KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/ஆசையும் பயமும் தானாகவே நம்மைவிட்டுச் செல்லும்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

ஆசையும் பயமும் தானாகவே நம்மைவிட்டுச் செல்லும்

பிரச்சினை என்னவென்றால் ஒரு ஞானி, ''தொடர்ந்து என்னை நினையுங்கள்," என்று சொல்லும்போது, "அவர் எப்படி அப்படிச் சொல்லலாம் ? எவ்வளவு ஆணவக் காரராக இருக்கிறார் ? நாம் எதற்கு அவரை நினைக்க வேண்டும் ?' என்று நாம் கேட்கிறோம்.

உண்மையில், நமது அஹங்காரம்தான் இங்கு ஒரு விளையாட்டை விளையாடுகிறது. 'கிருஷ்ண உணர்விலேயே' இருக்கச் சொல்வதன் மூலம், கிருஷ்ணர் நம்மைத் தம் சுயநலத்திற்காகப் பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறோம்.

நான் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லும்பொழுது, பலபேர் நான் அவர்களை என் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதாக நினைக்கிறார்கள். நான் அவர்களிடமிருந்து லாபமடைவதாக, பலன் அடைவதாக நினைக்கிறார்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணரோ அல்லது எந்த ஞானியாக இருந்தாலும் நமது உள் உலக ஆசைகளில் இருந்து நாம் விடுபட்டிருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.

நமது உள் தளம் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். நமது எண்ணங்கள் பொதுவாக ஆசையையோ, பயத்தையோ சார்ந்தே இருக்கின்றன. நமது எண்ணங்களெல்லாம் ஆசையையும் பயத்தையும் அடிப்படையாகக்கொண்டு இருப்பதால் நாம் ஆசைகளை அடுக்கிக்கொண்டே போகிறோம். பயத்தினாலும்தான் நமது ஆசைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கின்றன.

நாம் இறக்கும்போது நமது மனம் அனுபவிக்கிறது. மேலுள்ள பற்று நமது இறப்பை வேதனை நிறைந்ததாக்குகிறது. ஒரு ஞானி இந்த நிகழ்வைப் பார்த்திருக்கிறார். அதனால் அதைத் தம் அனுபவத்திலிருந்து பேசுகிறார். 'உடலை விட்டுச் செல்லும் கலை'யின் ரகசியத்தை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், அந்தப் பக்குவத்தைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும் ஞானிகள் விரும்புகிறார்கள்.

தங்களுடைய தூய்மையான கருணையின் காரணத்தால் மட்டுமே அவ்வாறு அவர்கள் விரும்புகிறார்கள்.

கிருஷ்ணர். அதனால்தான் மீண்டும் சொல்கிறார். "நாம் நமது எண்ணங்களை தெய்வீகத்தை நோக்கிச் செலுத்தும்போது, நமது ஆசைகளும், பயமும் துடைக்கப்பட்டு விடுகின்றன. நமது மொத்த இருப்புத் தன்மையும் அந்தத் தெய்வீக சக்தியின் மீதான நன்றியுணர்வால் நிறைகிறது.

இன்னொன்றும் இருக்கிறது. பலர் சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என்ற ஆசையால் கடவுளை நினைக்கிறார்கள். சிலர் நரகத்தைக் கண்டு பயப்படுகிறார்கள், அதனால் கடவுளை நினைக்கிறார்கள். இரண்டுமே ஆசையாலும் பயத்தாலும் நிகழ்வதுதான்.

நாம் கடவுளை நினைப்பதுகூட, நன்றியுணர்வால் மலர்ந்த செயலாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, ஆசையாலோ, பயத்தாலோ இருக்கக் கூடாது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஆசையோ, பயமோ கடவுளை அடைய உதவாது. நாம் கடவுளை நினைப்பதும், அவர் மீது பக்திகொள்வதும் பிரபஞ்ச சக்தியின் மீதான நன்றியுணர்வினாலேயே இருக்க வேண்டும்.

கேள்வி: ஸ்வாமி, பாவம் என்று ஏதாவது உள்ளதா? பாவ புண்ணியங்கள் என்றால் என்ன? நல்லது கெட்டது என்றால் என்ன ?

இதை நான் முன்பே விளக்கியுள்ளேன். மறுபடியும் விளக்குகிறேன்.

பாவம் என்ற கருத்தே சமுதாயத்தால், உங்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்து க்கொள்ள வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்டதுதான். எதையாவது செய்தால் நீங்கள் பாபம் செய்தவர்களாகிறீர்கள். நரகத்திற்குப் போகிறீர்கள் என்றெல்லாம் எதுவும் இல்லை. சமுதாயம்தான் இது போன்ற சட்டதிட்டங்களை உருவாக்கி வைத்துள்ளது.

நன்னடத்தை என்பது உணர்வு நிலையிலிருந்து வர வேண்டும். மன ஸாக்ஷியிலிருந்து இல்லை.

இவற்றுக்கு நன்னடத்தை விதிகள் என்று பெயர். இந்த நன்னடத்தை விதிகளை யாராவது உடைத்தால், அவர்கள் பாபம் செய்தவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். சமுதாயம்தான் பாபம் என்ற கருத்தை உருவாக்கி, உங்களை பயமுறுத்தி வைத்துள்ளது. அப்போதுதான் அது எல்லோரையும் அதன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.

எதுவரை நாம் குற்ற உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறோமோ, எதுவரை நாம் பயத்தாலும் ஆசையாலும் உந்தப்படுகிறோமோ, அதுவரை நாம் பாபம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். நான் இன்னும் ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன், நாம் பாவிகளாக இருப்பதற்குச் சமூதாயம் விதிக்கிற எந்தக் கட்டுப்பாட்டையும் மீற வேண்டியதில்லை. நாம் எந்த நன்னடத்தை விதியையும் உடைக்கத் தேவையில்லை.

எதுவரை கட்டுறுவாக்கத்தின்படி எதுவரை நாம்பயத்தினாலும், ஆசையினாலுமே செயல்களைச் செய்கிறோமோ அதுவரை நாம் பாவங்களை மட்டுமே செய்பவர்களாக இருக்கிறோம்.

நமது உணர்வு நிலை உயர்வாக இருக்கும்போது நம்மால் தவறாக எதுவும் செய்ய முடியாது. நாம் எப்போதும் ஸத்யத்திலேயே இருப்போம்.

நன்னடத்தை என்பது விழிப்புணர்வு நிலையிலிருந்து மனஸாக்ஷியிலிருந்து இல்லை.

விழிப்புணர்வு நிலை மிக உயர்ந்த நிலையில் இருக்கும்போது நாம் எந்தத் தவறும் செய்ய மாட்டோம். ஏனென்றால் நமது உள் தளம் தூய்மையாக இருக்கும். ஆனால் மன ஸாக்ஷிக்காகச் செயல்களைச் செய்யும்போது சமுதாயத்தின் கட்டுறு மனப்பாங்கின்படி செயல்படுகிறோம்.

நாம் சில செயல்களைச் செய்கிறோம். ஏனென்றால் சமுதாய ரீதியாக பார்க்கும்போது, அது சரியான செயல்தான் என்று நாம் நினைக்கிறோம். சமுதாயத்தின் கணக்குப்படி எது சரியோ அதையே நாம் செய்கிறோம். ஏனென்றால் சமுதாயத்தின் அளவுகோலின்படிதான் நாம் ஒரு விஷயத்தைச் சிறந்ததென்று நினைக்கிறோம்.

பயத்தினாலேயே சமுதாயத்தின் மேலுள்ள பற்று நம்மில் செயல்படுகிறது. மற்றவர்களின் கவனத்தை நம்மீது ஈர்ப்பதற்காகவே நாம் செயல்படுகிறோம். நாம் இப்படிச் செய்யும்போதே நாம் பாவம் செய்தவர்களாகி விடுகிறோம். அதனால் நாம் ஏற்கெனவே நரகத்தில்தான் இருந்துகொண்டிருக்கிறோம்.

நாம் பதஞ்ஜலியின் யோக ஸூத்ரத்தைப் பற்றிப் பேசும்போது யம என்பது பற்றிக் குறிப்பிட்டுப் பேசினேன். யம என்பது பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் ஒரு பகுதியாகும். அது ஸத்யம், அஹிம்ஸா, ப்ரஹ்மச்யம், அஸ்தேயம், அபரிக்ரஹம் போன்ற ஐந்து குணங்களின் அடிப்படையில் அமைந்த சுய ஒழுக்க கோட்பாடுகளையே குறிப்பிடுகிறது.

பயத்தின் அல்லது ஆசையின் அடிப்படையில் அமைகிற ஸத்யம் கூட ஒரு நடத்தை விதியாகவே மாறி விடுவதால், அது நிலைப்பதில்லை.

ஸத்யம் நிலையானதாக இருக்க வேண்டுமானால், அது நமது உயர்ந்த விழிப்புணர்வு நிலையிலிருந்து வர வேண்டும்.

நாம் நம்மை உணரும்போது, நமது விழிப்புணர்வு நிலை உயர்வாக இருக்கும்போது நம்மால் தவறாக எதுவும் செய்யவோ, சொல்லவோ முடியாது, நாம் எப்போதும் ஸத்யத்திலேயே இருப்போம்.

யம என்பது அஹிம்ஸையையும் உள்ளடக்கியது. இதுவும் நம்முடைய விழிப்புணர்வு சமுதாயத்திற்காகவோ, நன்னடத்தைக்காகவோ வர வேண்டிய ஒன்றல்ல.

யாராவது, மக்களுக்கு எதிராக எதையாவது செய்தாலோ, வன்முறையில் இறங்கினாலோ மக்கள் அதைப் பற்றி பேசுகிறார்கள். அவர்களைச் 'சமுதாய ரீதியாகப் பொறுப்பற்றவர்கள்' என்று குறை சொல்கிறார்கள். ஆனால் பேசுகிற மக்கள் அது போன்ற சூழ்நிலையைச் சந்திக்க நேர்ந்தால் அல்லது அது போன்ற சூழ்நிலையில் வாழ நேர்ந்தால், அவர்களும் அதே போன்ற வன்முறை செயல்களைத்தான் செய்வார்கள்.

நம் அதிகரிக்கப்பட்ட விழிப்புணர்வு நிலையில் இருந்து அஹிம்ஸா வெளிப்படும்பொழுது அது முற்றிலும் வேறு விதமாகவே இருக்கும். அப்படி நடந்ததென்றால் நாம் அஹிம்ஸாவாதிகள்தான் என்று யாரிடமும் நாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

அஹிம்ஸாவாதிகளாக இருப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டியதும் இல்லை. நமது உள் உலகம் தூய்மையாக இருப்பதால் அது இயற்கையாகவே நடக்கிறது. என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.

என்னுடைய வாழ்வில், நான் ஒரு காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அமர்ந்து தியானம் செய்வதற்காக ஒரு இடம் தேடினேன். சிறிது நேரம் தேடிய பிறகு ஒரு சிறிய குகையைப் பார்த்தேன். உடனே அதில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

அது ஒரு அடர்ந்த காடு என்பதால் பெரும்பாலும் யாருமே அதன் வழியாக வரமாட்டார்கள். நான் சற்று நேரம் தியானம் செய்து கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் என்று தெரியாது. ஆனால் கண்திறந்தபோது ஒரு நீண்ட விஷமுள்ள நாகம் என்னருகில் படுத்திருந்ததைப் பார்த்தேன்.

என் அருகில் அமைதியாக அது படுத்திருப்பதைப் பார்த்தேன். அது நகரவில்லை. பாம்பு என் அருகில் படுத்திருக்கிறது என்ற எண்ணம் என்னுள் எழாததால், நான் எந்தவித எதிர்ச்செயலும் செய்யவில்லை. பாம்பும் ஒரு மனிதனின் அருகில் படுத்திருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல், அசையாமல் படுத்திருந்தது.

நமது உள் உலகம் தூய்மையாக இருந்தால், இயற்கையாகவே நாம் அஹிம்ஸாவாதிகளாக மாறி விடுகிறோம்.

மெதுவாக சில கணங்களுக்குப் பிறகு என் மனத்தில் பயம் ஏற்பட்டது. என் மனத்தில் பயம் ஏற்பட்டவுடனே பாம்பினிடத்திலும் மாற்றம் நிகழ்ந்ததைத் தெளிவாகப் பார்த்தேன். அதற்கும் பய உணர்வு எழுந்தது. தன் தலையைத் தூக்க ஆரம்பித்தது.

என்ன நடந்தது பார்த்தீர்களா? நான் தியானத்தில் இருந்தபோது பயம் ஏற்படவில்லை. எனது உள் உலகம் முழுவதும் காலியாக இருந்தது. அதனால் எனக்கு ஆபத்து ஏற்படும் என்ற உணர்வு பாம்பிற்கு ஏற்படவில்லை. நான் எனக்குள் ஆழ்ந்திருந்ததால், பாம்பினாலும் என் பக்கத்தில் அமைதியாகப் படுத்திருக்க முடிந்தது. என்னால் அதற்கு ஆபத்தில்லை என்று பாம்பிற்குத் தெரிந்திருந்தது. என்னுடைய மனம், என்னுடைய உள் உலகத்தில் பயத்தை உருவாக்காதவரை பாம்பு அமைதியாகக் கிடந்தது.

ஆனால் நான் கண்களைத் திறந்த சில நிமிடங்களில் பயம் எனக்குள் அதிகரித்தது. பாம்பும் அதை அறிந்து கொண்டது. என்னால் அதற்கு ஆபத்து வரக்கூடும் என்று உணர்ந்தது. நான் அதைத் தெளிவாக உணர்ந்துகொண்டேன். அதனால் அதோன் தியான நிலையில் அமைதியுடன் எழுந்து, அங்கிருந்து நடந்து சென்று விட்டேன்.

புரிந்துகொள்ளுங்கள், உங்கள் விழிப்புணர்வு நிலை அதிகரிக்கும்பொழுது, அஹிம்ஸா உங்களுக்குள் நிகழ்கிறது. நீங்கள் அந்த அஹிம்ஸா உணர்வை உங்களைச் சுற்றிப் பரவ விடுகிறீர்கள். நீங்கள் அதற்கென்று ஒரு தனி முயற்சி எடுக்கத் தேவையே இல்லை. அது தானகவே நிகழ்ந்துவிடும்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், எண்ணங்கள் சமுதாயத்தால் உங்களைக் கட்டுக்குள் வைப்பதற்காக உருவாக்கப்படுகின்றன. நல்ல செயல்கள் என்பது விழிப்புணர்வு நிலையில் இருந்து நடக்கட்டும்; மனஸாக்ஷியினால் இல்லை. அதனால் நீங்கள் விழிப்புணர்வு நிலையை உயர்த்துங்கள். புண்ணியம், நன்மை இவை உங்களுக்குள் இயற்கையாக நடைபெறும்.