Part 4: Bhagavad Gita Explained
குற்ற உணர்ச்சியை விடும்வரை ஆசைகள் விடாது
உண்மையில் கிருஷ்ணர் இந்த விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். அந்த அத்தியாயங்களைப் பற்றி நாம் பின்னர் விரிவாகக் காண்போம்.
உண்மையில். சாதாரண காலங்களில் என்றுகள் என்ற எண்ணப் பதிவுகளைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருப்பதில்லை. அதனால் முதலில் சில நுட்பங்களின் மூலம், அந்த ஸம்ஸ்காரங்களை உங்களிடம் இருந்து வெளிப்படுத்தச் செய்கிறேன்.
உங்கள் நிகழ்ந்த எல்லாவற்றையும் ஆராயுங்கள். உயிர் உடலை விட்டுச் செல்லும்போது நாம் கடக்க வேண்டிய சரீரங்களில் பகியப்பட்டுள்ள எண்ணங்களை எழுதுங்கள்.
உங்கள் ஆசைகளின் வேர் எது? எது மேலோட்டமான உங்களுடையவை ? மற்றவர்களால் மீது திணிக்கப்பட்டவை ? எது உங்களுடைய அடிப்படை தேவைகள் ? அதைப் பூர்த்தி செய்வதற்காக நீங்கள் எவ்வளவு சக்தியை
குற்ற உணர்ச்சி என்பது முதலில் சமுதாயத்தால் நம்மீது திணிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு குற்ற உணர்ச்சியை உருவாக்கிக்கொள்கிற கலையில் நாம் நிபுணர்களாகி விடுகிறோம்.
எடுத்து வந்திருக்கிறீர்கள் ? எது பிறரிடமிருந்து கடன் வாங்கிய ஆசைகள் என ஆராயுங்கள்.
உதாரணத்திற்கு, சமுதாயம்தான் முதலில் நம்முள் குற்ற உணர்ச்சியைத் திணிக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு, குற்ற உணர்ச்சியை நமக்குள் தொடர்ந்து உருவாக்கிக்கொள்கிற கலையில் நாம் நிபுணர்களாகி விடுகிறோம். முதலில் சமூதாயம் நமக்குக் கற்றுத் தருகிறது. பிறகு அந்தக் கலையில் நாம் தேர்ச்சி பெற்றவர்களாகி விடுகிறோம்.
அடுத்ததாக வலி, துக்கம்; சமுதாயம்தான் எது வலி ? எது வேதனை ? என்று வரையறை செய்கிறது. அதற்குப் பிறகு அந்த அளவுகோலை வைத்துக்கொண்டு நாம் நமது மொத்த வாழ்க்கையையும் துக்கத்திற்குள்ளாக்கிக்கொள்கிறோம்.
இப்பொழுது இந்த தியான வகுப்பில் நாம் எண்ணப்பதிவுகளுடன் ஒவ்வொரு உணர்ச்சிகளின் மீதும் ஆழமாக வேலை செய்வோம்.
பின்னால் குணத்ரய விபாக யோகம் என்கிற அத்தியாயத்தில் கிருஷ்ணர் இதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். குணத்ரய என்றால் பிறக்கும்போது ஸ்தீவ், இவற்றைப் பற்றி மிக ஆழமாகப் பேசுகிறார்.
எண்ணப்பதிவுகளின் மீது வேலை செய்யும்போது, அவற்றைச் சுத்தம் செய்யும்போது, நாம் நமது மொத்த வாழ்க்கையும் மாறி விடுவதைக் காணலாம்.
அந்தச் சமயத்தில் நாம், அந்த எண்ணப் பதிவுகளின்
அப்போது, எண்ணப் பதிவுகள் எப்படி நம்மை முன்னேறவிடாமல் தடுக்கின்றன என்பது பற்றி விரிவாக ஆராயலாம். நாம் அவற்றின் மீது வேலை செய்யும்போது, அவற்றைச் சுத்தம் செய்யும்போது, நாம் நமது மொத்த வாழ்க்கையும் மாறி விடுவதைக் காணலாம்.
இன்னொரு விஷயம் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அறிவியல் நம் மரணத்தைப் பற்றியது மட்டுமல்ல, நாம் வாழ்வதைப் பற்றியதும்தான். நாம் குற்ற உணர்ச்சியினால் பாதிக்கப்பட்டோமேயானால், நமது ஆசைகளை நாம் அனுபவிக்க முடியாது.
நாம் நமது ஆசைகளை அனுபவிக்காமல் இருப்போமேயானால், நாம் மேலும் குற்ற உணர்ச்சியை அதிகரித்துக்கொள்கிறோம். அவ்வளவுதான்.
நாம் குற்ற உணர்ச்சியில் சிக்கிக்கொள்ளும்போது, நாம் ஆசைகளை விடுவதில்லை. அவற்றாலும் நம்மை விட்டுச் செல்ல முடிவதில்லை. நாம் ஆசைகளை விடாதபோது, மேலும் மேலும் குற்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்கிறோம். இது ஒரு ஒரு விஷச் சுழலாகி விடுகிறது.
அதனால் இறப்பதற்கு மட்டுமல்ல, வாழ்வதற்கும் இந்த அறிவியலை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.