சொல்லப்படும் அனைத்தும் தவிர வேறொன்றுமில்லை
கிருஷ்ணர் எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே ஒரு சூத்திரத்தின் மூலமாக, ஒரே ஒரு நுட்பத்தின் மூலமாகப் பதில் சொல்கிறார்.
இப்போது முக்கியமான விஷயத்துக்கு வருகிறோம். கிருஷ்ணர் மரணத்தின் ரகசியங்களை வெளிப்படுத்தத் தொடங்குகிறார்.
''எவரொருவர் இறக்கும்தறுவாயில் என்னை மட்டுமே நினைக்கிறாரோ அவர் என்னை உடனடியாக அடைவார்," என்று சொல்கிறார். "என்னை மட்டுமே!' என்று சொல்வதன் மூலமாக கிருஷ்ணர் என்ன சொல்ல வருகிறார்! ''யார் வாழ்க்கையின் முடிவில் என்னை நினைத்தபடி உடலை விடுகிறோ, அவர் என் நிலையை அடைகிறார். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை, '' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
நாஸ்க்யத்ர லம்ச்ய: என்ற வார்த்தைகளை ஏன் சொல்கிறார்! 'அதில் சந்தேகமேயில்லை' என்று ஏன் சொல்கிறார்? ''இதுதான் முதையும்'' என்று ஆணித்தரமாகச் சொல்கிறார். அவர் இந்த வகைய ப்ரமாணம் எடுத்துக்கொள்கிறார்.
இந்த புரோகிராம் (NSP) என்று இரண்டு நாள்கள் தியான முகாம் நிகழ்ச்சி ஒன்று நாம் நடத்துகிறோம். பாரதத்தில் நான்கு நாள்களுக்கு அதை நடத்துகிறோம். அமெரிக்காவில் இரண்டு நாள்கள் நடத்துகிறோம். இங்கு மக்களுக்கு 4 நாள்கள் விடுப்பு எடுப்பதற்குச் சிரமமாக இருப்பதால் இரண்டு நாள்கள் மட்டும் நடத்துகிறோம்.
இங்கே, அமெரிக்காவில் கடவுளே நேரில் வந்தால்கூட, வாரத்தின் கடைசியில்தான் வர வேண்டும். இல்லை என்றால், "உங்கள் கார்டை கொடுங்கள் அல்லது ஈமெயில் அனுப்புங்கள். நான் பிறகு வந்து உங்களைப் பார்க்கிறேன்," என்பார்கள். வாரத்தின் கடைசியில் வராமல், வேலை நாள்களில் வந்தால் அவருக்கு ஈமெயில் அட்ரஸ்கள் மட்டுமே கிடைக்கும்.
இந்த ஒரு ஸ்லோகத்தின் அடிப்படையில்தான் இந்த மொத்தத் தியான முகாம் நிகழ்ச்சியே வடிவமைக்கப்பட்டுள்ளது.
மரணத்தைப் பற்றிச் சொற்பொழிவாற்றுவதற்கு முன்பு நான் எப்பொழுதுமே ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்வேன். "நான் சொல்வதெல்லாம் உண்மை என்று நான் உறுதி எடுக்கிறேன்,' ஏனென்றால் சில உண்மைகளைத் தர்க்க ரீதியாக விளக்க முடியாது. நீங்கள் புரிந்துகொள்கிற வகையிலான தர்க்கத்தைப் பயன்படுத்த முடியாது. அதைக் கேட்பதற்கும்
புரிந்துகொள்வதற்கும் வேண்டும்.
நமது மனத்தின் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் தர்க்க ரீதியாக இல்லாத எதையுமே நாம் ஏற்றுக்கொள்வதில்லை. ஒன்று, கேள்வி குட்கிறோம் அல்லது ஒரேயடியாக விரும்புவதில்லை. இல்லடையென்றால், ஒரு கதையைக் கேட்பதுபோல கேட்டுக் கொண்டிருக்கிறோம். அது நம் உணர்வுக்குள் கலப்பதில்லை.
68
''என்னவோ, வந்தது சொல்கிறாரோ கேட்டுத்தான் நினைக்கிறோம். நாம் அவரைப் அவரைப் பேச அனுமதிக்கிறோம். ஆனால் நாம் அதைக் கவனித்து உள்வாங்குவதில்லை.
மரணத்தைப் ப பற்றி நான் ப பேசுவதற்கு முன்பும் இந்தக் ''நான் இப்போது சொல்வதெல்லாம் ஸ்தீயம் மட்டுமே. விருப்பம் உள்ளவர்கள் அதை உள்வாங்கிக்கொண்டு உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளுங்கள். இல்லை என்றால்,
அதுவும் சரிதான், அது உங்களின் விருப்பத்தை பொறுத்த விஷயம்; அது உங்கள் சாய்ஸ், '' என்று சொல்கிறேன்.
கிருஷ்ணர் நாஸ்த்யத்ரு ஸம்ச்யு: என்று சொல்கிறார். ஏனென்றால் அவர் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பேசப் போகிறார். வெளி உலகைப் புரிந்துகொள்வதற்கு நமக்குத் தா்க்க அறிவு தேவை. உள் உலகைக் கெரிந்துகொள்ள, நம்மைத் தர்க்கத்திற்கு அப்பால் எடுத்துக் செல்ல நமக்கு ஒரு குரு குரு தேவை. தர்க்க அறிவு வெளி உலகத்தைத் தரும். அதனால் உள் உலகத்தைத் தர முடியாது.
கிருஷ்ணர் இங்கே நாஸ்குயக்கு ஸம்ச்ய: என்று சொல்கிறார். சந்தேதம் வேண்டாம். நான் அத்யத்தைப் பேசுகிறேன். நான் கணக்கைப் போடுகிறேன். பிறகு உங்களுக்குப் புரியும்.
இப்போதைக்கு நாம், X என்பது 2-க்கு சமம் என்று வைத்துக்கொள்வோம். கணக்கின் முடிவில்தான் X-க்குப் பதிலாக நாம் 2-ஐப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். ஆனால் ஆரம்பத்தில் நீங்கள் அந்த ஆசிரியரின் வார்த்தைகளைத்தான் நம்பியாக வேண்டும். முழுமையாகக் கணக்கைப் போட்டு அதை அவர் நிரூபிக்கும்வரை நீங்கள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியுள்ளது.
அதை நீங்கள் உணரும்வரை அந்த விஷயம் உங்கள் அனுபவமாக மலரும்வரை சில நிமிடங்களுக்காவது அந்த ஆசிரியரின் வார்த்தைதளை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கணக்கைப் போட்டு முடித்தவுடன்தான், உங்கள் புரிதலாக அது மலர்கிறது.
தொடக்கத்தில் அது என்னுடைய புரிதலாக இருக்கிறது. முடிவில் அது உங்களுடைய புரிதலாக மலர்கிறது. அப்படிப் பரிந்துகொள்ளும்போது, நீங்கள் இயல்பாகவே இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கிற ஸ்த்யங்களைப் புரிந்துகொள்கிறீர்கள்.
வாழும் நாள்களை அதிகரிப்பதா ? வாழுக்ற அனுபவத்தை அதிகரிப்பதா ?
கிருஷ்ணர் சொல்கிறார்.
"யார் மாணத்தறுவாயில் என்னை மட்டுமே நினைத்துக்கொண்டு உடலை
விடுகிறார்களோ அவர்கள் உடனடியாக எனது தன்மையை அடைகிறார்கள். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.'' 'என்னை நினைத்துக்கொண்டு' என்று ஏன் சொல்கிறார். அதிலும் 'என்னை மட்டுமே' என்று ஏன் சொல்கிறார் ? !
மஹாபாரதத்தில் ஒரு லட்சம் கதைகளாவது இருக்கும். அதில் ஒரு கதை இப்படி இருக்கிறது.
ஒரு அரசர் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார். யுமன் வந்து, ''அரசனே! உன் வாழ்நாள் முடிந்து விட்டது புறப்படு; போவோம், ' என்கிறார். அரசர், "என்ன இது? இவ்வளவு
அழகான அரசைக் கொடுத்திருக்கிறீர்கள்; அழகான வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறீர்கள்; அழகான மனனவிகள், குழுந்தைகள் என்று எல்லாமே கொடுத்திருக்கிறீர்கள். நூறு வருடம் என்பது மிகக் குறுகிய காலம். தயவு செய்து இன்னொரு நூறு வருடம் வாழ ஆசீர்வதிக்க வேண்டும், ' என்றார்.
யமன், ''அப்படியெல்லாம் ஆயுளை நீட்டிக்க முடியாது,'' என்றார்.
ஆனால் அரசர்விடாமல் கெஞ்சினார். உடனே யுன், ''அப்படியானால் சரி. உன்னுடைய மகன்களில் யாராவது ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் 100 ஆண்டுகளை உனக்குக் கொடுப்பதாக இருந்தால் நான் உனது ஆயுளை அதிகரிக்கிறேன்,'' என்றார். எப்படியோ ஒரு மகன் ஒத்துக் கொண்டார். அதனால் அரசருக்கு நூறு ஆண்டுகள் ஆயுள் நீட்டிக்கப்பட்டது.
100 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் விட்டது என்பதை அரசர் உணரவில்லை. "என்ன நான் நாறு ஆண்டுகள் கேட்டேன். நீங்கள் இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டீர்களே?!'' என்றார்.
''நூறு ஆண்டுகள் முடிந்து விட்டதப்பா,'' என்றார் யுமன். மறுபடியும் 100 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டுமென கெஞ்சினார். "நூறு ஆண்டுகள் போனதே எனக்குத் தெரியவில்லை. எப்படியாவது உதவி செய்யுங்கள்," என்று கெஞ்சினார்.
''இது ரொம்பவும் அதிகம். அப்படியெல்லாம் இரண்டாம் முறை ஆயுள் நீட்டிப்புத் தர முடியாது, '' என்றார் யமன்.
அரசர் ''இன்னும் கொஞ்ச நாள்கள் தர வேண்டும், '' கெஞ்சினார். ஒரு வழியாக, முமன் அவருக்கு இன்னுமொரு 100 ஆண்டுகள் ஆயுள் நீட்டிப்பு கொடுத்தார்.
அடுத்த முறை யுமன் வரும் போதும் அரசா் அதே மன நிலையில்தான் இருந்தார். இந்த முறை வார்க்கால், அது மேலும் மேலும் எரியுமே தவிர, அதை அணைக்கவே முடியாது, ' என்று அழகானதொரு அறிவுரை தந்தார். ''இதோடு போதும். இனி நீ வாக்கான் வேண்டும்.' என்றார். அரசர் புரிந்து கொண்டார். அவர் யமனைப் பின் தொடர்ந்தார்.
அதேபோலத்தான் நாம் மேலும் மேலும் ஆசைகளைத் துரத்திச் செல்வதால் நாம் நிறைவை உணரவே மாட்டோம். மேலும் மேலும் ஆசைகள் வந்துகொண்டேதான் இருக்கும்.
ஆசைகளை ஏற்பட்டுவிடும் என்று சொல்லிவிட முடியாது.
வெளி சேர்த்துக்கொள்ளும்போது, இந்த வாழ்க்கையே நமக்குப் போதவில்லை என்றும், இந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான காலமும்,
வச்சிகளும் நமக்கு என்றும்தான் நினைக்கிறோம்.
நன்றாகப் பரிந்துகொள்ளுங்கள், நாம் 70 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் நாம் நம் உடலைவிடும்போது நிகழ்ந்த அனைத்தும் ஒரு ஃபிளாஷ்போல, ஃபாஸ்ட் ஃபார்வேடுபோல வேகமாக ஒடும். நம்முடைய விழிப்புணர்வில் நம்முடைய வாழ்க்கை முழுவதும் தோன்றும். ஏனென்றால் அதை வைத்துத்தான் நாம் அடுத்த பிறவியை கீர்மானிக்க முடியும்.
இப்பொழுது, நாம் நம்மிடம் நாம்கொண்டு வந்த காமாக்களில் அனுபவித்து முடிக்காத, நிறைவேறாத காமாக்கள் இருக்கின்றன. அதோடு இந்தப் பிறவியில் இந்த சமுதாயத்திடமிருந்து நாம் சேர்த்துக் கொண்டவற்றில் நிறைவேறாத காமாக்களும் இருக்கின்றன. இரண்டுமே இருக்கின்றன.
நீங்கள் முழவெடுக்கும் நேரம்
இன்னுமொரு முக்கியமான விஷயம். காமாக்கள், ஸம்ஸ்காரங்கள் என்றாலே முழுமையாக அனுபவிக்கப்படாத ஆசைகளை குறிப்பிடுகின்றன. அடிப்படையில் நீங்கள் நிறைவானவர்களே! ஆனால் நீங்கள் ஏதாவது ஒரு செயலை முழுமையாக நிறைவேற்றாமல் விட்டுவிடும் போதெல்லாம், அதில் மீதம் வைத்து விடுகிறீர்கள். உங்கள்
நெருப்பில் எண்ணையை வார்த்தால், அது மேலும் மேலும் எரியுமே தவிர, அழை அணைக்கவே மடியாது
மனத்தில் அதைப் பற்றிய எண்ணப் பதிவை ஏற்படுக்கிக்கொள்கிறீர்கள்.
ஸம்ஸ்காரம் என்பது உங்கள் விழிப்புணர்வற்ற மன நிலையில் பதிவு செய்யப்பட்ட இறந்து போன நினைவு மட்டுமல்ல, அந்த ஆசை நிறைவடையும்வரை மீண்டும் மீண்டும் அதே செயல்களைச் செய்ய உங்களைத் தூண்டிக்கொண்டே கொண்டதாகவும் அது இருக்கிறது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஸ்மீஸ்காரம்
என்பது வாழும் சக்தி. ஏனென்றால் உங்களை ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்ய வைக்கும் சக்தி அதற்குண்டு. ஒரே பாதையில் மீண்டும் மீண்டும் உங்களைப் பயணிக்க வைக்கக்கூடியதாக இருக்கிறது. ஆகையினாலே ஸம்ஸ்காரங்களை எண்ணப் பதிவுகள் என்கிறோம்.
எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் அந்தப் பாதையில் போகிறீர்களோ அந்த அளவுக்கு அது ஆழமானதாகிவிடும் பலம் கொண்டதாகி விடும்.
ஆனால் ஒரு ஸமஸ்காரத்தையாவது நீங்கள் முழுமையாக வாழ்ந்து முடித்து விட்டீர்கள் என்றால் அந்த எண்ணப் பதிவு உங்களை விட்டு நீங்கி விடுகிறது! உங்கள் உணர்விலிருந்து அது உதிர்ந்து விடுகிறது. நீங்கள் அதிலிருந்து விடுதலையடைந்து விடுவீர்கள்.
எதை நீங்கள் அனுபவிக்கவில்லையோ அது ஸம்ஸ்காரமாக, கர்மாவாக உங்களுக்குள் தங்கி விடுகிறது.
இங்கு நீங்கள் இதுவரை அனுபவித்து முடிக்காத கர்மாக்களையும் புதிதாகச் சேர்த்துக் கொண்ட கர்மாக்களையும் கொண்டு வருகிறீர்கள். நீங்கள் உங்கள் உடலை விட்டு நீங்கும்போது அவை எல்லாமே உங்கள் கண் முன்னால் தோன்றும். அப்போதுதான் நீங்கள் உங்கள் அடுத்த பிறவியைப் பற்றி முடிவெடுக்க முடியும்.
இன்பம் என்ற எண்ணம் இல்லாவிட்டால் அதற்குப் பின்னால் ஓடுகிற வேலையும் நமக்கு இருப்பதில்லை.
நீங்கள் ஒரு முக்கிய முடிவெடுக்க வேண்டும் என்றால், முடிவெடுப்பதற்கு முன் உங்கள் அலுவலக அலமாரி, மேஜை இழுப்பறை, மேஜை மேல் என்று எங்கெல்லாம் ஃபைல்களைப் பாதுகாப்பாக அடுக்கி வைத்திருக்கிறீர்களோ அந்த எல்லா ஃபைல்களையும் ஒருமுறை எடுத்து ஆய்வு செய்வதில்லையா?
இப்பொழுது நீங்கள் சில முக்கிய முடிவுகள் எடுக்கப் போகிறீர்கள். எங்கே பிறப்பது ? எப்படிப்பட்ட பெற்றோர்களை தேர்ந்தெடுப்பது ? எந்தவிதமான குடும்பத்தைத் தேர்ந்தெடுப்பது ? ஆண் உடல் எடுப்பதா ? இல்லை பெண் உடல் எடுப்பதா? என்ற இந்த எல்லா முடிவுகளையும் உடலை விட்டுச் செல்வதற்கு முன் எடுக்கப் போகிறீர்கள்.
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், அத்தனை முடிவுகளையும் உங்கள் விழிப்புணர்வு நிலையிலிருந்து நீங்கள்தான் எடுக்கிறீர்கள் உங்களைத் தவிர வேறு யாரும் எடுப்பதில்லை.
ஆனால் உங்களுடைய விழிப்புணர்வு, நீங்கள் பூமியில் வாழும்போது சேர்த்துக் கொண்ட காமாக்களாகிய புள்ளி விவரங்களால் தூண்டப்பட்டு இயங்குகிறது.
மன அழுத்தமே இல்லாமல் வாழ முடியும் - இது
ஒரு சத்தியமான உண்மை, மனிதர்களால் பூமியில் மனச் சோர்விற்கு ஆளாகாமல் வாழ முடியும்.
ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஐம்புலன்களால் அனுபவிக்கப்படும் இன்பங்களையே, இன்பங்களாகப் பார்க்கிறோம், நினைக்கிறோம். ஏனென்றால் அதுதான் 'இன்பங்கள்' என்று நமக்குச் சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆப்பிரிக்காவில் மக்களைப் பற்றிய ஒரு முக்கியமான ஆய்வுக் கட்டுரையைப் படித்தேன். அதில் அவர்களுக்கு மகிழ்ச்சி அல்லது புலன் இன்பங்கள் பற்றி எதுவுமே தெரியாது என்று சொல்கிறார்கள். இப்படிச் சொல்வதால் அவர்கள் சாப்பிடுவதில்லை என்ற பொருளில்லை.
அவர்கள் நல்ல உணவைச் சாப்பிடுகிறார்கள். ஆமாம், நல்ல உணவு! எல்லாவற்றையும் சாப்பிடுகிறார்கள், சுவைக்கிறார்கள், முகர்கிறார்கள், கேட்கிறார்கள், பார்க்கிறார்கள், தொடு உணர்வு இருக்கிறது. எல்லாமே இருக்கிறது.
ஆனாலும் 'இது இன்பம்' என்ற கருத்து அவர்களுக்கு இல்லை. இது இன்பம் என்ற எண்ணம் இல்லாததால் அதற்குப் பின்னால் ஓடுகிற வேலையும் இல்லை. அவர்களுக்கு அவ்வாறு போதிக்கப்படவில்லை. கட்டுறு மனப்பாங்கு இல்லை. அதனால் அவர்கள் இன்பங்களைத் தேடி ஒடுவதில்லை.
ஆப்பிரிக்க மக்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்பு சமுதாயக் கட்டுறு மனப்பாங்கு எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றிய இன்னொரு உதாரணத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
என்னுடைய பரிவ்ராஜக நாள்களில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓம்காரீசுவரருக்கு அருகில் வாழ்கிற மலைவாழ் மக்களோடு சில நாள்கள் தங்கியிருந்தேன். அவர்கள் வாழ்கிற முறை பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். அங்கு வாழ்கிற மக்களில் ஒருவர்கூட மனச் சோர்வினால் பாதிக்கப்பட்டவராக இருக்கவில்லை.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் நான் சொல்வது முழுவதும் உண்மை; சத்தியமான உண்மை. மனச் சோர்விற்கு ஆளாகாமல் மனிதர்களால் பூமியில் வாழ முடியும் !
நான் பல பல மாதங்கள் அவர்களோடு வாழ்ந்தேன். மனச்சோர்வினால் ஒருவர்கூட இல்லை. அது மட்டுமல்லாமல் யாருமே புலன் இன்பங்களைத் தேடி நோக்கி ஓடவில்லை. ஆச்சரியம் அடைந்தேன்.
நாம் போக வேண்டிய பயணத்திற்கு நாமே தயாராகவிட்டால் அது நம்மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும்.
ஏனென்றால் 'புலன் இன்பம்' என்று ஒன்று இருப்பதாகவே அவர்களுக்குப் போதிக்கப்படவில்லை. அதனால்தான் அடிப்படையான ஒழுக்கக் கேடுகளும் அங்கு நடைபெறவில்லை.
பைபிளில் படிக்கிறோம். ஆதாம், அந்த 'ஆரம்பக் காலப் பாவத்தைச்' செய்தாரென்று படிக்கிறோம்; ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடையே ஏற்பட்ட உறவுதான் அந்த ஆரம்பப் பாவம். அந்த உறவு தவறா சரியா எனக்குத் தெரியாது. ஆனால் எப்பொழுது ஒரு விஷயம் இன்பமானது, அதனால் அதைச் செய்யக் கூடாது என்று சொல்லப் படுகிறதோ அப்போதுதான் பாவம் என்பதே ஆரம்பமாகிறது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மத்தியப் பிரதேசத்தில் மலைவாழ் மக்களோடு வாழ்ந்தபோது, ஊருக்கு நடுவில் இருந்த கோயிலில் நான் தங்கியிருந்தேன்.
அங்கே சுற்றிக் கொண்டிருந்தபோது ஒரு நாள் ஒரு சிறிய குடிசையைப் பார்த்தேன். ஒரு கர்ப்பிணிப் பெண் அதற்குள் நுழைந்தார். அரை மணி நேரம் கழித்து, புதிதாகப் பிறந்த கைக்குழந்தையுடன் குடிசையை விட்டு வெளியே வந்தார். உதவி செய்ய ஆளில்லை, டாக்டர் இல்லை, வலியில்லை, அலறல் இல்லை, அரை மணி நேரத்தில் சாதாரணமாக ஒரு குழந்தையுடன் நடந்து சென்றார்.
நான் அதிர்ச்சியடைந்தேன். உண்மையில், எனக்கு அவர்களின் மொழி தெரியாத காரணத்தால் அந்த அம்மையாரிடம் என்னால் எதுவும் கேட்கமுடியவில்லை.
பெண்களைப் பற்றிய சமுதாயத்தின் கட்டுறு மனப்பாங்கு மிகவும் வித்தியாசமாக இருப்பதால், அங்கு யாருக்கும் எந்த வலியும் வருவதில்லை!
மறுபடியும் ஒரு மாதம் கழித்து இன்னொரு கர்ப்பிணிப் பெண்ணும் அப்படியே செய்தார். அரை மணி நேரத்தில் குழந்தையோடு வெளியே வந்தார்.
ஆனால் இப்பொழுதும் மௌனமாகப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க என்னால் முடியவில்லை. அதைப்பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன், அந்தக் கோயிலுக்கு வருகிற உள்ளூர் பூசாரியிடம் நான், ''எப்படி இது சாத்தியப்படுகிறது? பிரசவத்தின்போது அவர்களுக்கு வலி வராதா?'' என்று கேட்டேன்.
அவர் மிகவும் ஆச்சரியத்துடன், ''வலியா? என்ன வலி ? எதற்கு வலி ?'' என்றார்.
நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். பிரசவத்தின்போது அவர்களுக்கு வலியில்லை. ஒரு பெண்ணுக்கு பிரசவத்தின்போது வலி ஏற்படும் என்ற கருத்து அவர்கள் சமுதாயத்தில் உருவாக்கப்படவில்லை. அது மட்டுமல்ல, அவர்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகளும் கிடையாது. கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளும் கிடையாது.