KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/வாழ்வை நோக்கும் பார்வையே புதுமையாகவிடும்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

வாழ்வை நோக்கும் பார்வையே புதுமையாகவிடும்

மீண்டும் மீண்டும் கிருஷ்ணர் இதுவரை சொன்ன ஸ்லோகங்களில் எல்லாம் 'பற்றுதல் இல்லாமல் செயல்படுதல்' என்ற இந்த ஒரே கருத்தை பல வழிகளில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளார்.

நம்மைச் சுற்றி நடப்பவற்றுக்கு எல்லாம் நாம் சாட்சியாக மட்டுமே வாழும்போதும், வெளிச் சம்பவங்களை நாம் உள்வாங்கிக் கொள்ளாமல் இருக்கும்போதும்தான், வாழ்க்கை நிகழ்கிறது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

நம்மைச் சுற்றி நிகழ்பவற்றை நாம் 'பார்க்க' மட்டுமே செய்ய வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். வெளியில் நடப்பவை நம்மைப் பாதிக்காமல், நம்முள் இருக்கிற உள்வெளியைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த சூட்சுமத்தை உணர்ந்து, இந்த முறையில் வாழ்க்கையை நாம் வாழத் தொடங்கிவிட்ட மாத்திரத்திலேயே, நம்முடைய துக்கங்கள் சுலபமாக மறைந்துவிடும். அது ஏதோ வெளியில் உள்ளவற்றில் ஏற்பட்ட மாற்றம் அல்ல. அது சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றமும் அல்ல. மக்களிடம் ஏற்பட்ட மாற்றமும் அல்ல. அது நாம் பார்க்க விரும்புபவற்றில் ஏற்பட்ட மாற்றம்தான். நம்முடைய பார்வையில் ஏற்பட்ட மாற்றமேதான்.

நாம் வாழுகிற முறை மற்றவர்களிடமும் தானாகவே ஒரு உணர்வுருமாற்றத்தை, பரிணாமத்தை ஏற்படுத்திவிடும்.

விருப்பங்களுக்கும் நம்முடைய எண்ணங்களுக்கும் இசைந்த நிகழ்ச்சிகளை நாம் வசீகரித்துக் கொள்கிறோம்.

நமக்குள்ளே ஆனந்தமாக இருக்கும்பொழுது, நமக்கு அதுவும்கூட ஆனந்தமாகவே இருக்கும். அதனால்தான், நாம் வெளியே என்ன பார்க்கிறோமோ, அது நம் உள் நிலையின் பிரதிபலிப்பாக இருக்கிறது. அது ஒரு கண்ணாடியாகவே இருக்கிறது.

நிபந்தனைகுட்பட்டு, ஒரே ஒரு சோதனைகூட, பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் செய்யப்படும்பொழுது, அதன் முடிவுகள் வேறு வேறு விதமாக அமைகின்றன. காரணம் சோதனை மேற்கொள்ளும்பொழுது, அந்த விஞ்ஞானிகளுக்கு இருந்த மன நிலையைப் பொறுத்தே அதன் முடிவுகளும் அமைகின்றன என்பதை நவீன விஞ்ஞானம் நிரூபித்துள்ளது.

'குவார்க்' போன்ற 'அடிப்படை துகள்களைப்' பற்றிய ஆராய்ச்சி ஒன்றில், வெவ்வேறு பார்வையாளர்களுக்கு ஏற்றபடி இந்தத் துகள்கள் செயல்படும் முறையும் வேறு வேறாக மாறுபட்டிருந்ததைக் கண்டு விஞ்ஞானிகளே அதிசயித்துப் போனார்கள்.

நாம் என்ன பார்க்கிறோமோ, அது நம்முடைய உண்மை. நாம் எதையுமே மாற்ற விரும்பாமல் உள்ளதை உள்ளபடியே பார்த்தோமேயானால், உண்மையுடன் நாம் இசைந்து இருக்கிறோம். அவ்வளவுதான்.

அதனால் வெளியே என்ன நடந்தாலும் எப்போதும் அது நம்முடைய நன்மைக்கே என்ற புரிதலுடன் கவனிக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்பொழுது எப்போதும் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதையும் சூழ்நிலையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருப்பதையும் விட்டு விட்டு, நாம் அமைதியாக இருப்போம்.

நாம் வாழும் திறம் மற்றவர்களிடமும் தானாகவே ஒரு விளைவை, ஒரு உணர்வுருமாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

நாம் ஒரு சாட்சியாக இருந்து பார்க்கும்பொழுது, அதே சூழலைக்கூட முற்றிலும் வித்தியாசமான முறையில் பார்ப்போம். அப்பொழுது இயற்கையாகவே, நம்மை எந்த ஒரு உணர்ச்சியும் அசைக்க முடியாது. ஏனென்றால் நாம் இப்பொழுது சாட்சியாக மட்டுமே இருந்து கொண்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையில் நமக்கென்று எந்த ஒரு சுயநலமும் இல்லை.

அதன் பிறகு நாம் நம்முடைய மனத்திலிருந்து இயங்குவதில்லை, பகுத்தாய்வு செய்வதில்லை; தரம் பிரிப்பதும் இல்லை. அந்தச் சம்பவம் அங்கே இருக்கிறது. அந்த நபர் அங்கே இருக்கிறார். நாமும் அங்கே இருக்கிறோம். அவ்வளவே. மற்றவர்கள் சொல்வதைப் பொறுத்தும் செய்வதைப் பொறுத்தும் நம்முடைய நிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. பிறகு, நமக்கு நாமே தலைவர் என்றாகிவிடுவோம்.