KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/உயிர் பிரிந்த நேரம் கொண்டாடப்பட வேண்டும்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

உயிர் பிரிந்த நேரம் கொண்டாடப்பட வேண்டும்

மரணம் என்பது கொண்டாடப்பட வேண்டிய, ஒரு மேன்மைமிக்க நிகழ்வுதான் என்ற ரகசியம் திருவண்ணாமலை வாழ் நன் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, மிகவும் தளர்வான மன நிலையில் இருந்தார். தன்னம்பிக்கை மிகுந்த, ஆளுமையுடன்கூடிய உடலசைவுகள் அவரிடத்தில் தெரிந்தன. நாங்கள் ஒரு நேரடி வகுப்பில் இருந்தது போல எனக்குள் தோன்றியது. தியான முகாம்களிலும், வேறு பல சந்தர்ப்பங்களிலும் அவர் எதையெல்லாம் பேசினாரோ அதையெல்லாம் நடத்திக் காட்டுகிறார் என்பதைப் புரிந்துகொண்டோம்.

ஒரு மரணத்தை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கும், இறந்தவர்களையும் வாழ்பவர்களையும் நாம் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கும் அவருடைய செயல்களே ஒரு எடுத்துக்காட்டாக இருந்தன. அவர் அதை எங்கள் முன் வாழ்ந்து காட்டிக் கொண்டிருந்தார். எந்தப் புத்தகமும் நமக்கு இப்படி ஒரு புரிதலையும் தர முடியாது, இந்த விதமான நம்பிக்கையையும் தர முடியாது.

ஒரு அங்கு சூழ்நிலையே நிலவ வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். அது ஏன் என்பதை நான் புரிந்துகொண்டேன். யாரும் கதறவோ, அழவோ கூடாது என்பதில் ஏன் அவர் அவ்வளவு கவனமாக இருந்தார் ?

எனக்குப் புரிந்தவரை உயிர் உடலை விட்டு நீங்கும்போது குழ்நிலை எளிமையாகவும், ஆன்மீகப் புரிந்துகொள்ளுதலுடன் விழிப்புணர்வும் கூடியதாகவும், கொண்டாட்டத்திற்கான மன நிலையுடனும்

இறந்தவர்களையும் வாழ்பவர்களையும் நாம் எப்படிக் கையாள வேண்டுமென்பதை அவரோ நமக்கு வாழ்ந்து காட்டினார். எந்தப் புத்தகமும் நமக்கு இப்படி ஒரு புரிதலைத் தர முடியாது.

இருப்பது மிக மிக அவசியமாகிறது. அப்போதுதான் நாம் அந்த ஆத்மா அடுத்த நிலைக்கு இனிமையாகப் போவதற்கான எளிமையான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.

பிறருக்குக் கொடுக்கூடிய மிகப்பெரிய அன்புப் பரிசு இதுதான். சுய நலமற்ற மனப்போக்கிலிருந்து எழுகிற உச்சக்கட்ட செயல்பாடு இது ஒன்றுதான்.

நாம் அழும்போதும் வருந்தும்போதும் ஆத்மாவுக்கு ஒரு கனமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறோம். அதனால் ஆத்மா உடலைவிட்டுச் செல்வதற்குப் போராடுகிறது. நாம் அதற்கு ஒரு தடையை ஏற்படுத்தி விடுகிறோம். அந்த உயிருக்கு நம்மால் செய்ய முடிகிற கொடுமைகளிலே மிகப்பெரிய கொடுமை இதுதான். எல்லாச் சமயங்களிலும் அழுவதன் மூலமாக நாம் அந்த உயிரின் மேல் வைத்திருக்கிற அன்பின் வெளிப்படுத்துவதாக நினைக்கிறோம்.

உண்மையில், ஆழ்ந்து பார்த்தோமேயானால், அந்த மனிதரின் இழப்பு நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வெற்றிடத்தை அழுகிறோம் என்பது புரியும். இறப்பு என்பது கிளைமேக்ஸ் மட்டுமே, முடிவல்ல என்பதைப் புரிந்துகொண்டோமேயானால், நாமும் மரணத்தை அந்தப் புரிதலுடன் கொண்டாடுவோம். அழுகைக்கும் கண்ணீருக்கும் இடமேது ?

ஒருவர் உடலைவிடும்போது. நாம் அழாமலும், வருந்தாலும் அவர்களை வழியனுப்புவது ஒன்றுதான் நம் சுயநலமற்ற மனப்போக்கிலிருந்து எழுதிற உச்சக்கட்ட செயல்பாடு!