KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/தன்னை உணர்வதற்கான வழிSign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

தன்னை உணர்வதற்கான வழி

  • 5.22 ஓ குந்தியின் மைந்தா! துக்கத்திற்குக் காரணமானதும், ஆரம்பமும் முடிவும் கொண்டதுமான புலனின்பங்களையும் சுகங்களையும் நிச்சயமாக புத்திசாலியான ஒருவர் அனுபவிக்க மாட்டார்.
  • 5.23 இப்பொழுது இருக்கிற இந்த உடலை விட்டுச் செல்வதற்கு முன்பே, ஒருவர் பொருள் சார்ந்த புலன்களின் தூண்டுதல்களை வெறுப்பின்றிப் பொறுத்துக்கொண்டு, ஆசை மற்றும் கோபத்தின் வேகத்தைத் தடை செய்வாரென்றால், அவர் இந்த உலகில் நல்ல சூழலில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
  • 5.24 எவரொருவர் தமக்குள்ளேயே இன்பம் அடைந்து, தமக்குள்ளேயே விழிப்புடன் செயல்பட்டு, மேலும் தமக்குள்ளேயே உள்ளொளி கண்டு உணர்ந்து இருக்கிறாரோ, அவர் நிச்சயமாக ஒரு யோகி. (உடல், மனம் மற்றும் ஆன்மா மற்றும் ஒருங்கிணைந்த தன்மை)

அவர் மேலான விடுதலையை அடைந்தவராகிறார்; அவர் தம்மை உணர்ந்தவராகிறார்; அவர் அந்த மேலான பரப்ரூற்மத்தை அடைகிறார்.

  • 5.25 பாவங்கள் அழிக்கப்பட்டு, மற்ற உயிரினங்களின் நல்லைக்காகப் பாடுபடுகிற புனிதமான மனிதர்கள், புலனின்பங்களை மறுத்தவர்கள், தங்களுடைய சந்தேகங்களையும் இருமைத் தன்மையையும் நீக்கித் தெளிவு பெற்றவர்கள் - இவர்கள் அனைவரும் தெய்வீகமான நீத்யானந்தத்தை அடைகிறார்கள்.
  • 5.26 காமம், கோபம் இவற்றிலிருந்து விடுதலை பெற்றவர்கள், மனத்தையும் புலன்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தெரிந்தவர்கள், தம்மை உணர்ந்தவர்கள் - இவர்கள் எளிதாக விடுதலை பெற்றுவிடுவார்கள்.