நாயும் நாயை உண்ணுபவரும
- 5.18 அறிவும் கருணையும் நிரம்பிய ஒருவர், கற்றறிந்த பிராமணனையும் பசுவையும் யானையையும் நாயையும் நாயை உண்பவரையும் எல்லாவற்றையும் சமமாகவே பார்க்கிறார்.
- 5.19 இந்த வாழ்க்கையில், வேறுபாடில்லாத சாந்தமான மனத்துடன் இறப்பையும் இருப்பவர்கள் வென்றவர்களாகிறார்கள்.
அவர்கள் மேலான இறைவனைப் போன்று மாசற்றவர்கள், அதனால்தான் அவர்கள் இறைவனில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
- 5.20 யார் ஒருவர் நிலையான அறிவைப் பெற்றிருக்கிறாரோ, மன குழப்பமடையாதவராகவும் இறைவனை அறிந்தவராகவும் இறைவனில் நிலை பெற்றிருப்பவராகவும் இருக்கிறாரோ அவர் விரும்பிய ஒன்றை அடையும்பொழுது மகிழ்வதும் இல்லை, விரும்பாத ஒன்றை பெறும்பொழுது துன்பமடைவதும் இல்லை.
- 5.21 வெளியுலகப் புலனின்பங்களில் நாட்டமில்லாத ஒருவர் தம் ஆன்மாவில் நிலைபெற்று மகிழ்வார். அந்த மகிழ்ச்சியில் அவர் சமாதி நிலை அடைந்து பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து எல்லை இல்லாத மகிழ்ச்சியடைகிறார்.
ஒவ்வொரு ஜீவனும் பிரபஞ்சத்தின் அங்கமே
கிருஷ்ணர் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் நடு நிலைமையையும்வேறுபாடு இல்லாத சீரான மன நிலையையும் சுருக்கமாக விவரிக்கிறார். பிரபஞ்ச இருப்புத் தன்மைக்குப் பிரியமானது என்று தனியாக எதுவும் இல்லை. எல்லா ஒப்பீடுகளும் குரு பரம்பரை வழியாக வந்த விளக்கங்க(ளும் மனிதரால் உருவாக்கப்பட்டவை.
''மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நாம் புனிதமானவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கும் பாவிகள் என்று கருதப்படுபவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.
கற்றறிந்த பண்டிதராக இருந்தாலும் சரி, சமய குருமார்களாக இருந்தாலும் சரி, பிராமணனாக இருந்தாலும் சரி அல்லது யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கும் ஒரு நாயை உண்பவருக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. இருவரும் சமமானவர்களே!' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
இன்னும் தெளிவாகப் பார்த்தோமென்றால் நாயும் நாயை உண்பவரும் ஒன்றே என்று அவர் சொல்கிறார்.
சங்கரர், தாம் பாடிய ஆத்ம ஷட்கம் என்னும் ஆறு ஸ்லோகங்களில் இதைத்தான் குறிப்பிடுகிறார். "நான் அனுபவிப்பவனும் இல்லை. நான் அனுபவிக்கப்படுபவனும் இல்லை. அனுபவித்தலும் நான் இல்லை. நான் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன். நான் சிவனின் உருவம். ''
உலகத்தில் அவதரித்த மிகச் சிறந்த தத்துவ வல்லமை பெற்றவர் அதி அதி சங்கரர். சங்கரரின் அழகான செய்தி, "செய்பவனும் நானில்லை; செய்யப்பட்டதும் நானில்லை;
ருரம் புனிதமானவர்கள் என்று கருதுபவர்களுக்கும் பாவிகள் என்று கருதுபவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.
செய்தலும் எல்லாம் அப்பாற்பட்ட ஒரு சாட்சியாகவே இருக்கிறேன்,'' என்பதுதான்.
''நான் எழுவாயும் இல்லை, செயப்படு பொருளும் இல்லை, வினையும் இல்லை, ' என்று, நாம் இந்த மூன்றையும் கடந்து செல்லும்பொழுது, எல்லாக் கருத்துக்களும் தாத்பரியங்களும் றன. சாப்பிடுபவனும் சாப்பிடப்பட்டதும் இணைகின்றன. எல்லா அர்த்தங்களும் மறைந்துவிடுகின்றன. நாம் மூலத்தையே அடைந்துவிடுகிறோம்.
ஒரு நூன்யின் கருணை, அகு அந்த சீவனின் காரணமில்லாத மங்கலத்துவத்துவத்தைப் போன்றது.
அங்கு எண்ணங்களும் இல்லை, மனமும் இல்லை. அங்கு நீங்கள் மட்டுமே, உங்கள் இருப்புத் தன்மை மட்டுமே இருக்கும். அதுதான் உண்மையான நீங்கள், அதாவது இறைவன்.
விலங்குகளும் தாவரங்களும் எதையும் வேறுபடுத்திப் பார்ப்பதும் இல்லை, சீர்தூக்கிப் பார்ப்பதும் இல்லை.
மனிதரால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளைத் தவிர, விலங்குகளில் எந்த ஒரு விலங்கும் தன்னை மற்ற விலங்குகளைவிட உயர்ந்தது என்றோ அல்லது தாழ்ந்தது என்றோ நினைப்பதில்லை. சிங்கம் என்பது நமக்கு மட்டுமே ராஜா. மற்ற விலங்குகளுக்கு அல்ல. நிறைய விலங்குகள் சிங்கத்திற்குப் பயப்படுவதே இல்லை.
ஒரு அரசர் தமக்கு இருந்த அதிகப் பொறுப்புகளினால் மன அழுத்தம் ஏற்பட்டு, அதற்காகப் புத்தரிடம் அறிவுரை தேடிச் சென்றார். புத்தா்
அவரை ஒரு சீடருடன் அருகிலுள்ள தோட்டத்திற்கு அனுப்பி ஒன்றுக்கொன்று அடுத்தடுத்து வளர்ந்து கொண்டிருக்கும் கள்ளிச் செடியையும் ரோஜா செடியையும் பார்த்து வரும்படி சொன்னார்.
அரசர் குழப்பத்துடன் திரும்பி வந்தார். ''அங்கே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது ? நான் அந்த ரோஜாச் செடியையும் பார்த்தேன், பார்த்தேன். அவ்வளவுதான், இதில் வேறு என்ன இருக்கிறது?' என்று கேட்டார்.
அதற்குப் பக்கர் மிக அமகாகச் சொன்னார். "ஒவ்வொருவரும் பார்க்கு வியக்கும் விருப்பப்படும் மலர்களையுடைய ரோஜா செடியைப் பார்த்து கள்ளிச்செடி ஒருநாளும் பாறாமைப்பட்டதில்லை. அதேபோல தன்றைடைய மலர்கள் அனைத்தையும் பறித்துத் தனக்குத் துன்பத்தை விளைவிக்கும் மக்கள், கள்ளிச்செடிக்கு எந்தவித துன்பத்தையும் விளைவிப்பதில்லை என்று ரோஜாச் செடி எவ்வித புகாரும் சொல்வதில்லை.
அவை இரண்டுமே அவற்றிற்குண்டான சொந்தத் தனித் தன்மையில் மையம் கொண்டிருக்கின்றன. இதில் 'ஒப்பிட்டுப் பார்த்தல்' என்று எதுவும் இல்லை. அங்கே பொறாமையும் இல்லை. அங்கே மகிழ்ச்சி இல்லாத சூழ்நிலையும் இல்லை. ''
உடனே அரசர் தம்முடைய பொறுப்புகளைப் பற்றிப் புகார் சொன்னது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை உணர்ந்தார். அவர் புத்தருக்கு நன்றி சொல்லிவிட்டு மன அமைதியுடன் சென்றார்.
பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள்மீது பொழியும் ஆனந்தத்தை அனுமதியுங்கள்
பிரபஞ்ச இருப்புத் தன்மை தொடர்ந்து நம்மீது ஆனத்தத்தைப் பொழிந்துகொண்டே இருக்கிறது. நாம்தான் அதைப் பெற்றுக்கொள்ள திறந்த நிலையில் இல்லை. பிரபஞ்ச இருப்புத் தன்மை ஒவ்வொருவரையும் சமமாகவே பார்க்கிறது. அது வித்தியாசம் பார்ப்பதில்லை. ஒவ்வொருவரும் அதே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அங்கம்தான்.
அதைப்போலவே, குருவாக இருக்கிறவர்கள் இந்த முழு உலகத்தையுமே, தங்களில் ஒன்றாகத்தான் அதனால்கான் அவர்களால் எல்லோரிடமும் ஒவ்வொருவரிடமும் அவர்கள் யாராக இருந்தாலும் சரி கருணை காட்ட முடிகிறது.
வெளியில் உள்ள புறத்தோற்றங்கள், தோன்றி மறையக்கூடியவை. நாம் அழிவில்லாத, ஆனத்தத்தை நம் ஒவ்வொருவருடைய இருப்பு மையத்திலும் பார்க்கும்பொழுது, ஒவ்வொருவருக்குள்ளும் இயற்கையாய் அமைந்திருக்கிற உள்ளார்ந்த இயல்பான தெய்வீக இயல்பை உணர்கிறோம்.
'தன்னை உணர்தல்' மூலம் பெற்ற இந்த அனுபவமாகிய அறிவு, இயல்பாகவே மொத்த இருப்புத் தன்மையை நோக்கியும் ஆழமான கருணையை வெளிப்படுத்தச் செய்கிறது.
உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள், நல்லது கெட்டது என்ற பிரிவினைகள் எல்லாம் நம்முடைய சமுதாயமும் நம்முடைய மனமும் அஹங்காரமும்தான் ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்,
பிரபஞ்ச இருப்புத் தன்மை உயர்வு, தாழ்வு என்ற பெயரில் வேறுபாடுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை.
மனித இனம் மட்டுமே தாங்கள்தான் முன்னேற்றமடைந்த இனம் என்றும், இயற்கையின் பிற படைப்பினங்களைவிட தாங்கள்தான் மிகுந்த புத்திசாலி என்றும் நினைத்துக் கொள்கிறது. நம்முடைய பட்டறிவு பிரபஞ்ச இருப்புத் தன்மையின் புத்திசாலித்தனத்தைவிடவும் பெரியது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
பூமியில் இருக்கும் ஒவ்வொரு அணுவம் தெய்வீகமானதே!
ஒரு சின்ன கதை:
'ஒப்பிட்டுப் பார்த்தல்' இல்லையென்றால், அங்கே பொறாமையும் இல்லை, துக்கமும் இல்லை.
ஒரு இரவு வேளையில் திருடன் ஒருவன் காட்டுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு மடத்தின் கதவைத் தட்டினான். அந்த மடத்தின் சொந்தக்காரரான குரு கதவைத் திறந்தார். அந்தத் திருடன் அன்று இரவு மட்டும் தன்னை அங்குத் தங்க அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டான். அவரும் அன்று இரவு அந்த மனிதனை மடத்தில் தங்குவதற்கு அனுமதித்தார்.
மறுநாள் காலையில், திருடன் அந்த குருவுக்கு நன்றி சொன்னான். அவருடைய உத்தரவைப் பெற்றுக்கொண்டு கிளம்பிச் செல்வதற்கு முன் தான் ஒரு திருடன் என்றும், முந்தின இரவு வந்ததாகவும் தன் குற்றத்தை குரூவிடம் அவன் ஒப்புக் கொண்டான். இதைக் கேட்ட குரு திகிலடைந்து போய் நின்றார்.
"மடத்தில் ஒரு ஒரு திருடனைத் தங்கும் படியாக வைத்து நான் எவ்வளவு பெரிய பாவத்தை ஏற்படுத்திக்கொண்டுவிட்டேன். நான் அவனுக்கு உணவெல்லாம் வேறே கொடுத்தேனே, நான் போகிறேன்?'' என்று உரக்க ஒலமிட்டு அழத் தொடங்கிவிட்டார் அந்த குரு.
அவரங்காரத்தை விட்டுவிடுங்கள், ஆனந்தத்தில் மழ்குங்கள்.
அந்த நேரம் வானத்திலிருந்து இவரைவிட உரத்த குரலில் அழுதுகொண்டே ஒரு குரல். ''ஒரு நாள் இரவு அவனைக் கவனித்துக் கொண்டதற்காகவே நீ இப்படி நிலை குலைந்து போய் அழுது கொண்டிருக்கிறாய். இத்தனை வருடங்களாக ஒவ்வொரு நாளும் அவனைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் என் நிலைமையை யோசித்துப் பார்த்தாயா?''
குருவுக்கு அஹங்காரம் வந்து விட்டது. தாம் மற்றவர்களைவிடப் புனிதமானவர் என்று குரு உணரத் தொடங்கிவிட்டார். அதனால்தான் அவர் அந்தத் திருடனை ஏதோ புனிதம் குறைந்துவிட்ட ஒருவனைப்போல் பார்த்தார். கடவுள், பாவியென்றும் புனிதரென்றும் ஒருபோதும் பேதப்படுத்திப் பார்ப்பதே இல்லை. இவை எல்லாம் சமூதாயம் சார்ந்தவையாக இருக்கிறது. காட்டில் யார் பாவி? யார் புனிதமானவர்?
பூமியில் உள்ள ஒவ்வொரு அணுவும் தெய்வீகமானதுதான். விஷயங்களைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பொழுதும், வாழ்க்கையை மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் பொழுதும் இந்த உண்மையை நாம் உணர்வதில்லை. ஒவ்வொரு அணுவும் தெய்வீகமானதுதான் என்பதை உணராதபொழுதுதான் நமக்கான எல்லைகளை உருவாக்கிக் கொண்டுவிடுகிறோம்.
இந்த வாழ்க்கையே தெய்வம் நமக்குத் தந்த ஒரு கொடை என்பதை நாம் உணரும்பொழுது, வாழ்க்கையைச் சாதாரணமாக நினைக்கும் நமது மனப்பான்மை மாறிவிடுகிறது. அது, நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வளங்களையும் கொடுத்த இறைவனுக்கு, பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு நன்றி தெரிவிக்கும் மனப்பான்மையாக மாறிவிடுகிறது!
இந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வதற்காக நீங்கள் மிகவும் பாடுபட்டிருக்கிறீர்களா? உயிர்ச் சக்தியானது ஒவ்வொரு கணமும் உங்களுடைய ஒவ்வொரு சுவாசத்துடனும் உங்களுக்குள் பாய்ந்து உங்களை உயிருடன் இருக்க வைத்திருக்கிறது.
உங்களை உயிருடன் வைத்துக் கொண்டிருக்கிற அந்த உயிர்ச் சக்தியை நீங்கள்தான் உண்டாக்கினீர்கள் என்று உங்களால் முடியுமா? நம்முடைய சுவாசத்தின் மூலமாக உட்செல்லும் அந்த உயிர்ச் சக்தியைச் சாதாரணமானதாவே எடுத்துக் கொள்கிறோம்.
உணவை, இரத்தமாக மாற்றுகிற அந்த இயந்திர நுட்பத்தையும் சக்தியையும் சாதாரணமானதாகவே எடுத்துக்கொண்டுள்ளோம்.
வாழ்க்கையில் நாம் பெற்றிருப்பதெல்லாம் சாதாரணமானதுதான், மிக எளிதானதுதான் என்று நினைத்துக் கொள்கிறோம். மனம் 'இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும்' என்று தொடர்ந்து ஒடிக்கொண்டே இருக்கிறது.
மனிதப்பிறவி என்ற வெகுமதிக்குப் பிறகும் வரம் ஏதும் வேண்டுமோ!
நாம் நம்மிடம் என்னவெல்லாம் இருக்கின்றன, அதாவது பிரபஞ்ச இருப்புத் தன்மை நமக்கு என்னவெல்லாம் வழங்கியிருக்கிறது என்கிற பட்டியலையும், உயிருடன் இப்பொழுது இருப்பதைவிட இன்னும் அதிகமாகச் சந்தோஷமாக இருப்பதற்கு நமக்கு என்னென்ன தேவை என்கிற பட்டியலையும் தயார் செய்தோமென்றால், இந்த இரண்டு பட்டியல்களில் முதல் பட்டியல்தான் மிக மிக நீளமாக இருக்கும் என்பதை வெகு சீக்கிரத்திலேயே தெரிந்துகொள்வோம்.
ஏதாவது ஒரு இல்லாவிட்டால்கூட நம்முடைய வாழ்க்கை என்னவாகும் தீவிரமாகச் சிந்தித்துப் பார்த்தது உண்டா ? நாம் மிகச் சாதரணமாக எடுத்துக்கொள்ளும் ஒரு காலின் கட்டை விரல் அல்லது கையிலுள்ள கட்டை கட்டை விரல் இல்லாமல் போயிருந்தாலும் நமக்கு ஏற்படும் இடர்களை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? காதுகள், கண்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
நிறைய, நிறையவே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு அளிக்கப்பட்டு இருப்பவற்றை எல்லாம் ஏதோ நமக்குக் கடன்பட்டுக் கொடுத்திருப்பதாகவே எண்ணுகிறோம். அவற்றில் ஏதோ நமக்கு உரிமை இருப்பதாகவே எண்ணுகிறோம்.அதனால்தான் நாம் மேலும் மேலும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.
நாம் இங்கு இயற்கையின் வெகுமதியாக இருக்கிறோம். நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளவற்றிற்காகப் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்பதற்குப் பதிலாக, நம்மிடம் இல்லாததைப் பற்றிப் புகார் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாம் தேடுவதை அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மை, இறைவன் என்றால்கூட, அதுவும் கருணையினாலும் நாம் கேட்பதைக் கொடுக்கக்கூடிய சக்கி கடவுளுக்கு இருப்பதாக நாம் நினைக்கிறோம். சந்தேகமே இல்லை; அவருக்கு அந்தச் சக்தியும் இருக்கிறது. ஆனால் நமக்கு என்ன தரப்பட வேண்டும், எப்பொழுது தரப்பட வேண்டும் என்று தீர்மானிக்கிற ஞானமும் அவருக்கு இருக்கிறது என்பதை நாம் நினைப்பதே இல்லை.
நம்முடைய பல பிரார்த்தனைகளுக்கு இறைவன் செவி சாய்ப்பதில்லை. ஏனென்றால் அவருடைய கருணையிலும் குரனத்திலும் நமக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவர் அறிந்துவைத்திருக்கிறார். நம்மைவிட அவருக்கு மிக நன்றாகவே இது தெரியும்.
அதனால்தான், எதையும் கேட்பதற்கு முன்னால் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் நீங்கள் அதை அடையவும் செய்யலாம்! அதுதான் உண்மை. நாம் இறைவனிடம் எதையாவது கேட்டுப் பிரார்த்தனை செய்யும்பொழுது, நமக்கு ஞானம் இருப்பதில்லை. யாரோ, எதையோ அனுபவிப்பதைப் பார்த்து விட்டு, நாமும் அதே போன்று கேட்டுவிடுகிறோம்.
உண்மையிலேயே அந்த அந்த அதை அனுபவித்துக் என்பதுகூட நமக்குத் தெரியாது. அவர் அதை அனுபவித்துக் என்று கொள்கிறோம். அது நமக்குள் பொறாமையையும் ஆசைகளையும் ஏ ற் ப டு த் தி வி டு கி ற து . உடனே தேட ஆரம்பிக்கிறோம். நாம்
மிகவும் அடைய விரும்புகிறவற்றை வைத்துக்கொண்டு அவற்றோடு அந்த நபர் படுகிற கஷ்டங்கள், உங்களுக்குத் தெரியுமா ?!
தெய்வீக தன்மை மிக மிகப் புத்திசாலியானது. நமக்கு என்ன தேவை என்பது தெய்வத்துக்குத் தெரியும். நாம் விரும்புவது எல்லாமே கடன் வாங்கப்பட்டவைதான் என்பதும் அதற்குத் தெரியும்.
நாம் என்ன விரும்புகிறோம் என்பதற்கும், நமக்கு என்ன தேவை என்பதற்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. நமக்கு அந்த வித்தியாசம் தெரிவதில்லை. ஆனால் அதற்குத் தெரியும்.
அடுத்த இரண்டு நாள்களுக்கு, நன்றி தெரிவிக்கும் மனப்பாங்குடனும் உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு நபரிடத்திலும் எல்லாவற்றின் மீது அன்பு செலுத்தியும் விழிப்புணர்வுடன் இருந்து வாழ்வதற்குப் பழகிப் பாருங்கள். ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு பொருளும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் தனித்துவமான படைப்பு, தெய்வத்தின் பிரதிபிம்பம்தான் என்பதை நீங்களே உணர்வீர்கள்.
தெய்வீகத் தன்மை மிக மிகப் புத்திசாலியானது. நமக்கு என்ன தேவை என்பது அதற்குத் தெரியும்.
"அடுத்து வருகிற இரண்டு நாள்களுக்கும் எந்தச் குழ்நிலையாக இருந்த போதிலும், அன்புடனேயே பதில்செயல் புரிவேன், '' என்று விழிப்புணர்வுடன் நீங்கள் தீர்மானம் செய்யுங்கள். இரண்டே இரண்டு நாள்கள், நீங்கள் இத்தனை வருடங்களாக எதிர்வினை புரிந்து வந்ததைப்போலல்லாமல், "அன்புடன் பதில்செயல் புரிவேன்," என்று தீர்மானியுங்கள்.
இந்த மன மாற்றமே உங்களுக்குள் பெரிய அமைதியையும் மன இறுக்கம் தளர்ந்த நிலையையும் ஏற்படுத்தும்.
ஒவ்வொரு தனி விஷயத்தையும் எவ்வித வேறுபாடும் இல்லாமல், எவ்வித ஆர்வமும் இல்லாமல், எவ்வித பற்றும் இல்லாமல் நீங்கள் பார்க்கும்பொழுதுதான், நீங்கள் உண்மையான ஆகிறீர்கள், ஒரு உண்மையான துறவி ஆகிறீர்கள்.