KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/பிறப்பைக் கொண்டாடுவதைப்போல இறப்பையும் கொண்டாடலாமே ... !Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

பிறப்பைக் கொண்டாடுவதைப்போல இறப்பையும் கொண்டாடலாமே ... !

உங்களால் பிறப்பையும் இறப்பையும் ஒரே மாதிரியாகப் பார்க்க முடியுமா? நாம் பிறப்பைக் கொண்டாடுகிறோம். இறப்பின்பொழுது துக்கப்படுகிறோம். ஏன் ?

பிறப்பு, இறப்பு பாதைகள்தான். அது ஆரம்பமும் அல்ல; முடிவும் அல்ல; வாழ்க்கைச் சக்கரம் தொடர்ந்து சுற்றிகொண்டே இருக்கிறது.

பிறந்து, வாழ்க்கையை வாழ்வதன் மூலம் இறப்பை நோக்கிப் போகிறோம். மீண்டும் பிறப்புக்கு வருகிறோம். கடந்த பிறப்பின் இறப்பிற்குப் பிறகிலிருந்து, இந்தப் பிறப்பு எடுக்கிற வரையிலான அந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நிகழ்ந்ததென்பது நமக்கு நினைவில் இல்லை. அந்த மறதியும்கூட நம்முடைய சொந்தப் பாதுகாப்புக்காகவே!

அந்த அறிவை இழந்ததனால், அந்த நினைவை இழந்ததனால், நாம் கலக்கமடைந்திருக்கிறோம். நமக்குத் தெரியாத ஒன்றுதான் நம்மைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இறப்புக்கும் பிறப்புக்கும் எந்தவித பேதமும் இல்லை என்றும், இறப்புக்குப் பிறகு உள்ள வாழ்க்கை எந்தவிததிலும் நம்முடைய நடப்பு வாழ்க்கையிலிருந்து வேறுபடாது என்றும் நாம் புரிந்து கொண்டால், பயம் என்பதே அங்கே இருக்காது.

நாம் உயிருடன் இருக்கும்பொழுதே, நமக்கு இறப்பு என்ற அனுபவம் கிடைக்கப் பெற்றால்தான், மரணத்தைப் பற்றிய பயம் நீங்கும். நாம் உயிரோடு இருக்கும்போதே இந்த அனுபவம் கிடைத்தால்தான் இது நிகழும். இதைத்தான் நாங்கள் நிகழ்ச்சிகளில் கற்றுத் தருகிறோம்.

ஒரு முக்கியமான விஷயம் இறப்பை நாம் எப்படிப் பார்க்கிறோமோ, எந்த மன நிலையுடன் பார்க்கிறோமோ அந்த மன நிலைதான் நம் வாழ்க்கையை வாழும் விததிலும் பிரதிபலிக்கிறது. மரணத்தை எப்படிப் பார்க்கிறோம் என்ற மன நிலைதான். நாம் வாழ்க்கையைப் பார்க்கிற மன நிலையையும் நிர்ணயிக்கிறது. இறப்பை நாம் புரிந்து உணர்ந்துகொள்ளும் முறையானது, நம்முடைய வாழ்க்கை முறையையே மாற்றிவிடும்.

இறப்பு என்பது முடிவுதான்; அதற்குத் தொடர்ச்சி இல்லை என்று கருதி பலர் இறப்பைக் கண்டு பயப்படுகிறார்கள். இறப்பு என்பது வேறு ஒரு வடிவத்திலான தொடர்ச்சிதான் என்பதை உணர்ந்து கொண்டால், நாம் இறப்பைப் பற்றி பயப்படமாட்டோம். பிறகு, பிறப்பின்பொழுது ஏற்படுகிற மகிழ்வும் இறப்பின்பொழுது ஏற்படுகிற வருத்தமும் இரண்டும் ஒன்றாகவே பார்க்கப்படும்.

மரணத்தைப் பற்றி தெளிந்து மரண பயத்தை ஓட்டிடுவீர் ... !

சாக்ரட்டீஸைப் பற்றிய ஒரு சிறிய கதை:

கிரேக்க சமுதாயம் சாக்ரட்டீஸுக்கு 'ஹெம்லாக்' என்ற மூலிகையின் விஷச்சாற்றைக் கட்டாயப்படுத்திக் குடிக்க வைத்துக் கொன்றது. அந்த விஷத்தைக் குடிப்பதற்குச் சற்று முன்னர், அவருடைய சீடர்களில் ஒருவா கேட்டார். ''குருவே மரணத்தைக் கண்டு நீங்கள் பயப்படவில்லையா? நீங்கள் மிகவும் அமைதியாகவே காணப்படுகிறீர்கள். ''

நாம் உயிருடன் இருக்கும்பொழுதே, நமக்கு இறப்பு என்ற அனுபவம் கிடைக்கப்பெற்றால்கான், மரணத்தைப் பற்றிய பயம் நீங்கும்.

சாக்ரட்டீஸ் பதில் சொன்னார்,

"நான் ஏன் பயப்பட வேண்டும்? நான் இறந்த பிறகு இரண்டு விஷயங்கள் நடக்கும் என்பது எனக்குத் தெரியும். ஒன்று நான் வேறு ஏதோ ஒரு வடிவத்திலும் பெயரிலும் தொடர்ந்து இருந்து இருந்து கொண்டிருப்பேன் அல்லது இறப்புக்குப் பின் நான் இல்லாமலே போய்விடுவேன். அப்படி இறப்புக்குப் பிறகும் நான் வேறொரு வேடிவத்தில் தொடர்ந்து இருந்தால், கவலைப்படுவதற்கு அங்கே எதுவும் இல்லை. ஒரு வேளை மரணத்திற்குப் பின் நான் இல்லாமல் போய்விட்டாலும்கூட அங்குக் கவலைப்படுவதற்கு எதுவுமே மிஞ்சப் போவதில்லை. ஆக, இரண்டு வழிகளிலுமே பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை."

பிறப்பு, இறப்பைப் பற்றிய நம்முடைய கருத்தே, நாம் வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளைப் எப்படிப் பார்க்கிறோம் என்பதைக் காட்டுகிற தெளிவான கண்ணாடி, நேரடிச்சான்று. அதனால்கான் பிறப்பு மற்றும் இறப்பைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் மட்டுமே வாழ்க்கையை உணர்ந்து வாழ்வதற்கான உண்மையான அடிப்படையாக இருக்க முடியும்.

ஆனந்த அனுபவம் அகு நம் இருப்புத் தன்மை முழுவதிலுமே ஓர் ஆழமான கருணையை விளைவித்துவிடும்.

பால யாசி அஷ்டவக்ரர் என்ற முனிவர் சொல்கிறார், ''இந்த உலகத்தை மாயையாக மட்டுமே பார்த்துக்கொண்டு அதில் ஆர்வம் என்பது சிறிதளவுகூட இல்லாமல் ஒரு வலுவான மனம் படைத்தவராக இருப்பவர் மரணம் நெருங்கும்பொழுது எப்படிப் பயப்படுவார்?

இன்பத்திலும் துன்பத்திலும் சம நிலை, நம்பிக்கையிலும் ஏமாற்றத்திலும் சம நிலை, பிறப்பு மற்றும் இறப்பிலும் சம நிலையோடு இருந்து, எப்படி இருக்கிறீர்களோ அதிலேயே முழுமுமையான திருப்தியுடன் இருந்தால் நீங்கள் அமைதியை உணர முடியம். '

யாரொருவர் தாம் பார்க்கிற உலகம் மாயை என்றும், மனத்தின் ஒரு விளையாட்டே என்றும் புரிந்துகொண்டு, அந்த மாயையிலிருந்து முழுமையாகக் கம்மை விடுவித்துக் கொள்கிறாரோ, அவர் மரணத்தைப் பார்த்து அஞ்சமாட்டார்.

மனத்தினால் உருவாக்கப்பட்ட, நம்மால் உண்மையென்று கருதப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மாயையை விடாது பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும்வரை மரணத்தைப் பற்றி நினைக்கும்பொழுது, நாம் வாழ்க்கையை இழந்துவிடுவோம் என்று நினைக்கிறோம்.

நாம் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரியாகப் பார்த்து, அவை இரண்டாலும் பாதிப்படையாமல் இருக்கும்பொழுதுதான் நாம் மரண பயத்திலிருந்து விடுவிக்கப்படுகிறோம். ஏனென்றால் மரணத்தின்பொழுது, நம்மிடமிருந்து எதுவும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம். நமக்கு மரணம் வரும்பொழுது நாம் ஏமாற்றம் அடைவதில்லை.

மரணத்தை வரவேற்று ஞானமடைந்த மகரீஷி

ஞானிகளின் ஏராளமானவற்றைக் கற்றுக் கொடுக்கின்றன. பகவான் இரமண மகரிஷி, மரணத்தை விழிப்புணர்வுடன் எதிர்கொண்ட அனுபவம்மூலம் ஞானம் அடைந்தார்.

பகவான் இரமணர் இருந்தபொழுது, ஒரு நாள் மதுரையில் அவருடைய மாமா வீட்டில் படுக்கையில் படுத்துக் அவருக்குள் ஒரு எண்ணம், அவர் இறந்து போகப் போவதாக அவருக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டது. அவருக்கு மரணம் வருவதை உணர்ந்தார்.

அவருக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன: ஒன்று அந்த உணர்ச்சியைத் தடுப்பதா அல்லது அதை ஏற்றுக்கொண்டு அந்த அனுபவத்திற்குள்

மரணத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அதை அனுபவிக்க வேண்டுமென நினைத்து இரண்டாவதைத் தேர்வு செய்தார். மரணத்தின் செயல்பாடுகளை அனுபவமாகப் பெற்ற பிறகே அவர் ஞானமடைந்தார்.

வழக்கமாக மக்கள் மரணத்தை எதிர்கொள்கிறபொழுது, 'கோமா' என்ற நினைவிழந்த நிலைக்குச் செல்வதனால், இந்த விழிப்புணர்வற்ற நிலையிலேயே உடம்பை விடுகிறார்கள். 99 சதவிகித மக்கள் உணர்வற்ற நிலையிலேயே உடம்பை விடுகிறார்கள்.

நம்முடைய இரண்டாம் கட்டப் பயிற்சியான நித்யானந்த ஸ்புரண தீயான முகாமில் நாம் மரணத்தைப் பற்றியும், நாம் இறக்கும்பொழுது என்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் முழுமையாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்கிறோம்.

மரணத்தின் அனுபவம் மற்றும் செயல்பாடுகளை எல்லாம் கற்றுத் தந்து, மரணம் எப்படி நிகழ்கிறது, மரணத்தின்பொழுது என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்துணர்ந்து பயம் ஏற்படுவதில்லை.

பிறந்த கணம் முதல் நம்முடைய வாழ்க்கை முடியப்போகிறது அது மரணம் என்னும் உச்ச நிலையைத்தான் போகிறது என்பதும் நமக்குத் தெரிந்திருந்த போதிலும்கூட, நாம் அதை அகக்காட்சியாகக் காண முயற்சி செய்வதில்லை. அதை நாம் வரவேற்க முயற்சி செய்வதில்லை.

ஒரே ஒருமுறையாவது, மரணத்திற்குள் சென்று சோதித்து வந்து விட்டால், மரண பயத்திற்குள் ஆழமான விழிப்புணர்வுடன் சென்று வந்துவிட்டோம் என்றால், நாம் மரண பயத்தை விட்டுவிடுவோம்.

பகவான் இரமணர் இரண்டாவது வழியைத் தேர்ந்து எடுத்தும் அளவு துணிச்சல் கொண்டிருந்தார். அவர் அந்த உணர்ச்சிடன் ஒத்துழைத்தார். தமக்கு மரணம் நிகழ அனுமதித்தார். மரணத்தின்பொழுது என்ன நடக்கிறதென்று பார்த்துவிட வேண்டும் என்று தீர்மானித்தார். அவருடைய உறுப்புகள் கொண்டிருப்பதைப் பார்த்தார். மெதுவாக அவருடைய உடல் முற்றிலுமாக இறந்துவிட்டது. அவருடைய உடல் சாம்பாலாக்கப்படுவதையும் பார்த்தார்.

திடீரென்று, மரணத்திற்குப் பிறகும்கூட ஏதோ அதை அழிக்க முடியாது என்பதையும் அவர் உணர்ந்தார். அந்தக் கணம்தான் தாம் உடலையும் மனத்தையும் கடந்து நிற்கும் ஒரு தூய்மையான விழிப்புணர்வு மட்டுமே என்பது அவருக்கு உதயமானது! நடந்தது அனைத்திற்கும் ஒரு சாதாரண சாட்சியாக மட்டுமே இருந்தார்!

அந்த அறிவு அபூர்வமானதாகவும், அதற்குப் பிறகு அவரை விட்டு எப்போதும் நீங்காததாகவும் இருந்தது. மீண்டும் அந்த உடலுக்குள் வந்தபொழுது, அவர் பகவான் இரமண மகரிஷியாக, ஒரு ஞானியாக மாறியிருந்தார்.

மரண பயத்தை நாம் வென்றுவிடும்பொழுது, நாம் மரணத்தையே வென்றுவிடுகிறோம். ஏனென்றால் மரணம் என்பது இன்னுமொரு கற்பனையே.

ஆசை, பயம் என்ற சுழற்சியிலிருந்து நாம் மீண்டு வெளியே வரும்பொழுது, வாழ்க்கையில் எல்லாச் சூழ்நிலைகளிலுமே வேறுபாடில்லாத சீரான மன நிலையுடன் இருப்போம்; அப்பொழுது நாம் மஹோன்னதமானதொரு நிலையிலேயே இருப்போம். அப்பொழுதுதான் நாம் நம்முடைய உள் மையப் பகுதியை, நம்முடைய உண்மையான இருப்புத் தன்மையைத் தொட்டிருப்போம்.

ஆன்மாவின் உற்பத்தி ஆனந்தம் மட்டுமே ... !

மஹோன்னதமான நிலையில் இருப்பவரின் குணாதிசயங்களைக் கிருஷ்ணர் விளக்குகிறார்.

யாரொருவர் மாறுபாடில்லாத, நிலையான புத்திசாலித்தனத்துடன் இருக்கிறாரோ, இன்பம் துன்பம், மகிழ்ச்சி துயரம் போன்ற எதிரெதிரான உணர்ச்சிகளின் இருக்கிறாரோ, அவர் ஏமாற்றப்படுவதில்லை. அவரே ஸ்தீயத்தில் நிலைபெற்று உன்னதமான இறைவனாவே இருக்கிறார். அவரேதான் இறைவன்.

உணர்ச்சிகள் என்ற நீர்ச் சுழலிருந்து வெளியே வர, நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன ? நாம் குறிப்பிட்ட

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

மறையிலேயே நிகழ் வேண்டும்; ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை இந்த முறையிலேதான் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலிருந்து பிறந்தவைதான் பயம், ஆசை, கவலை இவை எல்லாம் !

எப்பொழுதுமே, விஷயங்கள் எப்படி நிகழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பனவற்றைப் பற்றியெல்லாம் நாம் ஒரு கற்பனையை வைத்திருக்கிறோம்.

நாம் வாழ்வது உண்மையான உலகம்; இதில் உண்மைக்கும் கற்பனைக்கும் இடையே இடைவெளி வரும்பொழுதுதான் தொல்லை ஆரம்பமாகிறது. இந்த இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்லச் செல்ல, மன இறுக்கம், ஏமாற்றம் போன்றவற்றை நாம் அனுபவிக்கிறோம்.

இந்த இடைவெளியின் அடிப்படையில்தான் நாம் விஷயங்களை விரும்பவோ, வெறுக்கவோ ஆரம்பிக்கிறோம். எல்லா எதிர்மறையான உணர்ச்சிகளையும் ஏற்படுத்திக்கொண்டு, நம்முடனேயே எப்போதும் இருக்கிற இயல்பான ஆனத்தத்தைப் பற்றி மறந்துவிடுகிறோம். ஏனென்றால் நாம் விஷயங்கள் எப்படி இருக்க வேண்டும் என்றே இடைவிடாமல் கற்பனை செய்து கொண்டிருக்கிறோம்.

விருப்பு, வெறுப்பு போன்றவையெல்லாம் மனத்தின் உற்பத்திப் பொருளோ; இருப்புத் தன்மையினுடையது அல்ல. இருப்புத் தன்மை என்பது ஆனர்த்தம் மட்டுமே. மற்ற எந்தப் புறச் சம்பவங்களுடனும் தொடர்புடையதல்ல.

சத்தியங்கள் தெளிவுற சாட்சியாகப் பாருங்கள் ... !

கிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார்:

ஒருவர் பந்தத்திலிருந்து விடுபட்டவராகவும் நான்-நீ என்ற இருப்புத் தன்மைகளிலிருந்து ஆசையற்றவராகிறார். அப்படிப்பட்ட ஆசையற்ற ஒருவர், தமக்கு கிடைத்தப் பொருட்களால் ஏற்படும் துன்பத்தாலோ, இன்பத்தாலோ பாதிக்கப்பட மாட்டார்.

கிருஷ்ணர் உண்மையிலேயே, ஒரு ஸுத்ரமாக, ஒரு நுட்பமாக இதை இதை வழங்குகிறார். நாம் நம்முடைய கவனத்தை இன்பத்தின் மீதோ, துக்கத்தின் மீதோ செலுத்தாமல், இவை இரண்டிற்கும் நடுவில் செலுத்துவோம்.

அப்பொழுது இவை இரண்டையும் கடந்து செல்வோம். மனத்தினுடைய விளையாட்டையும் கடந்து செல்வோம்.

பொதுவாக நாம் செய்வதென்ன ? நாம் துக்கத்தில் இருந்தால், நாம் அதை விட்டு விட்டு ஓடிவிட முயற்சி செய்கிறோம். நாம்

குறப்பைப் புரிந்துகொள்ளும் முறையானது, நம் வாழ்வையே மாற்றிவிடும்.

இன்பத்தில் இருந்தால் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க முயற்சி செய்கிறோம். புரிந்துகொள்ளுங்கள், இன்பம் இரண்டுமே மனத்தினுடையவைதான்.

அவை நம்முடைய கடந்தகாலத்தில் பதிவு செய்யப்பட்ட நினைவுகளை, ஸ்ம்ஸ்காரங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவை நம் இருப்புத் தன்மையினுடையது அல்ல. இன்பத்தைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்க அல்லது துக்கத்திலிருந்து ஓடிவிட முயற்சி செய்வதற்குப் பதிலாக அதனோடேயே இருங்கள்; அதைச் சாட்சியாகப் பாருங்கள்.

மனத்தின் இயல்பே எதிரெதிரானவற்றித்துச் செல்வதுதான். மனது அதனுடைய இயல்புபடியே ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லைக்குச் செல்லும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தியே, மனத்தின் இந்த இயல்பை நாம் தாண்டிச் சென்றுவிட முடியும்.

உதாரணத்திற்கு, உங்களுக்குத் தலைவலியாக இருந்தால் அதைத் தடுக்க முயற்சி செய்ய வேண்டாம். அப்படியே சாட்சியாக இருங்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு மரம் அங்கே இருப்பதைப் போன்று, ஒரு இரவு அங்கே இருப்பதைப் போன்று, தலைவலியும் அங்கே இருக்கிறது. அவ்வளவே, மாறாக, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க முயலாதீா்கள். அது இன்பமாக இருந்தாலும் துக்கமாக இருந்தாலும் அதற்கு ஒரு சாட்சியாக மட்டுமே இருங்கள்.

இது காலையில் உஉதிக்கிற கதிரவனின் முன்பாக நிற்பதைப் போன்றது. சூரியன் உதிக்கிறது. நாம் அப்படியே அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மாலையில் குரியன் மறையும். அதையும் நாம் அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறோம். எந்தவிதமான பற்றுமில்லாமல், சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கிறோம்.

உண்மையில், புத்தருடைய ் 'நடுப்பாதை'யின் (middle path) பின்னுள்ள முழுக் கொள்கை இதுவே. புத்தர் இன்பம் வந்தால் அதை அனுபவிக்காமலும் அதை விட்டு விலகாமலும் இருக்கும்படி சொல்கிறார். அதில் முழுமையாக ஈடுபட்டிருங்கள்; ஆனால் விழிப்புணர்வுடன் இருங்கள்.

நாம் விழிப்புணர்வுடன் இருக்கும்பொழுது, விழிப்புணர்வற்ற நிலைக்கு நாம் ஒருபோதும் இழுத்துச் செல்லப்படமாட்டோம். பிறகு, ஆசை நம்மை வெல்ல முடியாது. நாம்தான் எப்பொழுதுமே தலைவர், நாம் விரும்பும்போதெல்லாம் நாம் அதை விட்டு விட்டு வெளியே வர முடியும்.

விழிப்புணர்வோடு ஆசையை அனுபவிப்பதே ஒரே வழி

நாம் புலனின்பங்களால் நம்மைக் கட்டுப்படுத்த முடியும்.

நாம் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும்பொழுது, உணர்ச்சி இல்லாமல் இருக்கும்பொழுது, நாம் ஆசை மற்றும் குற்ற உணர்ச்சிஎன்ற சுழற்சியில் சிக்கிக்கொண்டுவிடுகிறோம். எப்படியென்றால், முதலில் ஆசையை நிரைவேற்றுகிறோம். ஆனால் ஆசையை நிறைவேற்றிய பின், உண்மைக்கும் கற்பனைக்கும் ஆசைக்கு இணங்கிச் சென்றுவிட்ட குற்ற உணர்ச்சிக்கும் இடையே இருக்கிற உணர்ச்சியில் விழுகிறோம்.

சரி, ஆசையையாவது நாம் முழு முழு விழிப்புணர்வுடன் அனுபவிக்கிறோமா என்றால், அதுவும் இல்லை; ஆசையை நாம் முழு முழு விழிப்புணர்வுடன் வாழவில்லை, அதனால் அதை விட்டு வெளியேறவும் முடியாது.

விளைவு .. ? ! அப்போதும் நாம் அதே உணர்ச்சியோடு இருக்கிறோம்.

ஆசை என்ற சுழற்சியிலிருந்து தப்பிக்க ஒரே வழி, விழிப்புணர்வுடன் ஆசையை அனுபவிப்பது மட்டுமே.

நாம் பார்க்கும் இந்த உலகம்கூட மனத்தின் ஒரு விளையாட்டே!

பொதுவாக நம்முடைய ஆசைகளை எல்லாம் நாம் இரண்டு விதமாகக் கையாள்கிறோம். ஒன்று, அடக்கி வைக்கிறோம் அல்லது வெளிக்காட்டுகிறோம்.

ஒன்று, கடந்தகால அனுபவத்தின் காரணமாகவும் ஸம்ஸ்காரத்தினாலும் இந்த அனுபவம் துக்கமாக இருக்குமென்று நினைத்துக்கொண்டு, அந்த ஆசையை அடக்கி விடுகிரோம்.

அல்லது சில சில சமயங்களில் அது அதுக்கமாக இல்லாததுபோல் தோன்றினாலும்கூட, சமுதாயம் நம்முள் திணித்து வைத்திருக்கிற எதிர்மறையான விஷயங்களோடு அந்த ஆசையைச் சம்பந்தப்படுத்தி, தொடர்புபடுத்தி அடக்கி வைத்துக் கொள்கிறோம்.

இரண்டாவதாக, அது இன்பமாக இருக்கும் என்று தெரிந்தால், நாமாகவே விருப்பத்துடன் அந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு, நம்முடைய ஆசையை வெளிப்படுத்துகிறோம்.

ஆசையை அடக்கி வைத்தல் என்பது அந்த ஆசையை அகற்றுவதற்கு வழி காட்டாது. அந்த வழியை வேண்டுமென்றால் தற்காலிகமாக தடுத்து நிற்கும். ஆனால் மீண்டும் அந்த ஆசை புதுப்பிக்கப்பட்ட சக்தியுடன் வீறுகொண்டு எழும்.

வெளிப்படுத்துதலும் நிறைவேற்றிவிட்டதைக் குறிக்காது, வெளிப்படுத்திய பிறகும்கூட மீண்டும் மீண்டும் அந்த ஆசை எழும்; ஏனென்றால் நாம் விழிப்புணர்வுடன் எதையும் அனுபவிப்பது என்பது அரிதாகி விட்டது.

ஒரு ஆசையை நாம் வெளிப்படுத்தும்பொழுது, நாம் விழிப்புணர்வுடன் அதை அனுபவிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒருமுறை முழுமையான விழிப்புணர்வுடன் ஒரு ஆசையை அனுபவித்துவிட்டால், அது உடல் சார்ந்த இன்பம் அல்லது பொருள் சார்ந்த ஆசை என்று எது சம்பந்தபட்டதாக இருந்தாலும் சரி, நாம் அது நிறைவேற்றப்படுவதைப் பார்ப்போம்.

அதற்குப் பிறகு அதைப் பற்றிக் கவலைப்படமாட்டோம். நாம் அந்த ஆசையைக் கடந்து சென்றுவிடுவோம். உண்மையாகவே அது அவ்வளவு சுலபமானது. இதைத்தான் காமா என்கிறோம்.

காமா என்பது வேறோன்றும் இல்லை; நிறைவேற்றப்படாத ஆசைகளைத்தான் கர்மா என்கிறோம். அது நம்மை மீண்டும் மீண்டும் அதே செயலைச் செய்யத் தூண்டும்.

ஏனென்றால் ஆசைக்குள் சென்று, அதை முழுமையாக அனுபவித்துவிட்டு வெளி வருவதற்கான புத்திசாலித்தனம் நம்மிடம் இல்லை. ஒருமுறை அந்தச் சூழ்நிலையை, அந்தக் கணத்திலேயே முழுமையாக விழிப்புணர்வுடன் அனுபவித்துவிட்டோமென்றால், சங்கரருக்குக் கிடைத்த அனுபவம் நமக்கும் கிடைக்கும்.

நாம் செய்பவராகவோ, செய்யப்பட்டதாகவோ, செய்கிற செயலாகவோ இருப்பதில்லை. நாம் இந்த மூன்றையும் கடந்துவிட்டிருப்போம். நாம் கர்மாவைக் கடந்து இருப்போம். நாம் மேலானதாக மாறியிருப்போம்.

உள்முகத் திருப்பமே உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை

கிருஷ்ணர் நம்மை உள்முகமாகத் திரும்புமாறு அறிவுறுத்துகிறார். "உங்களுடைய புலன்களிலிருந்து விலகி, உங்களுடைய மூலத்திற்குள் செல்லுங்கள்" என்று சொல்கிறார்.

இயல்பாகவே, நம்முடைய இருப்புத் தன்மையினாலேயே நாம் உள்முகமாகத் திருப்பப் படுகிறோம். கட்டுறு மனப்பாங்கினாலும் வெளியுலக அனுபவங்களை உள்வாங்கிக் கொள்வதாலும் நாம் உள்முகமாகத் திரும்புகிற ஆற்றலை இழந்துவிட்டோம்.

அநேகமான குழந்தைகளை நாம் ஆனந்தமாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் அவர்கள் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியே இருக்கிறார்கள். அவர்கள் எதைச் செய்கிறார்களோ அதை மகிழ்ச்சியுடன், ஆனந்தத்துடன் செய்கிறார்கள் ; அவர்கள் ஆனந்தத்தில் இருக்கிறார்கள்.

குழந்தைகள் எதைச் செய்கிறார்களோ அதை மகிழ்ச்சியுடன், ஆனந்தத்துடன் செய்கிறார்கள்,

பிறகு பெரியவர்களாக வளர்ந்து வளர்ந்து ஆனந்தத்தை இழந்துவிடுகிறார்கள். உள்முகமாகத் திரும்புவதை இழந்துவிடுகிறார்கள். பெரியவர்கள், அவர்களுக்குப் புலன்களை நம்பும் படியாகக் கற்பித்துவிடுகிறார்கள்; சமுதாயமும் அதையேதான் கற்பிக்கிறது.

பெரியவர்கள் குழந்தைகளிடம் அவர்கள் என்ன பார்க்கிறார்களோ, கேட்கிறார்களோ, உணர்கிறார்களோ, முகா்கிறார்களோ, சுவைக்கிறார்களோ அதுதான் உண்மையான சத்தியம் என்று சொல்லி வைக்கிறார்கள். பிற்காலத்தில் அவர்களும் வளர்ந்த அந்தப் பெரியவர்களைப்போலவே புலன்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

புலனின்பம் என்ற பொறியில் விழுந்துவிடுகிறார்கள்; அவர்கள் சந்தோஷம் என்று கற்பனை செய்தவைகளுக்கும் மனக்கோட்டைகளுக்கும் அடிமையாகிவிடுகிறார்கள். ஒருமுறை அதில் விழுந்துவிட்டால், அதன் பிறகு அதிலிருந்து வெளியே வருவது கடினமான செயலாகிவிடுகிறது.

புலனின்பங்களுக்கு அடிமைப்பட்ட ஒருவர், ஆசை மற்றும் குற்ற உணர்ச்சி இவற்றின் பிடியில் சிக்கிக்கொண்டு அலைக்கழிக்கப்படுகிறார். அவர் உடலுக்குள் உள்ள சுரப்பிகளின் சித்தரவதைக்கு ஆளாகிறார்.

நம்முடைய மனம் ஒரு குரங்கைப் போன்றது. ஒரு ஆசை நிறைவேறிய உடனேயே, மனம் அடுத்த ஆசைக்குத் தாவிச் சென்றுவிடும். அந்த ஆசை நிறைவேறும்வரை அது மட்டும்தான் மிக முக்கியமான விஷயமாகப்படும். அது நிறைவேறிய பிறகு, அது முக்கியத்துவம் இல்லாததாகிப் போய்விடும். பிறகு புதிய ஆசைதான் எல்லாவற்றையும்விட மிக முக்கியமானதாகத் தோன்றும். இப்படியாக நாம் ஒரு போராட்டத்தின் பிடியிலும், புலனின்பம் என்ற வலையிலும் சிக்கிக்கொண்டுவிடுகிரோம்.

உண்மையான ஆசைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்

மீண்டும் மீண்டும் நாம் நம்மைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ள உதவுவதற்கான தீர்வுகளை வெளி உலகிலிருந்தே எதிர்பார்க்கிறோம். நம்மைச் சுற்றியும் நமக்கு வெளியேயும் நடக்கிற ஒவ்வொரு நிகழ்வும் நமக்குப் புலனின்பத்தைத் தருகின்றன. நம்முடைய ஆசைகளின் பட்டியலை நாம் பார்த்தோமென்றால், அவற்றில் பல நம்முடையதாகவேகூட இருக்காது; பிறரிடமிருந்து கடன் வாங்கப்பட்டவையாகத்தான் இருக்கும்.

நம்முடைய காரை வைத்துக்கொண்டுதான் நாம் முழுமையான மகிழ்ச்சியோடுதான் இருப்போம்; பக்கத்து வீட்டுக்கார் புதிய கார் வாங்குகிறவரையில்! நாம் நம்முடைய வேலையில் முழுமையான மகிழ்ச்சியுடன்தான் இருப்போம்; நம்முடன் வேலை செய்பவருக்கு பதவி உயர்வு வருகிற வரை!

வெளியே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பார்த்துத்தான் நம்முடைய ஆசைகளின் பட்டியலை நாம் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கிறோம். இந்த ஆசைகளை நிறைவேற்றினால்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிற மகிழ்ச்சி நமக்குக் கிடைக்கும் என்று நம்ப ஆரம்பித்துவிடுகிறோம்.

வெளியே என்ன நடந்தாலும் அது நம்முடைய திருப்தியின் அளவையும், நம்முடைய சந்தோஷத்தின் நிலையையும் முழுமையாகக் அதனால்தான் நமக்குச் சரியாக என்ன தேவை என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே, இந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

நாம் நம்மைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ள உதவுவதற்கான தீர்வுகளை வெளி உலகிலிருந்தே எதிர்பார்க்கிறோம் - இது சரியான அணுகுமுறை அல்ல.

நம்முடைய இரண்டாவது கட்ட தியானப் பயிற்சி முகாமான, நித்யானந்த ஸ்புரண தியான பயிற்சி முகாமில், மக்களை அவர்களுடைய ஆசைகளை எழுதச் சொல்வேன். எழுதி முடித்த பிறகு, ஒரு ஆழமான தியானத்தைச் செய்யச் சொல்வேன். பிறகு அவர்கள் எழுதிய ஆசைகளை நினைவுக்குக் கொண்டுவரும்படி சொல்வேன். அப்பொழுது அவர்களால் சில ஆசைகளை மட்டுமே நினைவிற்குக் கொண்டுவர முடிகிறது.

உதாரணத்திற்கு அவர்கள் ஐம்பது ஆசைகளை எழுதினார்களென்றால், அந்தத் தியானத்திற்குப் பிறகு அவர்களால் அவற்றில் சிலவற்றை மட்டுமே, ஒரு பத்துக்கும் குறைவாகவே நினைவுபடுத்த முடிந்தது. இது எதனால் ?

இது எதனாலென்றால். அவர்களால் நினைவுக்குக் கொண்டுவர முடிந்தவைதான் அவர்களுடைய உண்மையான ஆசைகள். இவைதான் அவர்களுக்கு உண்மையிலேயே தேவையான ஆசைகள். மீதமுள்ள நாற்பது ஆசைகளும் கடனாக வாங்கப்பட்ட ஆசைகள். இந்தக் கடன் வாங்கப்பட்ட ஆசைகள் மனத்தின் விளையாட்டே!

நீங்கள் தேடவேண்டிய சரியான இடம்

நாம் முழுமைத் தன்மையை, ஆனந்தத்தை வெளியே தேடும்பொழுது, அதற்கான தீர்வுகளையும் வெளியிலேயே தேடிக் கொண்டிருக்கிறோம். இருந்த போதிலும், உண்மையான தீர்வானது உள்ளேயேதான் இருக்கிறது. நாம் நம்முடைய உண்மையான இருப்பு நிலையுடன் நம்மை இணைத்துக்கொள்ள முடிபவர்களாக இருக்க வேண்டும். மனத்தால் இயக்கப்படுபவர்களாக இருக்கக் கூடாது.

உண்மையான ஆனந்தம் உள்ளேதான் இருக்கிறது. அது விஷயங்களில் இல்லை. நாம் இயல்பாகவே ஆனந்தமயமாகவே இருக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும். நம்முடைய இருப்புத் தன்மை எப்பொழுதுமே ஆனந்துமாகவே இருக்கிறது.

நம்முடைய உள் மையம் எப்போதும் ஆனந்தமாகவு இருக்கிறது. அதனால் ஆனந்தத்தைத் தேடவேண்டிய சரியான இடம் வெளியில் இல்லை. அது நமக்கு உள்ளேயேதான் இருக்கிறது. இதை நாம் உணர்ந்து கொண்டால் நாம் நம்முடைய மையத்திலேயே எப்போதும் இருப்போம். வெளியில் என்ன நடந்தாலும் அதற்காக நாம் கவலைப்பட மாட்டோம். ஏனென்றால் இயல்பாகவே நாம் ஆனந்தமானவர்கள் என்பது நமக்கு மிகச் சரியாகவே தெரியும்.

எவரொருவா் சுதந்திரமாக தன்னிறைவோடு, விருப்பங்களற்ற நிலையில் புத்திசாலியாக இருக்கிறாரோ அவர் இந்த உலகத்தின் கண்களுக்குச் செயல் செய்பவராகத் தெரிந்தாலும்கூட, எதுவும் செய்வதில்லை.

ஒரு மிகப் பெரிய சோம்பேறியாக இருக்கும் பைத்தியக்காரன்கூட வெளிப் பார்வைக்கு ஆழ்ந்த ஆனந்தத்தில் இருக்கும் ஒரு தியானியைப்போலவே இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். மேம்போக்காக, வெளியுலகிற்கு அவர்கள் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும்கூட, உள்ளே அவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.

ஒரு பைத்தியக்காரன் சோம்பேறியாகப் படுத்துக் கொண்டிருப்பான். ஆனால் அவனுடைய மனத்துக்குள் நிறைய விஷயங்கள் ஒடிக்கொண்டே இருக்கும்.

ஒரு நிலையிலேயே

ஏனென்றால் அவர் அவருடைய இருப்புத் தன்மையில், உள் மையத்தில் இல்லை. அதனால்தான் நாம் பார்க்கிறோம். நமக்கு அவரும் ஒரு பைத்தியக்காரரைப்போல்தான் தெரிகிறார். ஆனால் ஒரு தியானியின் மனம் எதுவுமே செய்யாமல் இருந்து கொண்டிருக்கிறது. அவர் அவருக்குள்ளாகவே முழுமையாக இருக்கிறார்.

  • உங்களுக்குத் தெரியுமா ? உங்களிடம் உள்ள ஐம்பது ஆசைகளில் நாற்பது ஆசைகள் கடன்வாங்கப்பட்ட ஆசைகள் தான்!

நாம் நம்முடைய இருப்புத் தன்மையின் உள் மையத்தில் இருக்கும்போதும், நாம் நமக்குள்ளேயே மேலோட்டத்தில் நிகழும் உணர்ச்சிகளால் நாம் பாதிக்கப்படுவதில்லை. அது ஒரு மகா சமுத்திரத்தில் இருக்கும் பாறையைப் போன்றது. அலைகள் தொடர்ந்து அந்தப் பாறையின் மீது மோதிக்கொண்டே இருக்கும். ஆனால் அந்தப் பாறை எந்தவித கலக்கமும் இல்லாமல் அப்படியே நின்று கொண்டிருக்கும்.

ஒரு தியானி மிகவும் தளர்வான நிலையிலேயே அமர்ந்திருக்கிறார்.

நம்முடைய இருப்புத் தன்மையிலிருந்துதான், நம்மிடமிருந்துதான் ஆனந்தம் எழும். அது எல்லை இல்லாதது. ஏனென்றால் அது எந்தவிதமான புறப்பொருட்களாலும் விஷயங்களாலும் நிறுத்த முடியாதது. அது ஆனந்த ஸ்புரணம் (ஆனந்த ஊற்று) என்றும் நிலைத்திருப்பது.

இழந்த ஆனந்தத்தை மீட்டுக்கொடுத்திடும் தியான முகாம்

நம்முடைய ஆனந்த ஸ்ழுண தியான முகாம் பயிற்சிகளில் இதைத்தான் கற்றுக் கொடுக்கிறோம். நீங்கள் குழந்தையாக இருந்தபொழுது தொடர்ந்து உணர்ந்த அந்த ஆனந்தத்தை, நீங்கள் வளரும்பொழுது இழந்துவிட்ட அந்த ஆனந்தத்தை, நீங்கள் கற்றறிந்தவர்களாக ஆகும்பொழுது இழந்துவிட்ட அந்த ஆனந்தத்தை எப்படி மீண்டும் அனுபவிப்பது என்பதைக் கற்றுத் தருகிறோம்.

நம் உடல் மன அமைப்பில் அமைந்துள்ள சக்திமையங்கள்தான் நம்மை பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு இணைக்கின்றன. நாம் வளர்த்து வைத்திருக்கும் கட்டுறு மனப்பாங்கினால், அந்தச் சக்தி மையங்களை இயங்கவிடாமல் தடுத்துவிடுகிறோம். அவற்றைச் செயல்படவிடாமல் முடி, பூட்டிவிடுகிறோம்.

சக்தி திறந்திருக்கும்வரையிலும்தான், நாம் நம்முடைய சக்தியின் மூல அதாரத்துடன் நிலைத்த தொடர்பைக் கொண்டிருக்க முடியும்; நாம் தளர்வாக இருக்க முடியும்; நாம் சௌகா்யமாகவும் இருக்க முடியும்; நாம்

ஆனந்தமாகவும் இருக்க முடியும்.

நம்முள்வளர்க்கூடிய எதிர்மறை எண்ணங்களும், நமக்குள் சேர்ந்துகொண்டே இருக்கும் ஸம்ஸ்காரங்களும், நம்முடைய கட்டுறு மனப்பாங்கும் இந்த சக்தி மையங்களை அடைத்துவிடுகின்றன. அப்பொழுது நாம் அந்த ஆனந்தத்தை, அந்த சௌகாயத்தை, அந்தத் தளர்வை இழந்துவிடுகிறோம். நாம் பரபரப்புமிக்கவர்களாக மாறி, நோயாளியாகவும் மாறிவிடுகிறோம்.

இந்தச் சக்தித் தடைகள்தான், நம்முடைய எல்லா நோய்களுக்கும் -அவை மனம் சார்ந்ததாக இருந்தாலும் சரி அல்லது உடல் சார்ந்ததாக இருந்தாலும் சரி, மூலகாரணமாக இருக்கின்றன. எவ்வாறு தடைகளை நீக்கி, சக்கரங்கள் என்றழைக்கப்படும் இந்தச் சக்தி மையங்களுக்குச் சக்தியூட்டுவது என்பதைத் தியான நுட்பங்களின் மூலமாகக் கற்றுக் கொடுக்கிறோம். இதன் மூலமாக மறுபடியும் அந்த ஆனந்தத்தை நாம் அனுபவிக்க முடியும். அதனால்தான் இந்த நிகழ்ச்சி ஆனந்த ஸ்புரண தியான முகாம் என்று அழைக்கப்படுகிறது.

ஆனந்தம் என்றால் - ஆனந்தம், ஸ்புரண என்றால் பொங்கிப் பிரவகித்தல், நாம் அடைத்துவைத்திருக்கிற வித்திருக்கிற மிண்டும் மீண்டும் வேகமாகப் பாயத் தொடங்கும். எங்கேயோ நாம் இந்த ஆனந்தத்தின் ஓட்டத்தை நிறுத்தியிருக்கிறோம். அந்த நிறுத்துதலை நிறுத்துவது எப்படி, நமக்குள் ஆனந்தத்தைப்பாயவைப்பது எப்படி என்பதையெல்லாம் கற்றுத் தருகிறோம்.

கேள்வி: எப்படிச் சமமாகப் பார்க்க முடியும்? நாமே சமமாகப் படைக்கப்படவில்லை: நாம் அனைவரும் வேறுபட்டவர்களாகவும் பலதரப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். பிறகு எப்படிக் கிருஷ்ணர் சொல்வதைப்போல எல்லோரையும் ஒரு மாதிரியாகப் பார்க்க முடியும்?

அற்புதமானதொரு கேள்வி.

நாம் சமமாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். தெய்வம் நம்மை வித்தியாசப்படுத்தவும் இல்லை; நம்முடைய அடிப்படை அடிப்படை கட்டமைப்பு ஒன்றேதான்.

நம்முடைய இருப்பில் இருந்தேதான் நமக்கு மகிழ்ச்சி எழும். அது எல்லை இல்லாதது.

நம்மை இயக்கிக் கொள்வதற்காக, நம் எல்லோருக்குமே உடல், மனம் மற்றும் உயிர் போன்ற கட்டமைப்பு இருக்கிறது. இருந்த போதிலும், நம்முடைய முந்தைய பிறவியிலிருந்து நாம் கொண்டு வந்த மன அமைப்பு, ஒரு வண்ணம், ஒரு எண்ணம், வாஸனா என்று அழைக்கப்படுகிற ஒரு நுட்பமான சாரம் - இவைதான் நம்மை

மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.

நாம் எல்லோரும் பரந்த வெளியில் இருக்கும் கோள் வடிவப் பந்தைப் போன்றவர்கள். இப்பரந்த வெளியில் வெளிப்புறமாக நமக்கு பந்தின் தோல்தான் நம்முடைய உடல். இறக்கும்பொழுது தோல் இல்லாமல்

போய்விடுகிறது. இது காற்றடைக்கப்பட்ட பலூனின் ரப்பா் உறை திடீரென்று மறைந்துவிடுவதைப் போன்றது. என்ன நடக்கிறது அப்பொழுது? உள்ளே உள்ள காற்று வெளியே உள்ள காற்றோடு கலந்துவிடுகிறது, இல்லையா?

அது மாதிரிதான் மரணத்தின்போதும், நிகழ்கிறது. இந்த உடலை விட்ட பிறகு, நாம் வெளியே உள்ள சக்தியுடன் கலந்துவிடுகிறோம். ஒரே வித்தியாசம்: நாம் உயிருடன் இருக்கும்பொழுது, அனுபவங்களையும் நினைவுகளையும் சேகரித்து வைத்து, ஒரு மன அமைப்பை உருவாக்கி வைத்திருப்போம். அதைத்தான் வாஸனா என்கிறோம்.

இந்த வாஸனா என்பதை வெவ்வேறு வண்ணங்களினால் காற்றடைக்கப்பட்ட பந்துகளாக கற்பனை செய்து கொள்ளலாம். ஒன்று இளஞ்சிவப்பு, ஒன்று

நம்முடைய கடந்தகால அனுபவமும் மனப்பாங்கும்தான் இந்தப் பிறவியில் நாம் எடுக்கவேண்டிய உடல், மனம் மற்றும் சூழ்நிலைகளை நிர்ணயிக்கின்றன.

ரீலம் ஒன்று பச்சை, என்றெல்லாம் பல்வேறு வண்ணங்களில் காற்றடைக்கப்பட்ட பந்தாக கற்பனை செய்துகொள்வோம்.

அந்த ரப்பர் மறைந்துவிடும்பொழுது, அதனுள்ளே இருக்கிற காற்று, வெளியில் இருக்கும் காற்றுடன் சேராமல் அதற்குரிய சாயத்துடன் தனியாக நிற்கும். அது ஒரே சக்தியாக இருந்தாலும்கூட அதனிடமிருக்கிற சாயம் அதைத் தனிமைப்படுத்திவிடுகிறது.

இந்த கொண்ட அது தங்குவதற்குரிய புதிய பர்துகளை, தன்னுடைய ஒத்த குணாதிசயங்களைக் மற்ற பந்துகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அந்த வண்ணத்தை, வாஸனையைக் கொண்ட அந்த உயிரானது,

தனக்குத் தகுந்தாற் போன்றுள்ள உடல்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அது சரியான இடத்தில் மறுபடியும் பிறந்து, அதனுடைய வாஸனாக்களை நிறைவேற்றுவதற்காகச் சரியான சூழ்நிலைகளை, சரியான நேரத்தைத் தேடிக்

இந்த உடலை விட்ட பிறகு, நாம் வெளியே உள்ள சக்தியுடன் கலந்துவிடுகிறோம்.

கொண்டிருக்கும். அப்பொழுது மட்டுமே அதனுடைய வாஸனாக்களை அது நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

நம்முடைய கடந்தகால அனுபவமும் மனப்பாங்கும்தான் இந்தப் பிறவியில் நாம் எடுக்கவேண்டிய உடல், மனம் மற்றும் சூழ்நிலைகளை நிர்ணயிக்கின்றன. உடல், மனம் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் சில வித்தியாசங்கள் இருந்தாலும், நாம் எல்லோரும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள்தான். முக்கியமாக நாம் எல்லோரும் ஒரே சக்திதான். அதனால் நாம் எல்லோரும் ஒன்றுதான் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

நாம் உணரவும் தேடவும் வேண்டியது இந்தச் சமத்துவ நிலையைத்தான். நம்முடைய மன அமைப்பின் காரணமாக, தொடக்கத்தில் நாம் சம மன நிலை இல்லாதவர்களாக இருந்தாலும், நாம் சென்று அடைகிற நிலை சமம்தான்; சம நிலையைத்தான் அடைய முடியும். அந்த நிலைதான் நம்முடைய உண்மையான இயல்பு.

மனத்தின் சம நிலையைப் பற்றிப் பேசும்பொழுது கிருஷ்ணர் இதைத்தான் குறிப்பிடுகிறார். அதை நாம் ஸம த்ரு ஷ்டி என்கிறோம் . உணர்ச்சிகளை உணரும் சக்தியில் சம நிலை, பார்க்கிற ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பொருளையும் எந்தவிதமான வேறுபாடும் வித்தியாசமும் இல்லாமல் சமமாகப் பார்ப்பது, இதுவே ஸம தீரு ஷ்டி! நாம் அனைவரும் ஒரே பிரபஞ்ச இருப்புத் தன்மையால் உருவாக்கப்பட்ட உயிரினங்கள்தான்! ஒரே சக்தியின் குழந்தைகள். ஒருமுறை நாம் இந்தப் பொதுத் தன்மையை புரிந்துகொண்டு விட்டால், சம நிலையைப் பயிற்சி செய்வதில் சிரமமே இருக்காது.