பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)
பிரம்மாவின் பகல், ஒரு விளக்கம்
- 8.15 என் மீது பக்தி வைத்துள்ள சிறந்த யோகிகள் என்னை அடைந்த பிறகு, துன்பங்களின் இருப்பிடமும், நிலையற்றதுமாகிய, இவ்வுலகில் மீண்டும் பிறக்காமல் மிக உயர்ந்த முழுமை நிலையை அடைகிறார்கள்.
- 8.16 மிக உயர்ந்த உலகங்களில் இருந்து மிகத் தாழ்வான இந்தப் பொருள்சார்ந்த உலகம்வரை, எங்கெல்லாம் பிறப்பும் இறப்பும் நிகழ்கிறதோ அங்கெல்லாம் துக்கமே உள்ளது. ஓ! குந்தியின் மகனே, என்னை அடைந்தவர் மீண்டும் பிறப்பதே இல்லை.
- 8.17 மனிதர்களின் கணக்குப்படி ஆயிரக் கணக்கான ஆண்டுகள் சேர்ந்ததுதான் ப்ரூமாவின் ஒரு பகல், அவரது இரவும் அப்படியே.
- 8.18 'தோன்றாத நிலை'யில் இருக்கும் ஆத்மாக்கள் அனைத்தும் ப்ரூமாவின் பகலின் தொடக்கத்தில் உயிரினங்களாக வெளிப்படுகின்றன. ப்ரூமாவின் இரவு வரும்போது அவை மீண்டும் 'தோன்றா நிலை'யிலேயே ஒடுங்கி விடுகின்றன.