் கண்டுபிடிப்பதுதான் பகவான் இரமண மஹரிஷியின் தியான நுட்பம்.

ஜென் கோன்ஸும் (Zen Koans) இதே அடிப்படையில்தான் 'உங்கள் பிறப்பிற்கு முன் இருந்த உங்களுடைய வடிவத்தை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்' அல்லது 'ஒரு கையைத் தட்டி எழுப்பப்படும் ஓசையின் மீது உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துங்கள்' என்கிறது. இந்தக் கேள்விகளுக்கு மனத்தால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் இந்தக் கேள்விகளுக்குத் தர்க்க ரீதியாகப் பதில் அளிக்க முடியாது. இதையெல்லாம் நம்முடைய மனத்தால் புரிந்துகொள்ளவே முடியாது.

கடவுளின் பிரதிபலிப்பே மனிதன்

கடவுள், தம்முடைய சொந்த வார்ப்பிலேயே மனிதனைப் படைத்தார். ஏனென்றால் மனிதனால் மட்டுமே கடவுளால் தெய்வீகத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

சுத்தமான சக்தி நிலையில், வெளிப்படா நிலையில், கடவுள் கடவுளாகவே இருக்கும்பொழுது, கடவுளேகூட தெய்வீகத்தைத் தமக்கு வெளியே பார்க்க முடிவதில்லை. அவரே எல்லாமுமாக இருக்கும்பொழுது, அவரே அவரைத் தனியாக எவ்வாறு பார்க்க முடியும்? எல்லாமே அவருடைய பகுதிகளாக, அங்கங்களாக இருக்கின்றன. அதனால் தெய்வீகத்தை அவரால் வெளியே பார்க்க முடியாது.

இது எப்படி என்றால், உங்களுடைய கைகளை உங்கள் உடலின் உட்புறமிருந்து எப்படி உணர்வீர்கள்? உள் பக்கமாக உங்கள் கைகளை எப்படி உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க முடியுமா? இல்லை. ஆனால் உங்களுடைய ஒரு கையால் மற்றொரு கையைத் தொடும்பொழுது எப்படி உணர்ந்தீர்கள் என்பதை உங்களால் விவரிக்க முடியும் இல்லையா? உங்களுக்கு ஏதோ ஒரு உணர்வு இருக்கும் இல்லையா ?

உங்களுடைய கையால் மற்றொரு கையைத் தொட்டதினால்தான், நீங்கள், அந்தத் தொடுதலை உணர முடிந்தது. ஏனென்றால் அது வெளிப்புறத்திலிருந்து தொடப்பட்டது. உங்களுடைய இரண்டு கைகளும் தனித்தனியானவை; நீங்கள் அவற்றை உங்களுடைய வெவ்வேறு உறுப்புகளாக உணர்ந்துகொள்ள முடியும்.

அதே போன்று மனிதன் மூலமாகத்தான் கடவுள் தம்மை அனுபவமாக உணரவும் வெளிப்படுத்தவும் முடியும். இரண்டு உறுப்புகளாக இருந்து தனித்தனியாக உணரப்படுவதைப்போல, மனிதன் கடவுளின் ஒரு பகுதியாக இருக்கிறான்.

தொட்டக் கையினால், தான் தொடுகிற அந்தக் கையுமே அதே உடலின் ஒரு பகுதிதான் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாததைப்போல், மனிதனாலும் தான் கடவுளின் ஒரு பகுதியாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

தான் தொட்ட அந்த மற்றொரு கையும் உண்மையில், அதே உடலின் ஒரு பகுதிதான் என்ற புரிந்துகொள்ளுதலுக்கு இந்தக் கையை எது அழைத்துச் செல்லும் ?

இந்த முழு உடலும் பல்வேறு உறுப்புகளால் ஒன்றாகச் ஒருங்கிணைக்கப்பட்ட, சேர்க்கப்பட்ட ஒரு தனி ஸ்தூல இருப்புதான் என்று மனத்தால் உணர்வது மட்டுமே, அந்தப் புரிந்துகொள்ளுதலுக்கு அழைத்துச் செல்ல முடியும்.

இதைப்போலத்தான், நாம் அந்த முழுமையின் ஒரு பகுதிதான் என்றும், நம் தனி மனித

விழிப்புணர்வு என்பது அந்தக் கூட்டு விழிப்புணர்வின் ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான பகுதிதான் என்றும் நம்முடைய விழிப்புணர்வால் உணர்வது மட்டுமே, நம்மை அந்தப் புரிந்துகொள்ளுதலுக்கு அழைத்துச் செல்கிறது.

முழு உடலின் ஒரு பகுதியாகத்தான் அது இருக்கிறது என்ற உண்மையை உங்களுடைய கை ஒருபோதும் உணரமுடியாததுபோல, தனி மனித அஹங்காரமும் அது முழுமையின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறது என்ற உண்மையை ஒருபோதும் புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஸ்தீயம் வெளிப்படுத்தப்படவும் புரிந்துகொள்ளப்படவும் வேண்டும்.

நம்முடைய அழகை நாம் பார்க்க வேண்டுமென்றால், கண்ணாடியில் நம்முடைய பிரதிபலிப்பைப் பார்ப்பதைத்தவிர வேறு என்ன வழி இருக்கிறது ? கடவுள் தம்மைத்தாமே கண்ணாடியில் பார்க்க விரும்பும்பொழுது பிரதிபலிக்கிற பிரதிபிம்பம்தான் மணிதன். பிரதிபிம்பத்தை தவிர, பிரதிபிம்பம் ஒரு தனி இருப்பாக இருக்க முடியுமா ? இல்லை, இருக்க முடியாது.

மனிதன் தன்னுள் தெய்வீகத்தை அனுபவிக்கவும் வெளிப்படுத்தவும் முடியும். வாழ்க்கை என்கிற விளையாட்டே மனிதன் தனக்குள் கடவுளை உணர்வதற்கு முயற்சி செய்வதும், தெய்வம் தன்னை மனிதன் வாயிலாக வெளிப்படுத்த முயற்சி செய்வதும்தான்!

விழிப்புணர்வு -உணர்ச்சியையே உரு மாற்றும்

கிருஷ்ணர், இங்கே உண்மையாக ஒரு நுட்பத்தை, ஸூத்ரத்தைக் கற்பிக்கிறார். மேலைநாட்டு குருவான குர்த்ஜிஃப் (Gurdjieff) இந்த நுட்பத்தை அடிக்கடி பயன்படுத்துவார். வெளிச் சம்பவங்களால் கலக்கமடையாமல் இருப்பதற்கான ஆற்றலைச் சீடர்கள் பெற வேண்டும் என்பதற்காகவே, இந்த நுட்பத்தில் அவர்களை நுண்திறம் மிக்கவர்களாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே, அதற்கான சூழ்நிலைகளை அவருடைய ஆசீரமத்திலே உருவாக்குவார்.

மக்கள் குழுவாக அமர்ந்திருக்கும் ஒரு அறைக்குள் நீங்கள் செல்லும்பொழுது, அங்குள்ள சிலர் உங்களுக்குக் கோபம் வரும் விதத்தில் எதையாவது செய்வார்கள். அந்தச் சூழ்நிலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான் என்பதை நீங்கள் உணர முடியாதபடி மிகவும் இயற்கையாக அது செய்யப்படும். மற்றவர்களும் அந்தத் தொந்தரவை அதிகரிப்பதில் சேர்ந்து கொள்வார்கள். நீங்கள் உங்கள் பொறுமையை மீறி வெடிக்கப் போகிற அந்தச் சரியான நேரத்தில், குர்த்ஜிஃப், "நினைவிருக்கட்டும் அமைதியாக, நிதானமாக, கலக்கப்படாமல் இரு,'' என்று கர்ஜிப்பார்.

பொறுமையை மீறி வெடிக்கக் காத்துக் கொண்டிருக்கும் உங்கள் மனநிலை இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் திடீரென்று மறைந்துவிட முடியாது! ஏனென்றால் இது ஒரு உளவியல் நிகழ்வு. உங்களுடைய உடல் மன அமைப்புக்குள் சுரப்பிகளால் சுரக்கப்படும் ஹார்மோன்களால் உங்கள் உடல் விஷமாக்கப்படும்.

கோபத்தை உடனடியாகப் பாகப் போக்க முடியாவிட்டாலும்கூட, நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால், கோபத்தால் விளையக்கூடிய மோசமான விளைவுகளை ஏற்படாமல் தடுத்துவிட முடியும். உங்கள் மையம் அந்த உள் மையம் எவ்வித பாதிப்புமில்லாமல் இருக்கிறது.

இப்பொழுது உங்களுக்கு இரண்டு விஷயங்கள் தெரியும்; ஒன்று, உள் மையம் இன்னொன்று, வெளிப்புற எல்லை. இந்த இரண்டு வேறுபட்ட அடையாளங்களும் ஒன்றாகவே இருக்கின்றன.

ஒரு ஜூசீ 'ரூமம்' என்பது சோதனைக்கூடம்.

விழிப்புணர்வுடன் வாழுங்கள். வெளிச் சூழல்களால் பாதிப்படைய மாட்டீர்கள்.

தொடர்ந்து இந்த மாதிரியான சூழ்நிலைகள் எழுந்துகொண்டே இருக்கும். இந்த சூழ்நிலைகளினால் ஏற்படும் உணர்ச்சிகளையும் அதன் முழுமையான எல்லைவரை சென்று அதாவது உணர்ச்சிகளின் உச்சத்திற்கே சென்று சந்திக்க வேண்டும்.

ஆனால் அந்தச் சூழ்நிலைகளை நீங்கள் விழிப்புணர்வுடன் எதிர்கொள்ள வேண்டும். சூழ்நிலைகளைப் பெற்றியும், அதனை ஏற்படுத்திய மக்களைப் பற்றியும் மதிப்பீடு செய்யாதிருக்க வேண்டும். அவ்வாறு மதிப்பீடு செய்யாமல் வெறுமனே விழிப்புணாவுடன் இருக்கும்பொழுது, நீங்கள் வெளியில் ஏற்படும் சூழ்நிலைகளால் பாதிப்படைவதில்லை. அது உங்களை நிலைகுலையச் செய்வதில்லை.

விழிப்புணர்வுடன் இவற்றைச் சந்தித்தால், உங்களுக்குள்ளிருக்கும் மிகப் பெரிய, ஆழமான, எதனாலும் பாதிக்கப்படாத, அமைதியான, அனுபவப்பூர்வமான மையம் உங்களுக்கு வெளியே உள்ள எதனாலும் பாதிப்படையாது.

அடுத்த முறை நீங்கள் உணர்ச்சியால் ஊசலாடும்பொழுது, இந்த ஒரு கண நேரப் பார்வை, ஒரு பலமான ஆதாரமாக உங்களுக்கு அமைகிறது. நீங்கள் இதை நினைவுபடுத்திக் கொள்ளும்பொழுது, அந்தக் கணம் உங்களை விழிப்புணர்வு உள்ளவர்களாக ஆக்குகிறது.

நீங்கள் உணர்வுடன் இருக்கும்பொழுதுதான் உணர்ச்சிகளால் ஊசலாட்டப்படுகிறீர்கள்.

உங்களின் முதலாள் நீங்களே ... !

புத்தரின் வாழ்க்கையிலிருந்து ஒரு சின்ன கதை:

புத்தர் ஒரு கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அந்தக் கிராம மக்கள் அவருடைய போதனைகளை எதிர்ப்பவர்களாகவும், அவரை அவமதிப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர் அந்தக் கிராமத்து வழியாகச் செல்லும்பொழுது அவரைத் திட்டி, குற்றம் சாட்டிக் கடுமையாகப் பேசினார்கள்.

புத்தர் சிறிது நேரம் கவனித்துக் கேட்டு விட்டுப் பிறகு "இப்பொழுது நான் அடுத்த கிராமத்திற்கு செல்ல இருக்கிறேன். நான் போகலாமா? நீங்கள் என்னிடம் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லி முடித்து விட்டீர்களானால் நான் கிளம்பிச் செல்ல வேண்டும் அல்லது இன்னும் சொல்லவேண்டியது ஏதாவது மீதமிருந்தால் சொல்லுங்கள், திரும்பி வரும்பொழுது நான் இதே இடத்தில் நிற்கிறேன். நீங்கள் வந்து உங்கள் பேச்சைத் தொடரலாம்," என்றார்.

புத்தர் கோபப்பட்டு ஏதாவது பேசுவார் அல்லது தன்னைத் தற்காத்துக்கொள்ளும் முறையில் புத்தர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்த கிராம மக்களுக்கு புத்தரின் இந்தச் செய்கை மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புத்தர் ஏன் ஏதும் செய்யவில்லை என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவர்கள், 'நாங்கள் சாதாரண முறையில் உங்களிடம் உங்களை அவமதித்துக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் எதுவும் செய்யாமல் இருக்கிறீர்களே!'' என்று கேட்டார்கள்.

புத்தா் அவர்களைப் பார்த்து, ''நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள். பத்து வருடங்களுக்கு முன்னால் என்னிடம் இதே போன்று பேசியிருந்தீர்களென்றால், நான் எதிர்ச்செயல் புரிந்திருப்பேன். ஆனால் இப்பொழுது நானே எனக்கு முதலாளியாகிவிட்டேன். நீங்கள் எதையும் செய்யும்படி என்னைக் கட்டாயப்படுத்த முடியாது,'' என்று அமைதியாகச் சொன்னார்.

'மையத்தில் இருங்கள்' என்பதன் பொருள் இதுதான். 'ஒரு குருவாக மாறுவது' என்பதன் பொருள் இதுதான்.

அதன்பிறகு நீங்கள் உங்கள் உணர்ச்சிகளுக்கோ அடிமை இல்லை. இல்லையென்றால் உங்களை யாரும் அசைத்துவிடுவார்கள். அவர்கள் உங்களைப் பல வழிகளில் அலைக்கழித்துவிடுவார்கள். அதோடு ஒருங்கிணைக்கப்பட்டவராகவோ அல்லது முழுமையானவராகவோ ஆக முடியாது.

கிருஷ்ணர் இந்த ஸ்லோகங்களில் ஆன்மீகத்திலிருந்து நீதியைய் பிரித்துச் சொல்கிறார்.

சொர்க்கம் நரகம் என்று எதுவும் ஸ்தூலமாக இருப்பதில்லை; அவை உளவியல் ரீகியானவை.

சொர்க்கம் நரகம் என்ற கோட்பாடுகள் எல்லாம் நம்முடைய சிந்தனையில்தான் இருக்கின்றன. நீங்கள் பாவம் செய்துவிட்டு, அதற்குப் பிறகு நரகத்திற்குச் செல்வதில்லை. நீங்கள் பாவம் செய்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் நரகத்தில் இருப்பதால்தான் பாவம் செய்கிறீர்கள்.

நீங்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும்போதும், உணர்வற்ற நிலையில் நீங்கள் காரியங்களைச் செய்யும்போதும், நீங்கள் குழப்பமடைந்து உங்களுக்குள் அமைதியாக இல்லாதபோதும், நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள்.

நீங்கள் சொர்க்கத்தில் இருக்கிறீர்களா அல்லது நரகத்தில் இருக்கிறீர்களா என்பதைப் பொறுத்துதான் உங்களுக்குள்ளே இருக்கிற உள்வெளியின் தரம் தீர்மானிக்கப்படுகிறது.

சிலா் புத்தரிடம் ''உங்கள் வாழ்க்கையில் கருணை என்பது இல்லாவிட்டால் நீங்கள் எந்த வகையான நரகத்திற்குச் செல்வீர்கள் ?'' என்று கேட்டார்கள்.

அதற்கு புத்தா், 'கருணையே இல்லாத மனிதர்களுக்குத் தனியாகத் தண்டனை என்று ஏதும் கொடுக்கத் தேவை இல்லை. ஏனென்றால் அவர் ஏற்கெனவே நரகத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறார், '' என்று பதில் சொன்னார்.

மனசாட்சியுடன் புரிந்துணர்வோடும் விழிப்புணா்வோடும் வாழுங்கள். நீங்கள் ஒருபோதும் தவறே செய்யமாட்டீர்கள்.

நல்லொழுக்கம் என்று அழைக்கப்படும் நன்னெறிகள் யாவுமே மேம்போக்காகவே இருக்கின்றன.

நன்னெறியாளர்கள் அவர்களுடைய சமுதாயத்திற்கும் ஒரே விதத்தில், எந்தவித மாறுபாடும் இல்லாமல் வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் அவா்களிடம் புரிந்துணர்வு என்பது இல்லை.

அவர்கள் அவர்களைப் பற்றிய குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு நீதியைப் போதித்தவண்ணம் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் வாழ்க்கையை இயல்பாகவே வாழ்வதற்கான ஞானம் அவர்களிடம் இல்லை.

புரிந்துகொள்ளுங்கள், புனிதம் என்றும் இங்கே ஏதும் இல்லை. எல்லாமே சக்திதான்.

எவை அனைத்துமே சக்திதான்.

ஆற்றலை என்றும் பிரிக்க முடியாது. கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளும் சக்தியே. இவை உண்மையிலேயே மிகப் பெரிய சக்திகளே. ஆனால் நாம் அவற்றைக் கையாள்வது எப்படி என்று தெரியாமலும், அவற்றை மதிப்பது எப்படி என்று தெரியாமலும் இருக்கிறோம். அங்கேகான் தொல்லைகள் ஆரம்பிக்கின்றன.

நம்முடைய அறியாமையின் காரணமாகவே இவ்வகையான அடிப்படை உணர்ச்சிகள் நம்மிடம் எழுகின்றன.

நம்முடைய விழிப்புணர்வும் புரிந்துணர்வும் அந்த அடிப்படை உணர்ச்சிகளை உணர்வுருமாற்றம் அடைகின்றன. புரிந்துணர்வு வரும்பொழுது காமம் என்பது அன்பாக உணர்வுருமாற்றம் பெறுவதுபோல, மற்ற உணர்ச்சிகளும் உயர்ந்த உணர்வுகளாக உணர்வுருமாற்றம் அடைகின்றன. காமம் என்பது அன்பாக உணர்வுருமாற்றம் பெறுவதே இறுதியான ரஸ்வாதம்!

காமம் என்பது அன்பாக உணர்வுருமாற்றம் பெறுவதே இறுதி ர்ஸவாதம் !

ஒவ்வொரு கணமும் ஆனந்தத்திலைய வாழுங்கள். ஒவ்வொரு கணத்தையும் ஆழ்ந்த விழிப்புணர்வுடனும் ஆழ்ந்த பரவசத்துடனும் என்று உணர்வுப்பூர்வமாகத் தீர்மானம் செய்யுங்கள். இது நம்முடைய வாழ்க்கையை உணர்வுருமாற்றம்பெற வைக்கும்.

அதன்பிறகு நாம் நம் வாழ்க்கையை ஒரு முற்றிலும் மாறுபட்ட மனப்பாங்குடன் பார்க்க முழுமையானவராகவும் உணர்வதோடு மட்டுமல்லாமல், நம்முள் உணரும் ஆணந்தத்தை மற்றவர்களுக்கும் பரவச் செய்வோம்.

பந்தத்திற்கும் விடுதலைக்கும் அப்பாற்பட்டவர்கள் நீங்கள்

ஒரு அழகான கதை:

நரோபா என்ற ஒரு ஞானியிடம் அவர் ஞானமடைந்த கால கட்டத்தில், ஒரு நபர், ''தாங்கள் இப்பொழுது விடுதலை அடைந்துவிட்டீர்களா?'' என்று கேட்டார்.

'' ஆமாம், இல்லை; இரண்டுமேதான்! நான் பந்தங்களில் இல்லை என்பதால் 'ஆமாம்' என்ற பதில் பொருந்தும். ஆனால் விடுதலையும் பந்தத்தின் பிரதிபிம்பம்தான் என்பதால் 'இல்லை' என்ற பகிலும் பொருந்தும்."

பந்தம் என்றொரு கோட்பாடு இருக்கும்வரை விடுதலையும் இருக்கும். இரண்டும் தனித்தனிக் கோட்பாடுகளாக இருந்தாலும் ஒன்று இருக்கும்வரை இருக்கும்.

பந்தத்தின் பிடியிலிருக்கும் பொழுதுதான் நாம் உணர்கிறோம்.

அவை எதிரெதிரானவைவே! ஆனால் மனம் உள்ளவரையில், அது எதிரெதிரானவற்றில் வாழ்கிறவரையில், பந்தமும் விடுதலையும் இருந்தே தீரும்.

மனம் என்பது இயங்கத் தொடங்கிய உடன் விடுதலையும் பந்தமும் தனித்தனியாக இருக்க முடிவதில்லை. அவை ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன.

உதாரணமாக, உங்களுக்குத் தலைவலியாக இருக்கும்பொழுது, ஏன் அதிலிருந்து நிவாரணம் பெற நினைக்கிறீர்கள் ? கொஞ்சம் ஆழ்ந்து சிந்தனை செய்யுங்கள். தலைவலி இல்லாமல் இருந்த நிலையை அடைய வேண்டும் என்று மிகுந்த வேட்கை, ஆசை கொள்கிறீர்கள். இது ஏனென்றால் தலைவலி இல்லாத ஒருநிலையை இதற்கு முன் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள்.

தலைவலி என்ற ஒன்று உங்களுக்கு வராமலேயே இருந்திருந்தால், தலைவலி இல்லாத ஒருநிலைக்குச் செல்ல வேண்டும் என்று எப்பொழுதாவது ஏக்கம்கொள்வீர்களா? எப்படி உங்களால் முடியும் ? உங்களுக்குத் தலைவலி இருக்கிறதா, இல்லையா என்று உணர்ந்துகொள்ளவோ அறிந்துகொள்ளவோகூட மாட்டீர்கள். ஏனென்றால் தலைவலி என்று ஒரு விஷயம் இருக்கிறது என்பதுகூட உங்களுக்குத் தெரியாது. மனத்தால் எதையுமே வித்தியாசமாகவும் எதிரெதிராகவும்தான் உணர்ந்துகொள்ள முடியும்.

அதனால்கான் நரோபா, "ஆமாம். இல்லை: இரண்டுமேகான்! பந்தங்கள் இல்லாமல் இருப்பதால் 'ஆமாம்' என்றும் விடுதலை என்பதே பந்தத்தின் பிரதிபிம்பம்தான் என்பதால் 'இல்லை' என்றும் சொல்கிறேன்." என்று பதில் சொன்னார்.

''பந்தம் விடுதலை இரண்டிற்குமே நான் இல்லை. இவற்றைத் தீர்மானிப்பதற்கும் பிரிவினை செய்வதற்கும் மனம் அங்கு இருப்பதில்லை, '' என்று சொன்னார்.

விடுதலை அடையவேண்டிய நினைக்கிறோம்பொழுது நாம் அறியாமையில் இருக்கிறோம். நாம் அடையவேண்டிய ஒருநிலை என்று நினைத்த கணத்தில் நாம் அதை நமுவ விட்டுவிடுகிறோம்.

உதாரணத்திற்கு மணல் அல்லது தண்ணீரை நம்முடைய கைகளில் வைத்துக்கொண்டு, அதைப் பற்றிப் பிடிக்க வேண்டும் என்று நினைத்து முட்டியை இறுக்கி மூடினால் கையிலுள்ள மணல் அல்லது நீரானது எப்படிக் கைகளிலிருந்து நழுவிவிடுமோ, அதேபோல விடுதலை என்பதும் அடையப்படவேண்டிய ஒன்று என்று நினைத்து, அதைப்பிடிக்க முயலும்பொழுது மிகச் சுலபமாக கை நழுவிப் போய்விடுகிறது.

அஹங்காரம் ஆனந்தத்தை உணரவிடாது

அறிவின் ஒளியானது அறியாமையை விரட்டிவிடும்பொழுது, நாம் ஏற்கெனவே இருந்த நிலையை உணர்கிறோம்.

இருளைப்போல அறியாமை என்பதும் எதிர்மறையான இருத்தலே என்பதனைப் புரிந்துகொள்ளுங்கள்,

முன்னால் இருக்கிற இந்த ஒலி வாங்கியை (Mike) இந்த அறையை விட்டு வெளியே எடுத்துச் செல்ல விரும்பினால், அதை எளிதாக அகற்றிவிட முடியும் அல்லவா? அதை அறையிலிருந்து அகற்ற வேண்டுமானால் அதை எடுத்துச் சென்று அறைக்கு வெளியே வைத்துவிட முடியும்.

ஆனால் இந்த அறைக்குள் இருள் இருக்குமானால், அதை அதை அகற்ற முடியுமா ? ஸ்தூலமாக அந்த இருளை இந்த அறையை விட்டு வெளியே எடுத்துச் செல்ல முடியுமா? இல்லை.

இந்த அறைக்குள் வெளிச்சத்தைக்கொண்டு வந்து இருளை மறையச் செய்யலாம். ஆனால் இருளை நேரடியாக எடுத்துச் சென்று அகற்றிவிட முடியாது. இதைத்தான் 'எதிர்மறை இருத்தல்' என்று குறிப்பிடுகிறோம்.

அறிவு என்ற ஒளியைப் பிரகாசிக்கச் செய்வதன் மூலம் அறியாமையைக்கூட அகற்றிவிடலாம்! இரவென்னும் இருளை அகற்றுவதைப்போல, அறிவின் ஒளி அறியாமை என்ற இருளை விரட்டிவிடுகிறது.

அறிவு என்ற ஒளியைக்கொண்டு நாம் அகற்ற விரும்புகிற அறியாமை என்பது என்ன ? சற்றே யோசியுங்கள்.

வாழ்க்கையில் நாம் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் ? எதைச் செய்தாலும் அதன் மூலம் நாம் அடைவது என்ன?

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், நாம் சந்தோஷமாக இருக்க விரும்புகிறோம் சரியா ?

நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் விசித்திரமான உண்மையென்னவென்றால் நாம் எற்கெனவே பரிசுத்தமான ஆனந்தத்தில்காண் இருக்கிறோம் !

நான் சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள், 'சந்தோஷத்தை அடைகிறோம்' என்று நான் சொல்லவில்லை. 'நம்மில் ஒவ்வொருவரும் ஆனந்தமாகத்தான் இருக்கிறோம்' என்று சொல்கிறேன். பிரச்சினை என்னவென்றால் இந்த இறுதி உண்மையை நாம் ஒப்புக்கொண்டு, தளர்வாக இருக்கத் தயாராக இல்லை.

ஏனென்றால் இதை ஏற்றுக் கொண்ட அந்தக் கணமே, நமக்குத் தனியான ஆளுமை இருப்பதில்லை; அஹங்காரம் இருப்பதற்கான அடிப்படை இல்லாமல் போய்விடும்; நீங்கள் இறுதியாக என்னவாக ஆக விரும்புகிறீர்களோ, ஏற்கெனவே அதுவாகத்தான் நீங்கள் இருக்கி றீர்களென்றால் அதற்கு என்ன அடையாளம்? அங்கே எந்த ஆசையும் இருப்பதில்லை; எந்தப் பயமும் இருப்பதில்லை.

ஆசையும் பயமும் இல்லையென்றால், அஹங்காரம் எங்கே இருந்துகொண்டு உங்களைத் தூண்டிவிட முடியும் ?

நாம் முழுமை பெறவில்லை என்பதை உணரச் செய்வதே நம்முடைய அஹங்காரம்தான்! நம்முடைய அஹங்காரம் அது இருக்க வேண்டும் என்பதற்காக, நாம் திடமான ஸ்தூலமாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறது.

மனமானது எப்போதும் ஆக்கிரமிக்கப்படுவதற்கும் ஏதாவது செய்து கொண்டிருப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கும் எதன் பின்னாலாவது ஓடிக் கொண்டிருப்பதற்குமே ஏங்கிக் கொண்டிருக்கிறது. அப்பொழுதுதான் அது தொடர்ந்து இருக்க முடியும்; வாழ முடியும்.

நாம் பரிசுத்தமான ஆனர்த்த்தில் இருக்கும்பொழுது, நாம் எதன் பிண்ணாலும் ஒடிக் கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. நமக்குள் 'நாம்' என்பது ஒன்றுமே இல்லை. நமக்கென்று எந்த அடையாளமும் இல்லை.

ஏனென்றால் ஸ்தூலமான அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்குள் ஒன்றாகக் கலந்துவிடுகிறோம். அஹங்காரத்தைப் பொறுத்தமட்டிலும் இது கடினமான நிலைதான்.

அதனால்தான் மனமானது, பொருள் சார்ந்த உலகம் அல்லது ஆன்மீகம் என்று எதிலாவது நம்மை ஈடுபடுத்தி, அதன் பின்னால் நம்மை ஓடச்செய்யும் மிகவும் தந்திரமானதும் நுட்பமானதுமான ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆனால் ஆழமாகப் பார்த்தோமென்றால், நம்மைத் துயரத்தில் ஆழ்த்திக் கொள்வதை நாமேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது நமக்குத் தெளிவாகப் புரியும்.

நாம், ஆனந்தம் வேண்டும் என்று நினைத்து, அஹங்காரத்தை விட்டுவிட விரும்புகிறோம். ஆனால் நேர்மாறாக நாம் அஹங்காரத்தைத் தக்கவைத்துக் கொள்வதையே தேர்ந்தெடுக்கிறோம்.

அனுமதியுங்கள், உங்களைவிடுவிக்கும் சரணாகதி நிகழ்ந்துவிடும்

கிருஷ்ணர் நம்மைவிடுவிப்பதற்காக இன்னொரு நுட்பத்தையும் வழங்கி இருக்கிறார்.

ச்ரணாகதி விடுதலைக்கு வழி வகுக்கும். ஒருவருடைய புத்திசாலித்தனம் 'கிருஷ்ணரை' நோக்கி ஒருமுகப்படுத்தப்படும்பொழுது சீரணாகத நிகழும்' என்று சொல்கிறார். இந்தப் பிரபஞ்சத்தை நடத்திக்கொண்டும் நம்மையெல்லாம் காத்துக்கொண்டும் இருப்பது ஒரு உயிர் சக்தி என்பதை நாம் நம்பும்பொழுது, நாம் தளர்வாக இருக்கிறோம்.

நம்மை நாம் தளர்த்திக்கொண்டு, மன அழுத்தமில்லாமல் அல்லது கவலையில்லாமல் இருக்கும்பொழுது, ஆற்றலுடன் வாழவும் செயல்படவும் முடியும்.

நம்முடைய படைப்பாற்றலை வெளிப்படுத்திக்கொண்டு, இயல்பாக வாழ்கிறோம். நாம் மிகப் பெரிய அளவிலான விடுதலையையும் சுதந்திரத்தையும் அனுபவிக்கிறோம். இதுதான் சீரணாகதி. இதுதான் உண்மையான அறிவும்கூட.

கற்றுக் கொடுக்க முடியாத அல்லது எடுத்துக்கொள்ள முடியாத அறிவுதான் சரணாககி.

நம்முடைய இருப்பு நிலை இதைப் பெற்றுக்கொள்ளத் தயாரான நிலையில் இருக்கும்பொழுது, குருவானவர் நமக்குள் மிக சுலபமாக இதைச் செலுத்திவிடுகிறார்.

நமக்குத் தேவையானவை எல்லாம் இரண்டே இரண்டுதான், ஒன்று, அந்த மேலான ஞானசக்தி நம்மை வழி நடத்திச் செல்ல அனுமதிப்பதற்கான ஆழமான நம்பிக்கை; இரண்டு, மாறுபட்ட இரு எல்லைகளுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் நம்முடைய மனத்தை அந்த ஞான சக்தியிடம் ஒப்படைக்கும் சீரணாகதி உணர்வு.

ஆழமான நம்பிக்கை, சீரணாகதி உணர்வு இவை இரண்டு மட்டுமே நம்முடைய தேவைகளாக இருக்கின்றன. நம்முடைய அறியாமையையும் தவறாகப் புரிந்துகொள்ளுதலையும் நீக்குகிறது.

நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் அறியாமையும்தான். இருந்தாலும் சரி அல்லது அது ஆசையாக இருந்தாலும் சரி, எல்லா உணர்ச்சிகளுமே, நாம் விழிப்புணர்வுடன் இல்லாததால்தான் நம்மையே அடக்கி ஆள்கின்றன. நாம் விழிப்புணர்வற்ற நிலையில் இருப்பதால், அவற்றை அனுமதித்துவிடுகிறோம்.

ராம் ஆழமான விழ்ப்புணர்வை எதன் மீதாவது செலுத்தும்பொழுது, தீர்வு அதுவாகவே வெளிப்படுகிறது.

நாம் ஆழமான விழிப்புணர்வை எதன் மீதாவது செலுத்தும்பொழுது, தீர்வு அதுவாகவே வெளிப்படுகிறது. ஆழமான விழிப்புணர்வுடன், ஒரு உணர்ச்சிக்குள் ஆழமாக நாம் செல்லும்பொழுது, நாம் அதிலிருந்து மலர்ந்து வெளிவர முடிகிறது. இதுதான் உண்மையான அறிவு.

ஆனந்தத்திலேயே கரைந்திட சங்கத்தில் கரையுங்கள்

உண்மையான சோதனைக் காலங்களில், சந்தேகத்தின் உச்சத்தில், உங்களுடைய அஹங்காரத்தை சந்தேகப்படுங்கள். குருவை ஒருபோதும் சந்தேகப்படாதீர்கள். எல்லாமே குழப்பமாயிருக்கும்பொழுதுகூட, நீங்கள் பிடித்துக்கொள்ளவேண்டிய ஒரே விஷயம் குருதான்.

எல்லாமே குழப்பமாயிருக்கும்பொழுது உங்களை வழி நடத்தும் ஒரே ஒருவர் குருதான். போர் ஆரம்பிக்கிற நேரத்தில் அர்ஜுனன் மொத்தமாகக் குழம்பிப் போனார். ஆனாலும்கூட அப்படி அதிகமான சந்தேகங்களைக் கொண்டிருந்த நேரத்திலும்கூட, கிருஷ்ணரின் உபதேசத்தைக் கவனிக்கிற புத்திசாலித்தனத்தைப் பெற்றவராக இருந்தார்.

சரணாகதி என்பது பல நிலைகளில் நிகழக்கூடும். போதி தர்மர் சொல்கிறார்.

புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி

இதன் பொருள், நான் புத்தரின் திரு உருவைச் சரணடைகிறேன். நான் புத்தரின் போதனைகளைச் சரணடைகிறேன்

நான் புத்தரின் சங்கத்தைச் சரணடைகிறேன். குரு, அவரது போதனைகள் மற்றும் சங்கம் இவை மூன்றும் வெவ்வேறு ஸ்தூல இருப்புகள் என்று இதன் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இல்லை! குருவாணவர், அவருடைய உடல், போதனை மற்றும் சங்கம் என்ற இந்த மூன்றிலுமே வாழ்கிறார். குருவுக்கு எந்தவிதமான சுயநலமும் இல்லை. அவருக்கு எந்த வேண்டிய ஆசைகளும் இல்லை.

குரு என்பவர் தூய்மையான கருணையின் வடிவாக மொத்த மனித குலத்திற்காகவும், ஆன்மீக நீக்கவும், அவர்களுக்கு ஒளி காட்டவும் அவதரிக்கிறார்.

குருவின் சக்தியில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இந்த ஸ்தூல சூரீரம்: மற்றொரு பகுதி அவருடைய போதனைகள்; இன்னுமொரு பகுதி சங்கம் .

குருவானவர் அவருடைய உடல், போதனை, சங்கம் என்ற இந்த மூன்றிலுமே வாழ்கிறார்.

நித்யானந்தம் என்பது நித்ய - தியான - ஆனந்தம் - எல்லாம் ஒன்றிலேயே! நித்ய - THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உடல்தாங்கி இருக்கும் குரு; தியான - என்னுடைய போதனைகள், தியான ஆசீர்வாதங்கள்; ஆனந்தம் - உங்களுக்குள் உறைந்து மறைந்து கிடக்கிற ஆனந்த ஊற்றை வெளிக்கொண்டு வரும் என்னுடைய சங்கம். இந்த மூன்றும் ஒன்றாகச் சேர்ந்த சக்திதான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

நீங்கள் குருவிடம் சீரணாகதி அடைகிறபொழுது, அவருடைய சங்கத்தையும் அவருடைய போதனைகளையும் சேர்த்தே சரணடைகிறீர்கள்.

அவருடைய ஸ்தூலமான நிலையைச் சரணடையும்பொழுது, அவருடைய போதனைகளையும் ஸங்கத்தையும் உட்கிரகித்து, அதைப் பரப்புவதற்காக அவரிடம் நீங்கள் உங்களின் ஸ்தூல சூரீத்தையும், உங்கள் வசதிகளையும் சரணாகதி செய்கிறீர்கள்.

உதாரணமாக, சங்கத்தின் வேலைகளில் நீங்கள் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது , அந்த வேலையைச் செய்வதற்காக நீங்கள் உங்கள் சுகங்களை, உங்கள் தூக்கத்தை, உங்கள் ஆசைகளைத் தியாகம் செய்கிறீர்கள். உண்மையில், இதைக் கியாகம் என்றும் சொல்ல முடியாது. தன்மையிலேயேகூட இருப்புத் இதைத்தான் நீங்கள் செய்யும் மிகமிக நல்ல விஷயமாக உணர்கிறீர்கள்.

வேறு எதையும் செய்வதைவிட, இதைச் செய்வதில்தான் உங்கள் நேரமும் சக்தியும் மிக மிக நல்ல முறையில் பயன்படும் என்று நீங்கள் உணர்கிறீர்கள்.

தானாகவே, உங்களுடைய சுகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்து, உங்களுடைய மந்தத் தன்மை அழிந்தே போய்விடும். மற்ற எல்லாவற்றுக்குமே முன்னுரிமை அளிப்பதைக் குறைத்துவிடுவீர்கள். சங்கத்தின் வேலைக்குத்தான் உச்ச முன்னுரிமை வழங்குவீர்கள்.

இதற்குமுன் எது உங்களுக்குச் சுமையாகத் தோன்றியதோ, மிகுந்த பொறுப்புணர்வாகச் செய்யப்படும்பொழுது ஒரு ஆனந்த அனுபவமாக மலர்வதை உணர்வீர்கள்.

சங்கத்தின் குருவானவர், தூய்மையான ஆனந்தத்தைத் தவிர வேறு எதைத் தந்துவிட முடியும் ? நீங்கள் குருவையும் சங்கத்தையும் சரணடைந்து, பொறுப்பெடுக்கத் துணிந்து விட்ட கணத்திலேயே, அந்தத் தெய்வீக உணர்வு உங்களுக்குள் எளிதாகவும் இனிமையாகவும் பாய்வதை உணர்வீர்கள். எந்தவிதமான சிரமமும் இல்லாமலேயே செயல்படுவீர்கள். உங்களை நீங்கள் மிக அழகாக வெளிப்படுத்துவீர்கள்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான், அணுகக்கூடியவராகவும் இருப்பது மட்டும்தான் தெய்வீக ஆற்றல் உங்களை

ஆற்றல் மிக்கவராகவும் திறமைசாலியாகவும் ஆக்கிவிடும் !

மனத்தளவில், சீரணாகதி என்பது குருவுக்கும் சங்கத்திற்கும் சேவை செய்யும் படியாக உங்கள் புத்தியைச் சரணடையச் செய்வது. உதாரணமாக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் வல்லுநராகவும் ஆர்வம் மிக்கவராகவும் இருக்கலாம். தேவைகளுக்காகவும் நீங்கள் உங்கள் ஆர்வத்தைத் தியாகம் செய்கிறீர்கள்.

நீங்கள் உங்களுடைய மனத்தின் செயல்திறன்களை எல்லாம் உங்களின் எண்ண ஓட்டங்களை எல்லாம் சங்கத்தின் தேவைகளுக்கு ஏற்றாற்போல், சங்கத்திற்குச் சேவை செய்வதற்காக, சீரணாகதி செய்கிறீர்கள். குருவினால் உண்டாக்கப்படும் செல்லக்கூடிய ஒரு திரவமாக உங்களை மாற்றிக் கொள்கிறீர்கள்.

அவர் இருக்கும் பேரானந்த நிலையை நாம் அடைவதற்கு உதவுகிறார்

நாம் ஒவ்வொருவரும் வளர்ச்சி அடைவதற்கு ஏற்ற உயர்ந்த குறிக்கோளை உடைய மார்க்கம் எது என்று குருவுக்கு மிக நன்றாகத் தெரியும். நம்முடைய தேவைகளுக்கும் திறமைகளுக்கும் ஏற்றாற்போல் நம் ஒவ்வொருவருக்கான வார்ப்புகளையும் அவர் உருவாக்குதிறார்.

நாம் செய்யவேண்டியதெல்லாம் அவர் மேல் நம்பிக்கை வைத்து, திடமாக இருக்கிற அஷங்காரத்தை விட்டுவிட வேண்டும். அப்பொழுது மட்டுமே நமக்காக அவர் ஏற்படுத்தியிருக்கும் இடத்தை நிரப்புகிற ஒரு திரவமாக நம்மால் மாற முடியும்.

பிறகு, நாம் இந்த அற்புதமான பிரபஞ்ச இருப்புத் தன்மையில் தன்னிகரில்லாத தனித் தன்மை வாய்ந்த ஒரு பகுதியாகவே இருப்பதைப் பார்ப்போம்.

மூன்றாவது நிலை, இருப்பு நிலை சீரணாகதி நம்முடைய இருப்புத் தன்மையை குருவிடம் சரணடையச் செய்வது. இந்த நிலையில், குருவின் அழைப்பை நம்முடைய இருப்புத் தன்மை மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டுவிடும். நாம் குருவுடைய பகுதியாக மாறிவிடுகிறோம்.

குருவானவர் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் உருவாக அவதரித்திருக்கிற ஒருவரானதால், அவரின் பகுதியாக மாறுவதன் மூலம் நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இணைந்துவிடுகிறோம். அதன் பிறகு நமக்கென்று தனித்த அடையாளம் எதுவும் இருப்பதில்லை. திரவ வடிவில் இருக்கும்

தண்ணீரை உருவம் இல்லாத நீராவியாக உணர்வுருமாற்றம் இங்கேயும் நடைபெறுகிறது.

நீராவியைப்போல் திசைகளிலும் பொங்கிப் பரவுகிறோம். நமக்கு எல்லை என்பதே இல்லை. ஏனென்றால் எல்லா எல்லைகளும் வரையறைகளும் மனத்திற்கு மட்டுமே இருக்கிறது

நாம் இப்பொழுது மனத்தைக் கடந்து உண்மையில்

குரு ஏற்படுத்தியிருக்கிற இடத்தை நிரம்பக்கூடிய திரவமாக நாம் மாற வேண்டுமானால் நம் திடமான அவரங்காரம் கரையவேண்டியது அவசியம்.

வெளிப்படுத்துகிறோம்.

இந்த உச்ச நிலையிலேயே குருவானவர் ஒவ்வொரு கணமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாமும் அந்த அழிவில்லாத ஆனந்த அனுபவத்தை பெறவும், அதே நிலையில் இருக்கவும் குரு எவ்வித களைப்புமில்லாமல் கருணையோடு நம்மைப் பல வழிகளில் ஏற்றி விட்டுக் கொண்டிருக்கிறார். அதனால்தான் நாமும் அதே ஆனந்த நிலையை அனுபவிக்கவும், அதில் தொடர்ந்து நீடித்து இருக்கவும் முடிகிறது.

கேள்வி: ஸ்வாமிஜி! மனிதன் பெற்றிருக்கும் மற்றும் வெளிப்படுத்தும் பண்புகளுள், தெய்வீகத்திற்கு மிகவும் நெருங்கிய உயர்ந்த பண்பு எது ?

அழகான கேள்வி.

கருணை ! குறிக்கிற ஒரே குணாதிசயம். உங்களுடைய அகராதியில் காணப்படுகிற அர்த்தம் போன்றது அல்ல அது.

ஒரு ஞானியின் கருணை இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சென்றடைகிறது. அது அது யாரையும் குறி வைத்துச் செல்லாதது. எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தாலும் ஏற்படுத்த முடியாதது. அது, நான் முன்பே குறிப்பிட்ட அந்த சிவனின்

காரணமில்லாத மங்கலத்துவத்தைப் போன்றது.

மனிதனின் உணர்ச்சிகளில் அன்பு மட்டுமே ஒரே நற்பண்பு, ஒரே ஆன்மீகம் ஒரே நன்னெறி. அன்பு என்ற ஒன்றைத் தவிர, மற்ற எல்லா நற்பண்புகளும் ஒருவரிடம் இருப்பினும் அவர் இறந்தவராகவேதான் கருதப்படுவார். இன்னும் ஆழமாகச் சொன்னால் அவர் ஒழுக்கமற்றவராகவே இருப்பார்.

அன்பு இல்லாமல், ஒருவர் மற்ற எல்லா நற்பண்புகளையும் பெற்றிருந்தாலும் அவை ஆழமற்றவையாக இருக்கும். அவை வரையப்பட்ட புன்சிரிப்பைப்போல இருக்கும்; ஒரு முகமூடிபோல, மதிப்புக்குரியவராக மாறுவதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் இந்த மாதிரியான மேலோட்டமான வழிகளில் கடவுளை ஏமாற்ற முடியாகு.

உண்மையிலேயே, அவரை எந்த வழியிலும் ஒருவர் ஏமாற்ற முடியாது.

அவர் உங்கள் இருப்பின் மையத்தை உற்று நோக்குகிறார். உங்கள் வெளித் தோற்றத்தை அல்ல. அவர் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்ப்பதில்லை. நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்றுதான் பார்க்கிறார்.

அன்பு உங்கள் இருப்புத் தன்மையை உணர்வுருமாற்றம் செய்கிறது. அதன் பிறகு உங்களுடைய உணர்வுருமாற்றம் பெறுகின்றன. ஒரு அன்பான மனிதர் இருப்பதில்லை.

அன்புள்ள ஒருவரால் யாரையும் காயப்படுத்த முடியாது; யாரையும் ஏமாற்றவும் முடியாது; பொய் சொல்லவும் முடியாது; கடுமையாக நடந்து கொள்வது என்பது அவரால் முடியாத ஒன்று. கருணை ஒன்றே அவருடைய வாழ்வின் வழி.

சமய குருமார்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அன்பு என்பதில் ஆர்வமில்லை. நம்மீது விதிமுறைகளையும் வரையறைகளையும் சுமத்துவதிலேயே அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையான மனித இனங்களே தேவை இல்லை. போலியான, அடக்கப்பட்ட மக்களே அவர்களுக்குத் தேவை. உண்மையான மக்கள் நிர்வாகத்திற்கு ஆபத்தானவர்கள்.

எதையும் அறிந்து கொள்வதற்கு இரண்டு உபாயங்கள் உள்ளன. ஒன்று, தர்க்கம் மற்றொன்று, அன்பு.

தர்க்கம் பெறுகிறோம். அன்பின் மூலமாக நாம் ஞானத்தை அடைகிறோம்.

அறிவு நமக்கு மேம்போக்கான செய்திகளை மட்டுமே தருகிறது. ஞானம் நமக்கு விஷயங்களுக்குள் மிக ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் உள்முகப்பார்வையைத் தருகிறது. அறிவு என்பது சேகரித்து வைக்கப்பட்ட

ஒன்று. ஒருவர் அவர் விரும்பிய அளவுக்கு அதைச் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

அன்பை மட்டுமே சார்ந்திருங்கள்

மனித மூளை ஒரு கணினியைப் போன்றது. அதற்குள் இந்த உலகத்திலுள்ள எல்லா நூலகங்களையும் அடைத்து, சேர்த்து வைக்க முடியும். ஆனால் இன்னும் நாம் நமக்குள்ளே அப்படியேதான் இருக்கிறோம். இது ஒரு கழுதை, நிறைய வீத புத்தகங்களைச் சுமந்து செல்வதற்குச் சமம். நமக்கு நிறைய தெரிந்திருக்கலாம். ஆனால் நமக்கு நம்மைப் பற்றிய அறிவு இல்லை. நம்முடைய அறிவெல்லாம் கடன் வாங்கப்பட்டவைதான். அவை நம்முடைய அனுபவங்கள் அல்ல.

அன்பு, அது நமக்கு உண்மையான அறிவைத் தருகிறது. அது நம்முடைய வாழ்க்கையையே ஒரு விதமாக ஆக்கிவிடுகிறது. பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அழகையும், பேராற்றல் வாய்ந்த வாழ்க்கையின் ஞானத்தையும், அதனுள் இருக்கும் எல்லாவற்றையும் நம்மைக் காண வைக்கிறது. தர்க்கத்தால் இதைச் செய்ய முடியாது, அறிவைச் சார்ந்து இருப்பவர்கள் எல்லாம் ஏழைகள்.

அன்பைச் சார்ந்திருங்கள், இந்த உலகத்தின் வளங்கள் எல்லாம் உங்களுடையதே. அன்பைச் சார்ந்திருக்கும்பொழுது. கடவுளின் சாம்ராஜ்யமே உங்களுடையது. அன்பு என்ற சொல்லுக்கு மிகச் சரியான பொருள்: அஹங்காரத்தைச் ச ரணாகதி அடையச் செய்தல்; அதை விட்டுவிடுதல் ; அஹங்காரமற்றவர்களாக மாறுதல்.

நாம் அஹங்காரமற்றவர்களாக இருக்கிறபொழுது, அன்பு நம் மூலமாகப் பாயத் தொடங்குகிறது. நாம் அந்த அன்பைக் கடவுள் அல்லது ஒளி அல்லது ஆண்டுத்ம அல்லது ஞானம் என்று அழைக்கிறோம்.

வாழ்க்கை என்பது உரைநடையாகவும் இருக்க முடியும். கவிதையாகவும் இருக்க முடியும். விஞ்ஞானம் அதை உரைநடையாக்குகிறது. ஆன்மீகம் உணர்வுருமாற்றம் செய்கிறது. அன்பைக் கவிதை மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும்; ஒருபோதும் மூலமாக வெளிப்படுத்த முடியாது!

வாழ்க்கையை என்றால், அது பொருள் சார்ந்த உலக வாழ்க்கையைக் குறிக்கிறது. வாழ்க்கையைக் கவிதையாக வாழ்வது என்றால், அது ஒரு புனிதமான வாழ்க்கையைக் குறிக்கிறது.

பொருள் சார்ந்த வாழும்பொழுது, ஆகிவிடுகிறது. புனிதமான வாழ்க்கையை வாழும்பொழுது, வாழ்க்கை கவிதை ஆக மலர்கிறது.

எல்லா மதங்களும் பல்வேறு வழிகளில் வாழ்க்கையை அணுகுகிறார்கள்; தர்க்கத்தின்

உங்களுடைய அன்பிற்கு ஒருபோதும் ஒரு வடிவமும் உருவமும் கொடுக்காதீர்கள்.

மூலமாக அல்ல; ஆனால் அன்பின் மூலமாக! பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் பயத்துடன் பார்க்காமல், ஆச்சரியத்தால் நிரம்பி இருக்கிற கண்களால் பார்க்கிறார்கள். பயபக்தியுடனும் ஆச்சரியத்துடனும் இருக்கிற கண்களால் மட்டுமே உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும். அது மட்டுமே உண்மையை அறிந்துகொள்ளும் சக்தி கொண்டதாக இருக்கிறது.

ஒரு மகா சமுத்திரத்தில் விழுந்து கொண்டிருக்கும் பனித் துளிகள் நாம். இப்பொழுது நம்முள் ஒரு வித பயம் எழும்; தயக்கம் எழும்; ஏனென்றால் நாம் மறைந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

ஆனால் உண்மையில் மரணம் என்றால் என்ன என்று ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மரணத்தின் ஒருபக்கம்தான் வாழ்வு; மறுபக்கம்தான் மரணமில்லாப் பெருவாழ்வு என்கிற ஸக்யம் புரிபடும்!

மரணத்தின் மூலமாக வாழ்வு மறைகிறது. ஆனால் அது நிலையான, அழிவற்ற, மரணமில்லாப் பெருவாழ்வாக மலர்கிறது. ஒரு பனித்துளி, பனித்துளியாகவே மறைகிறது. ஆனால் அது மீண்டும் தோன்றும்பொழுது மகா சமுத்திரமாகத் தோன்றுகிறது. அதுதான் அதன் மதிப்பு.

ஒருவர் அன்பிலும் ஆனர்த்தத்திலும் மட்டுமே இருந்தால், அதாவது அன்பையும் ஆனந்தத்தையும் மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தால் அவர் கடவுளைப் பற்றியே மறந்துவிடலாம். பிறகு கடவுள் தோன்றியே ஆக வேண்டும். அதை அவரால் தவிர்க்க முடியாது.

'போய்ச் சேருமிடம்' என்பது அடிமைத்தனம். போய்ச் சேருமிடம் என்றாலே நாம் ஏற்கெனவே தீர்மானித்துவிட்ட ஒன்றாகிவிடுகிறது.

ஆனால் அன்புக்குப் போய்ச் சேருமிடம் என்பது கிடையாது. அன்பு, அது ஒரு பயணம், அவ்வளவுதான்; அது ஒரு வேலை அல்ல; அது கடமையும் அல்ல; அது ஒருபோதும் எதையோ அடைவதற்கு ஒரு வழிவகையாக இருப்பதும் இல்லை. அதற்கு அதுவேதான் பலன்.

காற்றுக்கென்று ஒருநிலையான குறிப்பிட்ட வடிவம் கிடையாது. அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். சேர்ந்தாற்போன்ற இரண்டு அடுத்தடுத்த மணித்துளிகள், அவை ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

அன்பும் அதேபோலத்தான். நாம் அதற்குக் குறிப்பிட்ட வடிவங்களையும் உருவங்களையும் கொடுப்பதற்கு முயற்சி செய்கிறோம். நாம் முடியாததைச் செய்ய முயற்சி செய்கிறோம். நாம் தோல்வி அடையும்பொழுது முடிவு ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது.

அன்பு ஒருபோதும் யாரையும் ஏமாற்றுவதில்லை. நம்முடைய எதிர்பார்ப்புகள்தான் அதாவது அன்பைப்பற்றிய நடைமுறைக்குச் சாத்தியப்படாத எதிர்பார்ப்புகள்தான் ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

உங்களுடைய அன்பிற்கு ஒருபோதும் ஒரு வடிவமும் உருவமும் கொடுக்காதீர்கள். அதை வடிவமில்லாததாகவும் உருவமில்லாததாகவும் இருக்கவிடுங்கள். ஏனென்றால் அது ஒரு பொருளல்ல. அது ஒரு அனுபவம். அது விவரிக்க முடியாதது. அது கீழ்த்தரமானது அல்ல. அது மிகவும் நுட்பமானது, வாழ்க்கையின் மிக நுட்பமான அனுபவம் அது.

காற்று இழுத்த இழுப்புக்கெல்லாம் உள்ளது. பிரபஞ்ச இருப்புத் தன்மை, "என்னுடன் வா, நான் வடக்கே போய்க் கொண்டிருக்கிறேன்,'' என்று சொன்னால், உடனே அதுவும் அதனுடன் கிளம்பிச் சென்றுவிடும். அதனிடம் தன்மை இல்லை; தடை சொல்லும் தன்மை இல்லை. அதற்கு, 'மாட்டேன், முடியாது, இல்லை', என்ற வார்த்தைகளைப் பற்றியும் தெரியாது.அது எப்பொழுதுமே "ஆமாம், சரி' என்றுதான் சொல்லும். அது, "ஏன்,"

என்று கேட்காது. காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதும் இல்லை. 'நான் வேறு திட்டங்கள் வைத்திருக்கிறேன். நான் தெற்கே செல்ல விரும்புகிறேன் வடக்கே செல்ல விரும்பவில்லை,'' என்று அது சொல்வதில்லை.

காற்றுக்கென்று எதிர்காலத் திட்டங்களோ, குறிக்கோளோ எதுவும் இல்லை. அது பிரபஞ்ச இருப்புத் தன்மைக்காகவே இருக்கிறது. அது பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு முழுமையாகவும் எளிதாகவும் கிடைக்கூடிய தன்மையுடன் இருக்கிறது. அப்படி முழுமைத் தன்மையுடன் இருப்பதாலேயே அது உச்ச நிலையான விடுதலைச் சுவையைத் தெரிந்து வைத்திருக்கிறது.

அதே போன்றுதான் அன்பும்.

அன்பு, அது ஒரு விடுதலை நிலை; அது ஒரு சீரணாகத் நிலை; அது முழுமையான பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்களுக்கு என்னவெல்லாம் செய்ய விரும்புகிறதோ அதையெல்லாம் செய்யவும் உஉங்களை எங்கெல்லாம் அழைத்துச் செல்ல விரும்புகிறதோ அங்கெல்லாம் அழைத்துச் செல்லவும் அனுமதிக்கிறது.

'விஷயங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்ற கருத்து எதுவும் அதற்குக் கிடையாது. கணத்திற்குக் கணம் அது ஒரு கருத்துமில்லாமல், பாரபட்சமில்லாமல், அதற்கென்று கொட்பாடுகள் எதுவுமில்லாமல் சென்றுகொண்டே இருக்கிறது.