KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/கற்பனைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

கற்பனைக்கு அப்பாற்பட்ட நிகழ்வு

தொடர்ந்து நிகழ்வதை நான் பால்கனியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு உயிர் ஞானத் தன்மை அடைந்து விட்டது என்பது அப்போது எனக்குத் தெரியவேயில்லை. நீண்ட வரிசை குறைந்ததற்குப் பிறகு, வாசலுக்கு அருகில் எனக்கென ஒதுக்கப்பட்ட இடத்துக்கு நான் சென்றேன்.

அப்போது ஐயா அவர்கள் என்னிடம் வந்து, 'ஸ்ரீ நித்ய அருணாச்சலானந்தா அவர்கள், மஹா ஸமாதி அடைந்து விட்டார். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆசீர்வாதம் செய்து முடித்தவுடன் நாம் திருவண்ணாமலைக்குப் போகிறோம். அனைத்து ஆச்சார்யார்களையும் ஹீலர்களையும் ஒரு இடத்தில் கூட்டுங்கள். நான் உங்களிடம் சொன்னதை மற்றவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம். நீங்கள் அமைதியாகவும் ஆன்மீகப் பக்குவத்துடனும் நடந்துகொள்வதையே, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM விரும்புகிறார்,' என்று சொன்னார்.

பிறகு நடந்தது, இனி நடக்கப்போகும் கற்பனைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளுக்கு எல்லாம் ஆரம்பமாக அமைந்தது. ஞானிகள் கருணையே வடிவான அவதார புருஷர்கள். சாதாரண சமயங்களில் எப்படி ஆசீர்வாதம் வழங்கப்படுமோ அதேபோல் ஆசீர்வாதம் செய்தார்.

ஆசி கொடுத்து முடிந்தவுடன், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் அருகில் அம்மா அமர, சகோதரர்கள் காரில் அமைதியாய்ப் புறப்பட்டுச் சென்றது. ஆச்சார்யர்களுக்கும் ஹீலர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டன.

சில பேரைத் தவிர மற்றவர்களுக்கெல்லாம் எங்கே போகிறோம் என்பதே தெரியாது. தெரியாதவர்களெல்லாம், 'சாமியோடு எங்கோ வெளியூர் போகிறோம். சாமி நம்முடன் இருக்கப் போகிறார், அது போதும்' என்ற மகிழ்வில் இருந்தார்கள்!