பிரபஞ்சம் அளிக்கும் வாய்ப்பை இனியும் தவறவிட வேண்டாம்
மாலையில் ஸரீதீயா காலம் வந்தது. கற்பூர ஆரத்தியுடனும் கண கணக்கும் மணியோசையுடனும் கூடியிருப்போரின் கைத்தாள் லயத்துடன்கூடிய ஆரதி பூஜை நடந்தது. எல்லோரும் மிகுந்த பயபக்தியுடன் கலந்துகொண்டார்கள்.
நான் இடது பக்கம் திரும்பி, நேரடியாக அவரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த உடலின் அருகில் அமர்ந்திருப்பதால் நான் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து ஆச்சரியமடைந்தேன். உண்மையைச் சொல்லப் போனால், அப்படி ஒரு உடல் அங்கே இருப்பதையே அவ்வப்போது மறந்துவிட்டேன்.
அந்த உடல் அறையின் நடுவில் வைக்கப்பட்டிருந்தாலும், அது எங்கள் நடுவில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அங்கு எந்தவிதமான துக்கக்காட்சிகளையோ, ஆரோக்கியமற்ற சூழ்நிலையையோ நாங்கள் உணரவில்லை.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, அங்கிரூப்பவர்களின் மனத்தையெல்லாம், வழக்கமாக அந்த சமயங்களில் ஏற்படும் உணர்ச்சிகளில் ஆழ்ந்துவிடாமல் தடுத்து, தொடர்ந்து ஆன்மீக விஷயங்களில் செலுத்தச் செய்தார்.
பயத்தாலும், துக்கத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டு இறுக்கமாக இருந்த எங்களுடைய சக்தியையெல்லாம் விரிவுபடுத்தி அந்த அறையில் நிறைந்திருந்த ஞான நிலையோடு கொடர்பகொள்ளச் செய்கார்.
இறப்பு என்பது இருப்பவர்களுக்கும் சென்றவர்களுக்கும் ஒரு ஆழமான ரஸ்வாத செயல்முறையாகத்தான் இருக்க முடியும்.
ஆசீர்வதிக்கப்பட்ட இந்த ஆத்மா ஸமாதி நிலையை அடைந்துவிட்டதனால், அங்கே வெளிப்படுத்தப்பட்ட சக்தி, ஞானமடைந்த குருவின் சக்தியோடு சேர்ந்து ச க்தி வாய்ந்த அலைகளை அங்கே பரப்பியது. அதனோடு யார் யார் தம்மை இசைவு இசைவு செய்துகொள்கின்றார்களோ அவர்களையெல்லாம் மாற்றுகிற சக்தியாகவும் இருந்தது. அந்த வேலையைத்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM செய்துகொண்டிருந்தார்.
பிரபஞ்ச இருப்புத் தன்மையால் அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பை நாங்கள் தவற விடுவதை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM விரும்பவில்லை.
இந்த வித்தியாசமான குழ்நிலையிலும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நாள்தோறும் நடைபெற வேண்டிய செயல்களைச் செய்துகொண்டுதான் இருந்தார்.
காலை உணவை எடுத்துக் கொண்டோம். விருந்தோம்பல் உணர்வுடன் கொடுக்கப்பட்ட காப்பியைக் குடித்தோம். வண்டிகளில் சென்று கிரிவலம் செய்துவந்தோம். மதிய உணவு உண்டோம். குளித்தோம். சுருக்கமாகச் சொன்னால், நாள்தோறும் நடைபெற வேண்டிய செயல்கள் நடந்துகொண்டேதான் இருந்தன.
இது எந்தவிதத்திலும் மறைந்த உயிருக்கு அவமரியாதை செய்வதாக இருக்கவில்லை.