ஞானியின் வார்த்தைகள் உங்களுக்குள் ஊடுருவ அனுமதியுங்கள்
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், எதிர்க்கிற சக்தியும் தகுதியும் இருந்தால் எதிர்ப்போம். எதிர்க்க முடியாத நிலையில் இருந்தால் கேள்வி கேட்பதில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் நமக்குள் ஊடுருவ, நமக்குள் நுழைய நாம் அனுமதிப்பதில்லை.
அதனால்தான், 'நான் சொல்கிற வார்த்தைகள் அனைத்தும் உண்மை' என்ற உறுதிமொழியை இப்போது உங்கள் முன் எடுக்கிறேன். வெளி உலகைப் புரிந்துகொள்ள நம் மனம் மட்டுமே போதும்; நமது தர்க்க அறிவே போதுமானது. ஆனால் உள் உலகில் ஒன்றை அனுபவிக்க குருவின் உதவி தேவை.
தாம் வெளி உலகில் பெற்ற ஒரு அனுபவத்தை மீண்டும் உருவாக்குவதற்கான சூத்திரத்தைத் தருபவர் விஞ்ஞானி. உதாரணமாக நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைப் பற்றிய விதியைத் தந்தார். ஒரு ஆப்பிள் மரத்திலிருந்து கீழே விழுவதைப் பார்த்தபோது அவருக்கு ஒரு உண்மை புரிந்தது. அதை மற்றவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு விதியை உருவாக்கினார். வெளி உலக உண்மையை அனுபவித்துப் புரிந்துகொண்டு, மீண்டும் அதே அனுபவத்தைக் கொடுக்கக்கூடியவரை விஞ்ஞானி என்று சொல்கிறோம்.
அதேபோல் உள் உலக உண்மையை அனுபவித்துப் புரிந்துகொண்டு, அதே அனுபவத்தை மற்றவர்களும் புரிந்துகொண்டு, அனுபவிக்கும் வகையில் சூத்திரமாக வகுத்துத் தருபவர் 'மெய்ஞானி'. அதாவது அதே அனுபவத்தை மீண்டும் மற்றவர்களுக்குள்ளும் ஏற்படுத்தக்கூடிய சூத்திரத்தைத் தருபவர் 'மெய்ஞானி.'
அதை உள் உலகிலும் அனுபவமாகப் பெற உதவுபவர் குரு.
இந்தத் தியான முகாம் முழுவதுமே, எனக்குள் நிகழ்ந்த அனுபவத்தை, உங்களுக்கும் கொடுப்பதற்கான சூத்திரம்தான். அதனால் எனக்கு என்ன அனுபவம் நிகழ்ந்தது என்பதையும் இந்த சூத்திரம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும் நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.
நியூட்டனிடம் புவியீர்ப்பு விசை பற்றிய விதியை அவர் எவ்வாறு கண்டறிந்தார் என்று யாராவது கேட்டால், அவர் தமக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சொல்ல ஆரம்பிக்கும்போது, முதலில் அவர் ஆராய்ச்சியை எப்படி ஆரம்பித்தார் என்பதைச் சொல்லியே ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.
ஆப்பிள் விழுவதை எப்படிப் பார்த்தார்? அப்பொழுது அவருக்குள் என்ன நிகழ்ந்தது? எப்படித் தர்க்க ரீதியாக, படிப்படியாக அந்த முடிவுக்கு வந்தார் என்பதையெல்லாம் விளக்கத்தான் வேண்டும்.
இப்போது நானும் அதேபோல், எனக்குள் இந்த அனுபவம் எப்படி நிகழ்ந்தது, இந்த சூத்திரம் எப்படி அதே அனுபவத்தை உங்களுக்குள்ளும் நிகழ்த்த முடியும் என்று விளக்குகிறேன்.
இரண்டு விஷயங்களை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எப்படி இந்த அனுபவம் எனக்கு நேர்ந்தது என்பதையும், இரண்டாவது அனுபவத்தை எப்படி உங்களுக்குள் நிகழ்த்த முடியும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பிறப்பு, இறப்பு என்ற சூழலிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி பற்றற்ற நிலைதான்.
இதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நம்மால் இந்த சூத்திரத்தின் அடிப்படையில் வேலை செய்ய முடியாது.
நான் ஞானமடைவதற்கு முன்பு வாரணாசி என்ற புனிதத் தலத்தில் இருந்தேன். அங்கே ஒரு மூத்த சந்நியாசியைச் சந்தித்தேன். வயதானவர். அவர் கேன்சர் வியாதியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் ஒரு மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். எப்படியோ அவரைக் கவனித்துக்கொள்கிற பெரிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அவர் மிகப்பெரிய சந்நியாசி. ஆனால் ஞானமடைந்தவர் இல்லை. மிகப்பெரிய தபஸ்வி, ஞானமடையவில்லை என்றாலும் பெரிய தபஸ்வி. அவரது கடைசி நாள்களில் அவரைப் பார்த்துக்கொள்கிற பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவர் மருத்துவ மனையில் இருந்தபொழுது தினமும் அவருக்கு உணவுகொண்டு போய்க் கொடுத்தும், அவரது தேவைகளைக் கவனித்துக்கொண்டும் இருந்தேன்.
ஒரு நாள் அவரது படுக்கைக்கு அருகே இருந்த ஒருவர் மெல்ல இறந்து கொண்டிருந்தார்; மெல்ல மரணமடைந்து கொண்டிருந்தார். டாக்டர்கள் சுற்றிலும் நின்றுகொண்டு தங்களால் முடிந்ததைச் செய்து அவரைக் காப்பாற்ற முயன்று கொண்டிருந்தார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது நான் ஞானமடையவில்லை.
ஆனாலும் எனக்கு மிக அருமையானதொரு ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது.
மரணம் - அது அழகானதொரு அனுபவம்
இதற்கு முன்பு எனக்கு ஏற்பட்ட என்னுடைய சொந்த மரண அனுபவம்; அது மிகவும் அழகான அனுபவம்.
அதே நகரத்தில் அந்த அழகான ஆன்மீக அனுபவம் எனக்கு முன்பு ஏற்பட்டிருந்தது. நான் அப்போது வாரணாசியில் மணிகர்ணிகா காட்டில் இருந்தேன். அங்கேதான் இறந்த உடல்களைத் தகனம் அங்கேதான் எனது உடல் இறப்பதையும் எனது ஆத்மா உடலையும் மனதையும் தாண்டிச் செல்கிற அனுபவத்தையும் நான் பெற்றிருந்தேன்.
அந்த அனுபவத்தின் காரணமாக அந்த மனிதருக்கு என்ன நடக்கிறது என்பதை என்னால் பார்க்க முடிந்தது. மெதுவாக அவருக்குள் மரணம் நிகழ்ந்தபோது அவர் துன்பப்பட்டார்; போராடினார்.
முதலில், உடலில் ஏற்பட்ட அளவு கடந்த வலியால் துக்கப்பட்டார். அவரது முகத்தில் வேதனை தெரிய ஆரம்பித்தது. அடுத்ததாக அவரது மூச்சு திணற ஆரம்பித்தது; மூச்சு
மனித அறிவுக்கு எட்டாத மிகப்பெரிய அசாத்தியமான சக்தி நமக்கு இருந்தும், பிறருக்கு உதவி செய்ய முடியாத நிலை இருந்தால் நாம் பிரச்சினைகளுள் சிக்கிக்கொள்வோம்.
திணறுவதனால் ஏற்படும் துக்கத்தால் அவதிப்பட ஆரம்பித்தார். அவர் மூச்சை உள்ளிழுப்பதையும் வெளி விடுவதையும் மிகவும் கஷ்டத்துடன் செய்தார்.
நான் அவரது துன்பத்தையும் வேதனையையும் தெளிவாகப் பார்த்தேன். இப்போதுகூட எனக்கு நினைவிருக்கிறது. அதே வலியையும் வேதனையையும் என்னால் உணர முடிகிறது. 'ஆயிரம் தேள்கள் கொட்டுவதுப் போன்ற வலி' என்று சொல்வார்களே, அது போன்ற வலி; ஆயிரம் தேள்கள் ஒரே சமயத்தில் கொட்டுவதைப் போன்ற வலியால், அவருடைய மொத்த விழிப்புணர்வும் கிழிபட ஆரம்பித்தது.
நம் விரலை ஒரு அங்குலம் கத்தியால் வெட்டிக் கொண்டாலே என்ன வலி ஏற்படுகிறது; எப்படி வலியால் வேதனைப் படுவோம்! மரணத்தின் முதல்படி என்பது ஆறடி கத்தியால் முழு உடலையும் வெட்டுவதைப்போல இருக்கும்.
என்னால் அவர் அனுபவிக்கிற விக்கினையையும் வலியையும் உணர முடிந்தது. அவர் மெல்ல மெல்ல தம் உடலை விட்டு விலகிக் கொண்டிருந்தார். தர்க்க அறிவால் இதை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருந்தாலும், பட்டறிவுப்பூர்வமாக இதை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருந்தாலும், இதுதான் நடந்தது. முதலில் இதை முடித்து விடுகிறேன். பிறகு ஆராய்வோம்.
முதலில் எனது அனுபவத்தைச் சொல்லி விடுகிறேன். பிறகு அதை ஆராய்வோம். உங்களால் இதை உள்வாங்கிக்கொள்ள முடிந்தால் உள் வாங்கிக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் இது ஒரு 'அனுமானம்' என்று விட்டுவிடுங்கள்.
நீங்கள் இதை 'அனுமானம்' என்று புரிந்து கொண்டால்கூட போதும்; கடைசியில் இது எப்படி நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.
மிக அதிகமான வலியையும் வேதனையையும் அவா் அனுபவித்ததை நான் பார்த்தேன்; அனுபவித்தேன். மிகக் கொடுமையான துக்கத்தைக் கொடுக்கக்கூடிய வலி; அவ்வளவு ஆழமான வேதனை.
உயிர் ஸ்தால உடலில் இருந்து ப்ராண ச்ரீர்த்திற்குப் போனது. இரண்டாவது சரீரம் பீராண சரீரம்; மூச்சுக்காற்றின் சக்தி உள்ள இடம். ஏழு உடல்களும் ஏழு சக்திகளைக் குறிக்கின்றன. இவை நம்முடைய இருப்புத் தன்மையின் சக்தி அடுக்குகள். ப்ராண ச்ரீத்திற்குள் நுழையும்போது, மீண்டும் வலியும் வேதனையும் அதிகமாக இருந்தது. நமது ப்ராண சரீரம் நமது ஆசைகளால் நிரம்பியது.
நான் முன்பே சொன்னதுபோல ஆசைகளும், மூச்சும் மிக நெருங்கிய தொடர்புடையவை. நமது மூச்சுக்காற்றின் போக்கை மாற்றினோமானால், நமது ஆசைகளும் மாறும். அவரது உயிர் ப்ராண சரீரத்திற்குள் நுழையும்போது இருப்புத் தன்மையில் இருக்கும் ஆசைகள் எல்லாம் மேலே எழுந்தது. நிறைவேறாத ஆசைகளால் அந்த உயிர் மிகவும் கஷ்டப்பட்டது.
அந்த உயிர் அடுத்த ச்ரீத்துக்குள் நுழைந்தபோது குற்ற உணர்ச்சி அதிகமாகியது. குற்ற உணர்ச்சி, 'ஒ! நாம் அப்படி வாழ்ந்திருக்க வேண்டும், இப்படி வாழ்ந்திருக்க வேண்டும்,' என்று உங்களை நினைக்க வைக்கும்.
மரணத்தின் முதல்படி என்பது ஆழ்டி கத்தியால் முழு உடலையும் வெட்டுவதைப்போல இருக்கும்.
எப்படியோ ஒவ்வொரு அந்த உயிர் நகர்ந்தது; முடிவில் அவர் இறந்தார். நடந்தது முழுமையும் நான் பார்த்தேன். நான் அப்போது ஞானமடையாததால் என்னால் அவருக்கு முடியவில்லை. நான் அவர் படும் துன்பத்தை மட்டுமே பார்த்தேன்.
உதவி எதுவும் செய்ய முடியாமல், அதை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்ததுதான் எனக்குள் அளவு கடந்த வேதனையை ஏற்படுத்தியது.
ஞானமடைந்தவர்களுக்கு மட்டுமே, இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கான சக்தி இருப்பது ஏன் என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டேன். நான் உண்மையாகச் சொல்கிறேன், சக்தியில்லாமல், சக்தியை மட்டுமே பெற்றிருப்பது என்பது கொடுமையானது.
ஞானமடைந்த ஒருவரின் இருப்பு ஒருவரை அமைதியாக ஞானமடையச் செய்கிறது.
கடந்த பிறவியைப் பற்றிய ஞாபகம் கூட நம்முடைய நன்மைக்கே!
பலர் என்னிடம், ''ஸ்வாமிஜி எனது முற்பிறவி பற்றிய நினைவை எனக்குக் கொடுங்கள், '' என்று கேட்கிறார்கள்.
நான் அவர்களிடம் "உங்கள் வயது என்ன?" என்று கேட்பேன். அவர்கள் 40-லிருந்து 50 என்பார்கள். இந்த வயதில் முற்பிறவியைப் பார்க்க விரும்புகிறார்கள்! நான் அவர்களிடம் ''இந்த 40-50 வருட நினைவுகளை உங்களால் அமைதியாகக் கையாள முடிகிறதா?' என்று கேட்பேன்.
40-50 வருட நினைவுகளையே நம்மால் சமாளிக்க முடியவில்லை! அவை நம்மைத் துரத்துகின்றன. 40-50 வருட நினைவுகளையே சமாளிக்க முடியவில்லை என்றால் இன்னும் 100 வருட நினைவுகளை எப்படிச் சமாளிக்க முடியும்? 140 வருட நினைவுகளை எப்படிச் சமாளிப்பது?! அதனால்தான், கடவுள் அருளால் நமது முற்பிறவி நினைவுகள் நமக்கு இருப்பதில்லை.
நமது கடந்தகாலப் பிறவிகளை அறிந்தால் துக்கங்கள்தான் அதிகம் ஆகும். மேலும் துக்கப்படுவோம். வருந்துவோம். நமக்கு இந்த மனித அறிவுக்கு எட்டாத, மிகப்பெரிய அசாத்தியமான சக்தி இருந்தும், உதவி செய்ய முடியாத நிலை இருந்தால், நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மேலும் மேலும் அதிகமான பிரச்சனைகளுக்குள் சிக்கிக் கொள்வோம்.
அந்த மனிதரோடு சேர்ந்து நானும் வேதனைப்பட்டேன். கொடுமையான ஒரு விபத்தை ரோட்டில் பார்த்த அனுபவம் போன்றது அது.
ஒரு விபத்தைப் பார்த்தால் இரண்டு மூன்று நாள்களுக்கு நம்மால் சாப்பிட முடியுமா? முடியாது. விபத்திலாவது நாம் ஒரே ஒரு உடலைத்தான் பார்க்கிறோம். இங்கே ஏழு சரீரங்களைப் பார்த்தேன். அந்த வேதனையைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் ஏது? அந்தத் துக்கம் என் மனத்தில் ஆழப் பதிந்தது; என் உணர்வில் பகிர்ந்தது.
அடுத்த வந்த இரண்டு மூன்று நாள்களுக்கு என்னால் சாப்பிட முடியவில்லை, உறங்க முடியவில்லை. நம்ப முடியாத அளவிலான துக்கம் அது, எப்படியோ கொஞ்ச நாள்களில் நான் வாரணாசியை விட்டு வெளியேறிவிட்டேன்.
ஒரிரு வருடங்களுக்குப் பிறகு, எனக்கு ஞான அனுபவம் ஏற்பட்டதற்குப் பிறகு, நான் தென்னிந்தியாவுக்கு வந்தேன். இங்கு ஒரிரு வருடங்கள் சிறிய டவுன்களில் தங்கினேன். சிறிது காலம் கழித்து நான் மீண்டும் ஒரு மரணத்தைப் பார்க்க நேர்ந்தது.
இரண்டாவது மரணத்தையும் நான் ஒரு அவசர சிகிச்சைப் பிரிவில்தான் பார்த்தேன். இரண்டாவது முறை நான் பார்த்த மனிதர் துக்கப்படவில்லை.
'முதல் மனிதர் ஏன் கஷ்டப்பட்டார்? இரண்டாவது மனிதர் ஏன் கஷ்டப்படவில்லை?' என்ற காரணத்தை நான் ஆராய்ந்தேன். அதை ஆய்வு செய்ததன் மூலமாகவும் இந்த நிகழ்வைக் குறித்து தியானங்கள் செய்ததன் மூலமாகவும் சில விஷயங்கள் மேலே வந்தன - ஸூத்ரங்களாக!
அந்த ஸூத்ரங்கள்தான், இந்த மொத்த நித்யானந்த ஸ்புரண தியான முகாம் நிகழ்ச்சி!
இந்த ஸூத்ரத்தை உணர்ந்து நீங்கள் வேலை செய்தால் எனது அனுபவத்தை நீங்களும் உணர்ந்து அனுபவிக்க முடியும்.
இரண்டாவது மரணத்தைப் பற்றி நான் உங்களுக்கு நான் ஞானமடைந்திருந்தேன். நான் எனது பக்தர் ஒருவரைக் குணப்படுத்துவதற்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தியான சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தேன்.
அதே சமயம் பக்கத்துப் படுக்கையில் இருந்த ஒருவர் இறந்து கொண்டிருந்தார். நடப்பதை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
அந்த மனிதரிடமிருந்து உயிர் மெல்ல மெல்ல பிரிந்து கொண்டிருந்தது. ஆனால் அவருக்கு வலியோ, துன்பமோ இருக்கவில்லை. மிக அழகாக உயிர் ஒவ்வொரு சரீரமாக நகர்ந்து கொண்டிருந்தது.
முதல் சரீரத்திலிருந்து இரண்டாவது சரீரத்திற்கு, இரண்டாவதிலிருந்து மூன்றாவதிலிருந்து நான்காவது சரீரத்திற்கு என, பனியில் ஒரு உருண்டை உருள்வதுபோல அந்த உயிர் நகர்ந்தது. நான் ஆச்சரியமடைந்தேன். அந்த உயிர் மிக மெதுவாகவும் மௌனமாகவும் நகர்ந்தது. அவர் ஞானமடைந்தார்; முக்தியடைந்தார்!
இரண்டு மரணங்களைக் குறித்தும் தியானங்கள் செய்ததன் மூலமாக சில விஷயங்கள் மேலே வந்தன ஸூத்ரங்களாக!
''ஏன் முதல் மனிதர் அவ்வளவு கஷ்டப்பட்டார்? இரண்டாமவர் ஏன் அவ்வளவு கஷ்டப்படவில்லை?'' என்று நான் யோசித்தேன். அவர் ஒரு ஆன்மீகவாதியாக இருக்க வேண்டுமென நினைத்தேன். நிறைய தியானம் செய்தவராக இருப்பாரோ என்றெண்ணினேன்; விசாரித்தேன்.
அவரது உறவினர்களிடம், ''அவர் ஆன்மீக வாதியா?'' என்று கேட்டேன். அவரது உறவினர்கள் ஆச்சரியமாக '' ஆன்மீக வாதியா? ஏன் கேட்கிறீர்கள்? அவர் கோயிலுக்குக்கூடப் போக மாட்டார்?' என்றார்கள்.
தியான சூத்திரம் மலர்ந்தது
"ஏன் முதல் நபர் அவ்வளவு துக்கப்பட்டார்? இரண்டாமவர் ஏன் அழகாகவும் அமைதியாகவும் இறந்தார்?' என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆழ்ந்து யோசித்தேன்.
எனக்கு திடீரென்று ஒரு சத்தியம் புரிந்தது; நான் அங்கே இருந்ததுதான் காரணம் என்ற அந்த லட்சியம் புரிந்தது!
ஞானமடைந்தவர் ஒருவரின் இருப்பு அவரை அவ்வளவு அமைதியாக மரணமடையச் செய்திருக்கிறது.
அடுத்த பகுதிக்கு வருகிறேன். இரண்டாவது இறப்பைப் பார்த்தவுடன்
மிகத் தீவிரமாக யோசித்தேன். இதை எப்படி வெளிப்படுத்துவது? எப்படி மக்கள் அமைதியாக விழிப்புணர்வுடன் இறப்பதற்கு நாம் உதவ முடியும்? எல்லா அவசர சிகிச்சைப் பிரிவுகளிலும் நான் போய் நிற்க முடியாது. அது நடக்காது. அதனால் எல்லா மக்களுக்கும் பயன்படும்படியாக நான் என்ன செய்ய முடியும் என்று ஆழ்ந்து யோசித்தேன்.
அதிர்ஷ்டவசமாக சக்தி என்பது காலம், இடம் இவற்றுக்குள் அடங்காதது. சக்தி காலத்திற்கும் நேரத்திற்கும் அப்பாற்பட்டது. அது தொலைக்காட்சி சேனல்களை இசைவு செய்வது போன்றதுதான். அதாவது நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், அதனோடு இசைவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது மட்டும்தான். இப்போது நமக்குத் தேவையானதெல்லாம் ஒரு 'செட்-டாப் பாக்ஸ்' அவ்வளவுதான்.
நமது வீட்டில் ஒரு செட்-டாப் பாக்ஸ் இருந்தால் விரும்பும் சேனல்களை நாம் இசைவு செய்துகொள்ள முடியும். BBC சேனலை இசைவு செய்தால் BBC நியூஸ் கேட்கலாம். CNN சேனலை இசைவு செய்தால் CNN நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். எந்தச் சேனலைப் பார்க்க விரும்புகிறோமோ, அந்தச் சேனலுக்கு அதை இசைவு செய்யலாம்.
அதேபோல நம்மை நாமே அந்த அந்த எண்ணங்களற்ற விழிப்பு நிலையுடன் இசைவு செய்துகொண்டோமேயானால், அந்த மேலான விழிப்பு நிலையுடன் இசைவு செய்து கொண்டமேயானால்,
விழிப்புணர்வுடன்கூடிய அனுபவங்களோடு இசைவு செய்துகொண்டோமேயானால் நமது வாழ்வே, 'அனுபவம்தான்' என்பதைக் காண்போம்.
நாம் இந்த ஏழு சரீர கடலை, இந்த ஸம்ஸார கடலை, மிக அமைதியாகவும் ஆழமாகவும் கடக்கலாம்.
இந்தப் புரிதல் ஏற்பட்டவுடனே ஒரு உண்மை என்கிற பந்து எனக்குள் இறங்கியது. ஒரு ஸூத்ரம் என் மனத்திற்குள் உருவாகியது.
அந்த விழிப்புணர்வை, அந்த ஸூத்ரத்தை மக்களுக்குக் கொடுப்பதுதான் இந்த நித்யானந்த ஸ்புரணா தியான பயிற்சி முகாம்.
நாம் புவியீர்ப்பு விசை பற்றிய விதியை ஆராய்ந்தால், நியூட்டன் என்ன உணர்ந்தார் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ளலாம். அதேபோல நான் உங்களுக்கு கொடுக்கிற இந்த ஸூத்ரத்தை உணர்ந்து நீங்கள் வேலை செய்தீர்களானால், 'நீங்களும் உணர்ந்து அனுபவிக்க முடியும்' என்பதை உறுதியாகச் சொல்கிறேன்.
எனது விழிப்புணர்வில் என்ன ஏற்பட்டதோ, அது உங்கள் விழிப்புணர்விலும் ஏற்பட முடியும்.
விழிப்புணர்வில் எனது ஏற்பட்டதோ, அது உங்கள் விழிப்புணர்விலும் ஏற்பட முடியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஆழமாக இந்த ஸூத்ரத்தைப் புரிந்துகொண்டு, ஸூத்ரத்திற்குள் இறங்க வேண்டியதுதான். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழமாக இந்த ஸூத்ரத்திற்குள் இறங்குங்கள். வேறெதுவும் செய்ய வேண்டிய தேவையில்லை.