KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/நாகரீக சமுதாயத்திற்கு ஓர் உதாரணம்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

நாகரீக சமுதாயத்திற்கு ஓர் உதாரணம்

நான் அவர்கள் வாழ்க்கை முறையைப் பற்றி விசாரித்தேன். அப்போதுதான், அவர்களுடைய கலாச்சாரத்தில் பெண்களை மிகவும் மதிக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது. பெண்களை அவர்கள் மரியாதைக் குறைவாக நடத்துவதே இல்லை. மாதவிடாய்க் காலத்தில் அவர்கள் அசுத்தமடைகிறார்கள் என்ற கருத்தே அவர்களுக்குச் சொல்லப்படுவதில்லை.

பெண்கள் ஆண்களுக்குக் கீழானவர்கள் என்ற கருத்தும் அவர்களுக்குக் கற்றுத்தரப்படுவதில்லை.

ஒரு பெண் கர்ப்பமடைந்தால், அந்தப் பெண்ணுக்கு மரியாதை செய்து, "தாய் ஆவதற்கு நீ தகுதி பெற்று விட்டாய்,' என்று அந்தப் பெண்ணிடம் சொல்கிறார்கள். மதிக்கிறார்கள். மக்கள் அவர் காலில் விழுகிறார்கள். அவர்களைத் தொட்டுக் குணப்படுத்துகிறார். மாதவிடாய்க் காலத்திலிருக்கும் ஒரு பெண் அவர்களைத் தொட்டு ஆசீர்வதித்தால், தாங்கள் குணமடைவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

அந்தக் கட்டுறு மனப்பாங்கு மிகவும் வித்தியாசமாக இருப்பதால் யாருக்கும் எந்த வலியும் வருவதில்லை, எந்த வலியாலும் யாரும் துக்கப்படவில்லை. நாகரிகமான சமுதாயம் என்று பெயர் பெற்ற இன்றைய சமுதாயத்தில்தான் பெண்கள் அவமதிக்கப்படுகிறார்கள். மீண்டும் ''இது அசுத்தமான நேரம் நீ இப்போது சுத்தமாக இல்லை. இது சரியில்லை. இங்கே நிற்காதே. அங்கே நிற்காதே, '' என்கிறோம்.

அதிலும் குறிப்பாக பாரதத்தில் மிகப்பெரிய கொடுமை நடக்கிறது. இது போன்ற தவறான கட்டுறு மனப்பாங்கினால் பெண்கள் வலியால் கஷ்டப்படுகிறார்கள். வேதனைப்பட்டுப் வலியால் போராடுகிறார்கள். இப்படியொரு கட்டுறு மனப்பாங்கு இல்லை என்றால் அவர்களுக்கு வலி இருக்காது.

ஆப்பிரிக்க ஆய்வில், ''அவர்களுக்குப் புலன் இன்பம் என்றழைக்கப்படுகிற இன்பங்களைப் பற்றி எதுவுமே தெரியவில்லை, '' என்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார். அதனால் தான் அவர்கள் புலனின்பங்களைத் தேடி ஒடுவதில்லை.

நமது சுவாசம் மாறினால் நம் மனமும் மாறுகிறது. நமது மனமும், சுவாசமும் மிக மிக நெருங்கிய தொடர்புடையவை.

சமுதாயத்தினால் ஏற்படுத்தப்பட்ட கட்டுறு மனப்பாங்குதான் புலனின்பங்களை நாடி மக்களை ஓட வைக்கிறது. சமுதாயக் கட்டுறு மனப்பாங்குதான் பின்னால் நம்மை ஓட வைக்கிறது.

எல்லாவற்றையுமே எது இன்பம் என்று பிரிக்கிறது. எந்த உடலைத் தேர்ந்தெடுப்பது ? போன்ற கட்டுறு மனப்பாங்கைப் பொறுத்துத்தான் அமைகிறது.

சமுதாயத்தினால் ஏற்படுத்தப்பட்ட கட்டுறு மனப்பாங்குதான் புலனின்பங்களை நாடி மக்களை ஓடவைக்கிறது.

உங்கள் வாழ்க்கையிலேயே மிக உயர்வான விஷயம் என்று எதை நினைக்கிறீர்களோ அதை அடைய வேண்டுமென்று முடிவு எடுக்கிறீர்கள். மிகச் சிறந்த நோக்கம் என்று உங்கள் கண்முன் எது வைக்கப்படுகிறதோ, கருத்தளவில் மிகச்சிறந்தது என்று உங்கள் கண்முன் எது வைக்கப்படுகிறதோ அதை நோக்கி இயற்கையாகவே ஓடுகிறீர்கள். நீங்கள் மிகவும் உயர்வான விஷயம் என்று எதை நினைக்கிறீர்களோ, அதுவே மரணத்தின்போது உங்கள் முன் தோன்றுகிறது.

ஏழு சரீரங்கள்

கிருஷ்ணர் உடலைவிடும்போது எந்த நிலையை நினைக்கிறாரோ அந்த நிலையை நிச்சயமாக அடைவார். ''

உடலைவிடும்போது என்ன நடக்கிறது? அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் தம் உடலைவிடும்போது ஏழு சரீரங்களைக் கடக்கிறார்.

முதல் சரீரத்தை ஸ்தூல சரீரம் என்கிறோம். ஒருவர் இந்த உடலை விட்டுச்செல்லும்போது, இது மொத்த உடல் அமைப்பிலும் பயங்கரமான வலியை ஏற்படுத்துகிறது. ஸ்தூல சரீரத்தைக் கடக்கும்போது ஆயிரம் தேள்கள் ஒரே நேரத்தில் கொட்டினாற் போன்ற வலி ஏற்படும் என்று உபநிடதங்கள் சொல்கின்றன.

நான் தயவு செய்து எதுவும் எண்ண வேண்டாம். சில உண்மைகளை சொல்லியே ஆக வேண்டும். அவை கொஞ்சம் புண்படுத்துவதாகவே இருந்தாலும், நீங்கள் தெரிந்துகொண்டே ஆக வேண்டும். அப்பொழுதுதான் நாம் போக வேண்டிய பயணத்துக்குத் தயாராகலாம். இல்லையென்றால் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும்.

விழிப்புணர்வுடன் கூடிய மரணம் அடுத்த பிறவியை வடிவமைக்க உதவுகிறது.

நாமே அதை எடுத்துக்கொள்வோமா அல்லது அது நம் மீது திணிக்கப்படுமா

அது நமக்குத் தெரியாது. ஆனால் நாம் அந்தப் பயணத்திற்குத் தயாராக வேண்டும். அப்போது என்ன நடக்கும் என்றாவது நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.