அவதாரபுருஷரின் வாழ்க்கை ஏற்கெனவே எழுதப்பட்ட நாடகம்
இப்போதைக்கு இந்த ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், போதும். இந்த முழு அத்தியாயத்திலும் கிருஷ்ணர் இந்த ஒரு லட்சியத்தைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லிப் புரிய வைக்கிறார்.
கிருஷ்ணர் எந்த விழிப்புணர்வு நிலையில் இருந்தாரோ, எந்த எண்ணங்கள் அற்ற விழிப்பு உணர்வு நிலையில் இருந்துகொண்டு தம் வாழ்க்கை என்னும் விளையாட்டை விளையாடினாரோ, மொத்த வாழ்க்கையையும் எப்படி லீலையாக வாழ்ந்து காட்டினாரோ, அந்தக் கிருஷ்ண உணர்வை, எண்ணங்களற்ற உணர்வு நிலையை, சாக்ஷியாக இருக்கும் விழிப்புணர்வு நிலையை அனுபவியுங்கள் என்றுதான் சொல்கிறார்.
அதனால்தான். கிருஷ்ணனின் வாழ்வை லீலை - பிரபஞ்ச சக்தியின் விளையாட்டு, கிருஷ்ண லீலா என்று சொல்கிறோம். அது வரலாறு அல்ல! அது லீலை; அது பிரபஞ்ச சக்தியின் விளையாட்டு.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டோம் என்றால் அவர்களின் வாழ்க்கை, அவர்களின் மறைவுக்குப் பிறகுதான் வரலாறாக எழுதப்படும். ஆனால் அவதார புருஷர்களின் வாழ்க்கையோ ஏற்கெனவே எழுதப்பட்ட ஒரு நாடகம்தான்!
அவர்கள் அதை வந்து நடித்துவிட்டுப் போகிறார்கள் அவ்வளவுதான். அவர்களுக்கு வாழ்க்கை என்பது ஏற்கெனவே எழுதப்பட்ட நாடகம்; நமக்கு அது வரலாறு.
நாம் இறந்தபிறகு, யாராவது நம்மைப் பற்றிய வரலாறு எழுதலாம், நாம் ஏதாவது சாதித்திருந்தால்! நாடகத்தின் மூலப் படிவத்தோடு வந்து நடித்து விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் முழு விளையாட்டையும் அதனால்தான், அவர்கள் வாழ்க்கையே லீலா என்று சொல்லப்படுகிறது.
நாம் சாக்ஷியாக இருக்கும் விழிப்புணர்வு நிலையை அடைந்து விட்டோமானால் நமது
மொத்த வாழ்க்கையும் லீலையாக மாறி விடுகிறது. நமக்கு நாடகக் காட்சி களைப் பற்றிய மூலப் படிவம் தெரியும்; அதனால் அதற்குத் தயாராகி விடுகிறோம். நாம் நடிக்கவந்த நாடகத்தின் மூலப் படிவம் நமக்குத் தெரிந்தால், அது லீலை. அப்படித் தெரியாவிட்டால், அது வரலாறு.