KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/நம்மையுமறியாமல் நம்மை இயக்கும் விளம்பரங்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

நம்மையுமறியாமல் நம்மை இயக்கும் விளம்பரங்கள்

விளம்பரங்களினால் அளவுக்கதிகமான சமுதாய கட்டுறு மனப்பான்மை ஏற்படுகிறது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், விளம்பரங்கள் நம்மை ஏழைகள் ஆக்குகின்றன. விளம்பரம் செய்பவர்கள் பணக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள், அதில் சந்தேகமில்லை; ஆனால் நாம்தான் ஏழைகள் ஆகி விடுகின்றோம். தொடர்ந்து கருத்துகள் நம் தலைக்குள் புகுத்தப்படுகின்றன.

குறிப்பாக விளம்பரங்கள் நமது மூலாதார கூர்த்தை சக்கரங்களுக்கெல்லாம் மூலமான சக்கரத்தைத் தொடுகின்றன. மூலாதார சக்ரம், நமது உடல் ஆசைகளின் வேர். எந்த விளம்பரங்கள் மூலாதார கூர்த்தைத் தொடுகின்றனவோ, அவை நமது உடல்-மன அமைப்பில் பதிவாகிவிடும் என்று விளம்பரம் செய்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். காம உணர்வைத்

தூண்டக்கூடியதாக உள்ள எதுவும் நமக்குள் பதிவாகிவிடும்.

அதனால்தான், சோப்போ, ஷாம்ப்புவோ, காரோ எதுவானாலும் சரி நமது காம உணர்வைக் காண்டும் வகையில்கான் விளம்பரப் படுத்தப்படுகின்றன.

ஏனென்றால் அப்படி விளம்பரப் படுத்தப்படும்பொழுதுதான் அவை நமக்குள் நேரடியாகச் சென்று பதிவாகி விடுகின்றன. அப்படிப் பதிவாகி விடுவதால், நாம் பொருட்களை வாங்கச் செல்லும்போது, இயற்கையாகவே நம்மை அறியாமலேயே அந்தக் குறிப்பிட்ட பெயரைச் சொல்லித்தான் அந்தப் பொருளையே கேட்டு வாங்குகிறோம்.

ஆனால் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறோம். நாம் 2 டாலர் கொடுத்து ஒரு சோப்பை வாங்கும்போது அந்த ஒரு சோப்பை மட்டும் வாங்குகிறோம்; நாம் எதற்காகப் பிறந்திருக்கிறோம், அந்த மாடலையும் சேர்த்து வாங்க முடியாது என்ற முக்கியமான விஷயத்தை என்பதைப் மறந்து விடுகிறோம். ஆனால் நம் மனத்தில் பதிவாகும்போது அந்த மாடலும், நாமும் உடலை விட்டுப் போகும்போது இரண்டும் சேர்த்துதான் போகிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் நாம் சோப்பை மட்டுமே வாங்குகிறோம்; உண்மையில் என்ன நடக்கிறது என்பதையும் மறந்து விடுகிறோம்.

மூலாதார சக்ரத்தில் எது பதிந்தாலும் ஆழமாகப் பதிந்து விடுகிறது. நம்மையறியாமலேயே, விழிப்புணர்வற்ற நிலையில் அதற்கேற்ப இயங்குகிறோம். விளம்பரங்களின் மூலமாக நம் உணர்வுக்குள் எது பதிவு செய்யப்பட்டாலும் அது மேலும் மேலும் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் நம்முடைய சொந்த ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக் கொண்டிருக்கும்வரை வாழ்க்கைப் பிரச்சினைகள் இல்லாமல் நன்றாகவே இயங்குகிறது. ஆனால் நாம் மற்றவர்களின் ஆசைகளை வாழ ஆரம்பிக்கும் போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.

கிருஷ்ணர் அடுத்த ஸ்லோகத்தில் இன்னும் ஆழமாகப் போகிறார்.

கிருஷ்ணர் சொல்கிறார், ''ஓ மனிதர்களுக்குள் சிறந்தவனே! மாறிக்கொண்டே இருக்கிற உடலின் இயல்புதான் ஆதி பூதம். கடவுளின் வடிவமாக வெளிப்பட்டிருக்கும் பிரபஞ்சமும், தெய்வங்களும் உதாரணமாக சூரியனையும் சந்திரனையும் அதி தெய்வங்கள் என்கிறார்கள்.

உடல் எடுத்திருக்கிற எல்லா உயிர்களின் இதயத்திலும் ஆத்மாவாக இருக்கும் மேலான பரமாத்மா நானே, என்னை அதியஜ்னு என்று அழைக்கிறார்கள். "

நம் வாழ்வில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நமது ஆசைகள் நம்மை எப்படி எப்படி ஆள்கின்றன என்று பார்த்தோம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நாம்

கற்காலிகமான சந்தோஷம் மேலோட்டமானது. அது ஒரு வகையான ஏமாற்றுத்தனமும்கூட!

ஆளப்படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளும்போது மாணத்தின் இரகசியத்தையும் ரகசியக்கை அறிந்துகொள்ள இது அடிப்படையாக அமைகிறது.

நாம் எதற்காகப் பிறந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளும்போது, நாம் உடலை விட்டுப் போகும்போது என்ன நடக்கிறது என்பதையும் எளிதாகப் புரிந்துகொள்கிறோம்.

மாற்றம் ஒன்றே மாறாதது

இறப்பின் ரகசியங்களை அடுத்த ஸ்லோகத்தில்பார்க்கலாம். கிருஷ்ணர் இங்கே நம் முன்னே இருக்கிற இந்த உடல் சார்ந்த உண்மைகளைக் கொடுக்கிறார். நாம் இதை ஆழமாகப் புரிந்து கொண்டால், 'எல்லாவற்றையும் நம்முடைய உடைமைகளாக்கிக்கொள்ள வேண்டும்' என்கிற நம்முடைய ஆசைகள் தானாகவே விழுந்துவிடும்.

நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியை எடுத்துக்கொள்வோம். "இந்த இடத்தில் ஒரு திடப்பொருள் போடப்பட்டிருக்கிறது, '' என்று நம் பட்டறிவு சொல்லும். ஆனால் நாம் இன்னும் ஆழமாகச் சென்றோம் என்றால், எவ்வாறு சிறு, சிறு துண்டுகளைக்கொண்டு அந்த பிளாஸ்டிக் நாற்காலி செய்யப்பட்டதோ, அதேபோல அந்தத் திட பிளாஸ்டிக் நாற்காலியை சிறு சிறு துண்டுகளாக உடைக்கவும் முடியும் என்பதைப் பார்க்கலாம்.

இப்போது இன்னும் சிறிது ஆழமாகப் பார்த்தோம் என்றால் அங்கே

அணுக்களும், மூலக்கூறுகளும் இருப்பதைப் பார்க்கலாம். மேலும் அதை நுணுக்கமான துகள்களாகப் பிரித்துக்கொண்டே போனால் அதற்கு முடிவே இல்லை. ஒவ்வொரு துகளிலும் அதிகபட்சமாக 90% இடம் காலி இடமாகவே இருக்கிறது.

நவீன விஞ்ஞானம் சக்தியும் பருப்பொருளும் ஒன்றை மற்றொன்றாக மாற்றக்கூடியதாகவே இருக்கிறது என நிரூபித்துள்ளது. சக்தியைப் பருப் பொருளாகவும் அந்தப் பருப்பொருளை மீண்டும் சக்தியாகவும் மாற்ற முடியும்.

நாம் கண்ணால் பார்க்கிற இந்தத் திடப் பொருள் திடப் பொருள் அல்ல. அது முழுழுவதும் சூக்தியே!

உடல் சார்ந்தப் பருப்பொருளுளும் ச 'க்திய !

இது மாறிக்கொண்டே இருக்கிறது. ஏனென்றால் சக்தி எளிதில் மாறக்கூடிய தன்மை கொண்டதாகவும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. அதனால்தான், கிருஷ்ணர் சொல்கிறார்.

அதி பூதம் கூடிரோபாவ:

திடப்பொருளின் தன்மை அல்லது பொருட்களின் இயல்பு மாறிக்கொண்டே இருக்கிறது. புரிந்துகொள்ளுங்கள் சக்தியின் நெகிழ்ச்சித் தன்மையால், அது நகர்ந்துகொண்டே இருப்பதால், திடப்பொருளின் தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது.

மாற்றம் ஒன்றே மாறாதது, நிரந்தரமானது. அதனால் நம்மைச் சுற்றி இருக்கிற எல்லாமே தற்காலிகமானதுதான். நாம் என்று நினைப்பதனால்தான், அதைச் சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கிறோம்.

நாம் எதையெல்லாம் பருப்பொருள் என்கிறோமோ, சக்திதான். தொடர்ந்து இருக்கின்றன. இந்த மாறிக்கொண்டே உண்மை உள் உலக விஞ்ஞானிகளான ரிஷிகளால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது

உடல் சார்ந்த உலகத்தைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொண்டால், அவற்றைப் பூர்க்கி செய்துகொள்வதற்காக நாம் அலைவது எவ்வளவு வீணானது என்பது புரியும்.

கிருஷ்ணரும் அதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். கீதையில் மட்டுமல்ல, உபரிஷகங்களிலும் நாம் இது போன்ற கருத்துகளைப் பார்க்கின்றோம். எல்லாத் திடப் பொருட்களுமே சக்தியாகும். அவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.

நம்பமடியாக உண்மை

இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் நாம் நம்முடைய ஆசைகளைப் பற்றி பேசினோம். நாம் ஏன் பொருள் சார்ந்த ஆசைகளின் பின்னால் ஒடிக்கொண்டிருக்கிறோம் ? நாம் ஏன் தொடர்ந்து மூலாதார க்கரத்திருந்தே இயங்குகிறோம் ?

ஏனென்றால் உடல் சார்ந்த உலகத்தைப் பற்றிய தெளிவான அறிவு நமக்கு இல்லாததால்தான், நாம் அவ்வாறு இயங்குகிறோம். இந்த ஸ்லோகத்தை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், பொருட்களின் மேல் வைக்கிற ஆசைகளின் பின்னால், உலகாயக அசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக அவற்றின் பின்னால் ஒடுவது எவ்வளவு வீணானது என்பது நமக்குப் புரிந்துவிடும்.

நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போது அதை வெறும் திடப் பொருளாகவே நினைக்கிறோம், உடல் சார்ந்த பொருளாகவே அதை நாம் பார்க்கிறோம். நாம் அதை

நம்முடைய உடைமையாக்கிக்கொள்ள முடியும் என்று நினைக்கிறோம். அதை நம்முடனேயே எப்போதும் வைத்துக்கொள்ளலாம் என்றும் நினைக்கிறோம். அந்தப் பொருளின் சொந் தக்காரராக நாம் நம்மை நினைக்கிறோம்.

இங்கேதான் பிரச்சினை இருக்கிறது. நமது அஹங்காரம் இந்தப் பொருள் சார்ந்த உலகை ஒரு பொருளாகவே பார்க்கிறது. தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்காக மேலும் மேலும் பொருட்களை அது நாடுகிறது. எவ்வளவு பொருட்களின் மேல் முடியுமோ அவ்வளவு பொருட்களின் மேல் நம் கட்டுப்பாட்டைச் செலுத்தவே நாம் விரும்புகிறோம்.

ஆனால் நாம் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறோம். எல்லாமே சக்திதான் என்பதையும் அந்தச் சக்தியை ஒரே இடத்தில் பிடித்து வைக்க முடியாது

என்பதையும் நாம் பரிந்துகொள்ளத் தவறி விடுகிறோம்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், சக்தியை ஒரு இடத்தில் பிடித்து வைத்திருக்கவே முடியாது. அது எங்கும் நிறைந்திருப்பது. நாம் பார்க்கிற ஒவ்வொரு திடப் பொருளும் பிரபஞ்ச சக்தியின் வடிவமே! தயவு செய்து இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,

'வாட் தி பிலீப் டு வி நோ?' (What The Bleep do we know?) என்று ஒரு ஆங்கிலப் படம். அருமையான படம். வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்.

'ப்ராபபிலிட்டி தியரி' (Probability Theory) என்பதைப் பற்றி அது பேசுகிறது. நாம் இங்கே ஒரு நாற்காலியைப் பார்க்கிறோம்

என்றால், நமது மனம் அது இங்கே இருக்க வேண்டுமென விரும்புவதால், அது அங்கே இருக்கிறது. அதனால்தான், நாம் அதைப் பார்க்கிறோம்.

நமது மனத்தில் அது இங்கே இருக்க வேண்டுமென அதிக பட்சமாக நினைத்ததால் அது இங்கே இருக்கிறது. அதே சமயம் அது இங்கே இல்லாமல் போவதற்கான எல்லாவிதமான வாய்ப்பும் உள்ளது. அது இங்கே இருக்க வேண்டுமென நமது மனம் மிகவும் விரும்பியதால் அது இங்கே உள்ளது.

நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் நம்மையே நாம் பார்க்கும்போது எல்லாவற்றின் மீதும் பல ஆயிரம் மடங்கு அன்பு பொங்கும்.

இங்கே

அந்தச் சக்தி அலைகள்தான் பொருட்களாக வெளிப்படுகிறது. இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால், ஒன்றைப் பற்றிக்கொண்டு தொங்குவதோ, பொருட்களின் பின்னால் ஓடுவதோ பயனற்ற செயல் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

இன்னும் ஒரு விஷயம், ஜடப்பொருட்களுடன் மட்டுமல்லாமல், மனிதர்களிடமும் நாம் நாம் இப்படியேதான் தடநடந்துகொள்கிறோம். நாம் சொந்தம் கொண்டாடுவதற்கென்று யாரையாவது, நண்பன், மனைவி, கணவன், குழந்தை என்று யாராவது ஒருவரைத் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறோம்.

யாராவது ஒருவர் நமக்கு கிடைத்தால் போதும், உடனே அவர்களை நாம்

ર્ણ રહ્યું હતું. જીરુ

பிடித்துக்கொள்கிறோம். அந்த நபர் நம்மை விட்டுச் செல்வதை நாம் விரும்புவது இல்லை. அந்த நபர் நம்மை விட்டுப் பிரிந்தால் நாம் மிகவும் துக்கப்படுகிறோம். குடும்பத்தில் மிகவும் நெருங்கிய உறவுடையவர் இறந்து விட்டால் மன அழுத்தத்தில் விழுகின்றோம். ஏன் ?

நாம், ஒரு பொருளைப் பற்றிக்கொண்டு இருப்பதுபோல அவர்களையும் பற்றிக்கொள்கிறோம். ஒரு டெலிவிஷன், ரெஃரிஜிரேட்டர், கார், ஏர்

ஒரு உடைமைகளாகவே கருதுகிறோம். நமது காருக்கு ஒரு விபத்து நேர்ந்தால் நாம் வருந்துகிறோம். இழந்துவிட்டதாக அதேபோலத்தான் யாராவது ஒருவர் இறந்து விட்டால் நம்மில் ஒரு பாகத்தையே இழந்து விட்டதுபோல வருந்துகிறோம். மனச்சோர்வு அடைகிறோம்.

உறவுகளிடம் ஆழமாக அன்பு வைக்க வேண்டாம் என்று என்று உடைமையாக

விட்டுவிட வேண்டும் என்று சொல்கிறேன். புரிந்துகொள்ளுங்கள், எல்லாப் பொருட்களும், எல்லா மனிதர்களும் அந்த அடிப்படையான சக்தியில் இருந்துதான் உருவாக்கப் படுகிறார்கள்.

கிருஷ்ணர் இந்த ஐ ஸ்லோகத்தில் மிகத் தெளிவாகச் சொல்கிறார், "எல்லாப் பொருட்களும், அவை உயிர் உள்ளவையானாலும் சரி,

உயிரற்றவையானாலும் சரி பரமாத்மாவின் வடிவங்களே! பரமாத்மா எல்லாவற்றிலும் இருக்கிறார்.''

இதைப் புரிந்து கொண்டால், நம்மைச் சுற்றி இருக்கிற எல்லாவற்றிலும் நாமும் ஒரு பகுதியாகவே இருக்கிறோம் என்ற ஸ்ரீயத்தைப் புரிந்துகொள்வோம்.

உங்களுக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்த நாற்காலிக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அந்த மரத்திற்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எல்லாவற்றிலும் நாம் நம்மையே பார்க்கிரோம் !

இந்தப் பேருண்மையை நாம் புரிந்து கொண்டால், நம்மைப் பற்றிய ஒரு புதிய பரிணாமம் நமக்கே வெளிப்படும்.

நம்மைச் நம்மையே எல்லாவற்றின் மீதும் பல ஆயிரம் மடங்கு அன்பு பொங்கும்.

எல்லாமே ஒன்றுதான் என்பதைப் புரிந்துகொள்ளும்போது நமது ஆசைகளையும் நமது கனவுகளையும் கூர்ந்து கவனிக்க அரம்பீக்கிரோம்.

மற்றவர்களிடம் அன்போடு இருப்பதன் மூலம், நாம் நம்மிடமே அன்பாக இருப்போம். ஏதெனென்றால் எல்லாமே ஒன்றுதான் புரிந்துகொள்கிறோம்.

தயவு செய்து இந்த உயரிய, மேலான லத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள், அது நம்மைச் சுற்றி இருக்கிற விஷயங்களை நாம் பார்க்கும் முறையையே மாற்றுகிறது. நாம் நமது ஆசைகளையும் நமது கனவுகளையும் கூடா்ந்து அறியும் முறையையே அது மாற்றுகிறது.