KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/வெளியில் இருந்து பெறப்பட்டது வெளியிலிருந்தே எடுக்கப்பட்டுவீடும்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

வெளியில் இருந்து பெறப்பட்டது வெளியிலிருந்தே எடுக்கப்பட்டுவீடும்

புலனின்பங்கள் நியதிகளுக்குக் கட்டுப்பட்டவையே! அவை நீடித்து இருப்பதில்லை. அவை தற்காலிகமானவையே என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

பொதுவாக நாம், நமக்கு வெளியே நிகழும் நிகழ்ச்சிகளால் கட்டுப்படுத்தப் படுகிறோம். நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் பல விஷயங்கள்தான் நமக்குள் நிகழும் சுக துக்க நிலைகளுக்குக் காரணமாகின் றன.

மகிழ்ச்சி என்பது நமக்கு நமக்கு வெளியே உள்ள ஏதோ ஒன்றால் உருவாக்கப்படும் ஒரு உணர்ச்சிதான். அது சந்தோஷமான சூழ்நிலையால் உருவாக்கப்பட்டதாகவும் இருக்கலாம்; நமக்குப் பிடித்த ஒரு நபரின் மூலமாகவும் இருக்கலாம்; நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் ஏதோ செயலால் ஏற்பட்டதாகக்கூட இருக்கலாம். இப்படி ஏதோ ஒன்றுதான் நம்முடைய சந்தோஷத்திற்குக் காரணமாக இருக்கிறது.

நமக்கு வெளியில் உள்ள ஏதோ ஒரு சம்பவம் நாம் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்குக் காரணமாக இருக்கும்பொழுது, நம்மைச் சுற்றி துக்கமும் எங்கோ இருந்து கொண்டிருக்கிறது என்பதனையும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

வெளி விஷயங்கள் மூலமாக நாம் நமக்குள்ளே மகிழ்ச்சியை அனுபவிக்கும்பொழுது, அந்த வெளி விஷயம் நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உடன் துக்கத்தை அனுபவிக்கிறோம்.

நாம் எப்போதும் நம்முடைய மகிழ்ச்சியை, நமக்கு வெளியேயுள்ள ஏதோ ஒன்றுடன் இணைத்தே வைத்திருக்கிறோம். நாம் இந்தச் சம்பவத்தால் அல்லது இந்த நபரால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொல்கிறோம்.

இந்த விஷயங்கள் நம்மிடமிருந்து எடுக்கப்பட்டுவிட்டால், நாம் துக்கத்தில் விழுந்துவிடுகிறோம். இது பெண்டுலம் போன்றது, சுகம் என்ற ஒரு எல்லையிலிருந்து துக்கம் என்ற மறு எல்லைவரை ஊசலாடிக் கொண்டிருக்கும்.

நம்முடைய பயிற்சியில் பங்கேற்கும் தியான அன்பர்களை, ஒரு நிலையைக் கற்பனை செய்து அதிலேயே சற்று சொல்லுகிறேன். அந்த அனுபவத்திற்குப் பிறகு, அவர்கள் என்ன உணர்ந்தார்கள் என்பதை விவரிக்கும்படி கேட்கிறேன்.

அவர்களுடைய அந்த மகிழ்ச்சி அனுபவம் ஒரு நபருடன் அல்லது ஒரு சம்பவத்துடன் தொடர்புடையதாகத்தான் வெளியில் சம்பந்தப்பட்டிருக்கிறது அல்லது புலன்களால் பெறப்பட்டதாகவே இருக்கிறது.

உடல், மனம் ஆன்மா மற்றும் ஒருங்கிணைவதே யாகம்.

நாம் இப்பொழுது அந்தச் சம்பவத்தை அல்லது நபரை அவா்களுடைய கற்பனையிலிருந்து நீக்குமாறு சொல்லும்பொழுது, அவர்கள் ஆழமான துக்கம் அடைகிறார்கள். அவர்கள் எதையோ இழந்துவிட்டதைப்போல உணர்கிறார்கள், துக்கப்படுகிறார்கள்.

இப்படித்தான் தற்காலிகமான மகிழ்ச்சியும் வருத்தமும் இருக்கும். இப்படித்தான் நமக்கெல்லாம் சுகமும் துக்கமும் இருக்கும். அந்தச் சம்பவமோ அல்லது அந்த நபரோ, நமக்கு மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ தருவதில்லை. நம்முடைய புலன் உணர்ச்சிகள் மூலம் நாம் உணர்ந்தறிந்த கருத்துக்கள்தான் அதைத் தருகின்றன.

நம்முடைய புலன்களின் மூலம் பெற்ற கருத்துக்களும் அந்தக் கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு நாம் எடுக்கிற தீர்மானமும்தான் இதற்குக் காரணம். அதனால்தான் ஒரே சம்பவம் ஒருவருக்கு மகிழ்ச்சி நிறைந்ததாகவும், இன்னொருவருக்குத் துக்கம் நிறைந்ததாகவும், மூன்றாமவருக்கு எந்தவிதமான பாதிப்புமில்லாமலும் இருக்கிறது.

அந்த நபர் அல்லது சம்பவத்தின் மீது நமக்குள்ள பற்றும், நம்முடைய கட்டுறு மனப்பாங்கின் அடிப்படையில் நாம் எடுக்கிற முடிவும்தான் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் உண்டாக்குகின்றன. சம்பவம் என்னவோ நடு நிலையாகவேதான் இருக்கிறது.

இந்த மகிழ்ச்சி, துக்கம் என்ற நிலைகளுக்கு எல்லாம் ஒரு ஆரம்பமும் உண்டு; ஒரு முடிவும் உண்டு.

ஆனால் ஆனந்தம் என்பது காரணமே இல்லாமல் நிகழ்ந்துகொண்டே இருப்பது. ஆனந்தம் வெளியிலுள்ள இருப்பதில்லை. அது நமக்குள்ளேயே இருப்பது. அது உள்முகமானது. ஒருமுறை நாம் நமக்குள் மையம்கொண்டு விட்டால், நாம் உள்முகமான இன்பத்தை அல்லது ஆனந்தத்தை இடைவிடாமல் அனுபவித்துக் கொண்டிருக்கும்பொழுது, நமக்கு வெளியில் என்ன நடந்தாலும் அது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆனந்தத்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ முடியாது.

எதை அடைய வேண்டுமோ அதை அடைந்துவிட்டோம் ... !

மகிழ்ச்சியும் துக்கமும் நம்முடைய மனம் மற்றும் அஹங்காரத்தின் விளைவாகவும் புலனின்பங்களின் காரணமாகவும் ஏற்படுகின்றன. நம்முடைய அஹங்காரத்தின் விளைவாக பல்வேறு விதமான உணர்ச்சிகளுடன் நம்மை நாமே தவறாக இணைத்துக் கொள்வதுதான், நம்முடைய துக்கத்திற்கான காரணம்.

நம்முடைய இருப்பின் உள் மையம் ஆனந்தமாகவே இருக்கிறது. ஆனால் நாம் மேலோட்டமாகவே இயங்கிக்கொண்டு, இந்த உள் மையத்தைப் பார்க்க முடியாமல் இருந்து கொண்டிருக்கிறோம்.

மாயா என்ற வார்த்தை உண்மையில் அஹங்காரத்தைத்தான் குறிக்கிறது. யா மா கிதி மாயா: என்றால், எது இல்லையோ ஆனால் இருப்பதைப் போன்று காட்சி அளிக்கிறதோ அதுதான் மாயா! மாயை இருப்பதில்லை, ஆனால் இருப்பதுபோலவே பிரச்சினையைக் கொடுக்கும்.

ஒருபோதும் நாம் ஸத்யத்தை உள்ளது உள்ளபடியே பார்ப்பதில்லை, ஏனென்றால் நாம் வாழ்க்கையை நமக்கு இருக்கும் குறுகிய கண்ணோட்டத் தின் மூலமும், ஒருதலைப்பட்சமான கருத்துக்களால் வண்ணம் பூசப்பட்ட

கண்ணாடியின் வழியாகவும்தான் எப்போதுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த மூலகாரணங்களை விழிப்புணர்வுடன் நாம் கவனிக்கத் தொடங்கும்பொழுது, வெளி உலகைச் சார்ந்த ஆசைகளோடு நம்மைப் பிணைத்துக் கட்டியிருக்கும் மகிழ்ச்சி என்னும் கயிற்றின் மீதுள்ள பற்றினை அறுத்து எறிந்துவிடுகிறோம்.

மாயையின் இலக்ஷணம்: எது இருப்பதில்லையோ ஆனால் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறதோ அது மாயை.

நமக்கு என்பதில் இருக்கும்பொழுது, புலனின்பங்களைச் சார்ந்திக்கும் தன்மையானது குகா்த்து எறியப்படுகிறது.

நாம் நமக்குள்ளே மையம் கொண்டிருக்கும்பொழுது, தானாக விஷயங்கள் வரும்பொழுது, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறோம்.

வெளி பொருட்களிலிருந்து பெறக்கூடிய மகிழ்ச்சியை நீங்கள் அனுபவிக்க வேண்டாம் என்றோ அல்லது உங்களது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை. நான் சொல்வதெல்லாம் என்னவென்றால் அது நிகழும்பொழுது விழிப்புணர்வுடன் இருங்கள், அவ்வளவுதான்.

உங்களுக்குள்ளே இருக்கிற ஆனந்தமான நிலையை, நீங்கள் இந்தப் புலனின்பங்களுடன் சேர்த்துவிடாதீர்கள். அவை நடந்தால், அவற்றை நடக்க அனுமதியுங்கள். அவை உங்களுடைய ஆனந்த நிலையின் மேல் விட்டுவிடாகீர்கள்.

உன்னதமான கிருஷ்ண விழிப்புணர்வை அடைவதற்கு, ஆனந்தம் என்னும் அழகான வெளியை அடைவதற்கு, இப்பொழுது நமக்கு ஒரு அழகான நுட்பத்தை வழங்குகிறார்.

நான் முன்பே சொன்னதைத்தான் சரியாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களும் சொல்கிறார்கள். நம்மையும் அறியாமல் நாம் பயம் மற்றும் அச்சம் என்ற உணர்ச்சிகளால் தாக்கப்படும்பொழுது, நம்முடைய உடலை அதற்கு ஏற்ப அசைக்காமல், அதனோடு

உம் இந்த உடலும் மனமும் இல்லாமலேயே வாழ முடியும்.

ஒத்துழைக்காமல், அந்த உணர்ச்சியால் இழுத்துச் செல்லப்படாமல், நாம் ஒருமுறையேனும் நமக்குள்ளேயே நிலைபெற்று இருக்க முடியுமென்றால், ஒரே ஒருமுறையேனும் நம்முடைய இருப்புத் தன்மைக்குள் நிலைத்து நிற்க முடியுமென்றால், நாம் நம்முடைய இடத்தில் நிலைத்து நிலைகொண்டுவிட்டோம். அதாவது, நாம் எதை அடைய வேண்டுமோ அதை அடைந்துவிட்டோம் அதற்குப் பிறகு இந்த உலகில் நாம் ஆனந்தமயமாக வாழ முடியும்.

மக்கள் என்னிடம் திரும்பத் திரும்ப கேட்கிறார்கள். ''இந்த உடல், மனம் இவற்றின் நோக்கம் என்ன ?''

உடல், மனம் இவற்றின் நோக்கம் ஒன்றுதான் 'உடலையும் மனத்தையும் கடந்து ஆனந்தத்தை அடைவது எப்படி ? அதை அனுபவிப்பது எப்படி என்று கற்றுக் கொள்வதுதான்."

உடலையும் மனத்தையும் கடந்து மகிழ்ச்சியாக, ஆனந்தமாக இருக்கக் கற்றுக்கொண்டோமென்றால், நாம் இந்த உடல் மற்றும் மனத்தின் நோக்கத்தை அடைந்துவிட்டோம். முடிந்துவிட்டது. அதன் பிறகு நாம் இந்த உடலையும் மனத்தையும் தூர எறிந்துவிடலாம். நாம் இந்த உடலும் மனமும் இல்லாமலேயே வாழ முடியும்.