KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/மரண சமயத்திலும் நீங்கள் தெளிவாக இருக்க முடியும்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

மரண சமயத்திலும் நீங்கள் தெளிவாக இருக்க முடியும்

நீங்கள் வாழும் போதே அந்த விழிப்புணர்வு நிலையை ஒருமுறைகூட அனுபவிக்கவில்லை என்றால், மரண சமயத்தில் உடலும், மனமும் அற்ற நிலையை நீங்கள் அடைய முடியாது. உடலும், மனமும் இல்லாமல் உங்களால் வாழவே முடியாது. அதனால் மூன்று குணங்களுக்குள் நீங்கள் எப்படியோ ஒரு உடலை எடுத்து விடுவீர்கள்.

விழிப்புணர்வின் கணநேரத் தோற்றம், ஒரு கணம் தன்னை உணர்ந்த அனுபவம், கணநேர எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலை - அதை நீங்கள் உடலோடும், மனதோடும் இருக்கும் போதே அனுபவித்து விட்டாலே போதும். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண முகாம், இந்தக் கருத்தின் அடிப்படையிலேதான் இருக்கிறது. நான் செய்ய முயற்சி செய்ததெல்லாம், 'எண்ணங்களற்ற அந்த விழிப்புணர்வை ஒருமுறையேனும் உங்களை உணரச் செய்வதுதான்'.

ஒரே ஒருமுறை நீங்கள் எண்ணங்களற்ற அந்த விழிப்புணர்வு நிலையை அடைந்திருந்தாலே போதும், உண்மையிலேயே நீங்கள் வாழ்க்கையில் எதை அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டீர்கள். அந்த ஸமாதி நிலையை, எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை ஒருமுறையேனும் அனுபவித்துப் பார்க்கவில்லை என்றால், நீங்கள் வேறு எதை அடைந்தாலும் பயனில்லை.

அடுத்த படியில் கிருஷ்ணர் அந்த எண்ணங்களற்ற விழிப்புணர்வை எவ்வாறு அடைவது என்பதைப் பற்றியும் இறப்பு மற்றும் உடலை விட்டுச் செல்லும் கலையைப் பற்றியும் ஆழமாக விவரிக்கிறார். அடுத்த ஸ்லோகத்தில் அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

கேள்வி: ஸ்வாமிஜி, "THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண பயிற்சி முகாம் (NSP) அல்லது LBP-II - உங்கள் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது என்று சொன்னீர்கள், அதை மேலும் விளக்க முடியுமா?

சரி! நான் ஏன் இந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண பயிற்சி முகாமை NSP ஆரம்பித்தேன் அல்லது எப்படி இந்த முகாம் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது என்பதைச் சொல்கிறேன்.

ஆரம்பிக்கும் முன்பு, 'நான் சொல்லப் போவதெல்லாம் உண்மைகள்' என்ற உறுதி மொழியை எடுக்கிறேன்.

"எதற்காக இப்படி ஒரு உறுதிமொழியை எடுக்கிறீர்கள்?" என்று கேட்கலாம்.

முக்கியமான ஒரு புரிந்துகொள்ளுங்கள், நான் உண்மையைச் சொல்கிறேன். பொதுவாக, நாம் யாருடைய வார்த்தைகளையும் நம்புவதில்லை.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் பொதுவாகவே ஸமாதி நிலையை ஒருமுறையேனும் அனுபவித்துப் பார்க்கவில்லை என்றால், நீங்கள் வேறு எதை அடைந்தாலும் பயனில்லை.

உண்மையைப் பேசுவார்கள் என்று நம்புவதில்லை.

உங்கள் மனத்தை நன்றாக ஆராய்ந்து பாருங்கள். அப்பொழுது ஒரு உண்மையைப் புரிந்துகொள்வீர்கள். யார் என்ன சொன்னாலும் நம்புவதில்லை. நமக்கு விஷயத்தைப் பற்றிச் சொல்லும்போது மட்டுமே, அதை நாம் உண்மை என்று நம்புகிறோம்.

பொதுவாக, நாம் யாருடைய வார்த்தைகளையும் நம்புவதில்லை. நமக்கு ஏற்கெனவே தெரிந்த ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்லும்போது மட்டுமே, அதை உண்மை என்று நம்புகிறோம்.

ஒருவர் நமக்குத் தெரியாத விஷயத்தைச் சொன்னால் நாம் நம்புவதில்லை. ஒன்று கேள்வி கேட்கிறோம் அல்லது கேள்வி கேட்கிற சூழ்நிலையில் இல்லை என்றால், மரியாதைக்காக, அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்போம். ஆனால் ஒருபோதும் அதை நம்புவதில்லை. அவரது சொற்களை நாம் உள் வாங்கிக்கொள்வதில்லை.