பிரபஞ்சத்திடம் சரணடைவதே புத்திசாலித்தனம்
சரணாகதி பற்றி இன்னொரு முக்கியமான விஷயம், யாரிடம் அல்லது எதனிடம் சரணடைகிறோம் என்பது முக்கியம் அல்ல. எது முக்கியமென்றால், சரணாகதி மட்டும்தான்.
சுவாமி விவேகானந்தர், பதஞ்சலி யோக சூத்திரம் பற்றிய விளக்க உரையில், ' நாம் கடவுளிடம் செய்யும் பிரார்த்தனைகள் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தைத்தான் செய்கின்றன. அவை நமக்குள் மறைந்திருக்கிற சக்தியைத் தட்டி எழுப்பிவிடுகின்றன. நாம் ஆழமாகப் பிரார்த்தனை செய்யும்பொழுது, நம்முள்ளே மறைந்துள்ள நம்முடைய சொந்த சக்தி எழுப்பப்பட்டு, நாம் எந்த உருவில் வழிபட்டாலும் நாம் நம்புகிற அந்த உருவில் வந்து, நம்மீது ஆசீர்வாதத்தைப் பொழியும், " என்று சொல்கிறார்.
பிரபஞ்ச இருப்புத் தன்மை நம்மைக் கவனித்துக் கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்கிற புத்தியைப் பெற்றிருப்பதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம் இறுதியான சரணடைவதும்தான், புத்திசாலித்தனம்.
பிரபஞ்ச இருப்புத் தன்மை ஒரு மனிதத் தன்மையற்ற மிருகத்தனமான சக்தி அல்ல என்பதையும், அதுதான் நம்முடைய ஆனந்த வாழ்க்கைக்குத் திறவுகோலாக இருக்கிற புத்திசாலித்தனமான சக்தி என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.