KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/உங்களுக்கு முழுச் சுதந்திரமும் உண்டுSign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

உங்களுக்கு முழுச் சுதந்திரமும் உண்டு

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்,'இருப்பின் மையத்தை உணர்ந்துகொள்ளுகல்' என்னும் இந்தக் கருத்தை உள் வாங்குதலுக்குப் பின்னால் உள்ள அடிப்படையான கொள்கை, அடிப்படையான தத்துவம் இதுதான்: பிரபஞ்ச இருப்புத் தன்மை என்பது நமக்குத் தேவையானவற்றை எல்லாம் அளித்து, ஒவ்வொரு கணமும் நம்மை அன்புடன் கவனித்துக் கொள்கிற தாயாக இருக்கிறது. இந்தப் புரிந்துகொள்ளுதல் நமக்குள் மலரும்பொழுது, நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையை சரணடைகிறோம்.

பெருங்கடலுக்குள் எழுந்து விழுகிற அலை, தான் பெருங்கடலின் ஒரு அங்கம்தான் என்பதை ஆனந்தமாக உணர்கிறது. அந்தப் பெருங்கடலை, அந்த முழுமையான இருப்புத் தன்மையை தன்னுடைய எதிரியாகக் கருதிக்கொண்டு, அதனுடன் போரிட முயற்சி செய்வதற்கு தனக்கென்று தனி ஸ்தூல இருப்பு இருப்பதாக ஒருபோதும் அது நினைத்ததே இல்லை.

ஆழமான புரிந்துகொள்ளுதலினால்தான் சரணாகதி நிகழ வேண்டும். தவிர்க்க இயலாத நிலையில் மேம்போக்கான, ஆழமற்ற ஏற்றுக்கொள்ளுதலினால் அல்ல. ஏற்றுக்கொள்ளுதலால் சரணாகதி நிகழ்ந்தால், அது ஒரு விட்டுக்கொடுத்தல் மட்டுமே. ''ஓ, அது என்னுடைய தலையெழுத்து. அது என்னுடைய நெற்றியில் எழுதப்பட்டுள்ளது, ஜாதகத்தில் முன் கூட்டியே சொல்லப்பட்டு விட்டது. ஜாதகப் பலன்,'' என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. இது உண்மை அல்ல.

நமக்கு முழுச் சுதந்திரம் உண்டு. நாம் நினைப்பதை நம்மால் செய்ய முடியும். நாம், பிரபஞ்ச சக்தியினால் அக்கறையுடன் கவனித்துக்கொள்ளப்படுகிறோம் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு வாழ்க்கையின் ஒட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆழமான புரிந்துகொள்ளுதல் மூலம் இந்த விழிப்பு நிலை ஏற்பட்டால், அது அழகாக இருக்கும். அதுதான் முழுமை. அதுதான் உண்மை.