KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/பக்தர்கள் மஹோன்னதமான இருப்பிடத்தை அடைவார்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

பக்தர்கள் மஹோன்னதமான இருப்பிடத்தை அடைவார்கள்

கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தில், ''சடங்குகள், வேள்விகள், தான தருமங்கள், பக்தி சார்ந்த காரியங்கள், பலன்களை அடிப்படையாகக் கொண்ட செயல்கள், இவற்றைச் செய்பவர்கள் அந்த மஹோன்னதமான இருப்பிடத்தை அடைகிறார்கள், '' என்று சொல்கிறார்.

இந்தச் செயல்களைச் செய்யும்போது நமது மனப்பாங்கு என்ன என்பதுதான் முக்கியமே தவிர, செயல் முக்கியம் அல்ல. பயத்தினாலோ, ஆசையினாலோ மக்கள் கோயில் பூசாரிகளுக்குப் பணம் கொடுப்பதை நான் பார்க்கிறேன். பணம் கொடுக்காவிட்டால் கடவுள் அவர்களைத் தண்டிப்பார் அல்லது பணம் கொடுத்தால் அவர்கள் குடும்பத்தைக் கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லப் படுகிறது.

செயல்களுக்குப் பின்னால் இருக்கிற மனப்பாங்குதான் முக்கியம். ஆழ்ந்த பக்தியுடன் தமது செயல்களைச் செய்தாரேயானால், சமயத்தில், அவர் அருகில் நான் இருப்பேன் என்று கிருஷ்ணர் உறுதி அளிக்கிறார்.

இது விளக்கத்தைக் கொடுத்தார். இனி பின்வரும் அத்தியாயங்களில் இந்த ஸ்தீயத்தை உணர்ந்துகொள்வதற்கான நுட்பங்களைக் கொடுக்கிறார்.

எண்ணப்பதிவுகளை அகற்றுவதன் மூலமாகவும் ஆழ்ப்பதிந்திருக்கும் நினைவுப் பதிவுகளை நீக்குவதன் மூலமாகவும் நமது ஆசைகளைப் புரிந்துகொள்வதன் மூலமாகவும் நாம் எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை அடைவதற்கும் அதை அனுபவிப்பதற்குமான ஆழ் நிலை தியான நுட்பங்களைத் தந்துள்ளார்.

மிக உயர்ந்த சக்தியாகிய, பரப்ரூமமாகிய கிருஷ்ணரை, நாம் எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை அடையவும் ஸாக்ஷியாக இருக்கிற விழிப்புணர்வு நிலையை அடையவும் ஆத்ம ஞானத்தை அடையவும் நிலையான ஞானமாகிய ரித்யானர்க்கத்தை அடையவும் வேண்டிக்கொள்வோம்!

கேள்வி: ஸ்வாமிஜி, தங்கள் ரித்யானர்க்க ஸ்புரண தியான முகாம் பற்றிச் சொன்னீர்கள் அதைப் பற்றி மேலும் விளக்க முடியுமா ? அது எவ்வாறு நம் வாழ்வில் உதவுகிறது?

நான் இப்படி அதை விளக்குகிறேன். நான் ஞானமடைவதற்கு வாழ்நாள் காலத்தை ஹிமாலயப் பகுதியில் தனிமையில் வசிக்க வேண்டுமென்றுதான் நினைத்தேன். நாம் பின்பற்ற வேண்டிய 'ஞானப் பாதை' அதுதான் என்று நினைத்தேன்.

தியான பாதையின் மூலமாகத் தனிமனித மாற்றத்தைக்கொண்டு வர முடியும், என்கிற செய்தியை உலகிற்குக்கொண்டு சேர்ப்பதே என் பணி.

ஞானமடைந்ததற்குப் பிறகு எனக்குத் தனியான விருப்பம் என்று எதுவும் இல்லை. ஆனால் அந்தப் பிரபஞ்ச சக்தியின் சங்கல்பத்தின்படி, 'எனது ஞான அனுபவத்தை மற்றவர்களுக்குச் சொல்வதன் மூலம், அவர்களும் அதை அடைய முடியும் என்பதை அவர்களுக்குப் புரியுவைப்பதே' என்னுடைய லக்ஷ்யம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன்.

'தியான பாதையின் மூலமாகத் தனிமனித மாற்றத்தைக்கொண்டு வர முடியும்,' என்கிற செய்தியை உலகிற்குக்கொண்டு சேர்ப்பதே என் பணி என்று தெள்ளத் தெளிவாக விளங்கிவிட்டது. அப்போதுதான் எனது உண்மையான பயணம் துவங்கியது. எனது அனுபவங்களையெல்லாம் தொகுத்து, அதனை மேம்படுத்துவதற்குச் சில காலம் பிடித்தது. அதன் விளைவுதான் தியான பீடம் எனும் ஆன்மீகப் பரிசோதனைச் சாலை!

தொடக்கத்தில், மக்களுக்கு அவர்கள் வாழ்க்கையைச் சமாளிப்பதற்கு என்னென்ன வேண்டும் என்பது பற்றித்தான் பேசினேன். எப்படி அவர்கள் தங்கள் உணர்ச்சிகளைச் சமாளிக்கலாம், நாம் அந்தப் பிரபஞ்ச சக்தியின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக எப்படி இருக்கிறோம் என்பதைப் பற்றிச் சொன்னேன்.

பிரபஞ்ச சக்தி நமக்குள்ளும் பிரதிபலித்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதையும் அதனைச் சக்ரங்கள் என்று அழைக்கப்படும் ஏழு சக்திமையங்களில் உணர முடியும் என்பதைப்பற்றியும் விளக்கமாகப் பேசினேன்.

அந்தச் சக்கரங்கள் எனப்படும் ஏழு சக்தி மையங்களுக்கு சக்தியூட்டுவதே LPB-I ஆக இருந்தது. பாரதத்தில் இது ஆனந்த ஸ்பூரண முகாம் என்று அழைக்கப்பட்டது. ஆனந்த என்றால் ஆனந்தம் என்றும், ஸ்புரண என்றால் தடைபடாத ஓட்டம் அல்லது தொடர்ந்து பொங்கிக்கொண்டே இருக்கும் ஊற்று என்றும் பொருள். இந்த தியான முகாம் ஆனந்த சக்தி உங்களுக்குள் மீண்டும் தடைபடாமல் ஓடுவதற்காகவே வடிவமைக்கப்பட்டது. இது நிகழ்வதற்கான நுட்பம்தான் தியானம்.

என்னால் தீட்சை அளிக்கப்பெற்ற, பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் இந்த தியான முகாம்கள் நடத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் பயன் அடைந்துள்ளார்கள். இது வாழ்வுக்குத் தீர்வளிக்கும் தியான முகாம். நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் என்ற ஒரு புத்தகம் இந்த தியான முகாமின் உள்ளடக்கங்களை விவரிக்கிறது. இந்தப் புத்தகத்தைப் படிப்பதால் ஏற்படும் புரிதல்கூட, மக்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கிறது.

தற்போது இதை 'லைஃப் ப்ளிஸ் ப்ரோகிராம் லெவல் - 1' என்று அழைக்கிறோம். துறை வல்லுநர்களுக்கும் கார்ப்பரேட்களுக்கும் ஏற்றவாறு சில மாறுதல்களுடன் இந்தப் ப்ரோகிராம் வழங்கப்படுகிறது. இதில் கற்றுத்தரப்படும் பெரும்பாலான தியான நுட்பங்கள் மனச்சோர்வை உடைத்தெறிபவையாக இருக்கின்றன.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத் கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரம்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே அக்ஷர ப்ரம்மயோகோ நாமாஷ்டமோऽத்யாய: ||

ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத் கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய அக்ஷர பிரஹ்ம யோகம் என்னும் பெயர் கொண்ட எட்டாவது அத்தியாயம்.

ஆசிரியரின் குறிப்பு

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரின் தந்தை ஸ்ரீ நித்ய அருணாச்சலானந்தா அவர்கள், 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் நாள் ஞானமடைந்து, தமது உடலை விட்டு மஹா ஸமாதி அடைந்தார். அன்று நடந்ததை அப்போது அங்கிருந்த சீடர் ஒருவர் விளக்குகிறார்.

அன்று பெங்களூருவில் நடைபெற்ற அஷ்டாவக்ர சொற்பொழிவின் மூன்றாவது மற்றும் கடைசி நாள்.

அன்றைய தலைப்பு, 'ஞானம்: பெற்றுக்கொள்ளுங்கள்!' என்பதாகும். ஸ்வாமிஜி அன்று மிகவும் ஆழமாக, சிறுவயது ஞானியான அஷ்டாவக்ர எழுதிய ஸூத்ரூங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். மழையெனப் பொழிந்த அவருடைய சொற்பொழிவைக் கேட்ட மக்கள் அதில் ஆழ்ந்து லயித்துப் போயிருந்தார்கள். அப்போது திடீரென்று ஸ்வாமிஜி இருமுவதைப்போல செருமினார். பேச்சு தடைபட்டது.

தண்ணீர் வேண்டுமென்று கேட்டார், குடித்தார், பிறகு பேச்சைத் தொடர்ந்தார்.

மறுபடியும் ஒரு குறுக்கீடு. ஐயா ( ஸ்வாமிஜியின் பாரத விஷயங்களுக்கான செயலர்) வேகமாக மேடைக்கு வந்தார். சோபாவுக்கு பின்புறம் சென்று ஸ்வாமிஜியிடம் ஏதோ முணுமுணுத்தார். ஸ்வாமிஜி மைக்கை ஒரு கையால் மறைத்துகொண்டு அவர் சொல்வதை அமைதியாகக் கேட்டார். பிறகு 'நான் பார்த்துக்கொள்கிறேன்' என்பது போன்ற ஒரு பாவனையை முகத்தில் காட்டினார். மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

பார்வையாளர்கள் குழப்பத்திலிருந்தனர். ஸ்வாமிஜி ஐயாவை மறுபடியும் அருகில் அழைத்தார். மறுபடியும் முணுமுணுப்பாகப் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. ஸ்வாமிஜியின் உடல் மொழியில் நிலையான, உறுதியான அமைதி தெரிந்தது. ஐயா சென்ற பிறகு ஸ்வாமிஜி அமைதியாகத் தமது பேச்சைத் தொடர்ந்தார்.

அந்த உரையின் தாக்கம் ஆற்றல் மிக்கதாக இருந்தது. அந்த சொற்பொழிவின்போது யாருமே அறையை விட்டுச் செல்லவில்லை. இயல்பான கைதட்டல் தொடர்ந்தது. அதற்கு பிறகு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் ஆசீர்வாதத்திற்காக, பாம்பின் வால் போன்று நீண்ட வரிசையில் பங்கேற்பாளர்கள் நின்றார்கள்.

ஸ்வாமிஜியின் உடல் மொழியில் நிலையான, உறுதியான அமைதி தெரிந்தது.