என் நினைவாகவே இருங்கள்
- 8.11 வேதத்தைக் கற்றறிந்தவர்களும், துறவில் மிகச்சிறந்த முனிவா்களும் ப்ரும்மத்தில் நுழைகிறார்கள். அந்த முழுமையை அடைய விரும்பும் ஒருவர் ப்ரும்மசாயத்தை அனுசரிக்கிறார். ஒருவர் எவ்வாறு ப்ரக்ருதியை, ஜீவன்முக்தியை அடைய முடியும் என்பதற்கான வழிமுறைகளை நான் இப்போது உனக்கு விளக்கப் போகிறேன்.
- 8.12 புலன்களின் கதவுகளை அடைத்து, மனத்தை இதயத்தில் நிறுத்தி, உயிர் மூச்சை உச்சந்தலையில் நிறுத்தி, ஒருவர் யோகத்தில் தம்மை நிலைக்கச் செய்கிறார்.
- 8.13 இத்தகையதொரு யோக நிலையில் இருந்துகொண்டு புனித மந்திர ஒலியும் மிக உயர்ந்த மந்திர எழுத்துக்களின் தொகுப்புமான 'ஓம்' என்பதை உச்சரித்தபடி, மிக உயர்ந்த சக்தியை நினைத்தபடி யார் தம் உடலை விடுகிறாரோ, அவர் நிச்சயமாக பரம்பொருளுடன் இணைகிறார்.
8.14 பார்த்தா! எப்போதும் என் நினைவாகவே இருப்பவர்களுக்கு நான் எளிதில் அணுகக்கூடியவனாகவே இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் பக்தியில் கரைந்து, தொடர்ந்து எனக்குத் தொண்டாற்றுபவர்களாக இருக்கிறார்கள்.
உள் உலக மாற்றத்திற்காகவே உருவானவை ஸ்லோகங்கள்
ப்ரும்மத்தை, கடவுளை அல்லது அந்த உயர்ந்த உணர்வு நிலையை அடைவதற்குப் பல வழிமுறைகளைச் சொல்கிறார் கிருஷ்ணர். வேதத்தில் சிறந்தவர்கள் ப்ரும்மத்தை அடைகிறார்கள் என்று
வேத ஒலிகள் உள்ளிருப்புத் தன்மையை தூய்மைப்படுத்துகிற சக்தி கொண்டனவாக இருக்கின்றன.
அவர் சொல்கிறார்.
கிருஷ்ணர் இவ்வாறு சொல்லும்போது, வெறுமனே விதைகளைப் படித்து விட்டு மறந்து விடுவதை அவர் குறிப்பிடவில்லை; இன்னும் ஆழமாகப் போவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
முந்தைய ஸ்லோகத்தில் கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதை நினைவுப்படுத்திப் பாருங்கள். நாம் இறக்கும்தறுவாயில் எதை நினைக்கிறோமோ அது அது நமது அடுத்த பிறவியோடு நேரடியாகத் தொடர்புடையதாக இருக்கிறது.
ஒருவர் வேதங்களிலேயே தொடர்ந்து ஆழ்ந்து இருப்பாரேயானால், அவரது நினைவுகளும் தொடர்ந்து அதிலேயே ஆழ்ந்து இருக்கும் அதைத்தான் கிருஷ்ணர் , 'வேதங்களிலேயே ஆழ்ந்திடுங்கள்,'' என்ற தமது வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்.
வேத நூல்களை மீண்டும் மீண்டும் படித்து அதன் சத்தியங்களை உள்வாங்கிப் புரிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வேதங்களின் ஆழமான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அவை சக்தியின் அச்சாணிகள். வேத நூல்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அனைத்து ஸ்லோகங்களும்
சக்தியின் சுமைகள். நாம் அவற்றைப் படிக்கும்போது, அவை உருவாக்கும் சக்தி போதுமானது. அந்த ஒலிகள் நமது உள்ளிருப்புத் தன்மையை தூய்மைப்படுத்துகின்றன. இந்த ஸ்லோகங்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை. அவை உங்களை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தவை.
அவை உள் உலக மாற்றங்களுக்கெனவே வடிவமைக்கப்பட்டவை!
வேத மந்திரங்களைக் கவனித்துப் பார்த்தீர்களானால் அவை ஒரு குறிப்பிட்ட விதத்தில்தான் உச்சரிக்கப்படும்; ஒரு குறிப்பிட்ட தொனியில், ஸ்ருதியில்தான் சொல்வார்கள். இவை உச்சாடனம் செய்யப்படும்போது நமது உடல் -மன அமைப்பை தூய்மைப்படுத்துகிறது, நமது உள் இருப்புத் தன்மையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பலருக்கு இந்த
உண்மை தெரியாது; ஆனாலும் அவை நமக்கு சக்தியளிக்கின்றன.
மிகப் பழங்கால கோயில்களுக்குச் செல்லும்போது, உள்ளே கருவரையில் ஒரு வித அமைதி நிலவுவதை உணரலாம். அந்த இடங்களுக்குள் நுழையும் போதே மனம் இயற்கையாகவே அமைதி அடைகிறது. ஏன் அப்படி ஆகிறது என்று நினைக்கிறீர்கள்? பிரகாரத்தில் நுழைந்த கணமே நமக்குள் ஒரு ஆனந்தம் ஏன் கிடைக்கிறதென்று நினைக்கிறீர்கள்?
அர்ச்சகர் வேத மந்திரங்களைச் சொல்லும்போது அந்த இடங்களில் சக்தி நிறைகிறது. அந்த ஒலி, அபரிமிதமான சக்தியை வெளிப்படுத்துகிறது; அந்த இடம் முழுவதையும் சக்தியால் நிரப்புகிறது.
இன்னொரு விஷயம் என்னவென்றால் வேதங்கள் 'தன்னைத்தானே' உணர்வதைப் பற்றிச் சொல்கின்றன. அவை ஞானத்திற்கான வழிகாட்டிகள். அதனால்தான், அவற்றை நாம் ஒதும்போது, ஞானத்திற்கான மன நிலையை நாம் அடைகிறோம். நமது மனமும் அந்த அலைவரிசைக்கு இசைவு செய்யப்படுகிறது.
ஒரு சினிமாவைப் பார்த்து விட்டு நாம் தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் அந்தக் காட்சிகளை நம் மனம் நினைக்குமல்லவா? அந்தக் கதையில் வந்த நல்ல மனிதர் என்ன சொன்னார், கெட்ட மனிதன் என்ன சொன்னான் என்று யோசிப்போம் அல்லவா? ஓரிரு நாள்களுக்கு அதே
தாக்கத்தில் இருப்போம். அது போன்றதுதான் வேத உச்சாடனங்களும்.
அதேபோல வேதங்களைப் படிக்கும்பொழுது, நாம் அதை முழுமையாகப் புரிந்துகொள்ளாவிட்டாலும் ஒருவிதத் தாக்கத்தில் இருப்போம். அவை என்ன சொல்கின்றன, ஞானம் என்றால் என்னை உணர்வது எப்படி? ஞானம் அடைந்தவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள்... இது போன்ற எண்ணங்கள் நம் மனத்தில் மீண்டும் ஓடிக்கொண்டே இருக்கும்.
இதைத்தான் கிருஷ்ணர் விரும்புகிறார்! 'தன்னை உணர்தல்' என்ற இலக்கை நோக்கியே நமது எண்ணங்கள் இயக்கப்படும்போது, செலுத்தப்படும்போது, இயற்கையாகவே, மரணத்தறுவாயிலும் ஞானம் பற்றிய, தன்னை உணர்தல் பற்றிய எண்ணங்களாகவே நம்முள் எழும்; நமது எண்ணங்கள் ஞானத்தைப் பற்றியதாகவே நிச்சயம் இருக்கும்.
தாய்மையடைவதே பிரம்மசரியம்
கிருஷ்ணர் சொல்கிறார் "நாம் வேதங்களைப் படிக்கும் போதும், அந்த வாழ்க்கை முறையை வாழும் போதும் நாம் பிரம்மசரியத்தைக் கடைப்பிடிக்கிறோம். நாம் இந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாகவே ப்ரும்மசரியம் என்பது தவறான அர்த்தத்தில் கையாளப் பெறுகிறது.
ப்ரும்மசரியம் என்றால் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாமல் இருப்பது என்று நினைக்கிறார்கள் ப்ரும்மசரியத்தின் நேரடியான பொருள், 'தன்னை உணர்வதற்கான பாதையில் செல்பவர்' என்பதுதான்.
ப்ரும்மம் என்றால் 'தான்', சரியம் என்றால் 'நடப்பதற்கான பாதை'. ப்ரும்மசாரி என்றால் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாதவர் என்று பொருள் அல்ல. ப்ரும்மத்தை அடைவதற்கான பாதையில் செல்பவரே ப்ரும்மசாரி. இந்தச் சொல்லின் சரியான பொருள் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
ஒரு சின்ன கதை:
கடல் கேப்டன் ஒருவர் ஒரு குழுவிடம் தம் வீரசாகசங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். தென் அமெரிக்கக் கடற்கரையில் எங்கள் கப்பல் விபத்துக்குள்ளாகி அருகிலிருக்கும் தீவில் கரை ஒதுங்கினோம். அங்கே ஆதிவாசிப் பெண்களைப் பார்த்தேன். அவர்களுக்கு நாக்கே இல்லாமல் இருந்தது. அவர்கள் இருந்தார்கள், '' என்று சொன்னார்.
ஒரு பெண் "கடவுளே! அவர்களால் பேச முடியாதா?" என்று கேட்டாள்.
கேப்டன், "ஆமாம் அவர்களால் பேச முடியாது. அதுதான் அவர்களை மூர்க்கர்களாக மாற்றியிருந்தது. அதனால்தான், அவர்கள் முரட்டுத்தனமான கோபத்தில் இருந்தார்கள்," என்றார்.
புரிந்துகொள்ளுங்கள், நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அடக்குமுறை ஒருபோதும் நல்ல மாற்றங்களைக்கொண்டு வராது; அது மன உளைச்சலைத்தான் கொண்டு வரும். ஆசைகளை அடக்குவது என்பது ஆபத்தானது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலையைப் போன்றது. எப்பொழுது அது வெடிக்கும் என்றுகூட நமக்குத் தெரியாது.
ப்ரும்மசரியம் என்ற சொல், எல்லாவற்றையும் விட்டு, விட்டு, விட்டு, துறவறத்தை ஏற்பது என்பதைக் குறிப்பதல்ல. நமது உள் உலகம் தூய்மைப் படுத்தப்பட வேண்டும்; நமது உள் உலகம் கற்பனையிலிருந்து விடுபட வேண்டும்; ப்ரும்மத்துடன் கலக்க நாம் உண்மையாய் முயற்சி செய்ய வேண்டும்; நாம் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்; அதுதான் ப்ரும்மசரியம்.
கிருஷ்ணர் இங்கே யோக சாஸ்த்ரத்தின் ஆழமான அத்யங்களைப் பற்றிச் சொல்கிறார். மிகப்பெரிய லட்சியங்களை வேறு வேறு ஞானிகள் வேறு வேறு விதத்தில் சொல்கிறார்கள் என்றாலும், சத்தியங்கள் மாறாமல் அப்படியேதான் இருக்கின்றன.
யோகம் என்பதன் உண்மையான பொருளைப் புரிந்துகொள்ளாத ஒருவர் இந்த ஸ்லோகத்தைப் படித்தால் அவர் மிகவும் குழம்பி விடுவார். இப்போது மக்கள் யோகா என்றாலே அது ஒரு உடற்பயிற்சி, உடலை இளைக்கச் செய்வதற்கான ஒரு வழி என நினைக்கிறார்கள்! ஆனால் யோகாவிற்கு அதைவிட ஆழமான பொருள் உண்டு. கிருஷ்ணர் அதைப் பற்றிப் பேசுகிறார்.
அடக்குமுறை அக மாற்றங்களைக் கொண்டு வராது; மன உளைச்சலைத்தான் கொண்டு வரும்.
யோகம் என்பது உடல், மனம், ஆத்மா இவற்றை ஒன்றிணைத்து தொடர்ந்து இருக்கும் உண்மையைத்தான் வேறு வேறு ஞானிகள் வேறு வேறு விதமாகப் பேசுகிறார்கள்.
யோக சாஸ்திரத்தின் தந்தையாகக் கருதப்படும் பதஞ்ஜலி தமது அஷ்டாங்க யோகாவில் இதைப் பற்றிப் பேசுகிறார்.
அஷ்டாங்க யோகம் என்பது யோகாவின் எட்டு பிரிவுகளைக் குறிப்பிடுகிறது. அதில் இரண்டு பிரிவுகள் ப்ரத்யாவாரம் மற்றும் தாரணை. இந்த இரண்டு பிரிவுகளும் கிருஷ்ணர்
குறிப்பிடுகிற சத்தியங்களைப் பற்றி விளக்கமாகச் சொல்கின்றன.
முதலில் நாம் இந்த ஸ்லோகத்தையும் இந்த ஸ்லோகத்தோடு தொடர்புடைய ப்ரத்யாஹாரத்தையும், மற்றும் தாரணை பற்றியும் நன்றாகப் புரிந்துகொள்வோம்.
உடல், மனம், ஆத்மா இந்த மூன்றையும் தொடர்ந்து ஒருங்கிணைக்கும் வழிமுறையை நடைமுறைக்கு கொண்டுவருவது எப்படி? நாம் என்ன செய்ய வேண்டும் ?
தெரிந்துகொள்ளுங்கள், நமது உடல்-மன அமைப்பு பல்வேறு வெளி உலக விஷயங்களுக்கேற்ப பல்வேறு பிரதிச்செயல் செய்கிறது. இந்த வெளி உலக விஷயங்கள்தான், நமது உடல்-மன அமைப்புக்கு ஆஹாரமாக, அதாவது உணவாக இருக்கிறது. நமது புலன்கள்தான் இந்த உணவை நாம் எடுத்துக்கொள்வதற்கான வாயில்கள்.
புரிந்துகொள்ளுங்கள், விஷயங்கள்தான் நமது மனத்திற்கு ஆஹாரமாகிறது. நமது மனம் வெளி உலகில் இருந்து கிடைக்கும் இந்த உணவுகளினால்தான் வேலை செய்கிறது. நாம் சூழ்நிலைகளுக்கேற்ப எதிர்ச்செயல் செய்கிறோம். நமது மனம் தொடர்ந்து இதனால் ஆக்ரமிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான எண்ணங்கள் இருப்பதனால்தான் நமது மனம் இருக்கிறது, இயங்குகிறது. நாம் தொடர்ந்துமாறிக்கொண்டே இருக்கிறோம். நமது ஐந்து புலன்கள்தான் இந்த உணவு நம் மனத்திற்குள் செல்வதற்கான வாயில்களாக இருக்கின்றன.
ப்ரத்யாஹாரம் என்றால் இந்த ஐம்புலன்களின் பிடியில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்வதே! இதிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்கிறோம் என்றால், நாம் உடல் ரீதியாக நம் புலன்களை மூடிக் கொள்கிறோம் என்பது இல்லை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ப்ரத்யாஹாரம் என்பது நமது புலன்களை உடல் ரீதியாக மூடிக் கொள்கிறோம் என்பது இல்லை.
நாம் கண்களை மூடிக் கொண்டாலும் உள்ளே ஒரு டெலிவிஷன் ஓடிக் கொண்டிருக்கிறது இல்லையா? நமது காதுகளையும் வாயையும் மூடிக் கொண்டாலும் உள்ளே அரட்டை நடந்து கொண்டிருக்கிறதல்லவா? நாம் உண்மையில் புலன்களை மூடுவதில்லை. அப்படியே அதை நாம் உடல் ரீதியாக மூடினாலும்கூட நம் மனம் வேலை செய்கிறது.
நான், ''உங்கள் புலன்களை மூடிக்கொள்ளுங்கள்,'' என்று சொல்லும்போது, ''உள்ளே இருக்கும் 'எண்ண விவரங்களை' ஆராய்ச்சி செய்து, அவற்றைச் செயல் படுத்தாதீர்கள்,'' என்ற பொருளில்தான் சொல்கின்றேன்.
நான் சொல்வது என்னவென்றால், வெளியே நடக்கிற விஷயங்களைக் கேளுங்கள். சுற்றிலும் நடப்பதை முகருங்கள். ஆனால் எதற்கும் பிரதிச்செயல் செய்யாதீர்கள். எதுவாகிலும் ஸாக்ஷியாக இருந்து கவனியுங்கள், அவ்வளவுதான்.
இந்த வழியில் மட்டும்தான் நாம் நமது புலன்களை மூட முடியும். நாம் எண்ணங்களை அடக்கவோ, உருவாக்கவோ கூடாது. நாம் வெறுமனே அவற்றைக் கண்காணிக்க வேண்டும்.
நாம் நமது விழிப்புணர்வை அதிகரிக்கும்போது, புலன்களின் மூலமாக
தொடர்ந்து உள்ளே போடப்படும் ஆஹாரத்தை நிறுத்தி விடுகிறோம். அதிகரிக்க அதிகரிக்க எண்ணிக்கையும் மெது மெதுவாகக் குறைய ஆரம்பிக்கும். நமது விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க, இயற்கையாகவே நமது (TPS) ஒரு நொடிக்கு வரும் எண்ணங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.
கிருஷ்ணர் இதைத்தான் 'மூடுவது' என்று இப்படி செய்யும்போது நமது விழிப்புணர்வு நிகழ்காலத்தில் அதிகரிக்கிறது. நாம் நமது புலன்களை
ப்ரத்யாஹாரம் என்றால் இந்த ஐம்புலன்களின் பிடியில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்வதே! மூடி, தூய்மையான, முழு விழிப்புணர்வில் இருக்கும்போது, நமது தெய்வீகத்தில் நாம் நிலைக்கிறோம்.
நமக்குள்ளே பிரதிபலித்துக்கொண்டிருக்கிற தெய்வீக கனவில் நமது ஒருமைப்பட்ட மனதை நிலைநிறுத்துகிறோம். இயற்கையாகவே மனம் பொருந்தி விடுகிறது. நமது மூச்சுக் காற்றைப் பற்றிய விழிப்புணர்வு மேலும் கூர்மையாகிறது. நமது உடல் - மன அமைப்பில் வாழ்க்கை சக்தியான பிராணசக்தி நிறைவதை உணர்கிறோம்.
நமது விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க நமது (TPS). ஒரு நொடிக்கு வரும் நமது எண்ணங்களின் எண்ணிக்கை குறையும்.
மனம் ஒருமுகப்படுவதையே தாரணை என்று குறிப்பிடுகிறோம். நமது விழிப்புணர்வை அதிகரித்து, நமது புலன்களால் நுகரப்படும் வெளி உலக இன்பங்களைக் குறைக்கும்போது, நமது எண்ண அமைப்பைச் சக்தியூட்டுகிற உயிர்ச்சக்தியின் மீது நம்மால் கவனம் செலுத்த முடிகிறது.
அப்போது நாம் இயற்கையாகவே மனம், உடல், ஆத்மா இவற்றை ஒருமுகப்படுத்துகிறோம். இதைதான் யோகா என்கிறோம்
இது வெறுமனே படிப்பதற்கான நுட்பமல்ல
கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் இந்த ஸத்யத்தைப்பற்றிப் பேசுகிறார். அவர் இந்த உண்மையைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அர்ஜுனனிடம் இறப்புக்கு முந்தைய அந்தக் கடைசி நினைவின் முக்கியத்துவத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் சொல்கிறார். இதற்கு முந்தைய ஸ்லோகங்களில் அவர் இதைப் பற்றி சொல்கிறார்.
புரிந்துகொள்ளுங்கள், இது மிகச் சிறந்த நுட்பம். இது நடைமுறைப் படுத்தாமல் வெறுமனே படிப்பதற்கான நுட்பம் அல்ல. மக்கள் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, மிக அழகாக உடலை விட்டுச் சென்றிருக்கிறார்கள் !
புரிந்துகொள்ளுங்கள், இதைப் பயிற்சி செய்து, மிக உயர்ந்த சக்தியான உச்சமான விழிப்புணர்வு சக்தியுடன் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஞானிகள் கடவுளின் மீது நிலைத்த மனதுடையவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது அசைக்க முடியாத பக்தியைச் சுதந்திரமாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.
ஞானிகள் ஆடிப்பாடி கடவுளின் புகழைப் பாடியபோது, மக்கள் அவர்களைப் பார்த்துச் சிரித்தார்கள். ஆனால் இந்த ஞானிகளுடைய பக்தியின் சக்தியை, அவர்கள் இந்த உடலை விட்டு அந்தப் பிரபஞ்ச சக்தியோடு கலந்த பிறகுதான் உணர்ந்து கொண்டார்கள்.
யார் தொடர்ந்து மோகத்தின் பாதையில் இருக்கிறார்களோ, சஞ்சலமற்ற நிலையான மனத்துடன் யார் அந்த தெய்வீக சக்தியின் நினைவாகவே இருக்கிறார்களோ அவர்கள் தம்மை வந்து அடைவதாகக் கிருஷ்ணர் சொல்கிறார்.
கிருஷ்ணர் நம்மை எப்பொழுதும் அதே நிலையில் இருக்குமாறு சொல்கிறார். கிருஷ்ண உணர்விலேயே நம்மை எப்பொழுதும் நிலைத்து இருக்குமாறு சொல்கிறார்.