KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/காலம் மனத்தைப் பொறுத்ததேSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

காலம் மனத்தைப் பொறுத்ததே

கிருஷ்ணர் ஒரு விஷயத்தைத்தான் தெளிவுபடுத்துகிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், 'எண்ணங்களற்ற அந்த விழிப்புணர்வு நிலை' ஒருமுறையாவது சுவைத்து விடுவதற்கான முயற்சி செய்ய வேண்டியதுதான். அடுத்து வருகிற அத்தியாயங்களில் ஆழமாக அதைப் பற்றி கிருஷ்ணர் பேசுகிறார்.

எப்படி ஒவ்வொரு சரீரமாகத் திறப்பது, எப்படி முன்னேறுவது, எப்படி ஒவ்வொரு சரீரத்தையும் சுத்தப்படுத்துவது, எப்படிக் கடப்பது, எப்படி எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை அடைவது என்பது பற்றித்தான் சொல்கிறார்.

கிருஷ்ணர் மேலும் சொல்கிறார், "மனிதர்களின் ஆயிரக்கணக்கான அண்டுகள் சேர்ந்ததுதான், ப்ரூற்மாவின் ஒரு பகல். அதேபோல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சேர்ந்ததுதான் பாலர்மாவின் இரவு.

ஏற்கெனவே நான் உங்களுக்குச் சொன்னதுபோல், நம்முடைய ஒரு வருடம், தேவர்களின் ஒரு நாள். ஆயிரக்கணக்கான வருடங்கள் சேர்ந்ததுதான் ப்ரூர்மாவின் ஒரு நாள். நாம் எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை, நிர்வாண நிலையை அடைந்தால்தான் நாம் மீண்டும் பிறக்க மாட்டோம்.

நாம் நடிக்கவந்த நாடகத்தின் மூலப்படிவம் நமக்கு தெரிந்தால், அது லீலை. அப்படித் தெரியாவிட்டால், அது வரலாறு.

இங்கு க்ஷணம் என்பதற்கு அழகானதொரு விளக்கம் கூறுகிறார்.

க்ஷணம் என்பதன் கருத்தை நான் மீண்டும் இங்கு விளக்குகிறேன். இதை நாம் புரிந்து கொண்டால்தான் கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தில் சொல்வதை உணர்ந்து போற்ற முடியும்.

க்ஷணம் என்பது ஒரு ஒரு எண்ணத்துக்கும் இன்னொரு எண்ணத்துக்கும் இடையே உள்ள இடைவெளி. ஒவ்வொருவருடைய எண்ண அலைகளுக்கும் ஏற்ப அது மாறுபடும்.

நான் நமது ஆத்மா மறு பிறவி எடுத்தாக வேண்டும். அந்த மூன்று குணங்கள் என்பது மூன்று நானோ செகண்டுகளாகவோ (Nano Second), மூன்று மைக்ரோ second), மூன்று செகண்டுகளாகவோ ,மூன்று நிமிடங்களாகவோ, முந்நூறுஆண்டுகளாகவோ, மனிதர்களின் எண்ண அலைகளைப் பொறுத்து அமையும். அது அது அவரவர்களின் மன நிலைகளைப் பொறுத்தது.

காலம் என்பது உளவியல் ரீதியானது : அது நேரத்தைப் பொறுத்தது அல்ல.

நம்முடைய மனம் பரபரப்பாகவோ அல்லது நிறைய எண்ணங்களுடனோ நிரப்பப்பட்டு

இருந்தால், எண்ணங்களுக்கு இடையேயான அந்த இடைவெளி மிகவும் குறைவாக இருக்கும். மனம் அமைதியுடனும் குறைவான எண்ணங்களுடனும் இருந்தால், எண்ணங்களுக்கு இடையேயான அந்த இடைவெளி அதிகமாக இருக்கும்.

நாம் வாழ்ந்தோமானால், குணம் என்பது மைக்ரோ செகண்டுகளாகக்கூட இருக்கலாம். அது ஒரு செகண்டாகக்கூட இருக்காது, மைக்ரோ செகண்டுகளாகத்தான் இருக்கும் !

அமைதியான, ஆனந்தமான வாழ்க்கை வாழ்ந்து, ஒரு கணமாவது எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை அடைந்திருந்தோமேயானால், நமது க்ஷணம் என்பது 200,300 ஆண்டுகளாகக்கூட இருக்க முடியும்.

க்ஷணம் என்பதை 200, 300 ஆண்டுகளாகவோகூட நீட்டிக்க முடியும். ஏனென்றால் குணம் என்பது ஒரு எண்ணத்திற்கும் இன்னொரு எண்ணத் திற்கும் இடையே இருக்கிற இடைவெளிதான்!

நமது உள்வெளியில் அடுத்த எண்ணம் நிகழ்வதை நம்மால் நிறுத்த முடிந்தால், நமது க்ஷணம் என்பது எத்தனை ஆண்டு களாக வேண்டுமானாலும் இருக்கலாம், முடிவில்லாத நிலையாகக்கூட இருக்கலாம்.

அதனால் குஷ்ணம் என்பது தொடர்புடையதுதானே தவிர குறிப்பிட்ட ஒன்றுஇல்லை. அது கடிகாரத்தில் ஓடும் நேரத்தைப் பொறுத்ததல்ல; நமது மன நிலையைப் பொறுத்ததுதான். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், காலம் என்ற கருத்து இங்கே மனத்தைப் பொறுத்ததுதான், கால வரிசையைப் பொறுத்தது இல்லை.

ஒரு சின்ன உதாரணம், காலம் என்பது மனத்தைப் பொறுத்ததுதான்; நேரத்தை பொறுத்தது அல்ல என்பதை விளக்கும்.

நமக்குப் பிடித்த நண்பரோடு அமர்ந்தோமேயானால், மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இரண்டு மூன்று மணி நேரங்களைக் கழித்து விடுவோம். பிறகு திடீரென கடிகாரத்தைப் பார்த்து ''ஒ! இரண்டு மூன்று மணி

நமது உள்வெளியில் அடுத்த எண்ணம் நிகழ்வதை நம்மால் நிறுத்த முடிந்தால், நமது க்ஷணம் என்பது முடிவில்லாத நிலையாகக்கூட இருக்கலாம்.

நேரம் போய்விட்டதா? நேரம் போனதே தெரியவில்லையே!'' என்று சொல்லுவோம்.

ஆனால் இதுவே பிடிக்காதவர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோமேயானால், நாம் என்ன செய்வோம் ? கடிகாரத்தை மீண்டும் மீண்டும் பார்ப்போம்.

''ஏன் கடிகாரம் ஓட மாட்டேன் என்கிறது ? அதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா ? நேரமே போக மாட்டேன்கிறதே, '' என நினைக்கிறோம்.

காலம் என்பது உளவியல் ரீதியானது, நேரத்தைப் பொறுத்தது அல்ல. நமது மனத்தில் ஏற்படும் எண்ணங்களைப் பொறுத்துத்தான் காலம் பற்றிய விழிப்புணர்வும் உள்ளது.

பத்து மணி நேர அளவிலும்கூட, எண்ணங்கள் குறைவாக இருந்தால் நாம் பத்து மணி நேரம் போனதை உணர மாட்டோம். ஆனால் எண்ணங்களின் அளவு அதிகமாக இருந்தால், இரண்டு மூன்று நிமிடங்கள்கூட சில வருடங்களைப்போல தோன்றும்.

ஒரு சின்ன கதை!

ஒரு பெண், தம் உடல்நலத்தைப் பரிசோதனை செய்துகொள்வதற்காக ஒரு டாக்டரிடம் போகிறார். அவரை முழுவதுமாகப் பரிசோதனை செய்த பின் டாக்டர், "ஐ ம் சாரி! ஒரு கெட்ட செய்தி. நீங்கள் இன்னும் ஆறு மாதங்கள்தான் உயிரோடு இருப்பீர்கள்,'' என்றார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்மணி, ''என்ன இது ? இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ?'' என்றார்.

உடனே அந்த டாக்டர், ''நான் ஒரே ஒரு ஆலோசனைதான் தர முடியும். நீங்கள் ஒரு கணக்காளரைக் திருமணம் செய்துகொள்ளுங்கள்," என்றார்.

அவர், "அப்படியா? கணக்காளரைத் திருமணம் செய்து கொண்டால் எனக்கு நோய் குணமாகி விடுமா?'' என்றார்.

அவர், ''இல்லை! ஆனால் ஆறு மாதங்கள் மிக நீளமாகத் தெரியும்,'' என்றார்.

புரிந்துகொள்ளுங்கள், அதிக பட்சமாக, நாம் மன ரீதியாக வேண்டுமானால் நேரத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாம். நிகழும்போது, அதை நாம் 'நிரந்தரமான நரகம்' என்கிறோம்.

'நிரந்தரமான நரகம்' என்று நாம் சொல்கிற நரகம் அதுதான். 'நிரந்தரமான' என்பதும் காலத்தைப் பொறுத்தது இல்லை. காலத்தை அடிப்படையாகக் கொண்டது என்றால், அது நேர்மையானதாகவும், இருக்க முடியாது.

சொர்க்கம் எப்போதும் சுருக்கமாகவே தோன்றும் ; நரகம் என்பது நீளமாகவே தோன்றும். அதற்குக் காரணம் எண்ணங்களின் எண்ணீக்கைதான்.

ஏனென்றால் ஒரு நூறு ஆண்டுகளில் நாம் எல்லா விதமான தவறுகளைச் செய்தாலும்,

எப்படி நாம் 'நிரந்தரமான நரகம்' என்கிற தண்டனைக்கு உள்ளாவோம் ? நூறு ஆண்டுகள் மட்டுமே செய்த தவறுகளுக்கு, கால வரையற்ற 'நிரந்தரமான நரகம்' என்பது எப்படி நியாயமான தண்டனையாக இருக்க முடியும் ?

அதன் பொருள் என்னவென்றால் நூறாண்டுகளில் நாம் செய்யும் தவறுகளுக்கு நூறாண்டு காலம் நாம் நரகத்தில் இருப்போம். ஆனால் அந்த 100 ஆண்டுகள் நிலையானது போன்றும், நிரந்தரமானது போன்றும் நமக்குத் தோன்றும்.

ஏனென்றால் அப்போது நம்முள் எண்ணக் கூட்டங்கள் அதிகமாக இருப்பதால்தான் அவ்வாறு தோன்றுகிறது. எண்ணங்கள் அதிகமாக இருப்பதால் அந்த நூறு ஆண்டுகள் நகராதது போன்று தெரியும்.