காரணமற்ற பிரார்த்தனை நிறைந்த வெளிப்பாடு
ஒரு சின்ன கதை :
ஸுஃபி ஞானி ஜாவேத், ஒரு நாளைக்கு ஐந்து முறை இறைவனுக்கு நன்றி செலுத்தி தொழுகை செய்வார். ஒருமுறை அவரும் அவருடைய சீடர்களும் கிராமங்களில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் கிராமங்களில் எல்லாம் ஸுஃபிஸம் ஒரு மதமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
முதல் கிராமத்தில் அவர்களைப் பிச்சையெடுப்பவர்கள் என்று திட்டி மிகச் சிறிதளவே உணவு கொடுத்தார்கள். அடுத்த கிராமத்தில் எதுவும் கொடுக்க மறுத்துவிட்டார்கள். மூன்றாவது நாள் அவர்கள் போன கிராமத்தில் பகையுணர்வு காட்டியதோடு மட்டுமல்லாமல் தடியாலும், கல்லாலும் அடித்து விரட்டினார்கள்.
அன்றிரவும் அந்த குரு வழக்கம்போல மண்டியிட்டுக் கடவுளுக்கு நன்றி சொன்னார். அவருடைய சீடர்கள் அதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களால் அதைத் பசியோடும், தாகத்தோடும் பரிதாபகரமாக இருக்கும் அந்த நேரத்திலும், எதற்காகத் தங்கள் குரு கடவுளுக்கு நன்றி சொல்கிறார் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் கோபமானார்கள்.
நன்றியுணர்வு என்பது ஏதாவது கிடைப்பது அல்லது கிடைக்காதது பற்றியதல்ல. இருப்பிலிருந்து வெளிப்படும் ஆழ்ந்த மகிழ்ச்சியின், நன்றியின் வெளிப்பாடுதான் அது.
''குருவே! உணவில்லாமல் இருக்கிறோம். இன்று நம்மை அந்தக் கிராமத்திலிருந்து நாய்களை விரட்டுவதுபோல் விரட்டி விட்டார்கள். இதற்காகவா நீங்கள் நன்றி சொல்கிறீர்கள் ?' என்று கத்தினார்கள்.
குரு அவர்களைப் பார்த்துக் கேட்டார். ''மூன்று நாள்கள் பசியாக இருந்ததைப் பற்றிச் சொல்கிறீர்கள். இது வரையிலும் நமக்கு கிடைத்ததைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் ? 30 ஆண்டுகளாக நமக்கு உணவு கொடுத்ததற்காக என்றாவது நீங்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்திருக்கிறீர்களா ?
தெரிந்துகொள்ளுங்கள், எனது நன்றியுணர்வு என்பது ஏதாவது கிடைப்பது அல்லது கிடைக்காதது என்பது பற்றியதல்ல. எனது உணர்விலிருந்து, இருப்பிலிருந்து வெளிப்படும் ஆழ்ந்த மகிழ்ச்சியின், நன்றியின் வெளிப்பாடுதான் அது. ஏதாவது பொருளைக் கேட்காத, காரணமற்ற பிரார்த்தனை நிறைந்த வெளிப்பாடு. அவ்வளவுதான்,'' என்றார்.
ஒரு ஞானி தமக்கு ஏற்படும் துக்கங்களையும் மகிழ்ச்சிகளையும் முழுமையான சக்தியிடமே அவற்றைச் சமர்ப்பித்து விடுகிறார். ஞானிகள் நீங்கள் புரிந்து வைத்திருக்கும் மகிழ்ச்சிக்கும் அப்பாற்பட்டவர்கள். அவர்கள் எதன் மீதும் பற்றுக் கொண்டவர்கள் இல்லை. அவர்கள் கருணை வடிவானவர்கள்.
உள் உலகச் செல்வந்தர்கள்
மற்றுமொரு விஷயம் உள்ளது. ஞானம் அடைந்தவர்கள் தங்களிடம் உள்ளவை எல்லாவற்றையும் தாங்கள் பெறுபவற்றையும் பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம் சமர்ப்பித்து விடுகிறார்கள். உணவு கிடைத்தால் சமர்ப்பிக்கிறார்கள்; பல நாள்களுக்குப் பசியாக இருந்தால் அதையும் சமர்ப்பிக்கிறார்கள்.
பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் உள் உலகத்தில் செல்வந்தர்கள்தான். ஏனென்றால் எல்லாவற்றையும் அவர்கள் சமர்ப்பித்து விடுகிறார்கள்.
அவர், அவர், "பிரபஞ்ச சக்தி பார்த்துக்கொள்ளட்டும், ' என்று சொல்கிறார். அவரது எல்லாப் பொறுப்புகளையும் பிரபஞ்ச சக்தியிடமே விட்டு விடுகிறார்.
அப்படியொரு சரணாகதி நிகழ்கிறபோது உள்ளே மிகப்பெரிய விடுதலையுணர்வு ஏற்படுகிறது. விடுதலையுணர்வு ஏற்பட்ட அந்தக் கணமே நமக்குள் 'பளிச்' என ஆனந்த உணர்வு மலர்கிறது. நாம் ஆனந்தத்தால் மலர்கிறோம்.
சரணாகதி நிகழ்கிறபோது உள்ளே மிகப்பெரிய விடுதலையுணர்வு ஏற்படுகிறது.
நாம் ஏதோவொன்றை துக்கம் என நினைக்கிறோம். ஏனென்றால் அந்த ஏதோ ஒன்றுக்கு நாம்தான் பொறுப்பாளர்கள் என நினைக்கிறோம். நாம் அதைக் கட்டுப்படுத்துவதாக நினைக்கிறோம். அதனால்தான், நாம் எதிர்பார்த்தபடி செயல்கள் நடக்காதபொழுது, அதனைத் துக்கமாக நினைக்கிறோம்.
ஆனால் ஞானிகள் அப்படி நினைப்பதில்லை. அவர்கள் நீரோட்டம்போல் தளர்வாய் செல்கிறார்கள்; எது வந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்; அதைப் பிரபஞ்ச சக்தியிடம் சமர்ப்பித்து விடுகிறார்கள்.
என்னை அடைந்தவர் மீண்டும் பிறப்பதில்லை
அடுத்த ஸ்லோகத்தில் கிருஷ்ணர் துக்கம் நிறைந்த உலகைப் பற்றியும் நற்செயல்களும்கூட நம்மைப் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் இருந்து ஏன் வெளியே எடுத்துச் செல்ல முடிவதில்லை எனவும் விளக்குகிறார்.
கிருஷ்ணர் இங்கே சொல்கிறார், ''பொருள் சார்ந்த உலகங்களிலேயே மிக உயர்ந்த உலகமாகக் கருதப்படும் பிரம்ம லோகத்தில் இருந்து மிகத் தாழ்ந்த பொருள் சார்ந்த உலகமான பூலோகம்வரை பிறப்பும், இறப்பும் தொடர்ந்து நிகழ்வதால் துக்கமே நிறைந்துள்ளது. ஆனால் யார் ஒருவர்
எண்ணங்களற்ற உணர்வு நிலையை நீங்கள் ஒரு கணமேனும் விழிப்புணர்வுடன் அனுபவிக்கவில்லை என்றால் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலிருந்து நீங்கள் மீள முடிவதில்லை
என்னை அடைகிறாரோ, யார் ஒருவர் எனது இருப்புக் தன்மையையும் விழிப்புணர்வு நிலையையும் அடைகிறாரோ அவர் மீண்டும் பிறப்பதில்லை. ''
முன்பு சக்தி அடுக்குகளைப் பற்றிச் சொன்னேன். நாம் பிரபஞ்ச அடுக்கான பிரம்ம லோகத்தையே அடைந்தாலும் மீண்டும் நாம் பிறப்பை அடைவோம். அதாவது நாம் நல்ல நோக்கங்களையும் செயல்களையும் உடையவர்களாகவே இருந்தாலும்கூட மீண்டும் நாம் உடலுக்குள் வர வேண்டும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நல்ல செயல்களை எண்ணங்களில் சிக்கிக்கொண்டு நாம் நல்லவற்றையே செய்தாலும்கூட நாம் மீண்டும் வருவோம். நமது புண்ணியங்களால் நமக்கு ஞானத்தைத் தர முடியாது.
நான் மக்களிடம், ''எனது ஆசீர்வாதத்திற்கும் பணம் தந்தாலும்கூட, ஞானத்திற்கு நான் 'ஸ்பீடு பாஸ்' தர முடியாது.' என்று சொல்வதுண்டு. நான் ஸ்பீடு பாஸ் தர முடியாது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை நீங்கள் ஒரு கணமேனும் அனுபவிக்கவில்லை என்றால் பிறப்பு இறப்பு என்ற இந்தச் சுழற்சியில் இருந்து உங்களை யாராலுமே காப்பாற்ற முடியாது.
தாங்கள் சேவை நிறுவனங்களுக்குப் பணம் தருவதன் மூலம், சொர்க்த்திற்குப் போவதற்கான ரசீதையும் அனுமதிச்சீட்டையும் பெறுகிறோம் என்று சிலர் நம்புகிறார்கள். அந்த ரசீது அவர்கள் இறக்கும்போது அவர்களிடம் இருக்கும். அந்த ரசீதுடன் சேர்த்துத்தான் அவர்களை அடக்கம் செய்வார்கள். அதைச் சொர்க்கத்தின் வாயில் காவலரிடம் காட்டினால், அவர் இவர்களை உள்ளே அனுமதித்து விடுவார் என்று நினைக்கிறார்கள்.