உள் உலக விஞ்ஞானத்தின் பரிசோதனைச் சாலைகள்
நான் உண்மையை, உண்மையாகத் தெளிவாகச் சொல்கிறேன், "இந்த நிறுவனத்தில் அப்படியொரு முறை இல்லை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். ''
நான் எப்போதும் மக்களிடம், ''புண்ணியம் செய்யுங்கள்; நான் உங்களைச் சொர்க்கத்திற்குக் கொண்டு செயல்களைப் பற்றற்ற முறையில் நன்றியோடும், அன்போடும் செய்யுங்கள்,'' என்றுதான் சொல்கிறேன். அதன் விளைவு : உங்களுடைய மன அமைப்பினாலேயே நீங்கள் சொர்க்கத்தில் இருப்பீர்கள்.
உங்கள் செயல்கள் நன்றியுணர்வில் இருந்து எழுந்த செயலாக இருக்கட்டும். ஒரு செயலைச் செய்யும்போது, அந்தச் செயலைச் செய்வதற்காகவே செயல்புரியுங்கள். நாளை சொர்க்கத்தில் உங்களுக்கு ஒரு தனியிடம் கிடைக்கும் என்பதற்காக அல்ல.
நான் மக்களிடம் 'நீங்கள் எனது ஆசீர்வாதத்திற்கும் பணம் கொடுத்தாலும் நான் ஸ்பீடு பாஸ் என்னால் எதுவும் செய்ய முடியாது. இது தான் உண்மையான உண்மை," என்று சொல்கிறேன். உடனே மக்கள் கேட்கிறார்கள்.
''அப்படியானால் நீங்கள் ஏன் கோயில்களையும் ஆசிரமங்களையும் கட்டுகிறீர்கள் ? ' '
நான் அவற்றை ஆன்மீக அறிவியலைப் பற்றிய பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய சோதனைக்கூடங்களாக இருப்பதற்காகவே அமைக்கிறேன். மக்கள் ஆன்மீக அறிவியலை
ஆசிரமங்களும், கோயில்களும் 'உள் உலக விஞ்ஞானத்தின் பரிசோதனைச் சாலைகள்'.
ஆராய்வதற்காகவும் மிகப்பெரிய லட்சியங்களைக் கற்பதற்காகவும் அந்த லட்சியங்களை உள்வாங்கி தங்கள் வாழ்வில் பயிற்சி செய்வதற்காகவும் அமைக்கப்பட்ட இடங்களே ஆசிரமங்களும், கோயில்களும்! அவை 'உள் உலக விஞ்ஞான ஆய்வுக்கூடங்கள்'.
மக்கள் ஆராய்வதற்காகவும் அறிவதற்காகவும் பயிற்சி செய்வதற்காகவும் புரிந்துகொள்வதற்காகவும் ஆசிரமங்களையும் கோயில்களையும் உலகம் முழுவதும் அமைக்கிறேன்.
நீங்கள் இந்த ஆய்வுக்கூடங்களில் உள் உலக அறிவியலைப் பற்றிய ஆய்வில் இருக்கிறீர்கள் என்ற விழிப்புணர்வுடன் நற்செயல்களைச் செய்யுங்கள். நம்முடைய ரிஷிகள் பூர்வ காலத்தில் செய்ததைப்போல செய்யுங்கள். சொர்க்கத்திற்கான 'ஸ்பெஷல் டிக்கெட்' என நினைத்துச் செய்யாதீர்கள்.