ஞானியின் உன்னதமான நோக்கம்
இப்போது கிருஷ்ணர், ''ஆழ்ந்த யோக நிலையை அடைந்த மிக உயர்ந்த ஆத்மாக்கள், என்னை அடைந்த பிறகு இந்தத் துக்கங்கள் நிறைந்த நிலையற்ற உலகிற்கு வருவதில்லை. ஏனென்றால் அவர்கள் மிக உயர்ந்த முழுமையை அடைந்து விடுகிறார்கள்,'' என்று சொல்கிறார்.
இந்த விஞ்ஞானத்தை நாம் அறிவுப்பூர்வமாகப் புரிந்துகொள்ளும் நம்முடைய புரிந்துகொள்ளுதல்தான். அந்த ஸத்யத்தை நம்முடைய அனுபூதியாக மாற்ற வேண்டும் என்கிற உற்சாகத்தை நமக்குக் கொடுக்கிறது. இயற்கையாகவே அந்த உற்சாகம், நம்மை இறுதி ஸத்யத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.
இங்கே கிருஷ்ணர் '' இந்த நிலையை நீ அடைந்தாயேயானால், மீண்டும் நீ இங்கு வரமாட்டாய்,' என்று சொல்கிறார். எண்ணங்கள் இல்லாத அந்த நிலையை அடைவதற்கு நம்மை உற்சாகப்படுத்துகிறார். நம்மைத் தூண்டுகிறார்.
ஞானிகளின் ஒரே பணி என்னவென்றால், தமக்குள் நிகழ்ந்த அனுபவத்தை, தாம் உணர்ந்த ஸத்யத்தை ஒவ்வொருவரையும் அடையச் செய்வதுதான். அவர்களுக்கு அந்த ஒரு நோக்கம் மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை. இதில் எந்த ரகசியமோ அல்லது அந்தரங்கமான நோக்கமோ இல்லை.
ரூபானிகளுக்கு உள்ளிருந்து கிடைக்கும் வழிகாட்டுதல் மிக உயர்ந்ததாக இருப்பதனால், அவர்கள் எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறார்கள்.
மக்கள் ஒரு ஞானியை பார்க்கிறார்கள். இருப்பதாகவே நினைக்கிறார்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உள் உலக ஆனந்தத்தை அடைந்தவர்கள் வெளி உலகில் எதைப் பற்றியும் லக்ஷ்யம் செய்வதில்லை.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உலகிலிருந்து அவர்களுக்குத் ஏனென்றால் அதைவிட சக்தி வாய்ந்த ஏதோ ஒன்றை அவர்கள் தங்களுக்குள்ளேயே பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் வழிகாட்டுதல் மிகவும் உயர்ந்ததாக இருப்பதனால், அவர்கள் எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறார்கள்.
அவர்கள் அதனால்தான், 'துக்கங்களின் தொகுப்பு' பார்ப்பதில்லை. ஒரு ஞானிக்கு பல நாள்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்றாலும் அவர் ஆனந்தமாகவே இருப்பார். அந்தச் சூழ்நிலையில்கூட அவர் நன்றியுணர்வும் இரக்கமும் உடையவராகவே இருப்பார்.
ஞானிகள் இந்த உலகை 'துக்கங்களின் தொகுப்பாக'ப் பார்ப்பதில்லை. எப்போதும் ஆனந்தத்தின் தொகுப்பாகவே பார்க்கிறார்கள்.
துக்கத்திலோ மகிழ்ச்சியிலோ அவர்கள் ஆழ்வதில்லை. இரண்டையும் ஒரே நிலையிலிருந்துதான் பார்க்கிறார்கள். இரண்டிலிருந்தும் சம அளவில் விலகி நிற்கிறார்கள். சுக துக்கங்களைக் கடந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
எப்போதுமே, அவர்கள் பிரபஞ்சத்திற்கு நன்றி செலுத்துகிற நிலையிலேயே இருக்கிறார்கள். உலக விஷயங்கள் அவர்களைப் பாதிப்பதில்லை. அவர்களது அகராதியில் துக்கமோ, மகிழ்வோ இல்லை.