நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் தியானமாகிவிடும்
நாம் செய்கிற செயலில் நாம் ஒருபோதும் முழுமையாக ஈடுபடுவதே இல்லை. ஒரு எளிய உதாரணம் பசி எடுக்கும்பொழுது என்ன செய்கிறோம் ? பசியைப் போக்குவதற்காக எதையாவது சாப்பிடுகிறோம். ஆனால் அந்த உணவை அனுபவித்துச் சாப்பிடுகிறோமா? நம்முடைய முழுக் கவனத்தை அந்த உணவின் மீது குவியச் செய்கிறோமா?
சாப்பிடும்பொழுது, அநேகமாகச் சாப்பாட்டைத் தவிர மற்ற எல்லாவற்றைப் பற்றியும் நினைக்கிறோம்.
'வீட்டுக்குப் போவதற்கு முன், நான் எந்தெந்த வேலைகளை முடிக்க வேண்டும் ?
நாளை மதிய உணவு சமைக்க என்னென்ன வேண்டும் ?
இந்த ஞாயிற்றுக்கிழமை எங்கே போகலாம்?'என்று சாப்பிடும்பொழுது நம்முடைய மனத்தில் எப்போதும் ஏதாவது ஓடிக்கொண்டே இருக்கும். விழிப்புணர்வு இல்லாமலேயே நம்முடைய அமைப்புக்குள் உணவை அடைத்து வைக்கிறோம்.
நாம் அதிகமாகச் சாப்பிடுவதற்கான காரணம் இதுதான். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் விழிப்புணர்வோடு சாப்பிட்டோமென்றால், ஒருபோதும் அதிகமாகச் சாப்பிடமாட்டோம்.
நம்முடைய அமைப்புக்குள் எதைப் போடுகிறோம் என்ற விழிப்புணர்வு மட்டும் நமக்கு இருந்தால் போதும், அதுவே, நாம் என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பனவற்றைக் கட்டுப்படுத்துகிற அளவிற்குப் போதுமான புத்திசாலித்தனம் கொண்டதாகவே இருக்கிறது.
விழிப்புணர்வோடு இருக்கும் ஒரு நபர், நிகழ்காலத்தில் இருக்கிற ஒருவர், ஒவ்வொரு கணமும் முழுமையான ஈடுபாட்டோடு இருக்கிறார். அவர் செல்லின் பசியை உணர்கிறார். பசியை மொத்தமாக வாழ்ந்துவிடுகிறார்.
அவருக்கு முன்பாக உணவு இருக்கும்போதும், உணவின் ஒவ்வொரு கவளத்தையும் முழுமையாக அனுபவித்துச் சாப்பிடுகிறார். அவர் உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களும் திருப்தி அடைகின்றன. அந்த உணவால் சக்தியூட்டப்படுகின்றன.
நாம் விழிப்புணர்வுடன் சாப்பிடும்பொழுது, ஒவ்வொரு திசுக்களும் முழுத் திருப்தி அடைவதைப்போலத்தான், மற்ற புலன்களுக்கான விஷயங்களையும் முழு விழப்புணர்வுடன் அனுபவிக்கும்பொழுது, அந்தந்த புலன்களுக்குரிய திருப்தி உணர்ச்சியை உணர்கிறோம்.
ஒரு சின்ன கதை:
ஒருமுறை ஒரு ஜென் குருவிடம் ஒரு மனிதர் சென்று, "குருவே, தியானம் என்றால் சொல்லுங்கள்," என்றார்.
குரு பதில் சொன்னார் :
''சாப்பிடும்பொழுது நான் சாப்பிடுகிறேன். தூங்கும்பொழுது நான் தூங்குகிறேன். '
வந்த மனிதர் குழம்பி விட்டார். குருவிடம் கேட்டார்.
'' குரூவை, செய்கிறீர்களோ, அதைப் பற்றி நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் தயவு செய்து தியானம் என்றால் என்ன என்று எனக்குச் சொல்லுங்கள். ''
நாம் விழிப்புணர்வுடன் சாப்பிட்டோமென்றால், ஒருபோதும் அதிகமாகச் சாப்பிடமாட்டோம்.
குரு பதிலளித்தார்:
''இதுதான் தியானம். சாப்பிடும்பொழுது உன்னால் முழுமையாகச் சாப்பிட முடியுமானால், தூங்கும்பொழுது உன்னால் முழுமையாகத் தூங்க முடியுமானால், தியானத்தில்தான் இருக்கிறாய், "
நாம் எதைச் செய்து கொண்டிருந்தாலும் அதில் முழுமையாக ஈடுபடுவதே தியானம். நிகழ்காலத்தில் வாழ்வதும், நிகழ்கிற ஒவ்வொரு கணப் பொழுதினையும் அனுபவித்தலும்தான் தியானம்.